Tag: பகவான்

  • 2016-09-28-05-33-38

    திருமலையில், அக்டோபர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
    திருமலையில், பிரம்மோற்சவத்தின் போது, அக்டோபர் 7 ஆம் தேதி இரவு, கருடசேவை நடக்க உள்ளது. கருடசேவை உற்சவத்தை காண திருமலைக்கு, ஐந்து லட்சம் பக்தர்கள் வரை வருவர். அதனால், அக்மடோபர் 7 மற்றும் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான, அக்டோபர் 8 என, இரு நாட்களிலும், 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும், பிரம்மோற்சவ நாட்களில், குறைந்த அளவே, விரைவு தரிசன டிக்கெட் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

  • 2016-09-27-05-54-34

    அழகர்கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் பெருமாள் கோவிலில் வரும் 3 ஆம் தேதி புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது புரட்டாசி பெருந்திருவிழா ஆகும். அதன்படி இந்த வருட புரட்டாசி பெருந்திருவிழா வருகிற அக்டோபர் 3–ந்தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்கு கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று மாலையில் பெருமாள் அன்னவாகனத்தில் எழுந்தருளி புறப்பாடாகிறார். மறுநாள் காலை கிருஷ்ணாவதாரம், இரவு சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று, புதன்கிழமை காலையில் ராமாவதாரமும், இரவு அனுமார் வாகனத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் வியாழக்கிழமை காலையில் கஜேந்திர மோட்சமும், அன்றிரவு கருட வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடக்கிறது.

    அக்டோபர் 7ஆம் தேதி காலை ராஜாங்க சேவையும், இரவு சேஷவாகனத்திலும், 8–ந்தேதி காலை மோகனாவதாரமும், அன்றிரவு யானை வாகனமும். ஞாயிற்றுக்கிழமை காலையில் சேஷசயனத்திலும், அன்றிரவு புஷ்ப விமானத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார்.
    அக்டோபர் 12–ந்தேதி காலையில் தீர்த்தவாரி நடைபெற்று, இரவு சப்தாவர்ண பூச்சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 13–ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 14–ந் தேதி காலை உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வி.ஆர். வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி க.செல்லத்துரை உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  • 2016-09-27-05-35-38

    பழனி மலைக் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அக்டோபர் 11 ஆம் தேதி விஜயதசமி அம்பு போடுதல் மற்றும் வன்னிகாசுரன் வதை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    பழனி மலைக் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 1 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, மலைக் கோயிலில் தினமும் சிறப்புப் பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் நடைபெற உள்ளன. பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலிலும் நவராத்திரி நாள்கள் முழுவதும் பெரியநாயகி அம்மனுக்கும், அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற உள்ளன.
    விழாவின் முக்கிய நிகழ்வாக, அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையும், அக்டோபர் 11 ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு அம்புவில் போடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர், மலைக் கோயிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு செய்யப்பட்டு, அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் வந்தடையும்.

    இதனால், மலைக்கோயில் மதியம் 2.30 மணிக்கு மேல் திருக்காப்பிடப்படும். பின்னர், அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து சுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் வெற்றிவேர் மாலையுடன், அருள்மிகு பெருமாள் சகிதமாக அருள்மிகு மானூர் சுவாமிகள் கோயில் அருகிலுள்ள அருள்மிகு கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் எழுந்தருளி, வன்னி மரமாக மாறி நிற்கும் வன்னிகாசுரனை வதை செய்த பின், வேல் மலைக் கோவிலுக்கு புறப்பாடாகும். அதையடுத்து, மலைக் கோயிலில் சம்ரோட்சண பூஜைகள் நடத்தப்பட்டு, நள்ளிரவு அர்த்தஜாம பூஜை நடத்தப்படும்.

  • 2016-09-25-12-43-30

    அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன. இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
    ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்
    ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
    ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்
    விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
    ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்
    ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும். கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

  • 2016-09-25-12-06-52

    கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ஸ்ரீ கந்தேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார்.
    பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு வந்துள்ளார்.
    இந்நிலையில் காலை சுமார் 9.10 மணியளவில் கேரள மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஸ்ரீ கந்தேஸ்வரர் கோயில் வந்த மோடிக்கு ஆலய நிர்வாகத்தினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    வாசலில் கை, கால்களை கழுவிய பின்னர் கோயிலுக்குள் சென்ற மோடி, ஸ்ரீ கந்தேஸ்வரரை மனமுருகி வணங்கி வழிபட்டார்.
    பிரதமரின் பெயர், மற்றும் பிறந்த நட்சத்திரம் ஆகியவற்றை குறிப்பிட்டு சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது. பின்னர், பிரசாதம் மற்றும் நாராயண குருவின் படம் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டது.

  • 2016-09-24-16-03-05

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
    அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில், நவராத்திரி விழா தனிச்சிறப்புமிக்கது. அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 1ம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாளான 1ம் தேதி இரவு 8 மணி அளவில், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அதைத்தொடர்ந்து, திருவீதியுலா நடைபெறும்.

    விழாவின் 2ம் நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 3ம் நாளன்று கெஜலட்சுமி அலங்காரத்திலும், 4ம் நாளன்று மனோன்மணி அலங்காரத்திலும், 5ம் நாள் ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும், 6ம் நாள் ஆண்டாள் அலங்காரத்திலும், 7ம் நாள் சரஸ்வதி அலங்காரத்திலும், 8ம் நாள் லிங்கபூஜை அலங்காரத்திலும் 9ம் நாள் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை, உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 10ம் தேதி விஜயதசமியன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடைபெறும். அதே போல், பிரசித்தி பெற்ற துர்கையம்மன் கோயில், பச்சையம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

  • 2016-09-24-15-51-46

    பல வீடுகளில் கொலு வைப்பது பரம்பரை பரம்பரையாக வருகிற பழக்கம். பெண்கள், கலைத்திறமையையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுகிற களம்… அதுமட்டுமல்ல விருந்தோம்பல் என்கிற உன்னதப் பண்புக்கு விளக்கம் தருகிற நிகழ்வு…
    இந்த அளவு முக்கியத்துவம் உள்ள கொலுத் திருவிழா, கொலு எப்படி வைக்க வேண்டும்… எப்படியெல்லாம் அலங்காரம் செய்தால் அழகாக இருக்கும்?

    கொலு என்பது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியை பூஜிக்கும் பண்டிகை. அதனால் ஒரு தெய்வத்துக்கு 3 நாட்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாடுகிறோம்.
    இதனை நம் விருப்பத்திற்கேற்ப, நம் வசதிக்கேற்ப செய்யலாம்.
    ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கொஞ்சம் பொம்மைகளை வாங்கி வைத்து கொலுவை அழகுபடுத்துங்கள். 9 படிகள்தான் கொலு வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் படிகளில் கொலு அமைத்துக் கொள்ளலாம்.
    புதிதாக கொலு வைப்பவர்கள், ஒட்டு மொத்தமாக எல்லா பொம்மைகளையும் வாங்காமல் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். முதல்கட்டமாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, தசாவதார பொம்மைகளை வைத்து கொலு அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து படிப்படியாக மற்ற பொம்மைகளை வாங்கலாம்.
    கொலுவில் பூங்கா அமைக்க சிலர் விரும்புவார்கள். அப்படி அமைப்பவர்கள், ஒரு வாரத்துக்கு முன்னதாக சிறு பாத்திரத்தில் மணல் பரப்பி வெந்தயம், கடுகு, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்து, வளரச் செய்து கொலுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    பழைய பொம்மைகளின் வண்ணப்பூச்சு மங்கி இருந்தால், அவற்றுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் பூசி, புதிது போலவே மாற்றலாம்.
    அதேபோல கொலு வைக்கும் வீடுகளில், சிலர் சுமங்கலிகளுக்கு மட்டும் தாம்பூலப்பை கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து போகும் எல்லோருக்கும் தாம்பூலப்பை கொடுக்கலாம். அது உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்திக் காட்டும். குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளையோ, புத்தகங்களையோ பரிசாக கொடுக்கலாம்.

  • 2016-09-24-15-10-50

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்துப் பெருமாள் திருக்கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவது இந்துக்களின் மரபு.

    புரட்டாசி மாதமானது சனிக்கிழமை பிறந்திருப்பதால் பெருமாளை தரிசிப்பது மிகுந்த விஷேசமாக பக்தர்கள் கருதுகின்றனர். அதன்படி இரண்டாவது சனிக்கிழமை அதிகாலை முதலே பெருமாள் திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பக்தர்கள் துளசி, அருகம்புலம் மாலைகளையும், பூக்களையும் வாங்கி பூஜை செய்தனர். பூஜைக்குப் பின்னர் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

  • 2016-09-23-14-33-43

    ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, கோயிலில் ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜையில் பங்கேற்று நிவாரண பூஜை செய்தார்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தனது பெற்றோருடன் வந்த சிந்துவுக்கு, கோயில் அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனர்.
    ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜை செய்தார். பின்னர் ஞானப்பூங்கோதை தாயார் மற்றும் காளத்திநாதரை அவர் தரிசித்தார்.
    பின்னர் தேவஸ் தானம் சார்பில் அவருக்கு பட்டு வஸ்திரம், பிரசாதங்கள் மற்றும் நினைவுப் படம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
    “ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் இங்கு வருவதாக வேண்டிக்கொண்டதாகவும், அதன்படி இங்கு வந்ததாகவும், மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டும் என வேண்டிக்கொண்டதாகவும் சிந்து கூறினார்.