குளிர்காலத்தை முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 16ம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ரிநாத் கோயில் கடல் மட்டத்தில் இருந்து சரியாக 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
குளிர் காலத்தில் ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோயில் முழுவதும் பனியால் மூடப்படும் என்பதால், ஆண்டு தோறும் குளிர்காலத்தில் மூடப்படுவது வழக்கம்.
எனவே, வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி பிற்பகல் 3.45 மணியளவில், சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்பட்ட பிறகு, கோயில் நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயில் நடை சாத்தப்படும் நிகழ்ச்சி சுமார் 5 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி, ஒவ்வொரு சன்னிதானத்துக்கும் தனித்தனி பூஜைகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு நடையாக ஒவ்வொரு நாள் சாத்தப்படுவது வழக்கம்.
Tag: பகவான்
-
2016-10-13-11-59-47
-
2016-10-12-05-27-10
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெற்றது. நிறைவு நாளில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 3ம்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவை உற்சவம் அக்டோபர் 7 ஆம் தேதி நடந்தது. 7ம் நாள் இரவு மலையப்ப சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் வலம் வந்தார்.
8ம் நாள் காலை மகா தேரோட்டம் நடந்தது. தேரில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் பவனி வந்தார். நான்கு மாட வீதிகளில் அசைந்தாடி வந்த மலையப்ப சுவாமி தேரை திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர்.
இரவு தசாவதாரங்களில் இறுதியான கல்கி அலங்காரத்துடன் கையில் கத்தி கேடயங்களுடன் குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் அன்று அதிகாலை 3மணிக்கு சுப்ரபாத சேவை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சக்கரத்தாழ்வார், தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஆகியோர் ஊர்வலமாக வந்து வராக சுவாமி கோயிலில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் திருமஞ்சன சேவை நடந்தது.
இதையடுத்து கோயில் அருகே உள்ள தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களும் புஷ்கரணியில் புனித நீராடி வழிபட்டனர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியின்போது புஷ்கரணியில் நீராடினால் சகல பாவங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை காரணமாக அதிகாலை முதலே குளத்தின் நான்கு கரையிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
பிரம்மோற்சவத்தின் நிறைவையொட்டி மாலை பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டது. -
2016-10-11-06-22-07
தமிழகம் முழுவதிலும் விஜயதசமி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக தொழில் தொடங்க விஜயதசமி தினம் மிகவும் உகந்த தினம் என்பதால், புதிய தொழில் தொடங்க விரும்புவோர், பூஜைகள் செய்து தொழிலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதிபராசக்தியை துர்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகை.
-
2016-10-11-06-12-09
விஜயதசமி விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லி்ல் அ எழுதும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றன. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதேபோல மாநிலம் முழுவதும் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நர்சரி வகுப்புகளுக்கு இன்று மாணவர் சேர்க்கை இடம் பெற்றது. இதேபோல பல்வேறு வகையான படிப்புகளுக்கும், பயிற்சிகளுக்கும் இன்று சேர்க்கை நடத்தப்பட்டது. நெல்லில் அ மற்றும் ஓம் என ஆசிரியர் துணையுடன், பெற்றோர் மடியில் குழந்தைகள் அமர்ந்து எழுதத் துவங்கினர். இதற்கு அட்சராப்பியாசம் என்று பெயர். சென்னையிலும் இன்று பல்வேறு பள்ளிகள், கோவில்கள்ல இந்த அட்சராப்பியாசம் மற்றும் வித்யாரம்பம் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
-
2016-10-10-14-04-03
திருப்பதி வெங்கடேஸவரா கோவிலை சுற்றி வரும் நவராத்திரி பிரம்மோத்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேர் ஊர்வலம் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.
இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் என கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனுடன் பாரம்பரிய அலங்காரத்துடன் கூடிய தேரில் பல்வேறு ரத்தினங்கள் பதித்த ஆபரணங்களுடன் வெங்கடேஸ்வரா மற்றும் அவரது இரு பக்கமும் ஸ்ரீ லட்சுமி மற்றும் ஸ்ரீ பத்மாவதி ஆகியோரின் பழைமையான சிலைகள் இடம் பெற்றிருந்தன.
நீண்ட கயிறுகள் கட்டப்பட்ட 32 அடி உயர தேரினை பக்தர்கள் இழுத்தனர்.
-
2016-10-09-13-34-46
கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியின் அருள் வேண்டும். வித்தை உள்ள இடங்களிலும், கல்விச் சாலைகளிலும், இசை அரங்குகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சரஸ்வதிதேவி வாசம் செய்கிறாள். ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையில், இந்த அன்னையை வேண்டி நாம் வழிபாடு செய்கிறோம்.
சரஸ்வதிதேவியை வழிபடும் வேளைகளில் சரஸ்வதிக்கு உரிய காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நன்மைகள் பல மடங்காக கிடைக்கும்.சரஸ்வதி காயத்திரி மந்திரம் :
‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
பீதவர்ணாயை தீமஹி தன்னோ
பிராம்ஹீ ப்ரசோதயாத்’சரஸ்வதிதேவியை பூஜை செய்து வழிபடும்போது, அன்னையின் பல்வேறு மந்திரங்களின் கூட, மேற்கண்ட சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான பலன்களை நான்முகன் தேவி நமக்கு தந்தருள்வாள். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், கல்வியில் சிறந்து விளங்கலாம். வித்தைகள் வளரும். தொழில் சிறக்கும். லாபம் உண்டாகும். உயர் பதவிகள் தேடி வரும். வாக்கு வன்மை சிறக்கும். ஞானம் கிட்டும்.

saraswathy-poojaiku-saraswathi-devi-gayathri-manthiram

2016-10-09-12-14-47
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் ஸ்ரீரங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெற்றது.
108 வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமாக விளங்குவது ஸ்ரீரங்கம் கோயில். இந்தக் கோயிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி விழா சிறப்புமிக்க ஒன்று. ஆண்டு முழுவதும் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெற்றாலும், இந்த நாளில் மட்டும்தான் ரங்கநாயகித் தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசிக்க முடியும்.
நவராத்திரி ஏழாம் நாளான சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து திருவடி சேவையுடன் புறப்பட்டு கொலுமண்டபத்தில் எழுந்தருளினார்.
தாயாரின் திருவடிசேவை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கநாச்சியார் கொலு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து தயார் திருவடி சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். -
2016-10-08-15-21-17
நவராத்திரியில் வரும் தசமி திதியும் விசேஷமானது. இது விஜயதசமி எனப்படுகிறது.
சைக்கிள் முதல் பஸ், லாரி முதலிய அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து பூ, மாலை அணிவித்து, பூசணிக்காய், எலுமிச்சம்பழம் சாற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்வார்கள். இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். விஜயதசமி நாளானது சகல காரிய விருத்தியையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடிய நாள். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும் வந்து சேரும்.இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபாடுகள் செய்வது உகந்ததாகும்.