Blog

  • Chithira Pournami Story

    இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன்  சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். 

    அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.

    ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். 

    அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.

    இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் – பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.

    பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
     

  • Chitira pournami

    சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரம் இணைந்த பௌர்ணமி தினத்தன்று அனுஷ்ட்டிக்கப்படும் ஒரு நாளாகும். 

    சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.

    இந்நாளில் கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். 

    மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள்.

    மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம்.

    சித்திரா பௌர்ணமி பூஜை:-

    சித்திரா பௌர்ணமியன்று ஒரு கலசம் ஆவாஹனம் செய்து

    சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
    சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

    என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கவும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 

    இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
     

  • Madurai Meenatchi ThiruTherottam

    மதுரை சித்திரைத் திருவிழாவின் 11-ம் நாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்து தேரோட்டத்தைக் கண்டு களித்தனர்.

    சைவமும், வைணவமும் இணையும் வகையில் கொண்டாடப்படும் விழா மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது என 15 நாட்கள் ஆண்டுதோறும் மதுரையில் இந்த விழாகளைகட்டி காணப்படும்.

    இந்த நிலையில், இன்று 11-ம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது. இன்று அதிகாலை 5.50 மணிக்கு மேஷ லக்னத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் தேர்களில் எழுந்தருளினர். பிறகு 6.10-க்கு பக்தர்கள் வடம் பிடிக்க சுவாமி, அம்மன் தேர்கள் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்தன. 

    தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய… என்ற பக்தி கோ‌ஷத்துடன் தேரை இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் சுவாமி- அம்மன் தேர்கள் வலம் வந்ததை காண ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் வீதிகளில் திரண்டிருந்தனர்.

    தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை மற்றும் காளை வலம் வந்தன. இதனை கண்டு சிறுவர்-சிறுமிகள் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் ஆர்வத்துடன் வடங்களை பிடித்து தேர் இழுத்தனர். இந்த சித்திரை திருவிழாவால் மதுரை இன்று களைகட்டி காணப்பட்டது.

    பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த தேர்கள் கீழமாசி வீதியில் உள்ள நிலையை அடைந்ததும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சுவாமி-அம்மன் தேர்களுக்கு பின்னால் சண்டிகேஷ்வரர், பஞ்சமூர்த்திகள் சப்பரங்களில் வீதிஉலா வந்தனர்.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  செலவு
    ரிஷபம் – பயம்  
    மிதுனம் – கவலை
    கடனம் – வரவு
    சிம்மம் – அனுகூலம்   
    கன்னி – தாமதம் 
    துலாம் – ஆதரவு
    விருச்சிகம் – நற்சொல் 
    தனுசு – வெற்றி
    மகரம் –   துன்பம் 
    கும்பம் – நன்மை  
    மீனம் – அமைதி
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி
     

  • April 18

    பெரிய வியாழன், மதுரை மீனாட்சி தேர்
    விகாரி வருடம் – சித்திரை 5
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    18-ஏப்-2019 வியாழன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    7.10
    நட்சத்திரம்    :    அஸ்தம்    இ    9.11
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Madurai Meenatch thiru Kalyanam

    உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா ஏப்ரல் 8 ஆம் தேதி  காலை கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது.

    கொடி மரத்தில் தர்ப்பைபுல் வைத்து வெண்பட்டுவால் சுற்றி பிரமாண்டமான மாலை அணிவிக்கப்பட்டது, மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

    இதனை  தொடர்ந்தது விழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நிகழ்வும், திக்குவிஜயமும், சிறப்பாக நடைபெற்றது.  அதனை தொடர்ந்து இன்று காலை  புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 

    மேற்கு ஆடி வீதி -வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைக்கப் பட்டுள்ள அலங்கார பந்தலில் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கல்யாண மேடை பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 

    திருக்கல்யாண வைபவத்தை பல்லாயிரகணக்கான மக்கள் அமர்ந்து கண்டு களித்தனர்.  இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் மிக முக்கிய அம்சமான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது.  இதற்காக  அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வருகிறார். 19 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

  • Koothandavar koil thali kattum nigazchi

    உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவையொட்டி திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. தமிழகம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு கோவில் முன்பு கூத்தாண்டவரை கணவராக நினைத்து கும்மி அடித்து ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர் 

    அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கடைகளில் தாலி, பூ, வளையல் உள்ளிட்ட ஆபரண பொருட்களை வாங்கி வந்த திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டனர். 

  • Vadapalani murugan koil Tamil Archanai

    தமிழ் புத்தாண்டு முதல் வடபழனி முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டு உள்ளது. தினமும் காலை கோவில் நடை திறந்ததும், காலை 6.30 மணிக்கு நடக்கும் கால சந்தி பூஜை தமிழில் செய்யப்படும் என்று வடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,500 க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் பெரும்பாலான கோவில்களில் சமஸ்கிருதத்தில் தான் இன்னும் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், சிவன் கோவில் என ஒரு சில கோயில்களில் மட்டும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.  

    இந்தநிலையில் தற்போது தமிழ் புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டு உள்ளது. தினமும் காலை கோவில் நடை திறந்ததும், காலை 6.30 மணிக்கு நடக்கும் கால சந்தி பூஜை தமிழில் செய்யப்படும்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  மேன்மை 
    ரிஷபம் – கவனம் 
    மிதுனம் – தாமதம் 
    கடனம் – லாபம்  
    சிம்மம் – அச்சம்  
    கன்னி – பகை
    துலாம் – வரவு  
    விருச்சிகம் – பயம் 
    தனுசு – நன்மை 
    மகரம் –   செலவு
    கும்பம் – ஆதாயம் 
    மீனம் – சுகம் 
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி
     

  • April 17 Mahaveer Jayanthi

    ஏப்ரல் 17 மகாவீர் ஜெயந்தி
    மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
    விகாரி வருடம் – சித்திரை 4
     பிரதோஷம் 
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    17-ஏப்-2019 புதன்  ஷாபான்11
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    இ    9.10
    நட்சத்திரம்    :    உத்திரம்    இ    10.26
    யோகம்    :    அமிர்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்