Blog

  • Samaya puram Mariamman koil car festival

    சக்தி ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வருகிறது. தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று  தேரோட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளியதும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து கலந்துகொண்டனர். கலந்து கொண்டனர். 

  • Madurai Meenachi Pattabishegam

    சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் சூடி பட்டாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    அதன்படி மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா நடைபெற்றது.  அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கிரீடம்’ எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

     அதைத்தொடர்ந்து இரவு 8.10 மணி அளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டி, நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்பட்டது. அப்போது பச்சை நிற பட்டுப்புடவை அணிந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும், மகிழம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டன. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை கொடுத்தார்.

    பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  பயம் 
    ரிஷபம் – துன்பம்  
    மிதுனம் – சிக்கல் 
    கடனம் – ஆதாயம் 
    சிம்மம் – தோல்வி 
    கன்னி – நோய்
    துலாம் – லாபம் 
    விருச்சிகம் – செலவு 
    தனுசு – சுகம் 
    மகரம் –   கவலை
    கும்பம் – வெற்றி
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – அவிட்டம், சதயம்

  • April 16 Indraya Naal eppadi

    ஏப்ரல் 16 இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – சித்திரை 3
    சமயபுரம் மாரியம்மன் தேர்
    16-ஏப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    இ    11.23
    நட்சத்திரம்    :    பூரம்    இ    11.53
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  வீம்பு 
    ரிஷபம் – விவேகம் 
    மிதுனம் – இன்பம் 
    கடனம் – வீரம் 
    சிம்மம் – பெருமை
    கன்னி – ஆக்கம் 
    துலாம் – உயர்வு
    விருச்சிகம் – பிரிவு 
    தனுசு – சோர்வு
    மகரம் –   இரக்கம் 
    கும்பம் – அச்சம்  
    மீனம் – துன்பம் 
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம் 
     

  • April 15 Madurai Meenachi Pattabishegam

    விகாரி வருடம் – சித்திரை 2
    15-ஏப்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    ஏகாதசி    இ    1.45
    நட்சத்திரம்    :    மகம்    இ    1.30
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Rasi Palangal Meenam

    பொது வாழ்வில் நாட்டம் கொண்ட மீன ராசி அன்பர்களே நீங்கள் தனகாரகன் என்று அழைக்கப்படும் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள். நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள். 

    இந்த ஆண்டு வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும்.  ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோ தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்  கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக  வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். லாபம்  கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில்  மிகவும் வேகம் காட்டுவீர்கள்.  தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.
    குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.  உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  
    பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. 

    விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது. மாற்றுப் பயிர்கள் மூலம் பொருளாதாரம் மேலோங்கும். 
    கலைத்துறையினருக்கு வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.  உங்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்தகாரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும்.
    மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். 

    பூரட்டாதி 4ம் பாதம்: 
    இந்த ஆண்டு எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். 

    உத்திரட்டாதி: 
    இந்த ஆண்டு பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

    ரேவதி:
    இந்த ஆண்டு சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் வெளிப்படும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். 

    பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை

    செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 

    சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
    அனுகூலமான திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நவக்ரஹ தேவதாப்யோ நம என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    போன் : +91 7845119542

     

  • Rasi Palangal Kumbam

    எந்த ஒரு வேலையையும் தானாக எடுத்து செய்யும் திறன் கொண்ட கும்ப ராசி அன்பர்களே நீங்கள் தொழில் காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடையவர்கள். எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்ய மாட்டீர்கள். நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். அளவிற்கு அதிகமாக உழைப்பவர்கள். 

    இந்த ஆண்டு பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  துணிச்சல் உண்டாகும்.  அதனால்  எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தன்னைத்தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். திட்டமிட்டபடி  பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.
    குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். 
    பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
    விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். என்றாலும் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்படும். அதனால் கொள்முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். விவசாயக் கூலி வேலை செய்வோரோடு அனுசரித்துச் செல்லவும். அரசு மானியங்கள் உதவிக்கு வரும்; பழைய கடன்களும் வசூலாகும். 

    கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். 
    அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
    மாணவர்கள் மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

    அவிட்டம் 3, 4 பாதம்: 
    இந்த ஆண்டு பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

    சதயம்: 
    இந்த ஆண்டு எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும். 

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
    இந்த ஆண்டு உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  

    சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
    அனுகூலமான திசைகள்: மேற்கு – வடகிழக்கு – தென்கிழக்கு
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் கம் கணபதயே நம என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    போன் : +91 7845119542

     

  • Rasi Palangal Maharam

    எந்த காரியத்திலும் ஒரே மனதாக ஈடுபடும் மகர ராசி அன்பர்களே நீங்கள் ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். உங்களது தன்னம்பிக்கையால் வளர்ச்சி காண்பீர்கள். 

    இந்த ஆண்டு மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.  எனினும் நன்மைகள் உண்டாகும்.  பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

    தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை  கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

    குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே  சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.  குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும்.

    பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

    விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். கழனிகளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.

    கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. கிடைக்கும் வாய்ப்புகளுக்காக அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  மேலிடத்தில் வரும் உத்தரவுகளை தாமதிக்காமல் செய்து முடிப்பது உங்களுக்கு நன்மை தரும்.

    மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

    உத்திராடம் 2, 3, 4 பாதம்: 
    இந்த ஆண்டு குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். இதுவரை இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. 

    திருவோணம்: 
    இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    அவிட்டம் 1,2 பாதம்:
    இந்த ஆண்டு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாப கரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். 

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.  

    சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
    அனுகூலமான திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு
    அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஆஞ்சநேயாய நம என்ற மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும். 
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    போன் : +91 7845119542

  • Rasi Palangal Dhanusu

    எதிலும் நேர்மையையும் விவேகத்தையும் கடைபிடிக்கும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் தேவ குரு என்று அழைக்கப்படும் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். தொலைநோக்கு சிந்தனை உடைய  அதே நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல்  செயலாற்றும்  திறன் உடையவர்கள். தெய்வ நம்பிக்கை அதிகமாக இருப்பவர்கள். 

    இந்த ஆண்டு நீண்ட நாட்களாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். நீங்கள் நன்மைக்காக போராட தயங்காதவர். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து  செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்த படி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

    தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.  தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
    குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

    பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.  உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். 
    விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். வழக்குகள் நிலுவையிலிருந்தால் அவை முடிவதில் தாமதம் ஏற்படும். 
    கலைத்துறையினர் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. 
    அரசியலில் உள்ளவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தொண்டர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது நன்மை தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். 
    மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.  கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும். 

    மூலம்: 
    இந்த ஆண்டு எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது.  வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். 

    பூராடம்: 
    இந்த ஆண்டு பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

    உத்திராடம் 1ம் பாதம்:
    இந்த ஆண்டு வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. 

    பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  

    சிறப்பான கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
    அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீகுருப்யோ நம என்ற மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லவும்.

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    போன் : +91 7845119542