Blog

  • கூத்தனூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்…

    திருவிடைமருதூர் அருகே  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருப்பணிகள் நடைபெற்று முடிவற்ற நிலையில் மகா கும்பாபிஷேகத்திற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு மேளதாளம் வேத மந்திரம் முழங்க ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் சப்த கன்னிகைகள் ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ நாகாத்தம்மன் முதலிய மூல மூர்த்தி களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து வழிபட்டனர்.

  • ஜூன் 3 – வாஸ்து நாள்

    ஜூன் 3 – வாஸ்து நாள்
    குரோதி வருடம் – வைகாசி – 21
    ஜூன் 3, 2024
    திங்கள்
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    எமகண்டம் : 10.30 – 12.00
    குளிகை : 1.30 – 4.00
    ராகு : 7.30 – 9.00
    திதி : துவாதசி
    திதி நேரம் :  ஏகாதசி அ.கா 1.41
    நட்சத்திரம் :  ரேவதி அ.கா 12.52
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • திருமலையில் வைபவமாக நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்…

    திருமலையில் வைபவமாக நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்.. விழாவில்  கலந்துகொண்டு அனுமனை தரிசித்த திரளான பக்தர்கள்.

    திருமலையில் ஹனுமத் ஜெயந்தி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமலையில் பாபநாசம் ஆகாச கங்கா செல்லும் வழியில்  ஜாபாலி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயம் அமைந்துள்ளது . இங்கு ஆஞ்சநேயர் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

    ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களில் பலர் இந்த  ஆலயத்திற்கு வந்து அனுமானை தரிசிப்பது வழக்கம் இன்று ஹனுமத்ஜெயந்தி விழா ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜாபாலியில் ஆலயத்தில் கொலுவீற்றி ருக்கும்  அனுமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இருந்து பட்டு வஸ்திரத்தை ஜாபாலி ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்தார் . திருத்தல வரலாற்றின்படி  ஜாபாலி என்ற முனிவர் தனது சீடர்களுடன் இப்பகுதியில் இருந்து கொண்டு ஏழுமலையானுக்கு தொண்டு புரிந்து வந்ததாகவும் ராம பக்த ஹனுமானை தியானித்து அவரை வழிபட அனுமான் ஜாபாலி  முனிவருக்காக பிரதிக்ஷமாக தோன்றி அருள் பாலித்ததால்   ஜாபாலி அனுமான் என்று பெயர் பெற்று விளங்குகிறார்.

  • ஜூன் 02 – சர்வ ஏகாதசி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – பெருமை
    ரிஷபம்         – ஊக்கம்
    மிதுனம்     – ஆர்வம்
    கடகம்         –  பயம்
    சிம்மம்         –   பரிவு  
    கன்னி         –    பாசம்
    துலாம்         –     உதவி  
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     வரவு
    மகரம்         –    உறுதி
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –      பக்தி
    சந்திராஷ்டமம்    –        ஆயில்யம், மகம்

  • ஜூன் 2 – சுபமுகூர்த்த நாள்

    ஜூன் 2 – சுபமுகூர்த்த நாள்
    குரோதி வருடம் – வைகாசி – 20
    ஜூன் 2, 2024
    ஞாயிறு
    சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    குளிகை : 3.00 – 4.30
    ராகு : 4.30 – 6.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் :  தசமி அ.கா 5.25
    நட்சத்திரம் :  உத்திரட்டாதி அ.கா 2.26
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வதால் இத்தனை நன்மைகளா ! | பாலாறு சுவாமிகள்

    பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வதால் இத்தனை நன்மைகளா ! | பாலாறு சுவாமிகள்

    பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வதால் இத்தனை நன்மைகளா ! | எளிய முறையில் வீட்டில் இஷ்ட தெய்வ வழிபாடு | பாலாறு சுவாமிகள்

     

  • ஜூன் 1 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – முயற்சி
    ரிஷபம்         – இன்பம்
    மிதுனம்     – புகழ்
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   சுகம்  
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     உறுதி
    விருச்சிகம்     –  ஈகை
    தனுசு         –     தனம்
    மகரம்         –    பகை
    கும்பம்         –      சாந்தம்
    மீனம்         –      அன்பு
    சந்திராஷ்டமம்    –        பூசம்

     

  • ஜூன் 1 – குச்சனூர் சனிபகவான் ஆராதனை

    ஜூன் 1 – குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    குரோதி வருடம் – வைகாசி – 19
    ஜூன் 1, 2024
    சனி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    குளிகை : 6.00 – 7.30
    ராகு : 9.00 – 10.30
    திதி : தசமி
    திதி நேரம் :  நவமி கா 6.28
    நட்சத்திரம் :  பூரட்டாதி அ.கா 4.03
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • 25 பெருமாள் கோவில்களில் இருந்து கருட வாகன புறப்பாடு…

    தஞ்சையில் உள்ள 25 பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி  பாண்டுரங்கா பஜனை பாடல்கள். கோலாட்டத்துடன் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தன ஏராளமான மக்கள் கருடசேவையை வழிப்பட்டனர்.
     
    தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் இந்த விழா விமர்சையாக நடைபெற்றது.

    90-ம் ஆண்டாக நடைபெறுகிற இந்த விழா  28-ம் தேதி வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

    பின்னர், வெண்ணாற்றங்கரையிலிருந்து இன்று திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.

    இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், பள்ளிய அக்ரஹாரம் கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோயில்களிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.

     

  • மே 30 – இன்று எந்த ராசிக்கு வரவு எந்த ராசிக்கு செலவு….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – முயற்சி
    ரிஷபம்         – சாந்தம்
    மிதுனம்     – பெருமை
    கடகம்         –  மேன்மை
    சிம்மம்         –   நிறைவு
    கன்னி         –    யோகம்
    துலாம்         –     உதவி  
    விருச்சிகம்     –  உழைப்பு  
    தனுசு         –     இரக்கம்
    மகரம்         –    நட்பு
    கும்பம்         –      சினம்
    மீனம்         –      தொல்லை
    சந்திராஷ்டமம்    –        திருவாதிரை