ஜூன் 11 – இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் – வைகாசி – 29
ஜூன் 11, 2024
செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
எமகண்டம் : 9.00 – 10.30
குளிகை : 2.00 – 1.30
ராகு : 3.00 – 4.30
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி இ 7.26
நட்சத்திரம் : பூசம் முழுவதும் 0.00
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : கேட்டை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Blog
-
ஜூன் 11 – இன்றைய நாள் எப்படி?
-
ஜூன் 10 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – மறதி
ரிஷபம் – ஓய்வு
மிதுனம் – ஆசை
கடகம் – ஜெயம்
சிம்மம் – கோபம்
கன்னி – கீர்த்தி
துலாம் – தடங்கல்
விருச்சிகம் – பகை
தனுசு – வரவு
மகரம் – அன்பு
கும்பம் – லாபம்
மீனம் – திறமை
சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை -
ஜூன் 10 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
ஜூன் 10 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
குரோதி வருடம் – வைகாசி – 28
ஜூன் 10, 2024
திங்கள்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
நல்ல நேரம் : 6.30 – 7.30
எமகண்டம் : 10.30 – 12.00
குளிகை : 1.30 – 4.00
ராகு : 7.30 – 9.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி மா 6.17
நட்சத்திரம் : பூசம் இ 11.37
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
ஜூன் 9 – இன்று இந்த ராசிக்கு மகிழ்ச்சியான நாள்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – மகிழ்ச்சி
ரிஷபம் – போட்டி
மிதுனம் – தனம்
கடகம் – லாபம்
சிம்மம் – மேன்மை
கன்னி – நிறைவு
துலாம் – கோபம்
விருச்சிகம் – பயம்
தனுசு – பெருமை
மகரம் – இன்பம்
கும்பம் – உயர்வு
மீனம் – நஷ்டம்
சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம் -
ஜூன் 9 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
ஜூன் 9 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
குரோதி வருடம் – வைகாசி – 27
ஜூன் 9, 2024
ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 8.30
எமகண்டம் : 12.00 – 1.30
குளிகை : 3.00 – 4.30
ராகு : 4.30 – 6.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை மா 5.37
நட்சத்திரம் : புனர்பூசம் இ 10.19
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : விசாகம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
கல்வியில் சிறக்க செல்ல வேண்டிய கோயில்கள்…
கல்வியில் சிறக்க செல்ல வேண்டிய கோயில்கள்…
ஓமாம்புலியூர்
சிதம்பரத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது. எங்குமில்லாத புதுமையாக தட்சிணாமூர்த்தி, கோஷ்ட தேவதையாக மட்டுமின்றி, கோயில் மூலவர் கர்ப்ப கிரகத்திற்கும், அம்பாள் சந்நதிக்கும் இடையில் ஐந்தரை அடி உயரத்தில் தனித்தும் அமர்ந்திருக்கிறார். அம்பாள் சிவ தத்துவத்தை உணர தவமிருந்த தாயும், அம்பாளுக்கு சிவபிரான் உபதேசம் செய்ததாகவும் வரலாறு உண்டு. வியாக்ரபுரீஸ்வரர் வந்து வணங்கியதால், அம்பாளுக்கு பிரணவ உபதேசம் செய்யப்பட்டதாலும் இத்தலத்திற்கு ‘ப்ரணவ வ்யாக்ரபுரம்’ என்றொரு பெயரும் உண்டு.
லால்குடி
திருச்சிக்கு அருகேயுள்ளது. இங்குள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில் புராதனமானது. இது ஒரு தேவார வைப்புத் தலம். இங்குள்ள வீணா தட்சிணாமூர்த்தி பெரும் அனுக்கிரக மூர்த்தியாக கொண்டாடப்படுகிறார்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவருக்கு தனிச் சந்நதி உள்ளது. கல்வியில் சிறக்க மாணவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்து செல்கின்றனர்.
திருஇந்தளூர்
இத்தலம் மயிலாடு துறைக்கு வெகு அருகில் உள்ளது. நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று. இங்குள்ள பெருமாளின் திருப்பெயர் பரிமளரங்கநாதர் என்பதாகும். இக்கோயிலினுள்ளும் லட்சுமி ஹயக்ரீவருக்கென்று தனிச் சந்நதி உள்ளது.
திருவையாறு
இத்தலத்திலுள்ள ஐயாறப்பர் ஆலயத்தின் கருவறையின் பின்பகுதியைக் காணமுடியாது. சடாபாரத்தோடு திகழும் ஈசனாதலால் தட்சிணா மூர்த்தியின் சந்நதியோடு திரும்ப வேண்டியதுதான். குருபகவான் ஐம்புலன்களை அடக்கிய ஆமையை தமது வலது காலால் அழுத்தி மாபெரும் தத்துவ த்தை சொல்லாமல் சொல்கிறார். திருமாலே இவரிடம் உபதேசம் பெற்றதால் ஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். ஏதோ நேற்றுதான் செதுக்கியது போன்ற பேரழகும், முகத்தில் பொலியும் அமைதியும் கண்கொள்ளா அற்புதம். தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சை-திருவையாறு பாதையில் நகரத்தின் எல்லையிலேயே வெண்ணாற்றங் கரையில் மாமணிக்கோயில் அமைந்துள்ளது. அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீர நரசிம்மர் என்று மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருள்கிறார். பூதத் தாழ்வாரும், திருமங்கையாழ் வாரும் மூவரையும் சேர்த்தே மங்களாசாஸனம் செய்துள்ளனர். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு திக்கு நோக்கியிருப்பது சிறப்பாகும். கல்விக்கு ஹயக்ரீவரும், செல்வத்திற்கு லட்சுமியுமாக அருள்பாலிக் கின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏலக்காய் மாலை சாற்றி, நெய் விளக்கு, கற்கண்டு நிவேதனம் படைத்து வணங்கினால் கல்வியும், செல்வமும் நிறையும்.
-
ஜூன் 08 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆர்வம்
ரிஷபம் – தோல்வி
மிதுனம் – பயம்
கடகம் – பெருமை
சிம்மம் – அச்சம்
கன்னி – உதவி
துலாம் – சினம்
விருச்சிகம் – யோகம்
தனுசு – சோதனை
மகரம் – ஆக்கம்
கும்பம் – பரிவு
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – சுவாதி, விசாகம் -
ஜூன் 8 – இன்றைய நல்லநேரம்
ஜூன் 8 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – வைகாசி – 26
ஜூன் 8, 2024
சனி
நல்ல நேரம் : 7.30 – 8.30
எமகண்டம் : 1.30 – 3.00
குளிகை : 6.00 – 7.30
ராகு : 9.00 – 10.30
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை மா 5.26
நட்சத்திரம் : திருவாதிரை இ 9.21
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும் நந்தி பகவான் அபிஷேகம்….
தஞ்சை பெருவுடையார் கோயில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மஹாநந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டனர்.
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. இன்று வைகாசி மாத செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் அன்று நந்தியும் பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிப்படடனர்.
-
மேல்மலையனூர் |எழிலரசி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ அங்காளம்மன் | வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூர் |எழிலரசி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ அங்காளம்மன் | வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்