Blog

  • Kamakshi Karunai Petren 3

    மதிப்பிற்குரிய டாக்டர் கீது வாட்ஸ் அவர்களுக்கு, 

    2011ல் என் தோழியின் மூலமாக ஷைலஜா என்கிற நான் உங்களைச் சந்தித்தேன். என் வீடு கட்டிய பிறகு அடிமேல் அடியாக மிகுதியான துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். வீட்டை வேண்டுமென்றால் விற்று விடலாமா? என்று உங்களிடம் கேட்டேன். அதற்கு நீங்கள் பிரசன்ன ஜோதிடம் பார்த்து முறையாக பூஜை செய்து குடியேறினீர்களா? என்று கேட்டீர்கள்.

    அப்போதைய சூழ்நிலையில் முறையாக பூஜை செய்யாமல் குடியேறினோம் என்று கூறியதற்கு விஷ்வகர்மா பூஜை செய்ய சொன்னீர்கள். அந்த பூஜை செய்த சில மாதங்களில் M.Phil. படித்த எனக்கு சென்னையில் உள்ள கல்லூரியில் வேலை கிடைத்தது.

    என் பிரச்சனை தீர்ந்தது. என் குடும்பம் தற்போது மிகுந்த சந்தோஷமாக வாழ்வதற்கு சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனை கூறி என்னையும், என் குடும்பத்தையும் மனமகிழ்ச்சியோடு வாழ வைத்ததற்கு நன்றி.
    – இப்படிக்கு
    திருமதி ஷைலஜா – திருவான்மியூர்.

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257

  • October 25 Rasi Palangal

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – கவனம் 
    ரிஷபம் – கீர்த்தி
    மிதுனம் – நிம்மதி
    கடனம் – கவலை
    சிம்மம் – பரிவு
    கன்னி –  பரிசு
    துலாம் –  வரவு  
    விருச்சிகம் – தெளிவு
    தனுசு –     பாராட்டு
    மகரம் –  வேதனை
    கும்பம் – சோர்வு
    மீனம் –     நன்மை
    சந்திராஷ்டமம்    – சதயம்
     

  • October 25 Pradhosham

    அக்டோபர் 25 – பிரதோஷம்
    விகாரி வருடம் – ஐப்பசி 8
     பிரதோஷம் 
    25-அக்-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    மா    4.41
    நட்சத்திரம்    :    பூரம்    கா    9.01
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Kanchi Kamatchi amman koil pal kudam

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தை ஒட்டி பால்குட விழா.

    உலகப் பிரசித்தி பெற்ற சக்தி பீடத்தின் முக்கிய ஸ்தலமான காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் ஐப்பசி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் காமாட்சி அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்ததாக ஐதீகம் அதனை ஒட்டி இன்று காஞ்சிபுரம் சங்கரமடம் காமாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 700-க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பால்குடம் ஏந்தி சங்கர மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பால்குடங்கள் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்குபெற்றனர்

  • Alangudi Guru Peyarchi Latcharchanai

    குருபரிகார ஸ்தலமான ஆலங்குடியில் குருபெயா்ச்சி லட்சார்சனை விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

    மூலவா் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது.அலங்கரிக்கப்பட்ட உற்சவ தெட்சிணாமூா்த்தி தனிசன்னதியில் எழுந்தருள அங்கு ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களைச் சொல்லி லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனா்.

    ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனா். லட்சார்ச்சனை தொடக்க விழாவில் அறநிலைய உதவி ஆணையா் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலா் பி.தமிழ்செல்வி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 

    இந்த முதல் கட்ட லட்சார்ச்சனை வரும் 27 ம்தேதி வரை நடைபெறும் .மீண்டும் குருபெயா்ச்சிக்குப்பின் அக்டோபா் 31ம்தேதி தொடங்கி நவம்பா் 7ம்தேதி முடியவும் இரண்டாவது கட்டமாகவும் நடைபெறும். 

    நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் உள்ளது. திஞானசம்மந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

     இவ்வாண்டும் குருபகவான் வரும் அக்டோபா் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு அன்றைய தினம் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது.
     

  • Suba Horaigal (24/10/2019 – 31/10/2019)

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுபஹோரை.. நல்ல நேரம் சென்னையில் வசிக்கும் அன்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.சரியான ராகு காலம் ,எமகண்டம் (பகல் காலத்தில், இரவு காலத்தில் )போன்ற நேரங்கள் சென்னைக்கு கணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை உள்ள சுப ஓரையில் மருந்து உண்ண , பெரியோரை பேட்டி காண ,பிரயாணம் செய்ய ஆகிய சுப செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . திங்கட்கிழமை அன்று உள்ள சுப ஹோரையில் புது நகை வாங்கவும் புதிய ஆடை உடுத்தவும், புதிய கடை திறக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் .

    செவ்வாய்க்கிழமை அன்று உள்ள சுப ஓரையில் ஆப்பரேஷன் சிகிச்சை செய்ய ,ஆயுதம் செய்ய ,இயந்திரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

     புதன் கிழமையில் வரும் சுப ஓரையில் கலை பயில, கணித ஆரம்பம் செய்ய ,பொன் உருக்க ,,வித்தியாரம்பம் செய்ய, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

     வியாழக்கிழமை வரும் சுப ஓரையில் பெரியோரை காண்பதற்கும், வாங்கிய கடன் தீர்ப்பதற்கும் ,புதிய வஸ்திரம் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     வெள்ளிக்கிழமையில் வரும்    சுப ஓரையில் புதிய தொழில் செய்வதற்கும், சுபமான செயல்களை பேசுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     சனிக்கிழமை வரும்  சுப ஓரையில்ஆயுதம் பழகுவதற்கும், யாத்திரை செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


    தொகுத்தவர் :  ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer. 

    போன் 8754 76 3832

  • Sri Rangam Ranganathar Koil Unjal Urchavam

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நவம்பர் 2 ஆம் தேதி தொங்குகிறது.  இந்த ஊஞ்சல் உற்சவ திருநாள் நவம்பர் 2-ந்தேதி தொடங்கப்பட்டு 8-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.

    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, தினமும் மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8-ந் தேதி மட்டும் படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை ரெங்கநாச்சியார் சேருகிறார்.

     ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் 7 நாட்களிலும் மாலை 3 மணி முதல் 5 மணிவரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற காலங்களில் வழக்கம்போல சேவை நடைபெறும். 

  • Kalahasthi undiyal Kanikkai video

    புகழ்பெற்ற ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் 1.4 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சைவ திருத்தலமான  ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் கடந்த மாதம் 25  ஆம் தேதி முதல் நேற்றுவரை  சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்திய 28 நாட்கள்  உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. 

    இந்த உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 4 லட்சத்து 30 ஆயிரத்து 929 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதில் தங்கம் 83 கிராம், வெள்ளி 398 கிலோ 850 கிராம் செலுத்தியிருந்தனர். இது தவிர வெளிநாட்டு கரன்சிகள் 68 நோட்டுகள் இருந்தது. இதில் யுஎஸ்ஏ 15 , மலேசியா 20, யூ.ஏ.இ.5, சிங்கப்பூர் 4 , ஓமன் 5 , சவுதி அரேபியா 4, கத்தார் 3,  தென்னாப்பிரிக்கா 4,  நேபாள் 4 இதர நாட்டை சேர்ந்த 2 நோட்டுகள் இருந்தது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • October 12 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – போராட்டம்
    ரிஷபம் – சிந்தனை
    மிதுனம் – சாதனை
    கடனம் – சலனம் 
    சிம்மம் – ஓய்வு
    கன்னி –  வெற்றி
    துலாம் –  சுகம்  
    விருச்சிகம் – சுபம் 
    தனுசு –     பரிவு
    மகரம் –  லாபம் 
    கும்பம் – பெருமை
    மீனம் –     யோகம்
    சந்திராஷ்டமம்    – அவிட்டம்
     

  • October 24 Egadasi Viradham

    அக்டோபர் 24 ஏகாதசி விரதம்
    விகாரி வருடம் – ஐப்பசி 7
     subamugurthanaal 
    சுபமுகூர்த்த நாள்
    ஏகாதசி விரதம்
    24-அக்-2019 வியாழன்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    இ    7.03
    நட்சத்திரம்    :    மகம்    கா    10.39
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்