Blog

  • October 27 Rasi palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – நலம் 
    ரிஷபம் – நட்பு 
    மிதுனம் – சுகம் 
    கடனம் – பரிவு
    சிம்மம் – பாசம் 
    கன்னி –  வாழ்வு
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – தடங்கல் 
    தனுசு –     தாமதம் 
    மகரம் –  பிரதமை 
    கும்பம் – ஆதரவு
    மீனம் –     முயற்சி 
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி
     

  • October 27 Depavali

    அக்டோபர் 27 தீபாவளி 
    விகாரி வருடம் – ஐப்பசி 10
     அமாவாசை அமாவாசை
    தீபாவளி (நீராட நல்ல நேரம் அதிகாலை 5.00 – 5.30 மணி)
    27-அக்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ம    12.10
    நட்சத்திரம்    :    சித்திரை    அ.கா    4.22
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Deepavali Hasamba koil

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோயில் ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்….

    ஹாசனாம்பா கோயிலில் பல வீநோத நம்பிக்கைகள் உள்ளது….

    மாமியார்-மருமகள் கல்….

    ஒரு குட்டி கதை…. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்'' என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

    திருடர்கள் கோயில்…

    ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக 'திருடர்கள் கோயில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.

    அணையா தீபம் …

    ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

    கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…
    கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

    வாடா மலர்கள்….
    ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.
    தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை அக்டோபர் 20 ஆம் தேதி காலை திறக்கப்பட்டது.
    அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை 13 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என்று மாவட்ட கலெக்டர் சைத்ரா அறிவித்து இருந்தார்.
     

  • Deepavali Lakshmi Gubera Poojai

    லட்சுமி குபேர பூஜையை, தீபாவளி அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ செய்ய வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்தால் அளவற்ற செல்வமும், கல்வி அறிவும் கிடைக்கும். குபேரன், மிகச் சிறந்த சிவபக்தர். அமைதியான குணம் கொண்டவர். "ஏழ்மையான ஒருவன் பணக்காரனாக வேண்டு மென்றால், சாந்த குணம் தேவை.

    அவன் மற்ற பணக்காரர்களைப் பார்த்து ஏங்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பணக்காரர்களின் பின்னணியில் எந்த அளவுக்கு உழைப்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்'' என்பதே குபேர தத்துவம். குபேரனுக்கு மொத்தம் 2 மனைவிகள்…

    ஒருத்தி பெயர் சங்க நிதி, மற்றொருத்தி பெயர் பதுமநிதி. இதில், சங்கநிதியின் கையில் எப்போதும் வலம்புரிச் சங்கு இருக்கும். செல்வச் செழிப்பைக் குறிக்கும் அடையாளம்தான் வலம்புரிச்சங்கு. பதும நிதி, தன் கையில் தாமரை வைத்திருப்பாள்.

    தாமரை, கல்வி அறிவைக் குறிப்பதாகும். இவர்கள் இருவரிடமும் தான், தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் குபேரன் கொடுத்து வைத்துள்ளார். எனவே நீங்கள் குபேரனை வழிபடும் போது, சங்க நிதியையும் பதும நிதியையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

    தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

    சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.

    பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
     

  • Deepavali Oil

    தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

    மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

    அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும். ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் நீராடினால் கூடுதல் சிறப்பு.

    கங்கா ஸ்நானம் :
    தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்றும் சொல்வார்கள். இதற்கு கங்கா ஸ்நானம் என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?

    அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும்.

    இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் என்று சொல்கிறார்கள்.

    ஏன் அதிகாலை ?
    எப்போதும் சூரிய உதயத்திற்கு பின்னர் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் தீபாவளியன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்னரே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது ஏன் தெரியுமா?

    பூமாதேவி தனது மகனான நரகாசுரனைக் கண்டு கொள்ளாமல், அவன் போக்கில் விட்டதால்தான், அவன் கொடுமைக்காரனாக மாறி, பலரையும் துன்புறுத்தி அதில் இன்பம் கொண்டு மகிழ்ந்தான் என்று நினைத்தார். இனிமேல் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போல் நடக்கவிட்டு, தவறு செய்வதற்கு யாரும் காரணமாகி விடக்கூடாது என்று கருதினார்.

    எனவே, ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளையும் அதிகமாகச் செல்லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என நினைத்தார்.

    எனவே, சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்த நேரத்தில் கங்கா குளியல் செய்திட வேண்டும் என்று ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றார். இதனால், தீபாவளியன்று கங்கா குளியலுக்கான நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ குளிப்பது தவறானதாகக் கருதப்படுகிறது.

    இதோடு நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்றும் சொல்லப்படுவதுண்டு.
     

  • Deepavali Puranam Koorum Karanagal

    தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

    கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

    இலங்கையை ஆண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

    சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

  • Oliyin sirappai unarthum Deepavali

    ஒளியின் சிறப்பை உணர்த்துவது தீபாவளி தீபங்களின் வரிசை என்பதே  தீபாவளி,வெளியுலகத்திலுள்ள இருள் மட்டுமில்லாமல்,மனதில் இருக்கும் தீமை என்னும் அக இருளும் நீங்க தீபாவளி வழி காட்டுகிறது.
    புத்தாடை,பலகாரம்,பட்டாசு,உறவினர்களைச் சந்திப்பது என வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமில்லாமல்,தன்னைப் போல பிறரை நேசிக்கும் அன்பு மனம் நமக்கு வேண்டும்  என்பதை உணர்த்துகிறது. எளியவர்களுக்கு இயன்ற உதவி செய்யும் நன்னாளாக அமைகிறது.

    தீபாவளி உணர்த்துவது

     இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் தரசு போல இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.நியாத்தின் குறியீடான தராசை துலாக்கோல் என்பர்.தீபாவளி மாதமான ஐப்பசிக்கு துலா மாதம் என்று அழைக்கப்படுவார்கள். வேண்டியவர்,வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் தராசு போல நடப்பவனே நீதிமான்.உயிர்களை துன்புருத்திய நரகாசுரனை, பெற்ற பிள்ளை என்ற குறுகிய எண்ணத்துடன் திருமாலும்,சத்தியபாமாவும் ஆதரிக்கவில்லை.அவனைக் கொன்று உலக உயிர்களை காப்பாற்றினர். நீதி உணர்வும்,மன உறுதியும் வேண்டும் என்பதே தீபாவளி.

    வடமாநிலங்களில் தீபாவளி,பாசமலர் திருவிழாவாக நடக்கிறது. இதில் எமனுக்கு முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. எமனின் தங்கை யமுனை(நதி).அவளுக்கு தீபாவளியன்று அண்ணன் பரிசளிக்க வருவதாகவும்,அதற்கு நன்றியாக யமுனை விருந்து படைப்பதாகவும் சொல்வர்.இதன்படி வடமாநிலங்களில் சகோதரிகளுக்கு,சகோதரர்கள் பரிசு அளிப்பர். அதற்கு நன்றிகடனாக,சகோதரிகள் விருந்து வைப்பர்.

     இரவில் பெண்கள்,தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவர். தீபம் அணையாமல் நீண்ட நேரம் மிதந்தால் ஆண்டு முழுவதும் சுபிட்சுமாக இருக்கும் என நம்புகின்றனர். அது மட்டுமில்லாமல்  தொழில்,வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வடமாநிலங்களில்  தீபாவளியன்று லட்சுமியை வழிபடுவர். வீடு முழுவதும் மாலை நேரத்தில் வரிசையாக தீபமேற்றுவர்.தீபலக்ஷ்மியாக திருமகள் வாசம் செய்வதாக ஐதிகம்.

    அம்ர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கியர்கள் லட்சக்கணக்கில் தீபங்களை ஏற்றி கொண்டாடுவது கண்கொள்ளக் காட்சியாக அமைந்திருக்கும். உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் தீபாவளியன்று கோவர்த்தன விரதம் இருப்பர். இதனால் கால்நடைவளர்ப்பு,விவசாயத்தில் லாபம் பெருகும் என நம்புகின்றனர்.

    தீபவளியன்று சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவில் விழித்து நரகசுரனுடன் போரிட்டு வென்றார் கிருஷ்ணர். இதனால் இந்நாளுக்கு நரக சதுர்த்தசி என்றும் பெயர்.சிவராத்திரி சிவனுக்குரியது என்றாலும்,ஐப்பசியில் பெருமாளுக்கும் உரியது.கிருஷ்ணர்,சிவன் இருவரையும் வழிபட ஏற்ற நாள் தீபாவளி ஆகும்.

     தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விளக்கேற்றுவது வழக்கம். தீபாவளியன்று லட்சுமி தேவி தங்கள் வீடுகளுக்கு வருவதாக ஐதீகம் அவரை வரவேற்கும் விதத்தில் வண்ண விளக்குகளால் வீடுகளை அலங்கரிக்கிறார்கள். லட்சுமி வருவாள் என்ற ஐதீகம் இருக்கிறது. வீட்டினை சுத்தமாகி எல்லாரும் சுத்தமாக குளித்து வெளிச்சமாக விளக்கினை ஏற்றி வைத்தால் தங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் வரும் என்று சொல்லப்படுகிறது. காலப்போக்கில் அது பல நிறங்களை அள்ளித் தெளிக்கும் பட்டாசாக உருமாற்றம் பெற்றது.

    இந்த உலகத்தில் ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் உணர்த்தியவர் சிவ பெருமான்.அதற்காக அவர் தனது உடலில் சரிபாதியை பார்வதி தேவிக்கு தந்து அருளினார்.சிவனிடம் பாகம் வேண்டி பார்வதி தேவி இருந்த விரதமே கேதார கவுரி விரதம்,  இந்த விரதத்தை மேற்கொண்டு சிவனின் உடலில் பாதியானாள்,இந்நாளை தான் தீபாவளியாக கொண்டாடிகிறார்கள்.

    தீபாவளியன்று லட்சுமி குபரே பூஜை செய்து வழிப்பட்டால்,மகாலட்சுமி குபேரரை ஒரு சேர தரிசித்தால் செல்வவளம் உண்டாகும்.
     

  • October 26 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – லாபம் 
    கடனம் – செலவு
    சிம்மம் – உயர்வு
    கன்னி –  முயற்சி
    துலாம் –  ஆர்வம்
    விருச்சிகம் – பரிவு
    தனுசு –     விருப்பம் 
    மகரம் –  சிந்தனை
    கும்பம் – பரிசு
    மீனம் –     கவனம் 
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி
     

  • October 26 Indraya Naal Eppadi

    அக்டோபர் 26 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஐப்பசி 9
    26-அக்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    திரையோதசி    ம    2.22
    நட்சத்திரம்    :    உத்திரம்    கா    7.21
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thala Deepavali

    ஆண்டுக்கு ஒரு முறை வருவது தீபாவளி பண்டிகை… ஆனால் ஆயுளுக்கே ஒரு முறை வருவது தான்  ‘தலை தீபாவளி’. பண்டிகைகள் நூறு வந்தாலும், வாழ்நாள் முழுக்க உடன் பயணிக்கப்போகும் துணையோடு சேர்ந்து கொண்டாடும் ஸ்பெஷல் தான் தலை தீபாவளி. 

    திருமணத்திற்கு பின்பு வரும் அனைத்து பண்டிககைளும் மாப்பிள்ளை வீட்டில் கொண்டாடினாலும்,  தலை தீபாவளி எப்பவுமே பெண் வீட்டில்தான். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளை தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, பெண்ணின் பெற்றோர், மணமகன் வீட்டிற்கு சென்று சீர்வரிசை வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார்கள்.

    தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து தம்பதிகள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மாப்பிள்ளைக்கு வைக்கப்படும் எண்ணெய் கிண்ணத்தில், மாமனார் எப்படியோ கடனோ உடனோ வாங்கி செய்த தங்க மோதிரம் இருக்கும். ‘கிண்ணத்தில் கை விட்டுப் பாரு. மோதிரம் இல்லேன்னா குளிக்கவே குளிக்காதே’ என்று மாப்பிள்ளையின் அம்மா வீட்டிலேயே ‘அட்வைஸ்’ செய்து அனுப்பியிருப்பார். 

    அவரவர் வசதிக்கேற்ப மோதிரம் அரை சவரனோ, ஒரு சவரனோ இருக்கும். சில வசதிக்கார மாமனார்கள் ‘போனஸாக’ மைனர் செயினும் போட்டு அசத்துவதுண்டு. மாப்பிள்ளைக்கும் செலவு உண்டு. மச்சினி, மச்சினன் இருந்தால் அவர்களுக்கு டிரெஸ். பட்டாசு என்று பர்ஸுக்கு பங்கம் ஏற்படலாம்.

    அடுத்தது என்ன? சாப்பாடுதான். மாப்பிள்ளை வந்திருக்காரேன்னு பல வெரைட்டில பலகாரத்துடன், சுடச் சுட இட்லி, கறிகுழம்பு என செஞ்சு வச்சிருப்பாங்க. புதுமாப்பிள்ளை என்பதால், கொஞ்சம் தூக்கலாக கவனிப்பார்கள். பின்னர், இருவரும் ஜோடியாக சேர்ந்து பட்டாசுகளை கொளுத்தி, பட்டையைக் கிளப்புவார்கள். 

    இவ்வளவு கவனிப்பும் இன்றைக்கு ஒரு நாள் மட்டும்தானா? என ஏக்கத்துடன் ஊருக்கு திரும்புவார் மாப்பிள்ளை. தல தீபாவளி சம்பிரதாயம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. நகரங்களில் அதிகபட்சம் அறுபது சதவித தம்பதிகள்தான் இப்போது தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.