Blog

  • Thiruchendur soorasamharam

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுவருகிறது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. 

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதமிருந்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை மணலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் சமதளமாக்கப்பட்டு வருகிறது. கோவில் கடற்கரை, சுற்றுபிரகார வீதிகள் மற்றும் நகரின் பிரதான வீதிகளில் 70 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு மற்றும் 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

    தென்மண்டலத்தில் இருந்து 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்கு 10 இடங்களில் அகன்ற  எல்.இ.டி., டிவிகள் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
     

  • Mounam Kanda Sadasivam

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கும்பகோணம் 
    ஸ்ரீ மடத்தின் 
    குரு 
    பரமசிவேந்திரா 
    பரமகுரு மட்டும் அல்ல.

    அவர் 
    காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த
    58 வது பீடாதிபதி.

    சிவராமகிருஷ்ணனாக தஞ்சமடைந்த சீடனை  'வித்வான் சதாசிவம் ' 
    என உயர்த்தி
    பிற்காலத்தில்
    தரணி போற்றும்
    சதாசிவ பிரம்மேந்திரராக வார்த்தெடுத்த 
    குரு மகா சன்னிதானம்.

    குரு பரமசிவேந்திராவின் பார்வைக்கு 
    அரசர்கள் எல்லாம் காத்திருப்பது வழக்கம்.

    அக்கால 
    மைசூர் மன்னனுக்கு
    ஓர்  ஆஸ்தான வித்வான்  தேவையாய் இருந்தது.

    அவன் 
    பரமசிவேந்திராவை
    தரிசித்துக் 
    கோரிக்கை வைத்தான்.

    'தக்கதொரு ஆஸ்தான வித்வான் வேண்டும் '
    என்று வேண்டி நின்றான். 

    அது சமயம் தான்….
    குருநாதரால் 
    அடையாளம் காணப்பெற்று
    சதாசிவம் என்ற
    புதிய நாமகரணம் 
    சூட்டப் பெற்றிருந்தார் சிவராமகிருஷ்ணன்.

    பற்பல கற்று
    பிரம்மஞானம் 
    கற்றுத் தேர்ந்து மடமெங்கும் 
    புகழ் பரப்பிக் கொண்டிருந்தார்.

    பரமசிவேந்திரா
    மைசூர் மன்னனின் வேண்டுகோளை ஏற்று சீடர் சதாசிவத்தை
    மைசூருக்கு அனுப்பிவைத்தார்.

    குரு சொல்லை ஏற்று மறுப்பின்றி பயணமானார் மைசூர் நாட்டிற்கு.

    மைசூர் அரண்மனையில் வித்வான் சதாசிவத்தின்
    ஞானக் கொடி
    பட்டொளி வீசிப் பறந்தது.

    அரசனின்  எல்லாவற்றுக்கும்
    எதற்கும் 
    பிரதானமாக இருந்தார்.

    அவரன்றி ஓரணுவும் அசையாத நிலை 
    விரைவில் வந்தது.

    'பேச்சாற்றல் மிக்கவர் ' 'சொல்லின் செல்வர் ' 'தர்க்கத்தில் வல்லவர் '
    என்று 
    மன்னன் மட்டுமல்ல மைசூரே கொண்டாடியது.

    கொண்டாட்டம் 
    வரும்போது 
    திண்டாட்டமும்
    வரும் தானே?

    வந்தது.

    சதாசிவத்தின் புகழ்
    ஏற்கனவே அவையில் 
    கோலோச்சிக் கொண்டிருந்த 
    சிலருக்கு காழ்ப்பை
    உண்டு பண்ணி வந்தது..

    பொறாமை பேச்சுக்கள் கொட்டமடிக்க ஆரம்பித்தன.

    போதாக்குறைக்கு 
    எதிலும் நிறை விரும்பும் 
    சதாசிவம்
    அரசனை நாடி வந்து 
    புகழ் கவி பாடி
    பரிசில் பெற வருவோரை கேள்விகளால் 
    திணற அடித்தார்.

    பரிசுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த சதாசிவம்
    'அரசர் கொடுக்க ஆசைப்பட்டாலும் இவர் விட மாட்டார் 'என்னும் அவப்பெயர் பெற்றார்.

    கற்றறிருந்த 
    சாஸ்திரி ஒருவர்.
    ஊர் தஞ்சாவூர்.
    பெயர் கோபாலகிருஷ்ண சாஸ்திரி..

    விவரமானவர்.
    வில்லங்கமானவரும் கூட.

    மைசூர் 
    சமஸ்தான வித்வான் 
    பதவி மீது அவருக்கு வெகுகாலமாக ஒரு கண்.

    எப்படியாகிலும் சதாசிவத்தை வென்று சமஸ்தான வித்துவானாக வேண்டும் என்று துடித்தார் 

    மைசூர் வந்தார்.

    போராடி ஜெயிப்பதை விட கூடிக் கெடுக்கலாம் 
    என முடிவெடுத்தார்.

    சமஸ்தானம் வந்தவர் சதாசிவத்தின் 
    பாதங்களில் சரணடைந்தார். 

    "பணி செய்யக் காத்திருக்கிறேன்…..
    ஆட்கொள்ள வேண்டும்" புன்னகைத்த
    சதாசிவம் சம்மதித்தார்.

    நம்பிக்கையூட்டும் வகையில் 
    பணிகள் பல 
    செய்தார் சாஸ்திரி.

    சதாசிவத்தின் 
    காலைப் பிடித்தவர் 
    காலைப் பிடித்திழுக்க சமயம் பார்த்துக் காத்திருந்தார்.

    ஒரு நாள்…
    சதாசிவத்தின் 
    குரு பற்றியும் 
    குருநாதர் இருக்கும் 
    இடம் பற்றியும் 
    செல்லும் வழி குறித்தும் பேச்சுவாக்கில் கேட்டறிந்தார்.

    பின்னொரு நாள்
    குருவின் பாதம் தொட்டு
    சொந்த ஊருக்கு
    சென்று வருவதாகக் கூறி
    குருவின் குருநாதரைத் தரிசிக்க விரைந்தார்.

    பரமகுரு
    பரமசிவேந்திராவைக் கண்டு 
    தரிசித்த மாத்திரத்தில் வித்வான் சதாசிவத்தை ஏகத்துக்கும்
    புகழ்ந்து தள்ளினார்.

    ஒவ்வொரு 
    புகழ் வார்த்தையும்
    குருவின் செவிகளில் தேனாகப் பாய்ந்தன.

     மகிழ்ந்தார்.

    தன் சீடன் அவையத்து முந்தி இருப்பதைக் கேட்டு மகிழ்வதை தவிர குருவுக்கு வேறென்ன பேறு 
    இருக்க முடியும் ?

    இது தான் 
    தருணம் என்று
    சாஸ்திரியார் 
    சதி பண்ணத் தொடங்கினார்.

    "குருநாதா….!
    உங்கள் சீடர்களில் 
    மிக உயர்ந்தவர் 
    சதாசிவ சுவாமிகள்.

    அவரின் எல்லை சமஸ்தான வித்வான் அல்லவே ?!!!

    பரிசில் பெற
    வருகின்ற புலவர்களிடம் தன் மேதாவித்தனத்தைக் காண்பித்து 
    அவர்கள் வயிற்றில் அடிக்கிறார்.

    அவர்கள் சமஸ்தானத்தையும் சேர்த்தே திட்டுகிறார்கள்…

    எப்பேர்ப்பட்ட மகான்
    நம் சதாசிவம் சுவாமிகள்..?

    அவர் நோக்கம் 
    தவமாய் அல்லவா இருக்கவேண்டும்?

    அதில் அல்லவா 
    அவர் மேலும் 
    சிறக்க வேண்டும்.

    தவத்தில் சிறந்தால்
    மைசூர் மகாராஜா என்ன ….
    எத்தனை மன்னர்கள் அவரைத் தரிசிக்க காத்திருப்பார்கள்..!"

    பரமசிவேந்திராவின் மனமறிந்து 
    சாஸ்திரியார் வீசிய கத்தி
    பதம் பார்க்க ஆரம்பித்தது.

    "இங்கே 
    அழைத்ததாகச் சொல் "
    குறைவாகவே சொன்னார். கோபம் நிறைந்திருந்தது..

    காரணம்
    சாஸ்திரியார் 
    சுட்டிக்காட்டிய குறை நியாயமாகப்பட்டது குருநாதருக்கு.

    மைசூர் திரும்பிய சாஸ்திரியார் 
    மெத்த நடிப்போடு
    "சுவாமி,…..
    உங்களை குரு பார்க்க விரும்புவதாகச் 
    சொல்லச் சொன்னார்"

    குரு அழைப்பை ஏற்று 
    குரு நினைவுகளோடு 
     பதவியை  ராஜினாமா 
    செய்து விட்டுப் புறப்பட்டார் மைசூர் சமஸ்தான வித்வான் சதாசிவம்.

    ஒளியின் வேகத்தை விட வேகமாக மடம் விரைந்து குருநாதர் தாளடி பணிந்தார் சிஷ்யகோடி.

    குரு ஏதும் பேசவில்லை.
    கண்ணீரோடு குருவின் முகமும் பாதமும் பார்த்தார்.

    "ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ …
    உன் வாயை அடக்கக் கற்றுக் கொள்ளவில்லையா ?" 

    குரு
    ஒரே வார்த்தையில்  'வாயடக்கு '
    என்று
    உபதேசம் அருளியதாக நினைத்தார் சீடர்.

    அன்று 
    பேசியது தான்
    அவர் பேசிய
    இறுதிப் பேச்சு.

    பின் எப்போதும் 
    பேசவே இல்லை.

    குருவின் 
    ஒரு சொல் 
    சீடரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது.

    தாயின் வார்த்தையால் பசியைத் துறந்தவர்
    குருவின் வார்த்தையால் பேச்சைத் துறந்தார்.

    ஆம்……
    'நாவடக்கு '
     மாதாவின் சொல்.
    ' வாயடக்கு '
    குருவின் உபதேசம். 

    'அடுத்து?' 
    என்கிற மாதிரி 
    குருவைப் பார்த்தார் 
    மெளனம் கண்ட சதாசிவம்.

    "விரும்பிய இடம் செல்…. தவம் செய்…."

    'வீணே ஆடைகள் எதற்கு..?' என்று உடைகளுக்கும் விடைகொடுத்தார்.

    திகம்பரராகவே அலைந்தார். நிர்வாணமாகவே திரிந்தார்.

    மக்கள் 
    நடமாட்டமில்லாத 
    சம தரைப்பகுதி,
     மலைஉச்சி,
    நதிக்கரை, 
    அடர் வனம் 
    அவர் 
    வாசஸ்தலங்கள் ஆகின. 

    இப்படித்தான் 
    ஒரு முறை….

    எங்கோ ஒரு திறந்தவெளியில் படுத்திருந்தார். 

    தலைக்கு ஏதுவாக
    மண் குவித்து 
    தலை சாய்த்திருந்தார்.

    அப்போது வந்த 
    கிராமத்து மக்கள் 
    "முற்றும் துறந்தவருக்கு தலையணைப் பாரு"
    கேலி செய்தபடி சென்றுவிட்டனர்.

     'என்ன இது…
     வம்பா போச்சு..'
     என நினைத்தாரோ என்னவோ மறுநாள்
    மணல் குவிக்காமல் 
    தலை சாய்ந்து இருந்தார்.

    அப்போதும் ஒரு 
    விமர்சனம் வந்தது.

    " நாம் நேற்று சொன்னதைக் கேட்டு சாமிக்கு கோபம் வந்துவிட்டது…பாரு…"

    வேத சித்தாந்த 
    யோக ஞானிக்கு 
    அதிர்ச்சி.

    குருவிடம் விளக்கம் கேட்டார் .

    "அகந்தையை வீடு…" அற்புதமாய் சொன்னார்.

    "பிறர் சொல்லுக்கு 
    செவி கொடுக்காதே… கோபம் தவிர்…"
    குருவிடம் கிடைத்தன உபதேச சொற்கள்.

    அதன்பின் 
    அவர் வாழ்வு முற்றிலும் குறை ஒன்றும் இல்லாமல்
    இறை ஒட்டியே இருந்தது.

    ஐந்து சிவயோகங்கள்
    அனுபவித்தார்.. தன்னிகரில்லா 
    திருமூலர் 
    சொல்லிச் சென்ற யோகங்களில் 
    கரை கண்டார்.

    எல்லா சித்திகளும் கைகூடின.
    தன்நிலை மறந்தது 
    அதில் ஒன்று.

    ஆகாயத்தில் பறந்தவர் பிறர் கண்களுக்குப் புலப்படாமல் பயணித்தார்.

    மண்ணுக்குள் புதையுண்டு பல காலம் கிடந்தார். 

    கரம் வெட்டப்பட்ட போதும், முள் செடிகளுக்கிடையில் நெடுதுயில் கொண்ட போதும் ரத்தம் பீறிட்டது உணராமல் கடந்தார்.

    அவர் நிகழ்த்திய அற்புதங்கள் 
    திட்டமிட்டவை அல்ல. 
    சித்துகளை உலகுக்கு காட்டும் 
    வீண் விளம்பரங்கள் அல்ல.

    உடல் உணர்ச்சிகள் இன்றி வெட்கம், துக்கம், மகிழ்வு உள்ளிட்ட மன உணர்வுகள் ஏதுமின்றி 
    ஏகாந்த நிலையிலேயே 
    இருந்து வந்தார். 

    அவர் பாட்டுக்கு அவர் இருந்தார். 
    அதுதானே 
    சித்தன் போக்கு ?

    உணர்வு அற்ற நிலை என்பது  வெகு சில சித்தர்களுக்கே சாத்தியம்.

    அவர்களில் முதன்மையானவர் 
    சத்குரு 
    சதாசிவ பிரம்மேந்திராள்.
     

  • Geethu vats

    வணக்கம், என்னுடைய குடும்பம் மிகவும் பெரியது. 4 அண்ணன் 3 தங்கை என உடன் பிறப்புகளுடன் கூடியது. நாங்கள் நால்வரும் சேர்ந்து Finance தொழில் நடத்தி வந்தவேலையில், எனது இரண்டாவது அண்ணாவிற்கு வயிற்றில் வலி வந்தது. டாக்டரின் ஆலோசனையின்படி மருத்துவம் பார்த்த போது குடல் கேன்சராக இருக்கலாம் என்றார்கள்.

    குடும்பமே நிலை குலைந்து நின்ற போது எனது நண்பர் IOB விஸ்வநாதன், திருமதி கீது வாட்ஸ் அவர்களைப் பாக்கும்படி கூறினார். அவர்களைப் பார்க்கச் சென்றபோது தெரிந்தோ தெரியாமலோ சிறுவயதில் பூனை இறப்பதற்கு உங்கள் அண்ணன் காரணமாக இருந்தாரா? எனக் கேட்டார்கள். வெகு நேரம் சிந்தித்த பின்பு எங்கள் அண்ணன் ஆம் என்று கூறினார். (தற்போது அண்ணனின் வயது 55) 40 வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை பிரசன்னம் மூலம் வெளிப்படுத்தியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் வேறு ஒரு டாக்டரிடம் சென்று பாருங்கள். இது கேன்சர் அல்ல என்று கூறுவார்கள் என்று கூறினார்கள்.

    மேலும் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு தேவையான உதவி செய்யுங்கள் என்றார்கள். ஐம்பது ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு சென்ற போது, உறவினர் இறந்த செய்தியைக் கேட்டு கோவிலுக்கு செல்ல முடியவில்லை. திருமதி கீது வாட்ஸிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேரியபோது அந்த கோயிலுக்கு உங்களுடைய பணம் தேவையில்லை, உங்களால் இயன்ற சரீரத்தாலான சகாயம் செய்யுங்கள் என்றார்கள். அதேபோல நானும் எனது அண்ணனும் கோவிலுக்குச் சென்று திருமதி கீது வாட்ஸ சொன்னபடி செய்தோம்.

    தற்போது எங்களுடைய அண்ணனுக்கு கடவுளின் அனுகிரஹத்தால் டாக்டர்கள் எந்த நோயும் இல்லை என்று கூறியதால் எங்களுடன் வந்து தொழில் புரிகிறார். எங்களுடைய மன உளைச்சல் நீக்கி எங்களுக்கு நிம்மதியை  ஏற்படுத்திய திருமதி கீது வாட்ஸ அவர்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 

    – இப்படிக்கு
    நிமித் ஜெயின் – வண்ணாரப்பேட்டை

     

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257

  • November 1 Rasi palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – சினம் 
    மிதுனம் – அன்பு
    கடனம் – போட்டி  
    சிம்மம் – ஜெயம் 
    கன்னி –  நன்மை 
    துலாம் –  பகை
    விருச்சிகம் – இன்பம் 
    தனுசு –     திடம் 
    மகரம் –  பெருமை 
    கும்பம் – மகிழ்ச்சி
    மீனம் –     விவேகம் 
    சந்திராஷ்டமம்    – ரோகிணி
     

  • November 1 subamugurthanaal

    நவம்பர் 1 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள் 
    விகாரி வருடம் – ஐப்பசி 15
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    சிக்கல் சிங்காரவேலவர் தேர்
    01-நவ-2019 வெள்ளி  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    அ.கா    5.01
    நட்சத்திரம்    :    மூலம்    இ    2.23
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Daily Kandha Sasti Kavasam

    கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

    இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். 

    ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

    நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.
    முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,
    இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

    அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.
    நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

    சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்
     

  • Kandha Shasti story

    படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

    அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

    காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

    அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

    தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை.

    தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

    முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.

    சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

    கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

  • October 31 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – நலம்   
    மிதுனம் – வெற்றி
    கடனம் – ஆர்வம் 
    சிம்மம் – அசதி
    கன்னி –  கீர்த்தி
    துலாம் –  லாபம் 
    விருச்சிகம் – சாதனை 
    தனுசு –     ஆதரவு
    மகரம் –  சலனம் 
    கும்பம் – சுகம் 
    மீனம் –     சாந்தம்
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை

  • October 31 Naga Chadurthi

    அக்டோபர் 31 – நாக சதுர்த்தி
    விகாரி வருடம் – ஐப்பசி 14
    நாக சதுர்த்தி
    31-அக்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    அ.கா    5.07
    நட்சத்திரம்    :    கேட்டை    இ    1.57
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Meena Rasikku November Rasi Palan

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
    அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்யும் மீன ராசியினரே நீங்கள் சமூக சிந்தனை அதிகம் இருப்பவர்கள். இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

    வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். 
    தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

    குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். 

    பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

    கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான்  தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். 

    அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.  மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

    மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

    பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
    அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542