இன்றைய ராசி பலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – நட்பு
கடனம் – வரவு
சிம்மம் – கவனம்
கன்னி – அமைதி
துலாம் – வீம்பு
விருச்சிகம் – நன்மை
தனுசு – போட்டி
மகரம் – பரிசு
கும்பம் – நஷ்டம்
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – திருவாதிரை
Blog
-
November 3 Rasi Palan
-
November 3 Murugan Thiru Kalyanam
நவம்பர் 3 – முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்
விகாரி வருடம் – ஐப்பசி 17
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
03-நவ-2019 ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி முழுவதும் 0.00
நட்சத்திரம் : உத்திராடம் அ.கா 4.46
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Thiruchendur Soorasamharam
கந்தசஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் வீற்றிருக்கும் கோயில்களில் பக்தர்களின் அரோகரா முழக்கத்துக்கு இடையே வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருச்செந்தூரில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 28-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் இருந்து வந்தனர்.
இதற்கிடையே, கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது.மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார்.
அதன்பின், சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
இந்நிலையில், சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறிய சூரனை சுவாமி வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறிய சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி, சுவாமி தன்னுடன் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட்கொண்டார்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் திரளாக கூடியிருந்த பக்தர்களின் கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் வானை பிளந்தன. ஆறு நாள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தை முடித்தனர். இதேபோல தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
Murugaperuman vel vangum nigazhchi
முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்ய இன்று மாலை அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கினார். சிக்கல் சிங்காரவேலர் சன்னதியில், 1008 அண்டங்களையும், 108 யுகமாக ஆண்டு தீவினை புரிந்த மும்மலங்கள் ரூபமாக விளங்கிய சூரபதுமன், சிங்கமுகன், தாருகன் ஆகியோரின் தீராத கொடுமையில் இருந்து அனைத்து லோகங்களையும் தேவர்களையும் காக்க, போரிடும் முன்பு சிக்கல் நவநீதேஸ்வரரையும், வேல்நெடுங்கண்ணி அம்பாளையும் வணங்கி ஆசி பெற்றார்.
அன்னை பராசக்தியானவள் தனது சக்தியை வேலாயுதமாக வழங்க, அந்த பரவசத்தில் முருகனுக்கு வியர்க்க,சஷ்டியில் சூரபதுமனை சம்ஹரித்து அருள் புரிந்தார் முருக பெருமான். ஒவ்வொரு ஆண்டும் சிக்கல் சிங்காரவேலருக்கு சஷ்டிக்கு முந்திய நாள் இரவு பஞ்சமி திதியில் வேல்நெடுங்கண்ணி அம்பாளிடம் சக்தி வேல் பெரும் நிகழ்வு அற்புதமாக நடைபெறுகிறது. திருத்தேர் நிலைக்கு வந்த பிறகு இரவு சிங்காரவேலர் நாதஸ்வரம் மேள தாளங்கள் முழங்க தேரில் இருந்து அற்புதமாக ஆடிக்கொண்டு அம்பாள் சன்னதிக்கு எழுந்தருள்வார்.
அன்னைக்கு சிறப்பு அலங்காரத்துடன் வெள்ளை சார்த்தி, தீபாராதனை நடைபெற்று அர்ச்சகர் தேவியிடம் உள்ள சக்தி வேலை பெற்று சிங்கார வேலருக்கு சார்த்துவார். துள்ளி துள்ளி ஆனந்தமாக அரோஹரா அரோஹரா கோஷம் முழங்க அதை பெற்று கொண்ட பெருமானின் திருமேனி முழுக்க முத்து முத்தாக அரும்பி வியர்க்கும் அதிசயத்தை இன்றும் காணலாம்.
அதோடு சுவாமி தன் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளிய பின்னர் பக்த கோடிகள் அனைவரும் வரிசையாக சென்று சுவாமியை அருகில் தரிசித்து வலம் வரலாம். சுவாமியுடன் வள்ளியம்மை, தெய்வானை அம்மைக்கும் வியர்க்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு பிறகு அதிகாலை அபிஷேக ஆராதனைகள் தொடங்கி சூரசம்ஹாரம் அன்று மாலை நடைபெறும். கடவுள் உண்டா என்று கேட்கும் அத்தனை பெருக்கும் தன் இருப்பை நிரூபிக்க கூடிய தலங்களில் ஒன்று தான் சிக்கல் சிங்கார வேலர் திருக்கோயில் ஆகும்..
-
Soorapadmanai Vadam Seiya Vel Vazhangiya amman
திருச்செந்தூர் என்றாலே ஆறுபடை வீடுகளில் 2 ம் படை வீட்டில் அமர்ந்திருக்கும் செந்திலாண்டவ பெருமாள் தான் அனைவரது கண் முன்பும் வந்து நிற்கும்.அதே போல் சிறப்பு வாய்ந்த மற்றொரு கோவிலும் திருச்செந்தூரில் அமைந்து உள்ளது. அந்த கோவிலின் பெயர் வெயிலுகந்தம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விற்றிருக்கும் அம்மன் பெயர் ஸ்ரீ வெயிலுகந்தம்மன். தல விருட்சம் பன்னீர் மரமாகும் ,தீர்த்தம் வதனாரம்ப தீர்த்தம். இந்த தீர்த்தம் சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. இந்த கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோவிலின் சிறப்பு!
வெயிலுகந்தம்மன் திருக்கோயில், சூரபத்மனை வதம் செய்த கந்தனுக்கு பராசக்தி, பலவடிவம் கொண்டு கைகொடுத்த திருத்தலம் ஆகும். கந்தபுராணத்தின்படி, முருகப்பெருமான் பத்மாசூரனை அழிப்பதற்கு முன்பே அவருடைய தாய் பராசக்தியானவள் திருச்செந்தூரில் அமர்ந்தருளியிருக்கின்றார். பத்மாசூரனை பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இங்கு வந்து தன் தாயை வணங்கி வேண்டி நிற்க, அன்னையும் கருணை கூர்ந்து தன் மகனுக்கு வெற்றி தரும் சக்தி வேலை கொடுத்தபடியினால், ‘வேல் உகந்த அம்பாள்’ என்று இந்த அம்பாள் அழைக்கப்பட்டார். அதுவே பின்பு பேச்சு வழக்கில் “வெயிலுகந்தம்மன்” என்று மருவி வழங்கலாயிற்று. அதன்பிறகே அன்னையின் ஆணைப்படி இந்நகரை முருகப்பெருமான் நிர்மாணித்ததாக கூறப்படு கிறது.
சூரபத்மனுடன் நடந்தபோரின் போதும் அன்னையே பல வடிவம் கொண்டு போருக்கு உதவினாள். சூரனை அழித்ததினால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்து தவம் இயற்றும்படி அன்னை ஆணையிட, அதன்படியே சுப்பிரமணியரும் செய்திட்டார். பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தையும், ஜபமாலையுடன் தவமியற்றும் கோலத்தில் சுப்பிரமணியர் இருக்கும் கோலத்தையும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்றும் காணலாம். அன்னையும், கிழக்கு முகமாக சிவபூஜை செய்யும் தன் மகனை ஆசீர்வதிக்கும் கோலத்தில் பத்திரகாளி அம்மன் அம்சத்தில் அருள்பாலிப்பதை(கோவிலுக்கு சற்று தொலைவில்) காணலாம்.
சூரசம்ஹாரம் நடை பெறும் நாளுக்கு முந்தைய இரவு, முருகப்பெருமானே சூட்சும உருவில் இத்திருக்கோவில் வந்து தன் அன்னைக்கு பூஜை செய்து அருள் பெற்று வேல் வாங்கி செல்வதாக ஐதீகம். எனவே அன்று இரவு பூஜை செய்யும் பாத்திரங்கள் தயாராக வைக்கப்பட்டு கோவில் திருக்காப்பிடப்படுகிறது. அம்மன் இவ்வூரின் வடக்கே கோவில் கொண்டுள்ளதால், இவளே ஊர் காளியாகவும் வணங்கப்பட்டு வருகிறாள். திருச்செந்தூரின் முக்கியமான பிரசித்தி பெற்ற தீர்த்தமான வதனாரம்ப தீர்த்தம் இங்குள்ளது. இந்த தீர்த்தம் ஏற்பட ஒரு சுவையான கதையும் உண்டு.
கி.பி.எட்டாம் நூற்றாண்டில் ஆண்டுகளுக்கு முன்பு, வரகுண பாண்டியன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாது கவலையுற்றான். திருச்செந்தூர் வந்து சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும் உடல் மனித உருவிலும் இருந்தது கண்டு மன்னன் மேலும் மனதொடிந்தான். கந்தனிடம் தன் குறையையெண்ணி நெஞ்சுருக வேண்டி நின்றான் மன்னன். அவனது கனவில் காட்சிகொடுத்த கந்தப்பெருமான், “அன்னை பார்வதி தேவியால் மட்டுமே போக்க முடியும். எனவே, நீ அன்னையிடம் போய் நில்; அபயம் அளிப்பாள்” என்று சொன்னார். அதன்படி மன்னனும் காடுமலை கடந்து வெயிலுகந்தம்மன் திருத்தலத்தை அடைந்தான். அங்கே அன்னையிடம் தனது மகளின் குறைதீர வேண்டுதல் வைத்தவன், அங்கேயே குடில் அமைத்துத் தங்கிக் கடும் விரதமும் மேற்கொண்டான்.
அவனது வேண்டுதலுக்கு இறங்கி வந்த அன்னையவள், “ஆடிச் செவ்வாயில், என்னெதிரே இருக்கும் இந்தக் கடலில் இறங்கித் தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாய் அருள்வாக்கு தந்தாள். அதுபடியே அன்னையை நெஞ்சில் நிறுத்திக் கையில் குழந்தையுடன் கடலில் இறங்கினான் மன்னன். அதுவரை ராட்சத அலைகளால் ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் முகம் மனித முகமாக மாறியிருந்தது. குழந்தையின் வதனம் மாறிய இடம் என்பதால் இந்த இடம் ‘வதனாரம்ப தீர்த்தம்’ என்று பெயரானது. மகளின் அழகு முகம் பார்த்து ஆனந்தம் கொண்ட பாண்டியன், குழந்தையின் உடம்பில் மஞ்சளும் குங்குமமும் கலந்த நலங்கு மாவு பூசி, அரளி மாலை அணிவித்து அலங்காரம் செய்து அன்னையை தரிசிக்கச் சென்றான். சன்னிதிக்குப் போனதும் அன்னையின் முகம், குதிரை முகமாக மாறி இருந்தது கண்டு திடுக்கிட்டான். அரசன் இதயம் நெகிழ்ந்து பதறி அம்மனிடம் கேட்டான்.
“இங்குவந்து அம்மா என்றழைக்கும் எனது குழந்தைகளுக்கு அவர்கள் கேட்பதை என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக் கொண்டேன். உனது கர்ம பலன் தீர்ந்ததும் இதோ எனது இந்த குதிரை முகமும் மாறிவிடும்” என்று கூறினாள். அதன்படியே சிறிது காலம் கடந்த பின் அன்னையின் முகம் மாறியது. அதன்பிறகு வரகுண பாண்டியன் அம்மனுக்குக் கோயில் எழுப்பி நிலங்களை மானியமாக எழுதிவைத்தான். இன்றைக்கும் வதனாரம்ப தீர்த்தத்திற்கு அந்த மகத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆடி செவ்வாய்களில் அதிகாலையில் பெண்கள் வதனாரம்பரத் தீர்த்தத்தில் நீராடி நலங்கு மஞ்சள் அணிந்து செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்கினால் முகம் அழகு வடிவம் பெறுவதோடு தீர்க்க சுமங்கலிகளாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
ஆவணி மற்றும் மாசி திருவிழாவின் பத்தாம் திருநாள் அன்று அம்மன் கடலில் தீர்த்தவாரி செய்து முருகப்பெருமான் எதிரில் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளி சண்முகருக்கு நேர் எதிர் சேவையாகி தன் மகனுக்கு ஆசிகளை வழங்கி, ‘இனி உனது உற்சவம்(திருவிழா) சிறப்பாக நடைபெற நான் உறுதுணையாக இருப்பேன்’ என்று உறுதி கூறுவதாக ஐதீகம். பின்பு அன்னை மற்றும் சண்முகருக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறுகிறது.
-
November 2 Rasi Palangal
இன்றைய ராசி பலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – கீர்த்தி
மிதுனம் – சுபம்
கடனம் – நட்பு
சிம்மம் – அன்பு
கன்னி – சாந்தி
துலாம் – வெற்றி
விருச்சிகம் – வரவு
தனுசு – சுகம்
மகரம் – கோபம்
கும்பம் – பாராட்டு
மீனம் – திறமை
சந்திராஷ்டமம் – மிருகசீரிடம் -
November 2 Soora samharam
நவம்பர் 2 கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
விகாரி வருடம் – ஐப்பசி 16
கந்தசஷ்டி,
02-நவ-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி அ.கா 5.53
நட்சத்திரம் : பூராடம் இ 3.21
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Suba Horaigal 30 – 06
இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுபஹோரை.. நல்ல நேரம் சென்னையில் வசிக்கும் அன்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.சரியான ராகு காலம் ,எமகண்டம் (பகல் காலத்தில், இரவு காலத்தில் )போன்ற நேரங்கள் சென்னைக்கு கணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை உள்ள சுப ஓரையில் மருந்து உண்ண , பெரியோரை பேட்டி காண ,பிரயாணம் செய்ய ஆகிய சுப செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . திங்கட்கிழமை அன்று உள்ள சுப ஹோரையில் புது நகை வாங்கவும் புதிய ஆடை உடுத்தவும், புதிய கடை திறக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் .
செவ்வாய்க்கிழமை அன்று உள்ள சுப ஓரையில் ஆப்பரேஷன் சிகிச்சை செய்ய ,ஆயுதம் செய்ய ,இயந்திரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதன் கிழமையில் வரும் சுப ஓரையில் கலை பயில, கணித ஆரம்பம் செய்ய ,பொன் உருக்க ,,வித்தியாரம்பம் செய்ய, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வியாழக்கிழமை வரும் சுப ஓரையில் பெரியோரை காண்பதற்கும், வாங்கிய கடன் தீர்ப்பதற்கும் ,புதிய வஸ்திரம் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமையில் வரும் சுப ஓரையில் புதிய தொழில் செய்வதற்கும், சுபமான செயல்களை பேசுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சனிக்கிழமை வரும் சுப ஓரையில்ஆயுதம் பழகுவதற்கும், யாத்திரை செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொகுத்தவர் : ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer.போன் 8754 76 3832
-
Murugan Soora samharam
தனித்தமிழ் கடவுள் என்ற சிறப்பு பெற்றவன் முருகன்; சூரபதுமன், 'நான்' என்கிற அகங்காரமும், 'என்' என்கிற மமகாரமும் அமையப் பெற்ற, ஓர் அரக்கன். நம் அழகன், சூரபதுமன் என்கிற அரக்கனின் ஆணவத்தை அடக்கி, அவனை ஆட்கொள்ளவும், தேவர்களின் துயர் போக்கவும், இறைவனால் நிகழ்த்தப் பெற்ற ஒரு திருவிளையாடல் தான், சூரசம்ஹாரம்.
மிகப்பெரிய யாகங்கள், தவங்கள் செய்து, சிவபெருமானின் நன்மதிப்பைப் பெற்ற சூரபதுமன் என்ற அரக்கன், 'என்னைக் கொல்ல இந்த ஏழுலத்திலும், யாருக்கும் வல்லமை இருக்கக் கூடாது; மேலும், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான், எனக்கு அழிவு வர வேண்டும்…' என, புத்திசாலியாகவும் வரம் வாங்கிக் கொண்டான்.
முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும், பொறுக்க முடியாத தொந்தரவுகளைச் செய்யத் துவங்கினான் சூரபதுமன். ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில், சிவன், தன் அதோமுகத்தின் மூலம், ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்து, ஆறு தெய்வக் குழந்தைகளை உருவாக்கினார்; அக்குழந்தைகளை, ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். சிறிது காலத்திற்குப் பின், சிவபெருமான், அக்குழந்தைகளை ஒன்றிணைத்து, ஆறுமுகன் கடவுளை தோற்றுவித்தார். அன்று தான், தீமைகளை வெல்லும் புனிதம் படைக்கப்பட்டதாய் கூறப்பட்டது.
அழகனின் தோற்றம், ஈசனின் பங்கோடு முடியவில்லை. தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி, வேல் ஒன்றை அளித்தாள் சக்தி தேவி. நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் என்ற தலத்தில் தான், தன் தாயிடம் வேலைப் பெற்றார் முருகப் பெருமான். 'சிக்கலில் வேல் வாங்கி, செந்துாரில் சூரசம்ஹாரம்' என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு, முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயமும், ஆண்டுதோரும் நடக்கிறது.
அய்யனின் படைப்பும், அம்மையின் ஆயுதமும் இருக்கும் ஆசியால், முருகன், அரக்கன் சூரபதுமனுடன் போரிட்டான்; தான், தனி ஆள் இல்லை என, தன் தளபதி நவவீரர்களின் தலைவன் வீரபாகுவுடன் கைகோர்த்து, அரக்கனை எதிர்த்தான்.
சூரபதுமன் அவ்வளவு எளியவானா என்ன, உடனே ஒரு வேல் எறிந்ததும் அழிந்து போக! அவனும் பல உருவமாக மாறி, முருகனுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான். நம் பால முருகன் சிறுவனாயிற்றே… பயந்து போகட்டும் என, மாமரமாய் உருமாறி, அதை முருகனின் வேல் இரண்டாக பிளக்க, அதில் ஒன்று சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் உருமாற்றினான் சூரபதுமன். முருகனே, தன் வேலாயுதத்தால், சூரபதுமன் உடலை இரண்டாக பிளந்து, சேவலாகவும், மயிலாகவும் மாற்றிக் கொண்டான் .என்பதும், மற்றுமொரு வரலாறு! போரின் இறுதி கட்டம் வந்தது. நம் அழகன் முருகன், சூரபதுமன் உருமாறிய சேவலை கொடியாகவும், மயிலை தன் வாகனமாகவும் மாற்றி, வெற்றி முழக்கமிட்டான். இந்த நிகழ்ச்சியின் நினைவுகூறல் தான், இன்று பல திருத்தலங்களில் நடைபெறும், சூரசம்ஹாரம் வழிபாடு!
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவில், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நாளை மாலை நடக்கிறது. சூரசம்ஹாரத்தோடு, இன்றைய விழா முடிவடைந்து விடுவதில்லை. தேவர்களுக்கு, முருகன் செய்த மாபெரும் உதவிக்கு கைமாறாக, தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்து வைத்தான் இந்திரன். எனவே, மறுநாள், முருகன் – தெய்வானை திருமண வைபவத்தோடு தான், விழா நிறைவு பெறுகிறது.
-
Thalavadi Vinodha Thiruvizha
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து நான்காவது நாள் சாணியடிக்கும் திருவிழா இக்கோயிலில் நடைபெறுகிறது.
ஒருநாள் மாட்டு வண்டி குப்பைமேட்டின் மீதேறிச்செல்லும்போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. உடனே இதைக்கண்ட மக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது. அப்போது ஒரு சிறுவன் கனவில் திபாவளி முடிந்து நான்காவது நாள் சாணத்திலிருந்து வந்ததன் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கடவுள் கூறியதாகவும், அதனடிப்படையில் ஆண்டு தோறும் இத்திருவிழா நடைபெறுவதாகவும், கும்டாபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.

விழாவை ஒட்டி ஊரில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு சிறுவர்கள் ஒருவர் மீது சாணியடித்து விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் 2 மணிக்கு அருகே உள்ள குளத்திலிருந்து சுவாமி அழைப்பு நடைபெற்றது.


ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுவாமி அழைப்பு நிகழ்ச்சியில் தாரை தப்பட்டைகள் முழங்க கழுதை மேல் சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர் 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் ஊர்ப்பொதமக்கள் அனைவரும் வெற்றுடம்புடன் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக செய்து ஒருவருக்கொருவர் மீது அடித்து மகிழ்ந்தனர்.
சுமார் 2 மணி நேரம் சாணியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர். இவ்விழா குறித்து ஊர்ப்பெரியவர் ஒருவர் கூறியதாவது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை ஒருவர் எடுத்துச்சென்று சாணங்கள் சேகரிக்கும் குப்பைமேட்டில் எறிந்துவிட்டார்.