இன்றைய ராசி பலன்
மேஷம் – புகழ்
ரிஷபம் – அன்பு
மிதுனம் – தடங்கல்
கடனம் – நலம்
சிம்மம் – அமைதி
கன்னி – பெருமை
துலாம் – பொறுமை
விருச்சிகம் – ஜெயம்
தனுசு – அனுகூலம்
மகரம் – மகிழ்ச்சி
கும்பம் – முயற்சி
மீனம் – சுபம்
சந்திராஷ்டமம் – அஸ்தம், சித்திரை
Blog
-
November 11 Rasi Palan
-
November 11 Indraya Nalla Neram
நவம்பர் 11 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – ஐப்பசி 25
11-நவ-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி இ 7.08
நட்சத்திரம் : அசுவினி இ 8.49
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Dhosham Neekum Valampuri sangu
விஷ்ணுவின் அம்சமாக சாளக்கிராமம் இருப்பது போல, வலம்புரிச் சங்கு லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டின் தலைவாசலில் சங்கு பதித்தால் திருஷ்டி தோஷம் உண்டாகாது. பூஜையறையில் வலம்புரிச்சங்கு இருந்தால் தீய சக்தி நீங்கி தெய்வீக சக்தி நிலைக்கும்.
வெள்ளிக்கிழமையன்று சங்கு பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும். தண்ணீரில் சங்கினைக் கழுவி சுத்தம் செய்து வாழையிலையில் அரிசி பரப்பி அதன் மீது சங்கை வைக்க வேண்டும்.
சந்தனம் குங்குமம், மலர்களால் அலங்கரித்த பின், லட்சுமி அஷ்டோத்திரம், 108 போற்றியை சொல்லி வழிபட வேண்டும்.
-
Thirumurugan poondi murugan koil
பெரும்பாலான கோவில்களில், முருக பெருமான் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். ஆனால் ஆறாவது முகம் மட்டும் பின்னால் இருக்கும் சிறப்பு வாய்ந்த முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருக்கும் திருமுருகன் பூண்டி முருகன் கோயில் தான் அந்த கோயில்.
நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார கோயில்கள் உள்ளன. அதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டியும் ஒன்று. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது திருமுருகன் பூண்டி. சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் இது.
இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம் என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.
மேலும், திருச்செந்தூரில், வதம் செய்துவிட்டு, செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.
வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என நம்பப்படுகிறது.
-
Girivalam Timings
நவம்பர் மாத பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் எப்போது கிரிவலம் செல்லாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரி வலம் செல்கிறார்கள்.
இந்த மாதம் பவுர்ணமியை யொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:- வருகிற 11- ந்தேதி(திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
-
November 10 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நன்மை
மிதுனம் – பயம்
கடனம் – ஆக்கம்
சிம்மம் – சிக்கல்
கன்னி – அன்பு
துலாம் – லாபம்
விருச்சிகம் – களிப்பு
தனுசு – நலம்
மகரம் – உயர்வு
கும்பம் – சோர்வு
மீனம் – பாசம்
சந்திராஷ்டமம் – உத்திரம், அஸ்தம்
-
November 10 subamugurthanaal
நவம்பர் 10 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
விகாரி வருடம் – ஐப்பசி 24
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
10-நவ-2019 ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி மா 5.30
நட்சத்திரம் : ரேவதி மா 6.50
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Mariamman Koil Festival
திருச்செங்கோட்டில் 18 மாரியம்மன் கோயில்களிலும் இன்று கம்பம் விடும் விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.

பக்தர்கள் பல்வேறு வேடங்களை இட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர் பாடை வேடமிட்டு பிணம் போல் படுத்து வந்தவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர் இதனையடுத்து பக்தர்கள் தெப்பக்குளத்தில் பூஜைகள் செய்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.


இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு மிளகு ஆகியவற்றை கம்பங்கள் மேலும் கும்பங்கள் மீதும் தூவி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
-
Anandham Tharum Ippasi Annabisegam
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 12.11.2019 செவ்வாய்கிழமை மதியம் மரகதேஸ்வரருக்கும் மாலை ராகு கேதுவிற்கும் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது,
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
ஐப்பசி மாதத்தில் தான் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுவதாக கூறுகிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும்.
சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட் கருணையினால் குளிர்வது இயற்கைதானே.
அன்னத்தின் சிறப்பு : ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
தன்வந்திரி பீடத்தில் அன்னாபிஷேகம் :
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 12.11.2019 செவ்வாய்கிழமை மதியம் 12.00 மணியளவில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு பஞ்ச திரவிய அபிஷேகத்துடன் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
மரகத லிங்கத்தை மூன்று பகுதிகளாக பிரிட்து கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். போன்ற எல்லா பாகங்களுக்கும் அன்னாபிஷேகம் ஈஸ்வரனுக்கு முழுமையாகவே செய்யப்பட உள்ளது.
மேலும் பகவான் சன்னதியில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் பாராயணமும் நடைபெறும். நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்கு தேவையான உணவு தடையின்றி கிடைக்கும் என்பதை அன்னாபிஷேக பிரசாதத்தை நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நீரில் கரைக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அன்ன பிரசாதத்துடன் சாம்பார், தயிர், மோர் சேர்த்து நோய் நொடிகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் மஹா பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
தொழில், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள், நஷ்டப்பெட்டவர்கள் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டு இறை பிரசாதத்தை உண்டு, சிறந்த முறையில் வியாபாரம் நடைபெறவும், குழந்தைகள் ஆரோக்யம், கல்வியில் முன்னேற்றம் அடையவும், ஞாபக சக்தி பெருகவும், புத்ர பாக்யம் கிடைக்கவும், உணவு தட்டுபாடு அகலவும், தன தான்ய சம்பத்துகள் பெருகவும், இயற்கை வளம் பெருகவும், ஆய கலைகள் வளரவும், கிராம நகர அபிவிருத்தி உண்டாகவும், குடும்ப மகிழ்ச்சிக்காகவும், பிரார்த்தனை செய்வோம்.
ஏகரூப ராகு கேதுவிற்கு பிரதி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் :
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் மாலை 5.00 மணிக்கு ஏகரூப ராகு கேதுவிற்கு உணவு குழலில் ஏற்படும் தோஷங்கள் அகலவும், ராகு கேதுவினால் ஏற்படும் தடைகள் விலகவும், அன்னதோஷம் அகலவும், குடும்பத்தில் பல்வேறு விதமான சுப காரியங்கள் நடைபெறவும், தன தானிய சம்பத்து பெருகவும் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
மேலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் பல்வேறு சிறப்புகள் தரும் என்பதால் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் இவ்விரு அன்னாபிஷேகத்திலும் பக்தர்கள் பங்கேற்று நாடு நலம் பெறவும், குடும்ப நலம் பெறவும் பிரார்த்திப்போம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
-
Pradhosha Poojai Abishega porutkal
பிரதோஷ பூஜையின் போது அபிஷேகத்திற்காக நாம் தரும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பலன் உண்டு.
பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்
தயிர் – பல வளங்களும் உண்டாகும்
தேன் – இனிய சாரீரம் கிட்டும்
பழங்கள் – விளைச்சல் பெருகும்
பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
நெய் – முக்தி பேறு கிட்டும்
இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்
சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்
எண்ணெய் – சுகவாழ்வு
சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்