Blog

  • November 13 Karthigai

    நவம்பர் 13 –  கார்த்திகை
    விகாரி வருடம் – ஐப்பசி 27
     கார்த்திகை
    13-நவ-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    இ    8.34
    நட்சத்திரம்    :    கார்த்திகை    இ    11.25
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி,விசாகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Piravi Dhosham Neenga

    மனிதன் இப்பூமியில் ஜெனிக்கும் போது அன்றைய கிரக, நாள், திதி, கிழமை போன்றவற்றில் ஏற்படும் மாறுபாடுகளால் அவனுக்கு “பிறவி தோஷம்” உண்டாகிறது. இதனால் பாதிக்கப்படும் அம்மனிதன் வாழ்வில் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறான். இது போன்ற பிரச்சனைகளை தீர இவர்கள் பாட வேண்டிய பாடல் தான் இது.

    “கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பேபழுத்த 
    படியே மறையின் பரிமள மேபனி மால் 
    இமயப் பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற 
    அம்மே அடியேன் இறந்து இங்கு 
    இனிப்பிற வாமல் வந்து ஆண்டுகொள்ளே” 

    அபிராம பட்டரால் இயற்றப்பட்ட “அபிராமி அந்தாதியின்” ஒரு பகுதியான இப்பாடல் வரிகள் இறையாற்றல் நிறைந்தாகும். இப்பாடலை தினமும் காலையில் தேக மன சுத்தியுடன் “அம்பாள்” கோவிலுக்குச் சென்றோ அல்லது அம்பாளை மனதில் தியானித்து உங்களால் எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறைப் பாடலாம். 

    இதைத் தொடர்ந்து செய்து வர உங்களுக்கு நீங்கள் பிறந்த நேரத்தில் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். அம்பாளின் அருளினால் நீங்கள் விரும்பிய அத்தனைச் செல்வங்களையும் பெறுவீர்கள்.
     

  • Thirupathy VIP Dharshan

    திருப்பதி விஐபி தரிசனத்திற்கு புக் செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு தொகையை செலுத்தும் விதமாக மேற்படி அறக்கட்டளைக்கு ஆன் லைனில் பணம் செலுத்தலாம்.

    திருப்பதி கோவில் அபிவிருத்திக்காக அமைக்கப்பட்ட ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ரூ 10000 நன்கொடை செலுத்துகிறவர்களுக்கு விஐபி தரிசன வசதி கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக கோவில் அறக்கட்டளைக்கு நிதி குவிவதுடன், விஐபி தரிசனமும் ஒழுங்கு படுத்தப்படுகிறது.

    தற்போது ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ஆன் லைனில் நிதி அளிக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ‘ஆப்’பில் பத்தாயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, ரூ 500-க்கு விஐபி தரிசன டிக்கெட் பெறலாம். ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ஆன்லைனில் பணம் செலுத்த, கடந்த 21-ம் தேதி முதல் வசதி செய்யப்பட்டுள்ளது.

  • Gangai konda chozhapuram annabishegam

    கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. 

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று இந்த கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இக்கோவிலில் உள்ள 62 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு காஞ்சி சங்கராமட நிர்வாகிகள் சார்பில் 35-வது ஆண்டாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. 

    முன்னதாக காஞ்சி சங்கராமட நிர்வாகி விஜயேந்திரர் அன்னாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை கொண்ட பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். பின்னர் மாலை 5 மணி வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன.

    இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

    இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று பிரகதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

  • November 12 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – ஜெயம் 
    ரிஷபம் – நஷ்டம் 
    மிதுனம் – ஆதரவு
    கடனம் – அமைதி
    சிம்மம் – வரவு
    கன்னி –  சினம் 
    துலாம் –  வீம்பு
    விருச்சிகம் – அனுகூலம் 
    தனுசு –     இன்பம் 
    மகரம் –  அன்பு
    கும்பம் – மேன்மை 
    மீனம் –     வெற்றி
    சந்திராஷ்டமம்    – சித்திரை, சுவாதி
     

  • November 12 Pournami

    நவம்பர் 12 – பவுர்ணமி
    விகாரி வருடம் – ஐப்பசி 26
     பவுர்ணமி 
    குருநானக் ஜெயந்தி, 
    சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்
    12-நவ-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    இ    8.13
    நட்சத்திரம்    :    பரணி    இ    10.22
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : சித்திரை, சுவாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • November 13 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – பொறுமை 
    ரிஷபம் – ஆர்வம் 
    மிதுனம் – வரவு
    கடனம் – போட்டி 
    சிம்மம் – பக்தி
    கன்னி –  மேன்மை  
    துலாம் –  அமைதி
    விருச்சிகம் – அனுகூலம் 
    தனுசு –     புகழ்
    மகரம் –  கீர்த்தி 
    கும்பம் – உயர்வு
    மீனம் –     ஜெயம் 
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்
     

  • Annabishegam Seivadhu En

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த நாளில் சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். சரி அன்னாபிஷேகம் ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்யப்படுகிறது. 

    ஏனெனில், ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான். சந்திரனுக்கு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான நட்சத்திர மனைவியர் உண்டு. இவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பும் பிரியமும் கொண்டிருந்தான். இதனால், அவன் மற்றவர்களிடம் பாரபட்சம் காட்ட… அவர்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் மாமனார் சும்மா இருப்பாரா? விஷயம் தெரிந்து கொந்தளித்தார். ஆவேசமானார். சந்திரனின் மீது கடும் கோபம் கொண்டார். ‘உன் உடலானது தேஜஸ் இழந்து, பொலிவிழந்து தேயட்டும்’ என சாபமிட்டார். 

    அதைக் கேட்டு சந்திரன், நடுங்கிப் போனான். கெஞ்சினான். துக்கித்துக் கலங்கினான். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேயத் தொடங்கியது. இப்போதைய திங்களூர் தலத்தை எடுத்துச் சொல்லி, அங்கே சிவனாரைப் பூஜித்தால், சாபவிமோசனம் கிடைக்கும் என தட்சன் சொல்ல, அந்தத் தலத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி, கடும் தவம் இருந்தான். ஆனாலும் அவனுடைய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக மங்கிக் கொண்டே வந்தது. 

    மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருந்தன. தான் செய்த தவறை முழுமையாய் உணர்ந்து கலங்கினான் சந்திரன். அப்போதுதான் அந்தத் தருணத்துக்குக் காத்திருந்தவர் போல், சிவனார் அவன் முன்னே திருக்காட்சி தந்தருளினார். சாபத்தில் இருந்து விமோசனம் அளித்தார். மேலும் சந்திரனைப் பெருமைப்படுத்தும் விதமாக, அந்தப் பிறையை, தன் சிரசில் அணிந்து அவனுக்கு பெருமை சேர்த்தார். 

    சந்திரன் இழந்த பதினாறு கலைகளும் மீண்டும் அவனிடமே வந்தாலும் கூட, முழுமையான பொலிவுடன் ஐப்பசி பெளர்ணமி நாளில் மட்டுமே சந்திரன் மிகுந்த தேஜஸூடன் காட்சி தருகிறான் என்கிறது புராணம்.
     

  • Thanjai Annabishegam

    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நாளை  அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களால் 1,000 கிலோ அரிசியும், 1000 கிலோ காய், கனிகளும் வழங்கப்பட உள்ளன. பக்தர்கள் வழங்கிய பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.பின்னர் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறுகிறது. 

    பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னம் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், நீர்நிலைகளில் அவை கரைக்கப்பட்டு ஜீவராசிகளுக்கு அளிக்கப்படும். திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாமல் உள்ள பெண்கள் இந்த அன்னத்தை உட்கொண்டால் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் இந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் தஞ்சையில் உள்ள கொங்கணேசுவரர் கோவில், காசி விசுவநாதர்கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

  • Gangai Amman Koil Kumbabishegam

    ஆவடி அருகே பருத்துப்பட்டு கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ளது ஸ்ரீ கங்கையம்மன் ஆலயம்.பழமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது பருத்திப்பட்டு கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டது.இதனை அடுத்து ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் வேத விற்பனர்கள் மத்திரங்கள் முழங்க கோபுரக் கலசங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.