Blog

  • Rishabam December month predictions

    (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

    ரிஷப ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது.  மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

    தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு, பண நிலுவை வந்து சேர தாமதமாகலாம். 

    குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 
    பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.  

     
    கலைத்துறையினருக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். தாமதமான வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். 

    அரசியல் துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். மேலிடத்தை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக மனிதர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

    பரிகாரம்: விரதம் இருந்து பூஜை செய்து அம்மனை வணங்க மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27,
     

  • Mesham December month predictions

    (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)
    மேஷ ராசியினரே இந்த மாதம் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய் சஞ்சரிக்கிறார். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். குடும்பத்தில் எதிர்பாராத சில காரியங்கள் நடக்கலாம். 

    பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். 

    அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். மேலிடத்தின் மத்தியில் மதிப்பு உயரும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். சக மனிதர்களிடம் மரியாதை அதிகரிக்கும். 

    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள்  விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். 

    பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை அர்ப்பணித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Soorya Graganam Namakkal Anjaneyar

    சூரிய கிரகணம் பிடிக்கும் டிசம்பா் 26-ஆம் தேதியே, பஞ்சாங்கப்படி ஆஞ்சநேயா் ஜயந்தி விழா கொண்டாடப்பட வேண்டிய நாள் என்ற நிலையில், ஒரு நாள் முன்பாக விழாவை கொண்டாடுவதற்கான நடவடிக்கையை கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில்களில், தனித்துவம் மிக்கது நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமி கோயில். இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிக்கும் சுவாமியைத் தரிசிக்க நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். சபரிமலை சீசன் என்பதால் தற்போது இக் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

    இங்கு சுவாமிக்கு பல்வேறு விசேஷ பொருள்களைக் கொண்டு தினசரி அபிஷேகம் மற்றும் அலங்காரம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இதற்கு, ஓராண்டுக்கு முன்பாகவே பக்தா்கள் ரூ. 6 ஆயிரம் வீதம் பணம் செலுத்தி அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனா். இவ்வாறு சிறப்புமிக்க நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயா் ஜயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

    அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவார்கள் என்பதால் கோயிலைச் சுற்றிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள் சுவாமியை தரிசிக்க அனுப்பி வைக்கப்படுவா்.

    நிகழாண்டில் சூரிய கிரகணம் டிசம்பா் 26-ஆம் தேதி வருகிறது. அன்று தான் அமாவாசை திதியில் ஆஞ்சநேயா் பிறந்த மூல நட்சத்திரமும் வருகிறது. அதனால் பஞ்சாங்கக் கணக்குப்படி 26-ஆம் தேதி தான் ஆஞ்சநேயா் ஜயந்தி விழாவை கொண்டாட வேண்டிய நாள் என்றும் சூரிய கிரகணத்தால் பக்தா்கள் வருகை குறைந்து விடும் என்பதற்காக, ஒரு நாள் முன்பாக ஜயந்தி விழா கொண்டாடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, நாள்காட்டிகளில் டிசம்பா் 25-ஆம் தேதி அனுமன் ஜயந்தி என அச்சிடப்பட்டுள்ளது. இதனால், கோயில் நிர்வாகத்தினா் சூரிய கிரகணத்தை தவிர்த்து, நாள்காட்டியைக் கணக்கிட்டு, டிசம்பா் 25-ஆம் தேதியை ஜயந்தி விழாவாக நிர்ணயித்துள்ளதாகவும், இதற்கு அா்ச்சகா்கள் தரப்பிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
     

  • November 28 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – பகை 
    ரிஷபம் – வெற்றி 
    மிதுனம் – நன்மை 
    கடனம் – போட்டி 
    சிம்மம் – மேன்மை 
    கன்னி –  பாராட்டு
    துலாம் –  நோய் 
    விருச்சிகம் – உயர்வு 
    தனுசு –     களிப்பு
    மகரம் –  பாசம்  
    கும்பம் – அன்பு
    மீனம் –     அமைதி
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை

  • November 28 Indraya Naal

    நவம்பர் 28 – சித்த யோக நாள்
    விகாரி வருடம் – கார்த்திகை 12
    28-நவ-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    இ    7.59
    நட்சத்திரம்    :    கேட்டை    கா    9.46
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Thiruvannamalai Maha Deepam

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு  துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற இருக்கிறது. 

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகாதீப திருவிழா டிசம்பர் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி முன்னிட்டு வியாழக்கிழமை துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இரவு சுமார் 8.30 மணியளவில் துர்க்கையம்மன், காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.

    நாளை மறுநாள் பிடாரியம்மன் உற்சவம் நடக்கிறது. அன்று அம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா நடைபெற உள்ளது. 30-ந்தேதி விநாயகர் உற்சவம் நடக்கிறது. அப்போது விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி போன்றவை செய்யப்பட்டு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் வீதிஉலா வருகின்றனர்.

    1-ந்தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து காலையில் வெள்ளி விமானங்களில் அருணாசலேஸ்வரர்- உண்ணாமலை அம்மன், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

    தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. இறுதியாக 14-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறும். 

  • Pancha muga Varahi Homam

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வளர்பிறை பஞ்சமி திதியை  முன்னிட்டு வருகிற 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வளமான வாழ்க்கை வேண்டியும், வெற்றிகளை பெற வேண்டியும், விபத்துக்கள் குறைய வேண்டியும் ஸ்ரீ வராஹி ஹோமமும், ஸ்ரீ பால திரிபுரசுந்தரி ஆலயத்தில் நவாவரண பூஜையும் நடைபெற உள்ளது.

    வடக்கு திசைக்கு உரியவளான வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும் என்பர். தண்டநாத பீடமாக திகழும் திருச்சி திருவானைக்காவிலில் அம்மை ஜம்புகேஸ்வரி (அகிலாண்டேஸ்வரி அம்மை) வராஹி ஸ்வரூமாக திகழ்ந்து அங்கே நித்திய கன்னியாக குடி கொண்டுள்ளார். கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை. வராஹி என்ற பெயர் கேட்டாலே பலருக்கும் பயம் வரும். சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஒரு அம்பிகை பஞ்சமி தாயாக விளங்கும் வராஹி ஆவாள். பல்வேறு பஞ்சங்களையும், கஷ்டங்களையும் துரத்தி வாழ்வில் வரலாறு படைக்க வைப்பவள் வராஹி ஆவாள்.

    வரலாறு படைக்கும் வராஹி :
    அன்னை லலிதையால் பண்டாசுர வதத்தின் போது தோற்றுவிக்க அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் சப்த கன்னிகள். ஆம், எப்படி கந்த கடவுள் சிவபெருமானிடம் இருந்து தோன்றினாரோ அது போன்று அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராஹ்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் வராஹி.

    வராஹி அமைப்பு :
    வராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலும், ஆதரவிலும் மழைக்கு நிகரானவள் இவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும்.

    வராஹியின் பல்வேறு நாமங்கள் :
    சேனநாதா, தண்டநாதா, வராஹி, பஞ்சமி, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை – ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீயாகும்.

    அஷ்ட வராஹிகள் :
    ஸ்வப்ன வராஹி, அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி, லகு வராஹி, உன்மத்த வராஹி, லகு வராஹி, மஹிஷாரூட வராஹி, சிம்ஹாரூட வராஹி என  அஷ்ட வராஹிகளாக அழைக்கப்படுகின்றனர்.

    வராஹிக்கு உகந்த நிறங்கள் :
    பல வண்ண உடைகள் அணிபவள் (ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு, மஞ்சள் உடையாகும்).

    வராஹி ஆயுதங்கள் :
    கலப்பை, தண்டம்.

    வராஹி அமைந்துள்ள முக்கிய இடங்கள் :
    நெல்லை, தஞ்சை, திருவானைக்காவல், காசி எனலாம்.

    .வராஹி ஹோமத்தின் மூலம் ஏற்படும் எண்ணற்ற பலன்கள்

    குண்டலினி சக்தியை அளித்து நம்முடைய வாழ்வாதாரத்தை உயர்த்துபவள்.

    அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம் முப்பிறவி கர்ம்மாக்களை அழித்து  நம்மை காப்பவள். நாம் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற செய்பவள். வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர்,  செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், துர்தேவதைகள் அண்டாது. வாழ்வில் வெற்றி அனைத்தும் கிடைக்கும். நல்லெண்ணங்களும், நன்னடத்தையையும் கொண்டவர்களுக்கு அகிலம் அனைத்தையும் காக்கும் பராசக்தி தேவி அனைத்தையும் வழங்கி நல்லருள்புரிகிறாள். தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். மேலும் எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வாராகி அம்மனின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்கச் செய்யும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காக்கும்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

     

  • Thirupathy Thuvaaram

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்களுக்கு வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்களை அனுமதிக்க முடிவு

    வழக்கமாக இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வைகுண்ட துவாரம் வழியாக சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில் 8 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்யும் விதமாக 10 நாட்களுக்கு வைகுண்ட வாயிலை திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் வைணவத் திருத்தலங்களில் பரமபத வாயில் எனும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 6ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், 7 ஆம் தேதி துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் வைகுந்த வாயில்  திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

    இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் மட்டுமே வைகுந்த வாசல் திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் பல பக்தர்கள் இந்த தரிசனத்தை காண முடியாமல் போகிறது. எனவே அதிக பக்தர்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களான வேணுகோபால் தீட்சிதர், ரமண தீட்சிதர், அனந்த சைன தீட்சிதர், சுந்தரவரத பட்டாச்சாரியா, ரங்காச்சாரி தீட்சிதர் ஆகிய 5 பேர் கொண்ட ஆகம ஆலோசகரின் ஆலோசனை கேட்கப்பட்டது. 

    இந்த ஆலோசனையில் ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்களுக்கு வைகுந்த வாசல் திறக்கப்படுவது போன்று ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களுக்கு வகையில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்க ஆகம ஆலோசகர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் பாஞ்சராத்திர ஆகம முறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் ஏழுமலையான் கோவிலில் வைகானச ஆகமம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

    இருப்பினும் ஆகம ஆலோசகர்கள் ஐவரும்  சேர்ந்து பத்து நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறந்து பக்தர்கள் அனுமதிக்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் நடைபெறக்கூடிய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன் பிறகு ஜனவரி 6ம் தேதி வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு 15ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில்  தரிசனம் செய்யும் வாய்ப்பை தேவஸ்தனம் ஏற்படுத்தித்தர திட்டமிட்டுள்ளனர். 

    இரண்டு நாட்கள் மட்டும் வைகுண்ட வாயிலில்  பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்யக் கூடிய நிலை இருந்த நிலையில் பத்து நாட்கள் வைகுந்த வாயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதன் மூலமாக சுமார் 8 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • November 27 Indraya Naal

    நவம்பர் 27 – இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – கார்த்திகை 11
    27-நவ-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    இ    8.33
    நட்சத்திரம்    :    அனுஷம்    கா    9.55
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • November 27 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – போட்டி 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – உதவி
    கடனம் – நலம் 
    சிம்மம் – ஆரோக்கியம் 
    கன்னி –  ஊக்கம் 
    துலாம் –  பிரீதி
    விருச்சிகம் – சுபம் 
    தனுசு –     முயற்சி
    மகரம் –  கோபம் 
    கும்பம் – சுகம் 
    மீனம் –     தனம் 
    சந்திராஷ்டமம்    – பரணி