Blog

  • Sagala Gnanam Tharum Slogam

    கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒருவீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.

    எனவே, கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர் களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!

    வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்!
    ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
    ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
    ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!

    இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் பெற்று, புத்திமானாக வாழ்வில் உயர்வீர்கள்.
     

  • Thiruparankundram Prasadham

    ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  இனி செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்களுக்கு சர்க்கரை பால் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்களுக்கு சர்க்கரை கலந்து  பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

    இக்கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது இல்லை. அதற்கு பதிலாக மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது அதேபோல திருப்பரங்குன்றம் கோயிலிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தோறும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு வரை சர்க்கரை கலந்து காய்ச்சிய பால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    திருப்பரங்குன்றம் முருகன் கோயில் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கம்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் செவ்வாய்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி பால் கொண்டு வருகின்றனர். அந்த அபிஷேகம் செய்த பாலை  பக்தர்களுக்கு வழங்க திட்டமிட்ட பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணி முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காய்ச்சிய பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
     

  • Iyappan thiruvabarana anivadhu en

    சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார். அப்படி இருந்தும் மகர விளக்கின் போது பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து ஆபரணங்கள் வருவதும் அதை அணிவதும் அவர் காட்சித் தருவதும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகளாகும்.

    துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவதேன்?

    அதற்கு ஓர் அபூர்வக் காரணம் உண்டு.
    ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தம் பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்குப் புறப்படும் போது எல்லாரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டு வந்தார். அவர்களுள் பந்தள நாட்டில் நமக்குக் குருவாக இருந்த குருவும் ஒருவர்.

    அந்தக் குருவிடம் சுவாமி உங்களுக்கு நான் குருதட்சனையாக என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன்.

    குரு நெகிழ்ந்து போய் பெருமானே நீர் எனக்கு இப் பிறவியில் மாணாச்சுர் என்று கூறும் பேறே எனக்கு குருதட்சனை என்றார். அவருடைய மனைவியோ ஊமையாகவும், குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையைக் குணப்படுத்தித் தரவேண்டும் என்று வேண்டினார்.

    குரு பத்தினியின் கோரிக்கைப்படி அந்த குழந்தை பிணிக்கு நீங்கச் செய்தார் ஐயப்பன். அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்று உணர்வைக் கடந்து நெகிழ்ச்சியுற்ற நிலையில் அய்யனே நீ தங்கமும் ரத்தினமும் ஜொலிக்க மகராஜனாய் இருக்க வேண்டும், என்று ஆசீர்வதித்து விட்டார் குரு.

    எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு ஏன் சுவர்ண ரத்ன ஆபரணங்கள் என்ற உணர்வு அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை. எனினும் குருவின் ஆசி ஆசிதானே.

    அது பொய்ந்து விடக் கூடாதே அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை அதாவது மகர விளக்கு விழாவின் போது தை 1-ம் தேதி முதல் தை 4-ம் தேதி வரை சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க ரத்ன ஆபரணங்களை அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரீ ஐயப்பன்.
     

  • November 26 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – போட்டி 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – உதவி
    கடனம் – நலம் 
    சிம்மம் – ஆரோக்கியம் 
    கன்னி –  ஊக்கம் 
    துலாம் –  பிரீதி
    விருச்சிகம் – சுபம் 
    தனுசு –     முயற்சி
    மகரம் –  கோபம் 
    கும்பம் – சுகம் 
    மீனம் –     தனம் 
    சந்திராஷ்டமம்    – அசுவினி
     

  • November 26 Amavasai

    நவம்பர் 26 – அமாவாசை
    விகாரி வருடம் – கார்த்திகை 10
     அமாவாசை 
    26-நவ-2019 செவ்வாய்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    இ    9.32
    நட்சத்திரம்    :    விசாகம்    கா    10.29
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Puthira bakiyam kidaikka

    குழந்தை வரம் இல்லையே என்று பலரும் ஏங்குகின்றனர். திருமணம் முடிந்த தம்பதியர் அடுத்ததாக ஆண்டவனிடம் வேண்டுவது குழந்தை செல்வத்திற்குத்தான். இன்றைக்கு பலருக்கும் குழந்தை வரம் கிடைப்பது தாமதமாகிறது.

    குழந்தை பாக்கியம் எல்லோருக்கும் அத்தனை எளிதாகக் கிடைப்பதில்லை. அந்த பாக்கியம் சிலருக்குக் கிடைக்காமலே போய், அவர்களது வாழ்க்கை பெரும் போராட்டமாகவே மாறிவிடுகிறது. பிள்ளை பாக்கியம் இல்லாத காரணத்தால் சிலரது திருமணம் ரத்தாகிவிடுகிறது.

    குழந்தை வரத்தை கடவுளிடம் கேட்ட காலம் போய் மருத்துவர்களிடம் லட்சக்கணக்கில் செலவு செய்து பெற வேண்டிய நிலைக்கு இன்றைய தலைமுறையினர் தள்ளப்பட்டிருக்கின்றனர். புத்திர தோஷங்களினாலும் பிள்ளைகள் கிடைப்பது தாமாகும். புத்திர தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும்.

    தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும்.

    ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு. சுமாரான பலத்துடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகவாது கிடைத்துவிடும். இரண்டு கிரகங்களும் 6, 8, 12 ஆக அமைந்து அல்லது நீசம் பெற்று பகை பெற்று இருந்தாலும் குரு, இலக்கிணம், 5ம் பாவாதிபதி இவர்களில் யாராவது ஒருவர் பலமாகி இருந்தால் கூட மருத்துவத்திற்கு பிறகு பாக்கியம் உண்டு.
     

  • Mutthu pandal vaganathi padmavathi thayar

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளில் முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    சுவாமி வீதி உலாவின் போது மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்றும் அலர்மேல் மங்கை தாயே என்று கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி வழிபட்டனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தாச சாகித்யா, அன்னமாச்சார்யா திட்டத்தின் சார்பிலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நாட்டிய மற்றும் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் கோலாட்டம், பஜனை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களின் வேடமணிந்து பங்கேற்றனர். 

    இன்று இரவு சிம்ம வாகனத்திலும் நாளை காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.

  • November 25 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – திறமை  
    மிதுனம் – சோர்வு 
    கடனம் – கவனம் 
    சிம்மம் – சாந்தம் 
    கன்னி –  அமைதி 
    துலாம் –  சுகம் 
    விருச்சிகம் – நலம் 
    தனுசு –     புகழ்
    மகரம் –  பயம் 
    கும்பம் – பக்தி
    மீனம் –     பொறுமை 
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுவினி

  • November 25 Sangabishegam

    நவம்பர் 25 – சங்காபிஷேகம்
    விகாரி வருடம் – கார்த்திகை 9
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    25-நவ-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    10.56
    நட்சத்திரம்    :    சுவாதி    கா    11.25
    யோகம்    :    அமிர்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Sabari Annai Vasitha Sabari Peedam

    நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் "சபரிமலை' என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள். இந்த மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்..

    ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம்.

    அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

    ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். 

    அந்த பரமபக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.