டிசம்பர் 1 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
விகாரி வருடம் – கார்த்திகை 15
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
01-டிச-2019 ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி இ 9.20
நட்சத்திரம் : உத்திராடம் ம 12.13
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Blog
-
December 1 subamugurthanaal
-
Pazhani Murugan ganapathi Homam
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்குவதற்கு முன்பாக பாலாலய பூஜை வருகிற 2 ம் தேதி நடைபெற உள்ளது . அதற்கான கணபதி ஹோமம் பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் துவங்கினர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். விழாக்காலங்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறவில்லை. இதற்கிடையே கோவில் கோபுரத்தில் உள்ள சுதைகள், சிற்பங்கள், மண்டபத்தின் பல தூண்கள் சேதமடைந்து காணப்பட்டதால், பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் விரைவில் நடந்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய பூஜை நாளை நடைபெற உள்ளது. முன்னதாக அதற்கான கணபதி ஹோமம் பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் துவங்கினர்.
-
Padmavathi Thayar car fest video
திருச்சானூர் பிரமோற்சவத்தின் 8வது நாளில் அலங்கரிக்கப்பட்ட மகா ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் கடந்த 23 ம் தேதி யானை உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை மகா ரத உற்சவம் நடந்தது. மகா ரதத்தில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்குமாட வீதியில் தாயார் பவனி வந்தார். இதில் பக்தர்கள் கோலாட்டம், பஜனை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்கள் போல் வேடமணிந்தும் பங்கேற்றனர்.
-
November 30 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – பொறுமை
ரிஷபம் – தனம்
மிதுனம் – சினம்
கடனம் – உற்சாகம்
சிம்மம் – பாராட்டு
கன்னி – நன்மை
துலாம் – இரக்கம்
விருச்சிகம் – ஊக்கம்
தனுசு – மகிழ்ச்சி
மகரம் – உழைப்பு
கும்பம் – உற்சாகம்
மீனம் – அமைதி
சந்திராஷ்டமம் – மிருகசீரிடம்
-
November 30 Chadurthi Viradham
நவம்பர் 30 – சதுர்த்தி விரதம்
விகாரி வருடம் – கார்த்திகை 14
30-நவ-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி இ 8.22
நட்சத்திரம் : பூராடம் கா 10.54
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Dhanvanthri Thathatreya Janthi
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 11.12.2019 புதன்கிழமை ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தத்தாத்ரேயர் ஹோமமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
குழந்தை வரம் தரும் தத்த குரு மும்மூர்த்திகளின் அம்சமாகப் போற்றப்படுபவர் தத்தாத்ரேயர். தான் கண்ட அனைத்திலுமே குரு உபதேசத்தை உணர்ந்தவர் அவர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, யானை, மான், மீன், நடனமாது, பருந்து, குழந்தை, தாதிப்பெண், பாம்பு, அம்பு எய்வோன், சிலந்தி, குளவி போன்றவை அவருக்கு உண்மையையும் தத்துவத்தையும் உணர்த்தின.
பூமியிலிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் அறிந்தார். தண்ணீரிடமிருந்து தூய்மையையும்; காற்றிடமிருந்து பற்றற்ற தன்மையையும்; தீயிடமிருந்து ஆத்ம ஞானம், தவத்துடன் கூடிய ஒளியுடன் பிரகாசிப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொண்டார். ஆகாயத்திடமிருந்து எங்கும் நிறைந்திருந்தாலும் எதனுடனும் தொடர்பற்று இருப்பதையும்; சந்திரனிடமிருந்து "ஆத்மா பூரணமானது- மாற்றமில்லாதது- குளிர்ந்தது' என்பதையும் அறிந்தார்.
சூரியனிடமிருந்து, மனித சரீரங்கள் மூலம் பிரதிபலிப்பதால் பிரம்மன் பலவாறு தோன்றுவதையும்; புறாவிட மிருந்து பாசமே பந்தத்திற்குக் காரணம் என்பதையும்; மலைப்பாம்பிடமிருந்து கிடைப்பதில் திருப்தியடைய வேண்டும் என்பதையும்; கடலிலிருந்து எந்த நிலையிலும் நிலை குலையாமல் இருப்பதையும்; விட்டில் பூச்சியிடமிருந்து ஆத்மாவில் எப்படி லயிப்பது என்பதையும்; வண்டி டமிருந்து குடும்பத்திற்கு பாரமாக இருக்கக்கூடாது என்பதையும்; தேனீயிடமிருந்து சிறுகச் சிறுக சேமித்து வைத்தாலும் இறுதியில் பயனற்றுப் போவதையும்; யானையிடமிருந்து காமத்தை விட்டுவிட வேண்டும் என்பதையும்; மானிடமிருந்து மயக்கும் இசையைக் கேட்கக் கூடாது என்பதையும்; மீனிடமிருந்து உணவில் பேராசை கொண்டால் உடல்நலம் கெடும் என்பதையும் அறிந்தார்.
நடனமாதிடமிருந்து ஆசையை விட்டாலே திருப்தி ஏற்படும் என்பதையும்; பருந்திடமிருந்து "உலகப் பொருட்கள் மீதுள்ள பற்றை விட்டால் ஆனந்தமடைவதையும்; குழந்தையிடமிருந்து எப்பொழுதும் கபடு, சூது இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பதையும்; தாதிப் பெண்ணிடமிருந்து, தனிமையில் இருக்கவேண்டும் என்பதையும்; பாம்பிடமிருந்து தனக்கென இருப்பிடம் கட்டாமல் கிடைக்கும் இடத்தில் வாழ்வதையும்; அம்பு எய்வோனிடமிருந்து ஆழ்ந்த மனஒருமைப்பாட்டையும்; சிலந்தியிடமிருந்து உலகாயத எண்ணங்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும் என்பதையும்; குளவியிடமிருந்து ஆத்மாவில் தியானித்து ஆத்மனாகவே ஆகவேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டார்.
இத்தனை சிறப்பம்சம் கொண்ட ஸ்ரீ தத்தாத்ரேயர் விக்ரஹமானது, உலக மக்கள் அனைவரும் ப்ரார்த்தனை செய்து வாழ்வில் ஆசை துறந்து அன்போடு வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் கூட்டுப்ரார்த்தனை செய்து வருகிறார் ஸ்வாமிகள்.
டிசம்பர் 11ம் தேதி புதன்கிழமை அன்று ஸ்ரீ தத்த ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தத்தாத்ரேயர் ஹோமத்துடன் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு பாலபிஷேகமும் நடைபெற உள்ளது. குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் மேற்கண்ட பூஜையிலும், அபிஷேகத்திலும் கலந்து கொண்டு அபிஷேக பாலை தத்த பிரசாதமாக பெற்று விறைவில் சந்தான பாக்யம் பெற்று ஆனந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
-
Meenam December month predictions
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மீன ராசியினரே இந்த மாதம் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.
தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். ராஜாங்க ரீதியாக பயணம் செல்ல வேண்டி வரலாம்.குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். பல வழிகளிலிருந்து பணம் வரும்.
பெண்களுக்கு எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். நிலுவை தொகை வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.
மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டு வர காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 -
Kumba Rasikku December month predictions
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கும்ப ராசியினரே இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கலக்கம் நீங்கி மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.பெண்களுக்கு திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.
கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலைபளு குறையும். உங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். சக கலைஞர்களை அனுசரித்து செல்வது நல்லது.அரசியல் துறையினருக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும்.
மாணவர்களுக்கு கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வணங்குவது மனோ தைரியத்தை தரும். எதிர்ப்புகள் விலகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
-
Maharam December month predictions
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
மகர ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.
பெண்களுக்கு அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.
அரசியல் துறையினருக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. மேலிடத்திடம் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
மாணவர்களுக்கு எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைக்க மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19
-
Dhanusu December month predictions
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தனுசு ராசியினரே இந்த மாதம் ராசியில் இருக்கும் சனி ஏதாவது பிரச்சனைகளை கொடுத்தாலும் ராசிநாதன் குருவால் அவை நல்லபடியாக தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் விவேகத்துடன் செய்வது நல்லது. நீண்ட நாட்களாக தீட்டி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும்.பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். பங்குதாரர்களிடம் வீண் மனக்கசபு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.
குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் இறுக்கமான சூழ்நிலை அகலும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும்.
பெண்களுக்கு எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.கலைத்துறையினருக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். நண்பர்கள் உறவினர்களின் உதவி கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். திடீர் கோபம், வேகம் இருக்கலாம். வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.பரிகாரம்: சித்தர்கள் சன்னிதிக்குச் சென்று வணங்க மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Mobile/WhatsApp: +91 7845119542