Blog

  • பெண்கள் மட்டுமே வழிபடும் அபூர்வ கோவில் !

    அசாம் மாநிலம்'கவுஹாத்தியிலிருந்து,10 கி.மீ. தொலைவில்' நீலாச்சல் குன்று பகுதியில்' காமாக்யா தேவி கோவிலில் அமைந்துள்ளது. அசாமில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலானது பெண்கள் மட்டுமே வழிபடும் சிறப்புக்குரிய தாகும். பெண் தெய்வங்கள் அருள் பாவிக்கும் மற்ற ஆலயங்களில் வழிபாட்டுக்குரிய பெண் தெய்வங்களின் விக்கிரகங்கள் இருப்பதுதான் வழக்கம், ஆனால்" இங்கு முக்கிய வழிபாட்டு தெய்வமாக கருவறையில், பெண் உறுப்பு தான்.

    தெய்வமாக காட்சி அளிக்கிறது, வழக்கமாக மாதவிடாய் காலத்தில்' பெண்கள், 'அந்த மூன்று' நாட்களில், கோவிலுக்கு செல்லக்கூடாது  என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால், மாதவிடாய்  நாட்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும், இந்த காமாக்யா தேவி 'அபூர்வ தெய்வமாக போற்றப்படுகிறது.காமாக்யா தேவி கோவிலில், ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை' பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண் பக்தர்கள் வருகின்றனர்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • ஆண்களுக்கு மட்டுமே தரிசனம் தரும் திருப்பூர் முருகன்!

    திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரக்குமார் திருக்கோவில் உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு முள்புதரில் மண்ணுக்குள் சுயம்புவாக தோன்றிய முருகனை சுற்றி இருந்த முள் புதர்களை அகற்றி அப்புறப்படுத்தி விட்டு, அப்பகுதி மக்கள் முருகனை வழிபட்டு வந்த போதிலும்.16 ஆம், நூற்றாண்டில்' தான் அங்கு நிலையான கோவில் கட்டப்பட்டது.

    இங்கு வழிபாடு தொடங்கிய நாள் முதலே' வீரக்குமார் சுவாமி சன்னதிக்குள் தரிசனத்திற்காக ' ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பெண் பக்தர்கள் சன்னதி முன் மண்டபத்துக்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு. அங்கிருந்தபடியே  முருகனை தரிசனம் செய்து, பிரசாதங்களை வாங்கிச் செல்லும்  வழக்கம் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • நேபாள நாட்டில் அருள்புரியும்”  ஸ்ரீ சங்கு நாராயணன்” !

    நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் தவளகிரி மலைப்பகுதியில் உள்ள சங்கு கிராமத்தில்' அருள்மிகு ஸ்ரீ சங்கு நாராயணன் திருக்கோவில் உள்ளது, நேபாள பௌத்த கட்டிடக் கலை அம்சத்துடன் காணப்படும். இந்தக் கோவில் ஆனது'  கி. மு 325 ஆம், நூற்றாண்டில் லிச்சாவி வம்ச மன்னர் ஹரி தத்தா வர்மனின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதன்பின் கி.பி 496 முதல் 524 காலகட்டத்தில் மன்னர் மனதேவனின் ஆட்சி காலத்தில், இங்குள்ள தரை தளத்தில் அமைந்துள்ள கல் தூண்கள் கட்டப்பட்டதாக தெரிகிறது.

    அதில் அவனது படையெடுப்புகள் குறித்து தெளிவாக எழுதப்பட்டுள்ளது. பிறகு கி.பி 1585  முதல் கி.பி 1614  வரை ஆட்சி செய்த சிவ சிம்ம மல்ல அரசனின் பட்டத்து அரசியான' கங்காராணி என்பவரால் இக்கோவிலானது மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1708 இல்' மன்னன் பாஸ்கர மல்லர் ' கலைநயம் மிக்க இக்கோவிலின். கதவுகள், சன்னல்கள், மேற்கூரை ஆகியவற்றை தங்கம் முலாம் பூசப்பட்ட, செப்புத்தகடுகளால் அலங்கரித்தான்.

    இரண்டு அடுக்குகள் கொண்ட கருங்கல்லால் ஆன' இந்த கோவில் திருமாலுக்கு உரிய சிற்பங்களுடன் காணப்படுகிறது. இதன் பிரதான வெளியில்' சிவபெருமான், கிருஷ்ணர், சின்னமஸ்தா, ஆகியோரது சன்னதிகளும் அமைந்துள்ளது. இக்கோயிலின் நான்கு வாயில்களிலும் சிங்கங்கள், சரபங்கள், யாணைகள் மற்றும் யாழி சிற்பங்கள் காவல் புரிவதை கடமையாக கொண்டு காட்சி தருகின்றன. மேலும் மகாவிஷ்ணுவின்  பத்து அவதாரங்களைக் குறிக்கும் அழகிய சிற்பங்கள் கோவில் கூரையை தாங்கி நிற்கிறது.பௌத்தக் கட்டிடக் கலையா ? கலை அல்லது இந்து கட்டிடக் கலையா ? என வியக்கும் வகையில் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • ஜெர்மனியில் சிவன்!

     ஜெர்மனியில் உள்ள மியூனிக் நகரில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.  ஜெர்மனியில் அமைந்துள்ள பல்வேறு கோவில்களில் இது மிகவும் பிரசித்தி பெற்ற சைவத்தலமாகும்.  இந்து சமயத்தின் ருத்ரம் மந்திரம், இசை, சங்கீதம், நாட்டியம் மற்றும் மொழி ஆகியவற்றுக்கான வகுப்புகள் மட்டும் இன்றி' சனாதன தர்மத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கும் திட்டங்களையும் வழங்குகிறது.

    மியூனிச்சில் மரபுகளைப் பாதுகாப்பது. சமூக தொடர்புகளை மேம்படுத்துவது கலாச்சார கல்வியுடன் ஆன்மீக சிந்தனைகளை இணைப்பது அதன் சிறப்பு, ஜெர்மனியின் பன்முகத்தன்மை, பாரம்பரியம் ஆகியவற்றை வரலாற்று பூர்வமாக ஆராய விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு' இது ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. ஜெர்மனியின் அரிய பொக்கிஷமாக இது போற்றப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • அரிச்சந்திரனுக்கு காட்சியளித்த காசி விஸ்வநாதர்!

    உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோவிலானது உலகப் பிரசித்தி பெற்றதாகும், இங்கு சிவபெருமான் ஸ்ரீ காசி விஸ்வநாதர் என்ற திருப்பெயரில் எழுந்து அருளியுள்ளார். இந்துக்களின் புனித தளமாக விளங்கும் இவ்விடத்தில் புனித திருத்தமான கங்கை நதி பாய்ந்து ஓடுகிறது. பாவங்களைப் போக்கும் இடமாகவும் முக்தி அளிக்கும் புண்ணிய பூமி ஆகவும் விளங்கும், காசிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு, (பனாரஸ்) என அழைக்கப்படும், வாரணாசி நகரில் இந்துவாக பிறந்த ஒருவர் மாண்டு விட்டால்' சடலத்தை காசியில் கங்கைக் கரையில் அரிச்சந்திர மயானத்தில் எரித்தால்' அவர்களின் ஆன்மா சொர்க்க லோகம் செல்லும், என்பது நம்பிக்கை, இதனால் இறந்த செல்வந்தர்களின் உடலை அவர்களது.

    உறவினர்கள் காசிக்கு எடுத்துச் சென்று அரிச்சந்திர மயானத்தில் எரித்து அஸ்தியை கங்கை நதியில் கரைக்கும் வழக்கம் காசி தோன்றிய காலத்தில் இருந்து உள்ளது. உள்ளூரிலேயே மயானம் இருக்கும்போது, காசி நகர மயானத்திற்கு அப்படி என்ன  சிறப்பு ? கங்கைக்கரை மயானத்தை ஒரு காலத்தில் அரிச்சந்திரன் காவல் காத்து வந்தான். அப்போது வாரணாசி நகர் வரும் யோகிகள், அகோரிகள், ஞானியார், சிவா அடியார்களுக்கு அரிச்சந்திரன் தொண்டு புரிந்ததாகவும், அவனது இறைத் தொண்டுக்கு மனமிரங்கிய காசி விஸ்வநாதர். நேரடியாக அரிச்சந்திரனுக்கு காட்சியளித்து என் மேல் உள்ள பக்தியின் காரணமாக அடியார்களுக்கு நீர் புரிந்த தொண்டின் பலனாக இனிவரும் காலங்களில் மயான காவல் தெய்வமாக வணங்கப்படுவாய் என அருள் வழங்கியதாகவும், அதன் பலனாக தற்போதும். உலகம் முழுவதும் இந்து மக்கள் பயன்பாட்டில் உள்ள.

    மயானங்களில் அரிச்சந்திரன் காவல் காக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது, இதன் காரணமாக இன்று வரை மயானங்களில்  அரிச்சந்திரன் கோவில்கள் அமைக்கப்பட்டு, அரிச்சந்திரனுக்கு அபிஷேகம் செய்து தீப ஆராதனை காட்டி ஆசி பெற்று' அதன் பின் அவரது அனுமதி அனுமதியோடு தான் ' மயானத்துக்குள் சென்று'  இறந்தவரின் உடலுக்கு இறுதி ஈமச்சடங்குகள் செய்யும் வழக்கம் உள்ளது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • பூவராகப்பெருமாள் இருப்பிடத்தில்”  சப்த கன்னியர்

    கடலூர் மாவட்டம்,ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பூவராகசாமி திருக்கோவில் உள்ளது. திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரமாக விளங்குவது வராக அவதாரம். இவர் பூவராக மூர்த்தியாக இங்கு' அருள் பாவிக்கிறார். இரணியன் என்ற அசுரன் தேவர்கள், முனிவர்கள், நந்தவர்களை துன்பப்படுத்தி வந்ததோடு, நான்கு வேதங்களை எடுத்துச் சென்று பூமியை பாயாக சுருட்டி இருள் அடைய செய்து அதன் கீழ் ஒளிந்து கொண்டான். அப்போது. தேவர்கள் முனிவர்கள் கந்தவர்கள் ஆகியோருடன். அப்பகுதியைச் சேர்ந்த 'அம்புஜவல்லி தாயார். அவருடைய உயிர் தோழிகளான சப்த கன்னிகளும் திருமால் இடம் சென்று' இரணியனை அழித்து தங்களை காக்கும் படி வேண்டினர்.

    எனவே  திருமால் வழக்கமாக  நான்கு கரங்கள், சக்கரத்துடன்' தான் சென்றாள். இரணியன் தன்னைக் கண்டு அஞ்சி தாழ் பணிந்து உயிர் தப்பி விடுவான் என்பதால்'  பன்றி அவதாரம் எடுத்து மண்ணுக்குள் நுழைந்து சென்று திருமால் இரணியனை  கொன்ற பின் அம்புஜவல்லி தாயாரை திருமணம் செய்து கொண்டார். அப்போது அம்புஜவல்லி தாயார் தனது தோழிகளும்  தன்னுடனே இருக்க வேண்டும் என்ற ஆசையில் திருமாலிடம் வேண்டினார். இதனை ஏற்றுக் கொண்ட திருமால்  தனது இருப்பிடத்திலேயே  அவர்களுக்கு இடமளித்தார்.

    மேலும் அத்துடன் அவர்களுக்கு தோஷம் நீங்குதல், பிள்ளை பேரு வரம் வழங்குதல் போன்ற சக்திகளையும் வழங்கினார். தற்போதும் ஏழு சப்த கன்னியர்களும்' பூவராகசாமி கோவிலில் தங்களுக்கான சன்னதியில், வடக்கு நோக்கி அமர்ந்தபடி திருமாலின் அனுமதியோடு' அங்கு வரும் பக்தர்களுக்கு வரம் அளித்து வருகின்றனர். இறைவன், அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி, (சுயம்பு மூர்த்தி) தாயார், அருள்மிகு ஸ்ரீ அம்புஜவல்லி, விமானம், பாவன விமானம்.புனித தீர்த்தம், நித்ய புஷ்கரணி,தலவிருட்சம், அரச மரம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • புலியூரான்’ சித்தநாத குருநாதரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும் பக்தர்கள் நம்பிக்கை !

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராமத்தில்' அருள்மிகு ஸ்ரீ சித்தநாத குருநாதசாமி திருக்கோயில் அமைந்துள்ளது, இங்கு 16 ஆம், நூற்றாண்டில் புலியூரான் கிராமத்தில், தென்பொதிகை மலையிலிருந்து வந்த “சித்தர்” ஒருவர் அங்குள்ள புளியமரத்தின்” கீழ் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார், அப்போது காரணம் புரியாது பல நோய்கள் பரவி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். நோய் தாக்குதலுக்கு ஆளான பலர் அதற்கான சிகிச்சை கிடைக்காமல் மாண்டு போய் விட்டனர். அப்போது அப்பகுதியை ஆண்ட அரசன் பொதிகை சித்தரை அழைத்து நோய் தீர்க்கும் அரிய மருந்தினை கண்டறியுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நாட்டு மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி பொதிகை சித்தர் பௌர்ணமி அன்று மகா யாகம் நடத்தி தனது தவத்தின் பலனாக 21 தேவதைகளை அழைத்து அவர்களுக்கு வேண்டிய அமுது படைத்து, கொடும் நோயை தீர்க்கும் அருமருந்து உண்டாக்கும் மூலிகை குறித்து கேட்டு அறிந்தார். பின் தேவதைகளின் வழிகாட்டுதலின்படி நோய் தீர்க்கும் மூலிகைகளை கொண்டு மக்களின் நோய்களை தீர்த்து குணப்படுத்தினார். மேலும் 21 தேவதைகளையும் வனப்பகுதியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த தம்பிரான் என்பவர் சித்தரின் சித்து விளையாட்டுகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு முறை பொதிகை சித்தர் தேவதைகளுக்கு அமுது படைப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்று'அங்கு நடப்பதை கவனித்தார், வணக்கம் போல் பொதிகை சித்தர் பூஜைகள் செய்து அமுது உண்பதற்காக தேவதைகளை அழைத்தபோது 21 தேவதைகளும் வர மறுத்தனர். இதற்கான காரணத்தை புரிந்து கொண்ட பொதிகை சித்தர் தன்னை பின் தொடர்ந்து வந்து பூஜைக்கு இடையூறு செய்த' தம்பிரான் என்பவரை மயக்கமடைய செய்தார். அதன் பின் தேவதைகள் சித்தர் முன் தோன்றி  அமுது உட்கொண்டன.

    இதனால்' சித்தரும் மனமிரங்கி' தீர்த்தம் திளித்து மயங்கி கிடந்தவரை தெளிவு பெற செய்தார், பின் தம்பிரான் தான் செய்த தவறை உணர்ந்து சித்தரின் தாள் பணிந்து வணங்கி நின்றார். சித்தரும் அவரை ஆசிர்வதித்து, தனது சீடனாக ஏற்று' தன்னுடன் இருந்து சித்த மருத்துவக் கலைகளை கற்று மக்கள் நலனுக்கு  தொண்டு புரியுமாறு அருளியதோடு' சித்த மருத்துவ கலைகளையும் கற்றுக் கொடுத்தார். தம்பிரானும் அவருடன் இருந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டார். அதன்பின், தம்பிரான் சித்தரின் அனுக்கிரகம் பெற்று சித்தர் முக்தி அடையும் காலம் வரை பக்தர்களின் எவ்வித நோய்க்கும் தீர்த்தம் வழங்கி சித்தருக்கு பணிவிடை செய்து வந்தார்.

    சித்தர் முக்தி அடைந்தவுடன், அவரின் அருள்வாக்குபடி  தம்பிரான் பொதிகை சித்தரை அடக்கம் செய்து, அங்கு, அருள்மிகு ஸ்ரீ சித்தநாத குருநாதர் என்ற பெயரில் கோவில் கட்டி, 21 தேவதைகளுக்கும் பொதிகை சித்தருக்கும் அமுது படைத்து வழிபட்டு வந்தார். பின்னர் “தம்பிரான்” முக்தி அடைந்ததும் அவரது உறவினர் சித்தரின் கருவறைக்கு அடுத்து அவரை அடக்கம் செய்து தனி கருவறை,  பீடம் அமைத்தும், அவரது பணியினை செய்து வந்தார். எனவும் தற்போதும் அந்த சித்தர் கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கு நோய் நொடிகள் உடனுக்குடன் குணமடைவதாகவும் நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “மகாவிஷ்ணு கட்டளை’ என்ன செய்தான் கஜேந்திரன் ” ? 

    தூ வாய புல் ஊர்ந்து வந்து துறை வேழம்
    மூவாமை நல்கி முதலை துணித்தானை 
    தேவாதிதேவனை செங் கமலக் கண்ணனை
    நாவாய் உளானை நறையூரில் கண்டேனே ! '- 
    (திவ்யதேச பாசுர விளக்கம்‌.)

    ( துஸவாய புள்) 'தூ வாய' என்றும், 'தூ ஐய' என்றும் பிரிக்கலாம். தூ ஐய வே தஸ்வரூபியாகையாலே ஸ்வத பரிசுத்தனானா என்றபடி.! 

     கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான. திருநாவாய் திருக்கோவிலானது, 76-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களும் பெருமாள் மீது  பாடிய இடமாகும். திருமாலை நோக்கி 9 யோகிகள் இங்கு தவம் புரிந்ததால், நவ யோகித்தலம் என அழைக்கப்பட்டு காலப்போக்கில்  தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.  தேவலோகத்தில் ஒரு முறை திருமகளும்,  கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து பறித்த தாமரை மலர்களைக் கொண்டு மகாவிஷ்ணுவுக்கு  அர்ச்சனை செய்து வணங்கி வந்தனர். அப்போது ஒரு முறை வழக்கம்போல் தடாகத்தில் தாமரை மலர்களை பறிப்பதற்காக சென்றபோது.

    கஜேந்திரனுக்கு தாமரை மலர்கள் கிடைக்கவில்லை, இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய கஜேந்திரன் இது குறித்து மன வருத்தத்துடன் சென்று' தனது நிலையை மகாவிஷ்ணுவிடம் எடுத்துரைத்தான். உடனே மகாவிஷ்ணு திருமகளை அழைத்து, இனி தடாகத்தில் நீ தாமரை மலர்களை பறிக்கக் கூடாது என கட்டளையிட்டார், அதனை ஏற்று திருமகளும் கஜேந்திரனுக்காக தாமரை மலர்களை பறிக்காமல் விட்டுக் கொடுத்தால், இதனால் மகிழ்ச்சி அடைந்த  கஜேந்திரன் அன்று முதல் நாள்தோறும் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து மகாவிஷ்ணுவை  வழிபட்டு வந்தான். அவனது பூஜையில் மன மகிழ்ந்த இறைவன் பூஜை நேரத்தில் திருமகளை தன்னுடன் சிம்மாசனத்தில் அமர செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று திருமகளுடன் தம்பதியர் சமேதரராக கஜேந்திரனுக்கு  காட்சி கொடுத்ததாக தல வரலாறு' பெருமான் அருள்மிகு ஸ்ரீ நவ முகுந்தன் என்ற திருப்பெயரில்  கிழக்கு நோக்கிய  முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் புதைந்த நிலையில் வேறெங்கும் காண முடியாத திருக்கோளத்தில் காட்சி தருகிறார், தாயார், அருள்மிகு ஸ்ரீ மலர்மங்கை நாச்சியார் என அழைக்கப்படுகிறாள்.

    தீர்த்தம், கமல தடாகம், கருவறை விமானம்,  வேத விமானம்,  கோயில் வளாகத்தில்  கணபதி, திருமகள், ஐயப்பனுக்கு தனி சன்னதிகள்  உள்ளன. ஆற்றங்கரையில் சிவபெருமான், பிரம்மதேவன், ஆகியோர் தனியாக கோவில் கொண்டுள்ளனர்.  இதன் காரணமாக் இத்தலம் மும்மூர்த்தி தலம் என போற்றப்படுகிறது. மகாபாரத காலத்தில்' பஞ்சபாண்டவர்களுடன் சேர்ந்து கிருஷ்ணர் இவ்விடத்தில் பித்ரு பரிகார பூஜை செய்துள்ளனர். ஆடி அமாவாசை தினத்தன்று பெருந்திரளானோர் இங்கு வந்து தங்கள் முன்னோருக்கு' தர்ப்பணம் செய்வது  வழக்கம், வைகுண்ட ஏகாதசி, திருவோணம் உற்சவங்களும், மாமாங்கத் திருவிழா ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்தில் இருக்கும்,   இக்கோவிலுக்கு திரூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர், எர்ணாகுளம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கான பேருந்துகள் உண்டு.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • முருகனின் உடலோடு ஒட்டிய வெற்றிவேல்”! 

    முருகப்பெருமானின் அறுவடை வீடுகளில் இல்லாத சிறப்பொன்று திருச்செங்கோடு பகுதியில் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு உண்டு. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோவிலில் முருகப்பெருமானின் கையில் இருப்பது.  கல்லாலான வேலாகும். மற்ற கோவில்களில் முருகனின் விக்கிரகத்தில் தனியாக வெள்ளி அல்லது தங்கத்தால் ஆன' வேலை கருவறையில் உள்ள முருகனின் திருமேனியுடன் வைத்திருப்பார்கள்.

    இங்கு முருகப்பெருமானின் தலையில் உள்ள' கீரிடத்திற்கு மேல் 3 அங்குலம் நீட்டிக்கொண்டிருக்கும், சிறப்பினை காண முடியும், இது இறைவனின் உடலோடு சேர்ந்தே இருக்கும். எனவே இதை குறைக்கவோ, அல்லது தனியாக பிரித்து எடுக்கவோ  முடியாதப்படி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ணனுக்கு எப்படி உடலுடன் ஒட்டி கவச குண்டலம் இருந்ததோ அதேபோன்று முருகனுக்கு வெற்றிவேல்  இருப்பது  குறிப்பிடத்தக்கது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • சென்னையில் அருள்பாலிக்கும்” பாதாள பொன்னி 

    சென்னையில் பல்வேறு அம்மன் கோவில்கள் உள்ளன அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது. புரசைவாக்கம் அருள்மிகு ஸ்ரீ பாதாள பொன்னியம்மன் திருக்கோவிலாகும், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இங்கு அக்காலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கிணறு வெட்டுவதற்காக  பூமியில் மண் தோண்டிய போது  பத்தடியில் நீர் சுரக்கும் இவ்விடத்தில் 40 அடிக்கு மேல் தோண்டியும்  தண்ணீர் தென்படவில்லை,  இருந்த போதும் முயற்சியை கைவிடாத விவசாயிகள் தொடர்ந்து மண் வெட்டிய போது. கடப்பாரை, பாறை ஒன்றின் மீது உரசிய சப்தம்" கேட்டது.

    தொடர்ந்து மேலும் தோண்டிய போது அக்கினி தோன்றி, நிலத்தடி நீர் பீறிட்டு வெளியேறியது இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் நற்புறமும் கடப்பாரையை வைத்து மண்ணில் புதைந்து கிடந்த பாறையை மேலே தோண்டி எடுத்தபோது. அது வெறும் பாறை அல்ல அம்மன் விக்ரகம் என தெரிந்தது, மேலும் அதன் கீழ் மற்றொரு ஐம்பொன் அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் மீது சுவாமி வந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் மிகப்பெரிய கோவில் இருந்ததாகவும் காலப்போக்கில் இயற்கையின் சீற்றத்தால் அக்கோவிலானது மண்ணில் புதைந்து விட்டது,  தான் பூமியில் பாதாளத்தில் வாசம் செய்து வந்ததாகவும், சக்தியின் வடிவமாக பொன்னி என்ற பெயரில் தற்போது தன்னை வெளிப்படுத்தி உள்ளதாகவும், எனவே இந்த இடத்திலேயே கோவில் எழுப்பி தன்னை வழிபட்டால் வேண்டிய வரங்களை அளித்து மக்களை காப்பதாகவும் அருள்வாக்கு சொன்னதை ஏற்று'மக்கள் கிணறு தோண்டிய பாதாளத்திற்கு மேல் தென்னங்கீற்றால் கூரை அமைத்து, அம்மனை வழிபட்டு வந்தனர்.

     அதன் காரணமாகவே இங்குள்ள அம்பிகை பாதாள பொன்னியம்மன் என அழைக்கப்படுகிறாள்.  அதன்படி கிணறு தோண்டிய விவசாயிகளின் வம்சாவழியினர் தற்போதும்," ஆடி திருவிழாவின் போது  இந்த பாதாள பொன்னியம்மனுக்கு தாய் வீட்டுச் சீர் வழங்குகின்றனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறி பக்தி பெருக பெருக அதன் வெளிப்பாடாக கோவில் விரிவடைந்து. விநாயகர் பெருமான், முருகன், நவகிரக மூர்த்திகள்,  தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவன், துர்க்கை அம்மன், அண்ணன்மார்களும் காட்சியளிக்கின்றனர. பிரம்மாண்டமாக  நூற்றுக்கால் மகா மண்டபம் அமைந்துள்ளது. அருள்மிகு அன்னை ஸ்ரீ பொன்னியம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அட்சயப்  பாத்திரமும் ஏந்தி  சாந்த வடிவில்' அள்ள" அள்ள" குறையாத  அட்சய பாத்திரம் போன்று தன்னை வேண்ட வேண்ட குறையாத அருளினை அள்ளி வழங்கும்  சொரூபிணியாக காட்சியளிக்கிறாள் ஆதி பராசக்தி. ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன, ஏழு பௌர்ணமி, அல்லது ஏழு அமாவாசை தினத்தில் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி பாதாள பொன்னியம்மனை வழிபட்டால் உள்ளத்தில் புதைந்துள்ள வேதனைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்