நேபாள நாட்டில் அருள்புரியும்”  ஸ்ரீ சங்கு நாராயணன்” !

Written by

in

நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் தவளகிரி மலைப்பகுதியில் உள்ள சங்கு கிராமத்தில்' அருள்மிகு ஸ்ரீ சங்கு நாராயணன் திருக்கோவில் உள்ளது, நேபாள பௌத்த கட்டிடக் கலை அம்சத்துடன் காணப்படும். இந்தக் கோவில் ஆனது'  கி. மு 325 ஆம், நூற்றாண்டில் லிச்சாவி வம்ச மன்னர் ஹரி தத்தா வர்மனின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதன்பின் கி.பி 496 முதல் 524 காலகட்டத்தில் மன்னர் மனதேவனின் ஆட்சி காலத்தில், இங்குள்ள தரை தளத்தில் அமைந்துள்ள கல் தூண்கள் கட்டப்பட்டதாக தெரிகிறது.

அதில் அவனது படையெடுப்புகள் குறித்து தெளிவாக எழுதப்பட்டுள்ளது. பிறகு கி.பி 1585  முதல் கி.பி 1614  வரை ஆட்சி செய்த சிவ சிம்ம மல்ல அரசனின் பட்டத்து அரசியான' கங்காராணி என்பவரால் இக்கோவிலானது மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1708 இல்' மன்னன் பாஸ்கர மல்லர் ' கலைநயம் மிக்க இக்கோவிலின். கதவுகள், சன்னல்கள், மேற்கூரை ஆகியவற்றை தங்கம் முலாம் பூசப்பட்ட, செப்புத்தகடுகளால் அலங்கரித்தான்.

இரண்டு அடுக்குகள் கொண்ட கருங்கல்லால் ஆன' இந்த கோவில் திருமாலுக்கு உரிய சிற்பங்களுடன் காணப்படுகிறது. இதன் பிரதான வெளியில்' சிவபெருமான், கிருஷ்ணர், சின்னமஸ்தா, ஆகியோரது சன்னதிகளும் அமைந்துள்ளது. இக்கோயிலின் நான்கு வாயில்களிலும் சிங்கங்கள், சரபங்கள், யாணைகள் மற்றும் யாழி சிற்பங்கள் காவல் புரிவதை கடமையாக கொண்டு காட்சி தருகின்றன. மேலும் மகாவிஷ்ணுவின்  பத்து அவதாரங்களைக் குறிக்கும் அழகிய சிற்பங்கள் கோவில் கூரையை தாங்கி நிற்கிறது.பௌத்தக் கட்டிடக் கலையா ? கலை அல்லது இந்து கட்டிடக் கலையா ? என வியக்கும் வகையில் உள்ளது.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்