அக்டோபர் 16 – இன்றைய ராசிபலன் …
இன்றைய ராசிபலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – பாராட்டு
மிதுனம் – நிறைவு
கடகம் – சலனம்
சிம்மம் – இரக்கம்
கன்னி – பரிவு
துலாம் – மேன்மை
விருச்சிகம் – பொறுமை
தனுசு – அச்சம்
மகரம் – ஆர்வம்
கும்பம் – எதிர்ப்பு
மீனம் – பரிசு
சந்திராஷ்டமம் – ரேவதி, அசுபதி
Blog
-
October 16 2023 Rasipalan
-
October 16 2023 Indrayanaal
அக்டோபர் 16 – சந்திர தரிசன நாள்
சோபகிருது வருடம் – புரட்டாசி 29
16-அக்-2023 திங்கள்
கரிநாள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை ந.இ 1.7
நட்சத்திரம் : சுவாதி கா 8.17
யோகம் : அமிர்த-மரணயோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
navarathiri amman sivapoojai alangaram
நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான இன்று தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை கண்டு களித்தனர்.
நவராத்திரி முன்னிட்டு அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து தொடர்ந்து 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உற்சவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்து சிவ பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சிறப்புக் காட்சி தந்தார்.
பின்னர் சிவ பூஜையில் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மனுக்கு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை கண்டு களித்தனர்.
முன்னதாக ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு பல அடுக்குகளில் விநாயகர் கிருஷ்ணர் பெருமாள் சிவன் வடிவில் என ஏராளமான கொழு அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.
-
Thirupathy periyasesha vaganam
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் பெரியசேஷ வாகனத்துடன் சிறப்பாக துவங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர நவராத்திரி பிரதோஷம் சிறப்பாக துவங்கியது முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீமன் நாராயணன் அலங்காரத்தில் உபய தேவியர் ஆன ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார்.
மாடவீதியில் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை மாலை இரண்டு வேளைகளில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் பவானி வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். பக்தர்களின் வசதிக்கேற்ப திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
-
thanga thirichi vaganathil thirupathy ezhumalayan
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது . இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு ஆகம ஆலோசகர் சிறப்பு பூஜைகள் செய்து பிரம்மோற்சவத்திற்கான கங்கண கயிறுகளை கட்டினார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுத்துச் செல்ல நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் வீதி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை இரவு நேரங்களில் சுவாமி தாயார் பல்வேறு வாகங்களில் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர்.
-
October 15 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – அசதி
மிதுனம் – சுகவீனம்
கடகம் – ஓய்வு
சிம்மம் – சிரமம்
கன்னி – வெற்றி
துலாம் – சினம்
விருச்சிகம் – நலம்
தனுசு – நன்மை
மகரம் – அலைச்சல்
கும்பம் – துணிவு
மீனம் – சிந்தனை
சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி, ரேவதி -
October 15 2023 Navarathiri Arambam
அக்டோபர் 15 – நவராத்திரி ஆரம்பம்
சோபகிருது வருடம் – புரட்டாசி 28
15-அக்-2023 ஞாயிறு
நவராத்திரி ஆரம்பம்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை ந.இ 12.47
நட்சத்திரம் : சித்திரை இ 7.15
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
Thirupathy bramorchavam starts
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்குராற்ப்பணத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்
திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 23 தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கி நடைபெற உள்ளது.
இந்த வருடம் தெலுங்கு காலண்டரில் அதிக மாசம் என்பதை முன்னிட்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நிகழ்கின்றன சென்ற மாதம் காலகட்டில் பிரம்மோற்சவம் நடைபெற்று நிறைவடைந்தது. தொடர்ந்து இந்த மாதம் நவராத்திரி பிரம்மோற்சவம் அங்கூரா படத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது 15 ஆம் தேதி இரவு முதல் காலை மாலை இரண்டு வேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளது. உற்சவத்தை துவக்கும் விதமாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அங்கு ராற்பணம் என்ற நிகழ்வும் சேனாதிபதி உற்சவம் பெற்றது.
சேனாதிபதி மாட வீதிகளில் வலம் வந்தார் பெருமாளின் வாகன சேவைகளுக்கு முன்னதாக சேனாதிபதி மாட வீதிகளை அனைத்தும் சரிவர உள்ளதா என கண்காணிக்கும் விதமாக சேனாதிபதி எனப்படும் சேனை முதலியார் மாட வீதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
-
Gayathri devi sirappu abishegam
கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி ,குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து காயத்ரி தேவிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
ஆலயத்தின் நடைபெற்ற புரட்டாசி மாத அமாவாசை சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
Theni perumal koil festival
தேனி அருகே நாகலாபுரம் கிராமத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஶ்ரீ செளந்தரராஜ பெருமாள் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இன்று புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அமர்ந்திருக்கும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் பெருமாளுக்கு பால் தயிர் சந்தனம் தேன் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு வண்ண பட்டுடுத்தியும் உற்சவர் பெருமாளுக்கு வஸ்திரம் கட்டி ஆபரணங்கள் அணிவித்து வண்ண மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர் பெருமாளுக்கு சோடாச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர தீபாராதனை காடடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் பெருமாளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர்.