Blog

  • Thirupathy golden car

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின்  8-ம் நாளான இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 8-ம் நாளான இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் தங்கத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதில் பெண்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாடவீதியில் காத்திருந்த திரளான பக்தர்கள் திரண்டிருந்து தேரோட்டத்தைக் கண்டு களித்தனர். மாட வீதிகள் எங்கும் 'கோவிந்தா… கோவிந்தா' எனும் பக்தி பரவச கோஷம் விண்ணைப் பிளந்தது. இதனை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் அமர்ந்து கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசித்தனர்.

  • October 22 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  குழப்பம்
    ரிஷபம்         –    அசதி
    மிதுனம்     –   வரவு
    கடகம்         –  சுகம்
    சிம்மம்         –    உழைப்பு
    கன்னி         –    லாபம்
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     – முயற்சி
    தனுசு         –     சினம்  
    மகரம்         –    பயம்   
    கும்பம்         –     நன்மை
    மீனம்         –      உயர்வு
    சந்திராஷ்டமம்    –  திருவாதிரை, புனர்பூசம்

     

  • October 22 2023 Thiruvonam viradham

    அக்டோபர் 22 – திருவோண விரதம்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 5
    22-அக்-2023 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி மா 5.36
    நட்சத்திரம் : உத்திராடம் மா 5.11
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thirupathy chandra prabai vaganam

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ம்  நாளான இன்று இரவு   வெண்ணை கடைத்தெடுக்கும் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று இரவு சந்திரபிரபை வாகனத்தின் மீது நவநீதகிருஷ்ணன்  அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் மலையப்பன்  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் காத்திருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை வேண்டினர்.

    சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இந்த வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

  • Soorya prabai vaganam

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாவது திருநாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்பா சுவாமி சூரிய நாராயணராக சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தார். நான்கு மாட வீதிகளிலும் உலா வந்த சூரிய நாராயணரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருமலை நான்கு மாட வீதிகளில் வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த வாகன சேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

  • October 21 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பயம்  
    ரிஷபம்         –    அலைச்சல்
    மிதுனம்     –   உதவி
    கடகம்         –  பாராட்டு  
    சிம்மம்         –    அமைதி   
    கன்னி         –    சினம்
    துலாம்         –     பொறுமை
    விருச்சிகம்     – பரிசு
    தனுசு         –     நலம்
    மகரம்         –    வெற்றி  
    கும்பம்         –     பரிசு
    மீனம்         –      பேராசை
    சந்திராஷ்டமம்    –  மிருகசீருஷம், திருவாதிரை

  • October 21 2023 Indrayanaal

    அக்டோபர் 21 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 4
    21-அக்-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி இ 7.41
    நட்சத்திரம் : பூராடம் மா 6.33
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிசீடம்,திருவாதிரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • October 20 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    ஆதரவு  
    மிதுனம்     –   வாழ்வு
    கடகம்         –  நிம்மதி  
    சிம்மம்         –    நன்மை  
    கன்னி         –    சுகவீனம்
    துலாம்         –     நிறைவு
    விருச்சிகம்     – அச்சம்
    தனுசு         –     பயம்
    மகரம்         –    சலனம்  
    கும்பம்         –     அமைதி
    மீனம்         –      எதிர்ப்பு
    சந்திராஷ்டமம்    –  ரோகிணி, மிருகசீருஷம்

  • October 20 2023 Subamuhurthanaal

    அக்டோபர் 20 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 3
    சுபமுகூர்த்த நாள்
    20-அக்-2023 வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி இ 9.32
    நட்சத்திரம் : மூலம் இ 7.40
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிசீ டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Karur navarathiri Festival

    கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு நாள்தோறும் மாரியம்மன் பல்வேறு காட்சி தருகிறார்.

    இந்நிலையில் நவராத்திரி நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மனுக்கு ஆலயத்தில் பூசாரி உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

    அதைத்தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சி அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.