Blog

  • navarathiri mudindhu thirumbiya buvaneswari amman

    பழனியில் நவராத்திரி விரதம் முடிந்து புவனேஸ்வரி அம்மன் மலைக்கோயில் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்தது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

    சூரனை வதம் செய்யும் நிகழ்வுக்காக  மலைமிருந்து கீழே வந்த புவனேஸ்வரி அம்மன் கொழுவில் அமர்ந்தார். நவராத்திரி விழா நிறைவு நாளில் புவனேஸ்வரி அம்மன் மீண்டும் மலை மீது செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக புலிப்பாணி ஆசிரமத்தில் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புவனேஸ்வரி அம்மனினை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பல்லக்கில் வைத்து மலைக் கோயிலுக்கு ஊர்வலமாக புவனேஸ்வரி அம்மனே அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

  • maan vetaiyadiya malayappasamy

    விஜயதசமி தினமான இன்று திருப்பதி மலையில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்ற வேடுபறி உற்சவத்தின் போது உற்சவர் மலையப்ப சுவாமி சம்பிரதாய முறையில் மான் வேட்டையாடினார். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினம் அன்று திருப்பதி மலையில் வேடுபறி உற்சவம் நடைபெறும்.

    அந்த வகையில் இன்று நடைபெற்ற வேடுபறி உற்சவத்தில் எழுந்தருள்வதற்காக உற்சவர் மலையப்ப சுவாமி, கிருஷ்ணர் ஆகிய  உற்சவர்கள் கோவிலில் இருந்து தனித்தனி பல்லக்குகளில் புறப்பட்டு திருப்பதி மலையில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் பாபநாசம் செல்லும் வழியில் இருக்கும் வேடுப்பறி உற்சவ மண்டபத்தை அடைந்தனர்.

    அங்கு மலையப்ப சுவாமி, கிருஷ்ணர் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.  அதனை தொடர்ந்து வேடுபறி உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவர் மலையப்ப சுவாமியை தேவஸ்தான ஊழியர்கள் மூன்று முறை முன்னும் பின்னும் தூக்கி சென்ற போது ஏழுமலையான் கோவில்  தலைமை அர்ச்சகர் கையில் வைத்திருந்த வெள்ளி ஈட்டி ஒன்றை பொய்மான்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி வீசி எறிந்தார்.

     மூன்று முறை ஈட்டி வீசி எறியப்பட்ட பின் மலையப்ப சுவாமி,  கிருஷ்ணர் ஆகிய உற்சவர்கள் மீண்டும் கோவிலை அடைந்தனர்

     

  • Saraswathi amman rupees alangaram

    நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக ரூபாய் நோட்டு மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்தார் ஏராளமான பக்தர்கள்  வழிபட்டனர்.

    நவராத்திரி திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி அம்மனுக்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரம் என ஒன்பது நாட்களுக்கு தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக தேனி பத்திரகாளி அம்மன் கோயிலில் உற்சவர் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி தந்தார்.

    முன்னதாக கோயில் முழுவதும் வண்ண விளக்கங்களால் ஜொலிக்கப்பட்டு உற்சவர் அம்மனை வண்ண பட்டு உடுத்தி ஆபரணங்கள் அணிவித்து சரஸ்வதி அம்மனாக அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தார். மேலும் ரூபாய் நோட்டுகளால் மற்றும் காசு மாலைகளால் சரஸ்வதி அம்மனுக்கு அலங்காரம் செய்து பணமழை பொழிவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ரூபாய் நோட்டு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சரஸ்வதி அம்மனை வணங்கிச் சென்றனர். அதன் பின்னர் சிறுவர் சிறுமிகள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திரக்கல்யாணம் வைபவத்தை தத்ரூபமாக நடித்து காட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • October 24 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  போட்டி
    ரிஷபம்         –    பொறுமை  
    மிதுனம்     –   நலம்
    கடகம்         –  உதவி
    சிம்மம்         –    வாழ்வு
    கன்னி         –    உயர்வு
    துலாம்         –     பேராசை
    விருச்சிகம்     – களிப்பு
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    சாந்தம்
    கும்பம்         –     ஆதாயம்  
    மீனம்         –      இரக்கம்
    சந்திராஷ்டமம்    –  பூசம், ஆயில்யம்

  • October 24 2023 Vijayadasami

    அக்டோபர் 24  – விஜயதசமி,
    சோபகிருது வருடம் – ஐப்பசி 7
    24-அக்-2023 செவ்வாய்
    விஜயதசமி,
    குலசேகரன் பட்டினத்தில் தசரா,
    கன்னியாகுமரி அம்மன் பரிவேட்டை,
    ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி ம 1.0
    நட்சத்திரம் : அவிட்டம் ம 2.1
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • October 23 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    எதிர்ப்பு
    மிதுனம்     –   லாபம்
    கடகம்         –  விருத்தி
    சிம்மம்         –    மகிழ்ச்சி
    கன்னி         –    சிரமம்
    துலாம்         –     நற்செய்தி  
    விருச்சிகம்     – நிம்மதி
    தனுசு         –     நன்மை   
    மகரம்         –    சோதனை
    கும்பம்         –     களிப்பு
    மீனம்         –      ஓய்வு  
    சந்திராஷ்டமம்    –  புனர்பூசம், பூசம்

  • October 23 2023 Saraswathi poojai

    அக்டோபர் 23 – சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 9.30 – 10.30 மணி)
    சோபகிருது வருடம் – ஐப்பசி 6
    23-அக்-2023 திங்கள்
    சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 9.30 – 10.30 மணி)
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : நவமி ம 3.21
    நட்சத்திரம்: திருவோணம்ம 3.40
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Vijayadhasami poojai neram

    சரஸ்வதி பூஜை

    கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.

    வழிபடும் முறை :

    ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும்.

    மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

    சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும். மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

    சரஸ்வதி பூஜையின் சிறப்பு :

    நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாள் கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.

    சரஸ்வதி பூஜை
    விஜய தசமி

    விஜயதசமி பூஜை 24-ம் தேதி வருகின்றது, அதாவது ஆயுத பூஜை மறுநாள் வருகின்றது. அதனால் இந்த பூஜையை செய்வதற்கு நல்ல நேரம்

    காலை
    07:45-08:45
    10:45 -11:45
    மாலை
    04:45-05:45
    07:30-08:30 வரை

    சுபஹோரை நேரங்கள்
    காலை 08:00 முதல் 09:00
    (சுக்கிர ஹோரை)
    மாலை 04.30 முதல் 06.00 வரை புதன்-சந்திர ஹோரைகள்

    வழிபாடு எப்படி.?
    ஆயுத பூஜை அன்று வழிபாடு செய்வதற்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள் அம்பாளுக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகும். அவரவர் வழிபடும் இடத்தில் சுவாமி படங்களை வைத்து தேங்காய், வாழைப்பழம், பூ, வெத்தலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம்.

  • ayudha poojai vazhipadum neram

    ஆயுத பூஜை

    அன்னை துர்க்கை போருக்காக தன் ஆயுதங்களைப் பூஜித்ததை கொண்டாடும் விதமாகவும், பொதுமக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாகவும் நவமி திதியில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.

    ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்துவதற்கு தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நமக்காக, நம் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு நாம் நன்றி சொல்வது இந்நாளின் நோக்கமாகும்.

    வழிபடும் முறை :

    அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும். அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம்.

    தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.

    சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.

    பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.

    ஆயுத பூஜையின் சிறப்பு :

    செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும். ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.

    ஆயுத பூஜை செய்வதற்கான நேரம்:

    2023-ம் ஆண்டிற்கான ஆயுத பூஜை அக்டோபர் 23-ம் தேதி அன்று
    பொது
    நல்லநேரங்கள்
    காலை 06:15 -07:15
    மற்றும் 09:15 – 10:15

    மாலை :04:45.- 05:45
    இரவு 07:30- 08:30

    சுப ஹோரைகள்.
    காலை 06:00-07:00
    (சந்திர ஹோரை)
    08:00-09.00 மணி
    குரு ஹோரை  
    மதியம் 12:00- 01:00
    (புதன் ஹோரை)
    பூஜை செய்ய சுப ஹோரை நேரமாக இருக்கிறது.

     

  • Thirupathy kalki alangaram

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ம்  நாளான இன்று இரவு   குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா ஆரவாரத்துடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் இம்மாதம் 15 ஆம் தேதி சிறப்பாக துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும்   பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்று வருகிறது,

    பிரம்மோற்சவத்தின் எட்டாவது திருநாளான  இன்று இரவு தங்கக் குதிரை வாகனத்தில்  கல்கி அலங்காரத்தில் வாளேந்திய கோலத்தில்  மலையப்ப சுவாமி  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.