Blog

  • என் குலதெய்வம் காளி – எம்ஜிஆர்

    பக்தி மற்றும் ஆன்மீகம் மீது ஒருவருக்கு நம்பிக்கை வந்துவிட்டால் மறைக்கவே முடியாது என்பதற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களே ஒரு உதாரணம்.. 

    ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை கொண்ட அவர், திராவிட கட்சியில் சேர்ந்த பிறகு புராண, இதிகாச படங்களை அறவே தவிர்த்தார். படங்களில் அவர் தத்துவம் பேசும் காட்சிகளின் பின்புலத்தில்கூட கடவுள் படங்களை விட, புத்தர், அண்ணா போன்ற படங்களே இருக்கும். ஆனாலும் இறை நம்பிக்கையை எம்ஜிஆர் மறுக்கவேயில்லை.

    தனிப்பட்ட நம்பிக்கையில் தலையிட அரசியல் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது என்று வெளிப்படையாக சொல்லவே, தனிப்பிறவி படத்தில் முருகன் வேடம் போட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். தனது தாய்தான் தனக்கு கண்கண்ட தெய்வம் என்று உருகிய எம்ஜிஆர், தான் வாழ்ந்த வீட்டிலிலேயே தாய்க்காக கோவில் கட்டி வழிப்பட்டார். மூகாம்பிக்கை அம்மன் தனது தாய் வடிவில் காட்சியளிப்பதாக அவர் கூறியபோது திராவிட தரப்பிலிருந்து எந்த விமர்சனமும் வரவில்லை. உடுப்பி கொல்லூர் மூகாம்பிகையை எம்ஜிஆர் நேரடியாக வழிபடத்தொடங்கியதுடன் பெரும் பொருட்செலவில் கூடிய நீளமான தங்க வாள் ஒன்றையும் கோவிலுக்கு அளித்து. பக்தியின் சரணாகதித்துவத்தை பட்டவர்த்தனமாக காட்டினார்.

    இறைமறுப்பு பிம்பமாக இன்றளவு திகழும் தந்தை பெரியாரை அரசியல் முன்னோடியாக கொண்டாலும், பக்தியை மறைத்து மறைத்து அவர் வழிபட்டதில்லை. பக்தியின் பலமே இதுதான். நம்பிக்கையை மனதில் விதைத்து ஆன்மீக பாதையில் ஒழுக்க நெறிகளோடு சுத்தமான பாதையில் பயணிக்க வைப்பதுதான் அதன் சிறப்பம்சம்.

    இறை நம்பிக்கை உள்ளவர்கள் யாருக்கும் தங்கள் பக்தி, வழிபாட்டு முறைகள் போன்றவற்றை மறைக்கவேண்டிய அவசியமில்லை என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

    கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா? என்ற கேள்விக்கு எம்ஜிசூர் தன் வாயாலேயே அளித்த பதில்கள்…’’நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை’’ என்கிறார்.

    உங்களுக்கு குல தெய்வம் உண்டா? என்ற இன்னொரு கேள்விக்கு, ‘காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி’ என்று தன் குடும்பத்து இஷ்ட தெய்வங்களை தெளிவாகவே பட்டியலிடுகிறார் அவர்.

    அல்லாவின் மேல் ஆணை என்ற வசனத்தை உச்சரிக்க விருப்பமின்றி அம்மாவின் மேல் ஆணை என்று பேசி நாத்திக பாதையை விடமுடியாததால், மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மாபெரும் நிறுவனத்தோடு தொழில் உறவையே ஸ்தம்பிக்க செய்தவர் எம்ஜிஆர்.
    அப்படிப்பட்டவர் பின்னாளில் ஆன்மீகவாதியாக மாறி முதலமைச்சர் என்ற வாய்ப்பு கிடைத்தபோது ஸ்ரீரங்கம் உட்பட எண்ணற்ற பிரபலமான கோவில்களின் புணரமைப்பு திருப்பணிகளை செய்தார் என்றால் அதுதான் பக்தி மார்க்கத்தின் அசைக்கமுடியாத சக்தி

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

  • உங்கள் குழந்தைகள் பற்றிய செய்திகளுக்கு…

    இந்த பகுதியில் உங்கள் வீட்டு குழந்தைகளின் பரதநாட்டிய அரங்கேற்றம், இசைக்கச்சேரிகள் போன்ற தகவல்களை புகைப்படங்களுடன் இடம்பெறச்செய்ய தொடர்பு கொள்ளவும் – 98400 55626

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 4

         புத்தர் கோயிலைப் பார்க்கப் படிகளை ஏறிக் கடந்தோம். படியேறும் வழியில் சிறு விற்பனையாளர்கள் சிலரைக் காண முடிந்தது. நம்ம ஊர் என்றால் மலைக் கோயில் வாசல்களில் மலைவாழ் மக்கள் சுத்தமான தேன் என்று கூறி பாட்டில்களில் விற்பார்கள். இங்கு விற்கப்பட்ட பல பொருட்களை எங்களுக்கு அடையாளந் தெரியவில்லை. உள்ளூர்க்காரர்களுக்குத் தெரிந்திருக்கும். சில விலங்குகளின் உடல் பாகங்களை ஒருவர் காதலியோடு விற்றுக் கொண்டிருந்தார்.

         காதலியோடு சரசமாடிக் கொண்டு சற்றுத் தொலைவில் தடுப்புச் சுவரில் உட்கார்ந்திருந்தார். எலும்பு, நகம், தோல் என வகை வகையான உடல் பாகங்கள். ஏதோ ஒருவகைக் குரங்கின் உடல் பாகங்கள்போல் தெரிந்தது. இது சட்டபூர்வமா இல்லையா தெரியவில்லை. அவற்றிலிருந்து ஒருவித வாடை வந்து கொண்டிருந்தது. மாணவர் கூட்டம் ஒன்று பேசிச் சிரித்துக் கொண்டு மேலிருந்து கீழே இறங்கி வந்தது. நவீன் அவர்களோடு படம் எடுத்துக் கொண்டார்.

         ஆண்களும் பெண்களும் பழகுவதில் இங்கு பெரிதாகத் தடை இருப்பதுபோல் தெரியவில்லை. சகஜமாக இருந்தனர். எல்லாருமே பதின்ம வயது மாணவர்கள்தான். அந்த இளமைக்கே உரிய துள்ளலும் குறும்பும். செல்லும் வழியில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட சில உருவங்கள் இருந்தன. ஒன்றும் மனத்தைக் கவரவில்லை. மேலே பெரிய புத்தர் கிடந்த கோலத்தில் இருந்தார். அவர் ஒருத்தர்தான் கொஞ்சம் பார்க்கும்படி இருந்தார். அதுவும் கல் சிற்பமல்ல. கான்கிரீட் புத்தர்தான்.

         பேங்காக்கில் பார்த்த மிகப் பெரிய புத்தரைப் போன்றதே இதுவும். ஆனால் அதிலாவது ஓரளவு கலைநயம் இருந்தது. இதில் மெச்சும்படி ஏதுமில்லை. கான்கிரீட்டில், சிமெண்ட்டில் செய்யப்பட்ட சிலை என்றாலே எனக்கு ஏதோ ஒவ்வாமை. நம்ம ஊர்க் கோயில் விமானம், கோபுரங்களில் உள்ள சுதை வேலைப்பாடு, கோபுர பொம்மைகள் தனி. அவை சில இடங்களில் கலையழகுடன் மிளிரப் பார்த்திருக்கிறேன்.

         இந்த புத்தருக்கு மஞ்சளாக வர்ணமடித்து மேலே மஞ்சள் துணியில் விதானம் அமைத்திருந்தனர். புத்தரைச் சுற்றிவர இடம் விட்டிருந்தனர். அந்த புத்தருக்கு அருகே வெவ்வேறு சிலைகள். பெரிய புத்தருக்குக் கீழே அவர் உடலைச் சுற்றிவர சின்னச் சின்ன புத்தர் சிலைகள். அருகிலேயே ராஜ அலங்காரத்தில் மரகத புத்தர் சிலை. கண்கள் திறந்த நிலையில் இருந்தது. பேங்காக் அரண்மனை வளாகத்தில் இருக்கும் ராஜ புத்தரின் நகல் வடிவம். அதுவும் காமா சோமாவென்றிருந்தது.

         அந்த வளாகத்துக்குள்ளேயே பௌத்த பிக்குகள் தங்குவதற்கு ஒரு சின்ன மடாலயம். மனத்தில் எதுவுமே ஒட்டவில்லை. நல்ல வெக்கை வேறு. இவ்வளவு உயரம் வந்து இந்த வெக்கை வித்தியாசமாக இருந்தது. வரும் வழியில் கூடக் குளிர் காற்று இருந்தது. நல்லவேளை வெயில் கடுமையாக இல்லை. இலக்கின்றி வெறித்துப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் கீழே இறங்கினோம்.

    வரும் வழியில் வடிவாக இருந்த ஒரு பெரிய சிவலிங்கம் சின்ன ஆறுதல். மொழு மொழுவெனக் கருங்கல்லில் செய்யப்பட்ட சிவலிங்கம். வெட்டவெளியில் சிவனே என்று உட்கார்ந்திருந்தது. சதுரமான ஆவுடையார். மேலே பாணலிங்கம் மாதிரி லிங்கம். கீழே இறங்கியதும் இடப்பக்கமாக நடத்தி அழைத்துச் சென்றார் ஓட்டுநர் ரா. ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்ட ஆற்றைப் பார்க்க..

         இந்த ஆற்றிலிருந்துதான் தண்ணீர் கீழே போகிறது. இதனுடன் மேலும் சில கிளை நதிகள் சேர்ந்து கொண்டுதான் அங்கோர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வட்டாரத்தை வளப்படுத்துகின்றன என நினைக்கிறேன். கெமர் பேரரசு என்பது ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்த சாம்ராஜ்யம். அதன் ஒரு பகுதியான இந்த லிங்கங்கள் எப்போது வடிக்கப்பட்டன என்பது பற்றித் தெளிவான தகவல் இல்லை.

         ஆற்றுப் படுகையெங்கும் வட்டமாகவும் சதுரமாகவும் ஆவுடையார் விளிம்பு வைத்து உள்ளே வட்ட வட்டக் கல் இட்டலிகள் போல் உள்ளன பெரும்பாலான லிங்கங்கள். சிறுவயதில் நாம் களிமண்ணைப் பிசைந்து கரைத்து ஊற்றி விளையாடிய வட்டங்கள் போலிருந்தன. நாங்கள் போயிருந்த நேரம் தண்ணீர் அதிகம் இல்லை. ஆகவே தெளிவாக லிங்கங்களைக் காண முடிந்தது.

         லிங்கத்தோடு பெரிய விஷ்ணு உருவம் ஒன்றும் நதிப் படுகையில் இருந்தது. உற்றுப் பார்த்தால்தான் தெரியும். விஷ்ணுவையும் லிங்கங்கள் பலவற்றையும் இப்படித் தண்ணீருக்குள் பார்ப்பது ஒரு புது அனுபவம். லிங்க வடிவங்களால் ஆசிர்வதிக்கப்பட்டுப் புனிதமடையும் தண்ணீர் கீழே உள்ள வயல்களில் பாய்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்பது கம்போடியர்களின் நம்பிக்கை.

         நாங்கள் நின்ற இடத்திலிருந்து மேலே போனால், சின்னச் சின்ன அருவிகளும் அவற்றின் ஓரங்களில் மேலும் பல இந்துக் கடவுளரின் உருவச் செதுக்குகளும் இருப்பதாக ஓட்டுநர் சொன்னார். மேலே போக நேரமில்லை. எங்கள் கண்ணுக்கு எதிரிலேயே உள்ளூர்க் குழந்தைகள் லிங்கத்தின் மீது கால்படாமல் ஆற்றைக் கடந்து எதிர்த்திசைக்குப் போயினர்.      

                சலசலவென ஓடும் நதியும் நிழல்தரு மரங்களும் ஏகாந்த உணர்வைத் தந்தன. நம் பாட்டன் முப்பாட்டன் வந்து நின்ற இடம். இதைச் செதுக்கிய சிற்பி பிறவியிலேயே இந்துவாகப் பிறந்திருப்பானா? இங்கு இந்து சமயம் பரவியது எப்படி? அதற்குமுன் இந்த மக்கள் எந்த சமயத்தைப் பின்பற்றினார்கள்? ஏன் இந்து மதத்திற்கு மாறினார்கள்? இந்துப் புராண இதிகாசங்கள் இவ்வளவு தூரம் இவர்களுக்குள் ஊறியது எப்படி? எனப் பலவிதமாக நினைத்துக் கொண்டேன்.

    – பொன். மகாலிங்கம்

    ———-

     பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • தனி ஒருவன் குளிகன்

    நல்லது செய்யாததை நாள் செய்யும், நாள் செய்யாததை நேரம் செய்யும் என்று ஒரு வழக்கு உண்டு.
     
    நம் அனைவருக்கும் சாராசரியாக யமகண்டம், ராகுகாலம் பற்றி தெரிந்துயிருக்கும். காலண்டரில் குளிகை நேரம் என்பதை பார்த்திருப்போம். உண்மையில் குளிகை நேரத்தில் ஒரு வேலையைய் செய்யத்தொடங்கினால், அது தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பார்கள், ஆயினும் குளிகையில் நல்ல விஷயங்கள் தொடங்குவதில்லை அது ஏன்? அதற்கு காரணம் அவரது தந்தை.
    குளிகையும் அவரது தந்தையையும் சந்திக்கலாமா?
     
    மண்டோதரிக்கு பிரசவ நேரம். வலியால் துடித்தபடி இருந்தாள் இலங்கையின் மகாராணி. இராவணன் 9 கோள்களையும் அழைத்தான், பிரம்ம தேவரையும் அழைத்து அதிஅற்புதமான நேரத்திலேயும், உலகின் தலைசிறந்த ஜாதக அமைப்போடும் தன் பிள்ளை பிறக்க‌ வேண்டும் என ஆணையிட்டான். அதன்படி நவகிரஹங்கள் இராவணன் இஷ்டப்படி இதுவரை யாருக்கும் அமையாத ஜாதகமாக நிற்க வைக்கப்பட்டனர். பிரம்மதேவரும் ஒரு குறையும் இல்லாத ஜாதகத்தை வடிவமைத்தார்.
     
    ஆனால் நவகிரஹங்களுக்கும், தேவர்களுக்கும் இது மிகவும் வேதனையாக இருந்தது. இனி இராவணேஸ்வரனை அழிக்க முடியாது
    என துயரமுற்றனர். அந்த அவஸ்தையினால் சனீஸ்வர பகவான் வியர்த்து வழிந்தார். தன் வியர்வையை எடுத்து எறிந்து கொண்டே இருந்தார். அதே வேளையில் மண்டோதரி அழகிய ஆண் குழந்தையை ஈன்றாள்.
     
    தன் பிள்ளையை இனி எவராலும் அழிக்கமுடியாது என்று இராவணன் கர்வமடைந்தான். அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் பிரம்மதேவரோ மிகுந்த நிம்மதியடைந்தார். நவகிரஹங்களை தனியே அழைத்து, சனீஸ்வரனின் மைந்தன் நம்மை காப்பாற்றியுள்ளான் என்றார். யாருக்கும் எதுவும் விளங்கவில்லை.
     
    பிரம்மனே தொடந்தார், சனி பகவானின் வியர்வை மகனாக அவதரித்துள்ளான். சாதாரணமாக அப்பழுக்கில்லாத ஜாதகத்தை கொண்ட உயிரை நான் படைப்பதில்லை. எனவே நான் மிகுந்த வேதனையில் இருந்தேன். ஆனால், சனி பகவானின் மகன் அக்குறையை நிவர்த்தி செய்து விட்டான், 9 கோள்களும் ஒரு புறம் இருக்க, மறுபுறம் தனி ஒருவனாக‌ நின்று, அனைவரின் நற்பலன்களையும் சிதறடித்துவிட்டான். அவனுக்கு குளிகன் எனப் பெயர் இடுகிறேன், என்றார்.
     
    நவகிரஹங்களில் ஒரு இடத்தை தர இயலாது, அதனால் ஒரு நாளில் சில நாழிகைகள் அவனுக்கு தருகிறேன். குளிகனால் கெடுதல் மிகையாக இல்லையென்றாலும், இராவணனின் மகனுடைய அழிவிற்கு உதவியதாலும் சனி பகவானின் மகனாக இருப்பதாலும், குளிகை நேரத்தில் நல்ல விஷயங்களை தொடங்க முடியாது என்றார் பிரம்மர்.
     
    குளிகை நேரத்தில் ஒரு காரியம் தொடங்கினால் அது, தொடரும் என்பார்கள்ஆ. தலால் பெரும் கடனுடையவர்கள் குளிகை நேரத்தில் கடனை அடைக்க முயலுவார்கள். 
     
    இதை தான் கெட்டதிலும் ஒரு நல்லது என்கிறார்களோ…
     
    – ரம்யா சுரேஷ்

    ரம்யா சுரேஷ் – சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள – sangemahathi@gmail.com  

  • சென்னை கோவில்கள் – 1

    சென்னையை காக்கும் காளிகாம்பாள்

    சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.

    ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.

    1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.

    தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகிய பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.

    சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர். 

    சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.

    காளிகாம்பாள் கோவிலில் உள்ள சிவாஜி பற்றிய குறிப்பு

    இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.

    மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.

    சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.

    – பார்த்திபன், வரலாற்று ஆய்வாளர் (தினத்தந்தியில் வெளியான கட்டுரையில் இருந்து..)

    —————

    பார்த்திபன் – பத்திரிகையாளர், வரலாற்று ஆய்வாளர். சென்னை மாநகரம் பற்றி மூன்று புத்தகங்களை எழுதி இருக்கிறார். அந்தக்கால சென்னை பற்றி தினத்தந்தி நாளிதழில் 100 வாரங்கள் கட்டுரை எழுதியவர். இந்தியாவின் முக்கியமான மாநகரங்களில் ஒன்றான சென்னையைப் பற்றிய ஏராளமான தகவல்களை தெரிந்துவைத்திருப்பவர். அவற்றை சுவைபட எழுதவும் செய்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல்.

  • சென்னையை காக்கும் காளிகாம்பாள்

  • முதன்முதலில் ஸ்ரீராமஜெயம் எழுதியவர் யார்?

    முதன்முதலில் ஸ்ரீராமஜெயம் எழுதியவர் யார்? என்ற கேள்விக்கு உங்களில் பலர் சரியான பதிலை கணித்திருப்பீர்கள். ஆம், நீங்கள் நினைத்தது சரிதான். ராம பக்த ஆஞ்சநேயர் தான் அந்த புண்ணியத்தை தொடங்கி வைத்த புண்ணியவான்.

    ஸ்ரீராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் ஹனுமான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வரவில்லை. வெற்றிக் களிப்பில் சீதா தேவியின் முன் பணிந்து "அம்மா!" என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் ""ஸ்ரீராமஜெயம்'' என்று எழுதிக் காண்பித்தார். அந்த குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள்.

    இப்படித்தான் முதன்முதலில் "ஸ்ரீராமஜெயம்" மந்திரம் எழுதப்பட்டது. அன்று முதல் நாமஜெபம் என்ற பெயரில் ராமநாமத்தை பனை ஓலைகளில், காகிதத்தில் எழுதும் வழக்கம் உண்டானது. ஸ்ரீராமஜெயம் எழுதுவதோ, ராம நாமத்தை உச்சரிப்பதோ எவ்வளவு பெரிய பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும் என்று சொல்வர்.

  • சித்தர்கள் யார்?

    ‘சித்தர்கள்’ என்றால் மகாசக்தி படைத்த மனிதர்கள் என்பதுதான் பொதுவான எண்ணம். உண்மையில் யார் சித்தர்கள்? இன்றும் சித்தர்கள் இருக்கிறார்களா? ஆம் என்றால் எங்கு இருக்கிறார்கள்? அவர்களை நாம் பார்க்க முடியுமா? முடியும் என்றால் எப்படி பார்ப்பது? இப்படி அடுக்கடுக்காய் பல கேள்விகள் எழுகின்றன. 

    முதலில் சித்தர்கள் என்ற சொல்லுக்கான பொருளைத் தெரிந்துகொள்வோம். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே தேடுகிற அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். இருந்தாலும், வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் எனப்படுகிறார்கள். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள். அவர்கள் தூய்மையின் சிகரமாகவும் தெய்வீகத்தன்மையும் கொண்டவர்கள்.

    சித்தன் என்பவன் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்துக் கொண்டு அதன்படி வாழ்தலில் வெற்றிகண்டு சமத்துவத்தையும் சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவன் ஆவான். மூச்சை அடக்குதல் (பிராணாயாமம்), விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வென்று எந்தவித ஆசைகளும் இல்லாத நிலையை அடைதல், இறுதியாக மனதை அடக்குதல் என்பவையே அந்த மூவகைக் கட்டுப்பாடுகள். சித்தர்கள் எங்கிருந்து எதை உண்டாலும் எப்படித் தோற்றமளித்து எதைச் செய்தாலும் உலகியல் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனை ‘சிவம்’ ஆகிய பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லற வாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழ வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. “கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள். தெளிந்தவர்கள் சித்தர்கள்.”

    மனிதர்களிடத்தே நிலவும் சாதிவேற்றுமைகளையும் ஏற்றதாழ்வுகளையும் கடுமையாகச் சாடிப் புரட்சி செய்தவர்கள் சித்தர்கள். சித்தத்தில் சிவனைக்காணும் வரை உடலைக் காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் காயகல்பம் உண்டவர்கள். மேலும், ஏழைகளின் நோய்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள் எளிய மருந்துகளைக் கண்டறிந்து அவர்களின் துன்பம் தீர்த்தனர். சித்தர்களில் பலர் யோகப்பயிற்சியாலும் சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள். இவர்கள் மனோ சக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். அகண்ட அண்ட சராசர ரகசியங்களையும் அறிந்து அவற்றை வெளி உலகிற்கு அளித்தவர்கள்.

    சித்தர்கள் யோகசாதனத்தால் பெற்ற பயன்களை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தங்களுக்காக எதுவும் செய்து கொண்டதாக தெரியவில்லை. பதினெண் சித்தர்களுக்கு முன்னே நவநாத சித்தர்கள் என்ற ஆதி தமிழ்ச்சித்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும்வகையில் மிக மிக, எளிமையான இலக்கண நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓலைச்சுவடிகளில் நூல்களாக எழுதியுள்ளார்கள்.

    எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. அகத்தியர் என்ற பெயரில் மட்டும் 37 பேர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நம் தமிழ் மரபைப் சேர்ந்த அகத்தியர் திருக்குற்றால மலையில் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருந்து அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர். இவரது காலம் கி பி. 13 ஆம் நூற்றாண்டாகும். அகத்தியர் தமிழ்மொழி, தமிழ் இலக்கணங்களைப் பரமசிவனிடத்தில் இருந்தும், முருகப் பெருமானிடத்திலிருந்தும் கற்றுத்தமிழ் மொழியைத் தமிழ் நாட்டில் நன்கு வளர்த்தார். இவர் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் 3ம் மாதத்தில் பிறந்ததாகப் போகர் தமது 7000ஆம் நூலில் கூறுகிறார். அகத்தியர், திருமூலர், போகர் என பல சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து மக்களுக்கு நல்வழிகாட்டியிருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த கட்டுரைகளில் இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்கள் செய்த அற்புதங்கள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்..

    – தொடரும்