Blog

  • திருப்பதியில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்….

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைப்பாதை மார்க்கங்களுக்கு செல்ல தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ சமயத்தில் சுமார் 7 லட்சம் லட்டுகள் இருப்பில் வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல திருப்பதியில் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கருட சேவையின் போது மட்டும் கூடுதலாக 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏதுவாக 4 இடங்களில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 537 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆம்புலன்சுகள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா தொடர்பாக, பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஆலோசனைகளை வழங்க 1800-425-111111 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு….

    திருமலைக்கு செல்ல திருப்பதி மலைப்பாதை இன்று முதல் 12-ந் தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 3-ந் தேதி தொடங்க உள்ளது. அதற்காக திருமலையில் உள்ள மாட வீதிகள், முக்கிய வளைவுகள், சந்திப்புகளில் வண்ண மின்விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
    திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் 750 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் மலைபாதையில் நடந்து வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அக்டோபர் 1 முதல் வரும் 12-ந் தேதி வரை முதல், இரண்டாம் மலைப் பாதைகள் இரண்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையையொட்டி, வரும் 7,8-ந் தேதிகளில் இருசக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • ஐயப்ப பக்தர்களை கவுரவிக்க தேவசம் போர்டு முடிவு…..

    சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய 50 ஆண்டுகளாக வரும் பக்தர்களை கவுரவிக்க தேவசம் போர்டு முடிவுசெய்துள்ளது. 50 ஆண்டுகளாக சபரிமலை வருவோர் தங்களை பற்றிய விவரங்களை தேவசம் போர்டுக்கு பதிவு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக் மண்டல பூஜையின் போது தேவசம் போர்டு சார்பில் பொன்னாடை போர்த்தி சபரிமலை ஐயப்பன் உருவச்சிலை வழங்கி கவுரவிக்கப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் பிராயர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • சபரிமலை ஐயப்பன் விக்ரகத்துக்கு புதிய அஷ்டபந்தனம்….

    சபரிமலை ஐயப்பன் விக்ரகத்துக்கு அக்டோபர் மாதம் 22, 23-ந்தேதிகளில் புதிதாக அஷ்டபந்தனம் சாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.
    சமீபத்தில் சபரிமலை கோவிலை புனரமைப்பதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது சபரிமலை, மாளிகைபுரத்து அம்மன் கோவில்களில் சில பணிகளை செய்ய ஐயப்பனின் உத்தரவு கிடைத்தது.
    சுவாமி ஐயப்பன் விக்ரகம், மாளிகைபுரத்து அம்மன் விக்ரகம் ஆகியவற்றின் பீடத்தில் சாத்தப்பட்டுள்ள அஷ்ட பந்தனம் மூலிகையை மாற்றி புதியதாக அஷ்ட பந்தனம் சாத்த உத்தரவு கிடைத்தது.
    இதை தொடர்ந்து புதிய அஷ்ட பந்தனம் சாத்தும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 22, 23-ந்தேதிகளில் சபரிமலையிலும், மாளிகைபுரத்திலும் நடைபெற உள்ளது.

  • திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு சிறப்பு பேருந்துகள்….

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 11ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.
    பிரம்மோற்சவ விழாவுக்கு லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், இந்த நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
    பிரம்மோற்சவத்தின் சாதாரண நாட்களில் நாள்தோறும் 2,000 முறை திருப்பதி திருமலை இடையே பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும், தமிழக பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து 135 ஆந்திரா பஸ்கள், 135 தமிழக பஸ்கள் என மொத்தம் 270 பஸ்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி உள்ளிட்ட வழித்தடங்களில் திருப்பதிக்கு இயக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ….

    ராமேஸ்வரம் கோயில் உண்டியல் 55 லட்ச ரூபாய் காணிக்கையாக வசூலாகி உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
    கோயில் கிழக்கு திருக்கல்யாண மண்டபத்தில் இணை கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் கோயில் ஊழியர்கள், உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
    இதில் 55 லட்சத்து 62 ஆயிரத்து 71 ரூபாயும், தங்கம் 64 கிராம், வெள்ளி 3 கிலோ 750 கிராம் வசூலாகி இருந்தது.

  • கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா

    பிரசித்திப்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.
    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 7.45 மணிக்கு அம்பாள் கொலுமண்டபத்துக்கு எழுந்தருளல், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மீக உரை, இரவு 7.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக்கலைமான் வாகனத்தில் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.
    விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், ஆன்மீக உரை, அன்னதானம், பக்தி இன்னிசை, அம்மன் வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.

    10-ஆம் நாள் திருவிழாவான அக்டோபர் 11-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10.30 மணிக்கு தேவி அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல், காலை 10.30 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 1 மணிக்கு தேவி வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்குப் புறப்படுதல் ஆகியவை நடைபெறும். அப்போது கோயில் முன்வாயிலில் காவல்துறை சார்பில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை செய்யப்படும்.

  • திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் ….

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடப்பது வழக்கம்.
    இந்தத் தூய்மைப்பணி வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, உகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ்தானம் ஆகிய தினங்களை முன்னிட்டு விழா தொடங்கும், முதல் வார செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந்தநிலையில் அக்டோபர் 3–ந்தேதியில் இருந்து 11–ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    முன்னதாக அதிகாலை கோவிலில் பூஜைகள் முடிந்ததும், மூலவர் ஏழுமலையான் மற்றும் போக சீனிவாசமூர்த்தி உள்ளிட்ட உற்சவ மூர்த்தி விக்ரகங்களை அர்ச்சகர்கள் பட்டு வஸ்திரத்தால் போர்த்தினர்.

    அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் வைதீக பூஜைகள், காரிய கர்மங்கள், சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி கண்பிக்கப்பட்டது.