திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் ரூ. 25 கோடியில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பசுமை திட்டத்தின் அடிப்படையில் திருமலையை ரூ.25 கோடியில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் எந்தவித சிரமும் இன்றி தரிசனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், காவல் துறையினர், பக்தர்களின் துணையுடன் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடத்தப்பட்டது. ஆர்ஜித சேவை டிக்கெட்கள் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
Blog
-
துன்பங்களையும் நிவர்த்தி செய்யும் மொரட்டாண்டி சனி பகவான் !
உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் அமையபெற்றுள்ளது. இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரரைத் தரிசித்தால் துன்பங்கள் போகும். உலகிலேயே மிக உயரமான சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில்- நின்ற கோலத்தில் மிக கம்பீரமாகக் காணப்படுகிறார். “பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் இவர் உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கிறார். ஆக மங்களில் இவரது வாகனம் கழுகு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களையும் நிவர்த்தி செய்வார் என்பது நம்பிக்கை.
-
எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? சாஸ்திர விளக்கம்….
20ம் நூற்றாண்டில் எண்ணெய் தோய்த்து குளியல் என்பது கொஞ்சம் அரிதாக போய்விட்டது. ஆனால் இதனால் ஏற்படும் பலன்கள் ஏறாலம்…
ஆண்களுக்கான பலன்கள் ….
ஞாயிறு எண்ணைய் குளியல் ;- இருதயத்தில் தாபம் .
திங்கள் எண்ணெய் குளியல் ;-பொழிவு தரும் மேனி
செவ்வாய் எண்ணெய் குளியல் ;-அற்பாயுள்
புதன் எண்ணெய் குளியல் ;-செல்வநிலை மேலோங்கும்
வியாழன் எண்ணெய் குளியல் ;-தரித்திரம் தாண்டவம் ஆடும்
வெள்ளி எண்ணெய் குளியல் ;-ஆண்களுக்கு ஆபத்தை தரும்
சனி எண்ணெய் குளியல் ;-தீர்க்காயுள் தரும். எனவே தான் சனி நீராடு என்று சொல்லியிருக்கிறார்கள்.
பெண்களுக்கான பலன்களை பார்க்கலாம்…
செவ்வாய் எண்ணெய் குளியல் ;-பாக்ய விருத்தி தரும்
வெள்ளி எண்ணெய் குளியல் ;-செளபாக்கியவதி ஆக வாழ்வார்கள்
இவ்வாறாக ஆண் பெண் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் !!!!
“தசமி,பஞ்சமி ,திருதியை ,சப்தமி ,துவிதியை ஆகிய நாட்கள் சேர்ந்து வந்தால் சந்ததி விருத்தி இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் உள்ளது . உடல்நல குறை உள்ளோர்கள் மேற்படி திதி கலந்த சனிக்கிழமைகளில் (ஆண்கள் )எண்ணெய் குளியல் செய்ய ஆயுள் விருத்தி மற்றும் நோய் நிவர்த்தி உண்டாகும்.
பிரதமை திதி
சதுர்த்தி திதி
சஷ்டி திதி
நவமி திதி
சதுர்த்தசி திதி
அமாவாசை திதி
ஆகிய திதிகளில் எண்ணெய் குளியல்கள் செய்யின் ஆயுள் குறைவு ஏற்படும். புக்தி குறையும், உடல் வலிமை இழக்கும், செல்வநிலை நாசத்தை அடையும், தவிர்க்க முடியாமல் சாதகமான நாட்களில் இந்த திதிகள் கலந்து வந்தால் சிறிதளவு நெய் அல்லது தண்ணீர் கலந்து எண்ணெய் உடன் கலந்து தேய்க்கலாம். ஜென்ம ,அனுஜென்ம ,திரி ஜென்ம நட்சத்திரம் அமைந்த நாட்களில் மற்றும் தமிழ்மாத முதல் தேதி மற்றும் கேட்டை ,உத்தர ,திருவோணம் ,திருவாதிரை ,போன்ற நட்சத்திரம் அமைந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க செல்வநிலை நாசமும் ஆயுள் குறைவும் அமையும் ஆகவே இதை எல்லாம் தவிர்க்க வேண்டும். -
குழந்தைப்பேறு தரும் கல்யாண ரங்கநாத பெருமாள்…
நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருநகரி கிராமம் உள்ள கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 108 திவ்யதேசங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. மந்திர உபதேசம் பெற்ற திருமங்கை, அஞ்ஞானம் அழிந்து தத்துவ ஞானம் கைவரப்பெற்றார். இறைவன் மீது நான்கு வகை கவிகளையும் பாடினார். தொடர்ந்து இறைவனின் பல தலங்களுக்குச் சென்று பெருமாளை வணங்கி, மங்களாசாசனம் பாடியுள்ளார். இதன் பிறகு திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் என அழைக்கப்படுகிறார். திருநகரி கல்யாணரங்கநாதர் கோவிலில், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாதந்தோறும் கார்த்திகை நாளில் திருமங்கையாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அந்நாளில் திருமங்கையாழ்வாரை வழிபட்டால் கல்வி செல்வம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்பட சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும். இவரது சன்னிதியில் திருமங்கையாழ்வார் பூஜை செய்த ‘சிந்தனைக்கினியான் பெருமாள்’ தேவியர்களுடன் அருள்பாலிப்பது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 10 நாட்கள் திருமங்கை ஆழ்வார் கார்த்திகை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைதிறந்து இருக்கும். இந்த கோவில் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் புதுத்துறை மண்டபம் என்ற இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் திருநகரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
-
அர்த்தநாரீஸ்வரறை நாடினால் குடும்பத்தில் சிக்கல் தீரும்!
சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அர்த்தநாரீஸ்வரர் இத்திருக்கோவில். அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயருடன் மூலவராக எழுந்தருளியுள்ள இவரை வழிபட்டால் சிவனையும், சக்தியையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் மேலும் சிவனும் பெருமாளும் அருகருகே அமைந்து அருள்பாலிப்பது இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
தல வரலாறு
சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வசித்து வந்த ஒருவரின் தோட்டத்துக் குளத்தில் நீர் வற்றிய பொது இச்சிலைகள் கண்டறியப்பட்டது.அதன் பின் இச்சிலைகள் எல்லாம் ஒரு கிற்று கொட்டகையில் வைத்து மக்கள் வழிபடத் தொடங்கினார்.
நீண்ட காலமாக ஜலத்திலேய வாசம் செய்து வந்ததால் ,ஜலகண்டேஸ்வரர் என்று மற்றறொரு பெயரும் உள்ளது. இத்தல இறைவனை வணங்கினால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும்.
மூலவர் அர்த்தநாரீஸ்வரர் லிங்க திருமேனியராக வழிபடப்படுகிறார். இந்த ஆலய மூலவரான சிவ லிங்கத்தின் ஆவுடையார்,மூன்றரை அடிவிட்டம் என்பது ஆலயத்தின் மற்றொரு தனி சிறப்பாகும்.
லிங்கத் திருமேனியின் பின்புறம் கருவறைச் சுவற்றில் புடைப்புப் சிற்பமாக அர்த்தநாரீஸ்வரர் உருவம் உள்ளது. இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். சிறிய கருவறையைச் சுற்றி உள்ள தெற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய லட்சுமி நாராயணப் பெருமாள் சந்நிதியும், அவருக்கு எதிரே கருடனுக்கு சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் ற்கு நோக்கியதெ அம்பாள் சந்நிதியும், அருகில் நவக்கிரக சந்நிதியும் இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியின் பின்புறம் பைரவர் சந்நிதி உள்ளது.
இத்தலத்தில் உள்ள ஈசனையும் ,அம்பாளையும் வழிப்பட்டு வந்தால்,கணவன் மனைவிக்கு ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் விலகும். இது மட்டும் இன்றி திருமணப் பேறும் ,குழந்தை பேறும் அமையும் என்பதால் இத்தல இறைவனை வணங்கும் பக்தர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
-
இருளிலிருந்து வெளிச்சம் : மகிழ்ச்சி தரும் தீபாவளி
இருட்டு எப்போதுமே நாம் எல்லாருக்கும் பயம் தரும். வாழ்க்கை வெளிச்சமாக ஒளிமயமாக நம்முடைய இந்து தர்மம் பல வழிகளில் வழிகாட்டுகிறது. தர்மம் ஒளி என்றும், அதர்மம் இருட்டு என்பதுமே புராணம் காலம் தொட்டு சொல்லப்படும் செய்தி. பண்டிகைகள் , கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்கள் எல்லாவாற்றிலும் ஒரு பொருள் பொதிந்த அர்த்ததை நம் முன்னோர்கள் வழிகாட்டி சென்றிருக்கிறார்கள்.
புத்தம் புதிய உடைகள், விதவிதமான பலகாரங்கள், புதிய திரைப்படங்கள், தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகள் என நம்முடைய பண்டிகைகள் கால ஓட்டத்தில் சுருங்கி போய்விட்டது. இத்தருணத்தில் வெளிச்சம் மிகுந்த தீபாவளியின் புராண பின்னணி குறித்து அறிவோம்.
இந்தியா முழுவதிலுமுள்ள மக்கள், மொழி , ஜாதி , ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி தீபாவளி திருநாளை வெகு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அன்னை பவானியின் பூஜையாக மேற்கு வங்காளத்திலும், தாம்பூலத் திருநாளாக மகாராஷ்டிர மாநிலத்திலும் குஜராத்தில் குபேர பூஜையாக புதுக்கணக்குகளை தொடங்கும் திருநாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள், தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தங்கள் வீடுகளில் அழகியலுடன் நீண்ட வரிசைகளில் விளக்கேற்றிக் கொண்டாடுகிறார்கள்.
தீபாவளி புராண பின்னணி
நரகாசுரன் எனும் அரக்கனைக் கண்ணன் வதம் செய்ததை தான் தீபாவளியாக கொண்டாடி மகிழ்கிறோம். நரகாசுரன் என்ற கொடூர அரக்கன் தேவர்களையும் மனிதர்களையும் அதிக அளவில் துன்புறுத்தி வந்தான். அவனது ஆட்டம் கட்டுக்கடங்காமல் போன நிலையில் தேவர்களின் தலைவனான இந்திரன் , பகவான் கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டார்.
நரகாசுரனுடன் போர்புரிய சத்தியபாமாவுடன் புறப்பட்டார் கிருஷ்ணன் . இந்த போரில் சக்தியின் அவதாரமாகச் செயல்பட்டாள் சத்தியபாமா.
கிருஷ்ணன் சத்தியபாமா இருவராலும் வீழ்த்தப்பட்டான் நரகாசூரன். இந்த தீய சக்தி அழிந்த நாளையே மக்கள் தீபாவாளியாக கொண்டாட ஆரம்பித்தனர்.
எப்படி கொண்டாட வேண்டும் தீபாவளியை?
தீபாவளி அன்று விடியற்காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் என்ற புனித நீராடுதலை செய்ய வேண்டும். தீபாவளி திருநாளில் எண்ணெயில் லட்சுமியும், நம் வீட்டுத் தண்ணீரில் கங்கையும் பிரசன்னமாகின்றனர் என்பது ஐதிகம், வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோகூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

புனித நீராடிய பின்னர் புத்தாடை உடுத்தி இறைவனை வணங்கி, உற்றார், உறவினர், நண்பர்களுடன் நல்ல கருத்துக்கள் பகிர்ந்து கொள்வது நலம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்னை மகாலட்சுமியின் பேரருள் பொழிய இறைவனை மனதார வேண்டுவோம். தீபாவளி அன்று தொடங்கிய தீப ஒளி வரிசைகள் கார்த்திகை தீபம் வரை நமது அக புற இருளை போக்கி ஒளிமயமானதாக மாற்றுகிறது. இந்த நாட்களில் கிடைக்கப் பெறும் வெளிச்சத்தை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாத்திடுவோம்.
தீப மங்கள ஜோதி நமோ நம:
-
நீண்ட ஆயுளை தரும் திருக்கடையூர்…
மயிலாடு துறையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருக்கடையூர் சிவன் கோயில். ஈசன் தனது பக்தன் மார்க்கண்டேயனுக்கு அபயமளிக்க காலனை சம்ஹாரம் செய்து, கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ஸ்தலம். இங்கே வந்து இறைவனைத் தொழுதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். வயது முதிர்ந்தவர், உடல் நலம் குன்றியவர், அகால மரணம் ஏற்படும் நிலை, ஆயுள் பாதிப்பு உள்ளவர் நீண்ட ஆயுள பெற இங்கு ம்ருத்யுஞ்சய ஹோம்ம், ஆயுள் ஹோம்ம் செய்து கொள்ளலாம். தம்பதிகள் 59 வயது முடிந்து 60 வயது ஆரம்பிக்கும் போது ‘உக்ரரத’ சாந்தி பூஜையும், 60 வயது முடிந்து 61 வயது தொடங்கும் பொழுது சஷ்டி அப்த பூர்த்தியும், 69 வயது முடிந்து 70 வயது ஆரம்பிக்கும் போது ‘பீமரத சாந்தி’ பூஜையும், 79 வயது முடிந்து 80 வயது ஆரம்பிக்கும் போது ‘சதாபிஷேகமும்’ செய்து கொண்டால் பூரண ஆயுள் கிடைக்கும்.
-
திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம்
பண்ருட்டி திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் ஏகதின பிரம்மோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவதிகையில் ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை ஏகதின பிரம்மோத்ஸவ விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு சுப்ரபாரதம், 6 மணிக்கு தோமாலை சேவை, தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் அம்ச வாகனத்திலும், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் யானை வாகன சேவையும், 4 மணிக்கு சூர்ணோத்ஸவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை திருத்தேர் புறப்பாடு, தீர்த்தவாரியும் 7.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டுஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் ஆணையர் பா.ஜெயசித்ரா, செயல் அலுவலர் க.நாகராஜன், சன்னதி அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார், ஸ்ரீதர் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்தனர்.
-
தேவேந்திரன் போற்றிய மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம்
தேவர்கள் தாங்கள் இழந்த செல்வங்களையும், அமிர்தத்தையும் பெற வேண்டி பாற்கடலைக் கடைவதென்ற முடிவுக்கு வந்தனர் .தனியாக பாற்கடலைக் கடைவது என்பது தேவர்களால் ஆகாத செயல் என்றும், அசுரர்களது வலிமையையும் இதற்காக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று யோசனை கூறுகிறார் பிரம்மா. அதன்படி தேவ-அசுரர்கள் இணைந்து, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகியை கயிறாக்கி ,மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து மத்தைத் தாங்க ,பாற்கடலை கடைந்தார்கள். இவ்வாறு கடைந்த பாற்கடலில் இருந்து முதலில் உச்சைஸரவஸ் என்ற விசேஷக் குதிரை வந்தது,பிறகு காமதேனு, கற்பக விருக்ஷம், ஐராவதம், சுரா பானம், சந்திரன் போன்றவை தோன்றியது. இவற்றிற்கு பிறகு கண்களை கூசச் செய்யக்கூடிய பிரகாசத்துடன், யுவதி தோன்றினாள். கைகளில் தாமரையுடன் தோன்றிய அவள் அங்கிருந்த பரந்தாமனருகில் சென்று தன்னை அவனுடன் இணைத்துக் கொண்டாள்.
இவ்வாறு மஹாலக்ஷ்மி வந்த பிறகு தன்வந்திரி தேஜோ ரூபமான அம்ருத கலசத்தை கையில் ஏந்தி பாற்கடலில் இருந்து வெளி வந்தார். தேவர்கள் அம்ருதம் கிடைத்தபின் எல்லாப் போர்களிலும் அசுரர்களை வென்றதால்,தேவர்கள் தங்கள் வெற்றிக்கு காரணம் மஹா-லக்ஷ்மி என்று உணர்ந்து அவளைப் பணிந்து போற்றுகிறார்கள். தேவேந்திரன் போற்றிய மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரத்தை வெள்ளிகிழமையான இன்று பாராயணம் செய்து மஹாலக்ஷ்மியை வணங்குவோம்.
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாமாயையாக ஸ்ரீ பீடத்தில் வாஸம் செய்பவளும், தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், சங்கு,சக்ரம், கதை போன்றவற்றை கையில் தாங்கியவளுமான மஹாலக்ஷ்மி தங்களுக்கு நமஸ்காரம்.
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
கருடவாஹனத்தில் அமர்ந்தவளும், கோலாஸுரனுக்குப் பயத்தைக் கொடுப்பவளும்,அனைத்து பாபத்தையும் போக்குபவளுமான மஹாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
அனைத்தையும் அறிந்தவளும், எல்லோருக்கும் விரும்பிய வரங்களைத்தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாஹாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே மஹாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பல விதமான ஸித்திகளையும், நல்ல புத்தியைக் கொடுப்பவளும், தேவியும், போகம்,மோக்ஷம் ஆகியவற்றைத் தருபவளும் மந்த்ர வடிவானவளும், எப்போதும் பிரகாசிக்கின்றவளுமான மஹாலக்ஷ்மித் தாயே!, உங்களுக்கு நமஸ்காரம்.
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆதியும், அந்தமும் இல்லாதவளும், முழுமுதற் சக்தியும், மஹேஸ்வரியும்,யோகத்தினாலுண்டானவளும்,யோகத்திற்கு பலமுமான அன்னை மஹாலக்ஷ்மியே உங்களுக்கு நமஸ்காரம்.
ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூலமாகவும், ஸுக்ஷ்மமாகவும், மிக பயங்கரமாகவும், மஹா சக்தியாகவும், விசாலமான வயிற்றையுடையவளும்,மஹா-பாபங்களையும் போக்குபவளுமான தேவியே, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸனத்தில் அமர்ந்த தேவி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணியும், பரமேஸ்வரியும், உலகிற்குத் தாயுமான மஹாலக்ஷ்மி தேவியே உங்களுக்கு நமஸ்காரம்.
ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
வெண்மையான ஆடையுடுத்திக் கொண்ட தேவி, பற்பல விதங்களில் அலங்கரிக்கப்படவளும்,உலகனைத்தும் உள்ளவளும், உலகிற்குத் தாயுமான தாயே!,மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
எவன் பக்தியுடன் மஹாலக்ஷ்மி அஷ்டகம் என்னும் இந்த ஸ்தோத்திரத்தைப் படிக்கிறானோ!,அவன் அனைத்து ஸித்தியையும், ராஜ்யத்தையும் அடைவான்.
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:
இந்த ஸ்தோத்ரத்தை தினம் ஒரு முறை சொல்வதால் மஹாபாபங்களும் விலகும். ஒரு நாளில் இரண்டு முறை சொல்வதால் தனம், தான்யம் முதலியவை உண்டாகும்.
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
இந்த ஸ்தோத்ரத்தை தினசரி காலை, மதியம், மாலை என மூன்று காலமும் படித்தால் மிகப் பெரிய சத்ருக்களையும் வெல்லலாம். எப்போதும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸந்தோஷத்தோடு,கேட்கும் வரங்களையும் மங்களங்களையும் தருபவளாக இருப்பாள்.
தாயார் திருவடிகளே சரணம் …..
-
முன்ஜென்ம பாவங்கள் தீர்க்கும் அருள்மிகு நவபாஷாணம் தலம்
முன்ஜென்ம பாவங்களை தீர்க்கும் தலமாக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள நவபாஷாணத் தலம் உள்ளது. இராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டதை அறிந்து அவரை மீட்க ஸ்ரீ ராம பிரான் தென் திசை நோக்கி வருகிறார். வேத சாஸ்திரங்களில் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பு பிள்ளையார் பூஜை,நவகிரக பூஜை செய்வது வழக்கம்.அதனால் ஸ்ரீ ராமரும் உப்பூர் விநாயகரை பூஜித்த பின்பு இத்தலத்தில் நவகிரகங்களை 9 பிடி மணல் கலவையால் பிரதிஷ்டை செய்கிறார்.அவ்வமயம் கடல் கொந்தளிப்பு ஏற்பட தமது திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதி அடைந்ததாக ஐதீகம்.ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் நவ பாஷாணமாக அமைந்து இன்று அருள் தருகின்றனர். முன்ஜென்ம பாவங்கள் தீர,பிதுர்கடன் கழிக்க தர்ப்பணம் ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம்.,நவகிரக தோசங்கள் விலக இங்கு வழிபடலாம். இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள்,கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம். நாம் முற்பிறவியில் செய்த கர்மாவின் பயனாக மனிதர்களாகப் பிறந்து நாம் செய்த பாவ புண்ணியகளின் அடிப்படையில் நம்மை வழிநடத்தி செல்வது நவகிரகங்களேயாகும்.இத் தலத்தில் உள்ள நவகிரகங்களை 9 நவ தானியங்கள் வைத்து இங்குள்ள நவகிரகங்களை வழிபட்டால் வணங்கினால் சகல பலன்களும் கிடைக்கும். நவதானியங்கள் படைத்தல், நவகிரக வலம், தானம் செய்தல், தோச பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும்.