ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒரே நேரத்தில் 6 தெய்வங்கள் ஒரு சேர காட்சியளித்த நிகழ்வை திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இது போன்று ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே 6 தெய்வங்கள் ஒருசேர காட்சியளிப்பர். தெலுங்கு வருட பிறப்பு, கவுசிக ஏகாதசி, தீபாவளி பண்டிகை ஆகிய 3 நாட்களில் மட்டும், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் ஆகியோர் சேர்ந்து ஒரே இடத்தில் காட்சியளிப்பது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு, ஆண்டாள் கோயிலில் அனைத்து தெய்வங்களும் ஒரு சேர காட்சியளித்தனர். முன்னதாக ஆண்டாள் கோயிலுக்கு மேளதாளம் முழங்க பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் பெரிய பெருமாள் சன்னதியிலிருந்து அழைத்து வரப்பட்டனர். கோயிலில் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. பின் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஆண்டிற்கு 3 முறை மட்டுமே இந்த நிகழ்வு நடக்கும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கோயிலில் திரண்டு தரிசனம் செய்தனர்.
Blog
-
தீப ஒளியில் ஜொலித்த அயோத்தி!
அயோத்தியில் தீபமேற்றி உலக சாதனை!
தீபாவளியை ஒட்டி,உத்தர பிரதேச மாநிலம்,அயோத்தியில் உள்ள சரயு நதி ஆர்த்தி விழாவில், 1. 87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு,புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
தீபங்களின் திருவிழா என்று சொலப்படும் தீபாவளி அன்று தான், 14 வருடங்கள் வனவாசம் மேற்கொண்ட ராமபிரான்,அயோத்தி மாநகருக்குத் திரும்பினார் என்கிறது ராமாயணம். அந்த நாளில் நகர மக்கள் தங்கள் வாழ்வில் வெளிச்சம் வந்து விட்டதாக கூறி, விளக்குகளை ஏற்றி வைத்து, ராமபிரானை பிரம்மாண்டமாக வரவேற்றனராம். அதனை நினைவூட்டும் வகையில் ,தீபாவளியின் பொது அயோத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
தீபாவளியன்று மாலை,அயோத்தில் உள்ள சரயு நதி ஆர்த்தி விழாவில்,அமைச்சர்கள் புடை சூழ, முதல்வர் யோகி ஆதித்யாநாத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் , அம்மாநில கவர்னர், ராம் நாயக்கும் பங்கேற்றார்.
ராமன்,சீதை,லட்சுமணன் வேடமணிந்தவர்களுக்கு ,முதல்வர் யோகி மற்றும் கவர்னர்,மாலை அணிவித்து,திலகமிட்டு ஆர்த்தி எடுத்து வரவேற்கின்றனர். பின், ராமகதா பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் உரையாற்றினர். ஆர்த்தி விழாவுக்காக சரயு நதிக்கரை முழுவதும், 14 ஆயிரம் லிட்டர் எண்ணெய் மூலம், 1.87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
தீபமேற்றும் விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொது மக்களும் மற்றும் மாணவர்கள் பங்கேற்றினர். விழாவின் போது, மிகப்பெரிய விளக்கும் ஏற்றப்பட்டது. இந்த தீபமேற்றும் விழா ,கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன் 2016 ல் பாபா ராம் ரஹீம் பெயரில் பதிவான உலக சாதனை நிகழ்ச்சியில், 1.50 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது.
தீபாவளியன்று தீப ஒளியில் ஜொலித்த அயோத்தி பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளித்தது.
-
நாக தோஷம் தீர்க்க சுப்பிரமணியர் கோவிலுக்கு செல்க!
ராமபிரானால் நிறுவிய சுப்பிரமணியர் ஆலயம் கேரளாவில் கண்ணூர் நகரிலிருந்து கூத்தம்பாரா செல்லும் வழியில் 14 கிலோமீட்டர் தொலைவில் பேரளச்சேரி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.
நாக தோஷம் நிவர்த்தி தர வல்ல கோவில் இதுவாகும். இக் கோவிலில் உள்ள பாம்பு தெய்வங்களுக்கு முட்டையை படைத்து வழிபடு வார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்துக் கொண்டு தங்களுடைய தோஷத்தை போக்கி வளமான வாழ்க்கையை வழங்கும் படி வேண்டிச் செல்கின்றனர்.
தல வரலாறு
படைப்புக் கடவுளான பிரம்மனுக்குத் தன்னைத் தவிர வேறு எவராலும் படைப்புத் தொழிலைச் சிறப்பாக செய்ய முடியாது என்கிற கர்வம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தன்னுடைய படைப்புத் தொழிலின் பெருமைகளைச் பற்றிச் சிவபெருமானிடம் சொல்லி,அவரது பாராட்டுகளைப் பெற்று செல்லாம் என நினைத்து கயிலாய மலைக்கு வந்தார்.
அவர் வந்த வேளையில்,இறைவன் சிவபெருமான் தியானத்தில் இருந்தார். அதனால் ,கயிலாய மலையில் இருந்த விநாயகர்,முருகன்,நந்தி,சிவகணங்கள்,முனிவர்கள் என்று அனைவரும் வெளியில் காத்திருந்தனர்.அங்கிருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்திய பிரம்மன். சிறுவனாக இருந்த முருகனுக்கு மட்டும் மரியாதை செலுத்தவில்லை.
இதனால் கோபத்தில் இருந்த முருகர் பிரம்மனிடம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று கேட்டார்.
அந்த கேள்விக்கு பிரம்மனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார்.உடனே, ’பிரணவத்தின் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்வது மட்டுமில்லாமல், அதை நினைத்துப் பெருமை கொள்கிறாயா?’ என்று சொல்லியபடி அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.
தியானத்தில் இருந்த எழுந்த சிவ பெருமான்,பிரம்மனை முருகன் சிறை வைத்திருப்பதை அறிந்த அங்கே வந்தார் அவர் முருகனிடம் பிரம்மனை விடுவிக்கும் படி வேண்டினார்.
தனது தந்தையே நேரில் வந்து வேண்டியதால் முருகனும் முருகன் பிரம்மனை விடுவித்தார். அதன் பின்னர் சிவ பெருமான், பிரணவத்தின் பொருள் உனக்கு தெரியுமா என முருகனிடம் கேட்டார். நன்றாக தெரியும் என்றார் முருகர். அப்பொருளை எனக்குச் சொல்லும் படி இறைவன் கேட்டார். உரிய முறையில் கேட்டால் உங்களுக்கு விளக்கமாகச் சொல்வேன் என்றார் முருகர். இதையடுத்து சிவபெருமான் முருகன் முன்பாகச் சீடனாக அமர்ந்து ,பிரணவம் குறித்து விளக்கம் கேட்டார். முருகனும் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தின் முழுப் பொருளையும் விளக்கினார். அன்று முதல் ,சுவாமியாகிய சிவ பெருமானுக்கு முருகன் குருநாதனாக ஆனார்.அதனால் முருகன்,சுவாமிநாதன் என்றும்,பரமகுரு என்றும் தகப்பன்சாமி என்றும் பல பெயர்களால் போற்றப்பட்டார். இந்த கதை நாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.
முருகன் படைப்புக் கடவுளைச் சிறை வைத்தால் ,பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. அதனால் முருகனுக்கு ஒருவரின் தொழிலைச் செய்ய விடாமல் தடுத்த பாவம் வந்து சேர்ந்தது. அதனால் அந்த பாவத்திலிருந்து விடுபதுவதற்காகத் தந்தை சிவபெருமானின் அறிவுறுத்தலின் படி, நாகப்பாம்பாக உருவம் கொண்டு பூமியில் தனிமைபடுத்தப்பட்டீருந்த கிணறு ஒன்றில் வாழ்ந்து வந்தார். அவரைச் சூரிய வெப்பம் ,மழை ஆகியவற்றிலுருந்து பாதுகாப்பதற்காக பல பாம்புகள் அவருக்குக் குடையாக நின்று அவரை காத்துக் கொண்டிருந்தன.
தனது மகனின் நிலையை நினைத்து வருந்திய பார்வதி தேவி,சிவ பெருமானிடம்,முருகனை நாகப்பாம்பு உருவிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டார்.சிவ பெருமான் சொன்ன வழி முறைகளின் படி, பார்வதி தேவி பதினெட்டு சஷ்டி விரதங்களை மேற்கொண்டு,கிணற்றில் பாம்பு வடிவிலிருந்த முருகனைத் தொட்டதும் முருகன் உண்மையான தோற்றத்தைப் பெற்றார்.
சீதையை தேடி இந்த பகுதிக்கு வந்தார் ராமபிரான். அந்த இடம் சுப்பிரமணியர் கோவில் இருக்க வேண்டிய இடம் என்பதை உணர்ந்தார். அங்கு கோவில் அமைக்க திட்ட மிட்ட ராமர்,அனுமனை இமைய மலைக்கு சென்று சுப்பிரமணியர் சிலையை செய்து கொண்டு வரும் படி அனுப்பினார். அனுமன் சிலையை கொண்டு வர தாமதம் ஆனாதால்,ராமர் தன் கையில் அணிந்திருந்த வளையல் ஒன்றினை எடுத்துக் கோவில் கருவறையில் சிலையாக நிறுவிக் கும்பாபிஷேகம் நடத்தி முடித்து விட்டார். அதன் பின் அனுமன் தான் கொண்டு வந்த சுப்பிரமணியர் சிலையை அருகில் உள்ள இடத்தில் நிறுவி கும்பாபிஷேகம் நடத்தினார்.
இங்கு சுப்பிரமணியர் நாக வடிவில் இருந்ததால் இக்கோவிலில் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் ஆன பாம்பு சிலைகளே முதன்மைக் கடவுளாக இருக்கின்றன. கோவில் வளாகத்தில் பல இடங்களில் பாம்புகளின் கற்சிலைகளும் வைக்கப்பட்டிருகின்றன.
இக் கோவிலில் உள்ள பாம்பு தெய்வங்களுக்கு முட்டையை படைத்து வழிபடுவர்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்துக் கொண்டு தங்களுடைய தோஷத்தை போக்கி வளமான வாழ்க்கையை வழங்கும் படி வேண்டிச் செல்கின்றனர்.
கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் நாகப்பாம்பு வடிவத்தில் வாழ்ந்த கிணறு என்று கருதப்படும் மிகப்பெரிய படிக்கிணறு இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படிகிணற்றைப் போல மிகபெரியதாகவும், அந்தக் கட்டுமானத்தைப் போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும். இந்த கிணறு தென்னிந்தியாவின் மிகப்பெரிய படிக்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.
-
கந்த சஷ்டி பழமுதிர்சோலையில் லட்சார்ச்சனை…
அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும். அங்கே மலைமீது பழமுதிர்சோலை மலைக்கிழவோனாக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். திருச்செந்தூரில் மருமகனாகிய முருகனின் தயவில் மாமனாகிய திருமாலின் கோயில் அமைந்துள்ளது. அதற்கு நேர்மாறாக, இங்கே பழமுதிர்சோலையில் மாமன் தயவில் மருமகன் கோயில் கொண்டுள்ளார் என்பார்கள். சோலைமலை, திருமாலிருஞ்சோலை மலை, திருமாலிருங்குன்றம் என்றும் இந்த மலைக்குப் பெயர்கள் உண்டு. பரிபாடல் இதன் புகழைப் பாடுகிறது. அழகர் கோயில் மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது. இதை ‘நூபுர கங்கை’ என்றும் சொல்வர். இதற்குப் போகும் வழியில், முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர். அதுவே பழமுதிர்சோலை மலையாகிய ஆறாவது படைவீடு ஆயிற்று. இமயன் இத்தலத்தில் இடபமாகிய தரும வடிவுடன் தவமியற்றி, தன் பெயரால் இம்மலை விளங்கவேண்டுமென இறைஞ்சி இறைவனருள் பெற்றதால் இம்மலை இடபகிரி என்றும் அமைவதாயிற்று.வேல் மூலவராக உள்ள முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு, இருபுறமும் வள்ளி, தெய்வகுஞ்சரி விளங்க நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். கல்லால் ஆகிய வேலுக்கு தனிச்சிறப்பு உள்ளது. இத்தலத்தின் தீர்த்தமாக திருச்சிலம்பாறு என்ற சுனை உள்ளது. இது திருமாலின் திருச்சிலம்பிலிருந்து உற்பத்தியாகி வருவதாகக் கூறுவர். இச்சுனை மலை உச்சியிலிருந்து வரும்போது சூரிய ஒளியால் பலவிதங்களில் ஒளிரும். நவரத்தின ஒளியும் இதில் தெரியும். முருகன் எழுந்தருளியுள்ள தலங்களில் எல்லாம் ‘சரவணப் பொய்கை’ இருக்கும். அந்த வகையில் இங்கே சரவணம் என்ற பொய்கை இருந்ததென்று தெரிய வருவதால், முருகனின் திருக்கோயிலும் இருந்திருக்க வேண்டும் என்று தெளியலாம்.
‘ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
ஆறமர லந்தலம்பு துறைசேர…
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்துகந்த பெருமாளே…’
என்று நூபுரகங்கையையும் சோலை மலையையும் இணைத்து முருகனைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.
தினமும் காலை 11 மணிக்கு மட்டுமே ஒருகால வழிபாடு நடைபெறுகிறது. ஆனால், காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். தீபாராதனை, அர்ச்சனை முதலியவற்றை அடியார்களே செய்யலாம். கந்தசஷ்டி விழா சிறப்புடையது. அப்போது லட்சார்ச்சனை நிகழ்கிறது. -
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது…
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சி, தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. 2ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.
-
தீபாவளி திருநாளில் மீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் காலை, மாலை இருவேளைகளிலும் மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்தப்பட்டது. சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப் பட்டையும், சாத்துப்படியானது. தீபாவளியையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 20ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடையும். வரும் 26ஆம் தேதி காலை 7 மணி முதல் முத்துகுமாரசுவாமி வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகும். சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் மற்றும் சண்முகார்ச்சனையும் நடைபெறும். வரும் 30ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை சந்திரசேகரர்சுவாமி சன்னதி 2 ஆம் பிரகாரம் சுற்றி சேர்த்தியாவார். நவம்பர் 3 ஆம் தேதி ஐப்பசி சுவாமிக்கு அன்னாபிஷேகம் உச்சிக்கால பூஜையின்போது நடைபெறும்.
-
தீபாவளி நோன்பு…
பண்டைய காலம் முதல் தீபாவளி நோன்பு மற்றும் அமாவாசை நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நோன்பு மூலம் குடும்பம் வளம் பெறும் என்பதை ஐதீகமாக கருதி பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். நோன்பு எடுக்கும் குடும்ப பெண்கள் அதிகாலையிலேயே வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து விரதத்தை தொடங்குவார்கள். மாலையில் அதிரசம் தயார் செய்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். அதன் பின்னர் வீட்டில் சாமிக்கு படையலிட்டு விரதத்தை முடிப்பார்கள். அது வரையில் உணவு எதுவும் சாப்பிட மாட்டார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சாமிக்கு படையலிட அதிரசம் தயார் செய்வதற்கு என்று புதிய விறகு அடுப்பு, சட்டி, பானை என அனைத்தும் புதிதாகவே பயன்படுத்துவார்கள். மேலும் கோவிலுக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பூஜை பொருட்கள் வாங்க செல்லும் போது குளித்து முடித்து சுத்தமாக சென்று பூஜை பொருட்களை வாங்கி வருவார்கள். இந்த நோன்பு பண்டிகைக்காக பிரத்யேகமாக புதுவை பெரிய மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜை பொருட்கள் விற்கப்படும். குறிப்பாக நோன்பு பண்டிகைக்காக வில்வ பூ அதிகம் விற்பனை செய்யப்படும். மேலும் பல வண்ணங்களில் நோன்பு கயிறு விற்கப்படும். அவரவர்கள் குல மரபுப்படி கறுப்பு இல்லாத நோன்பு கயிறு, சுங்கு வைத்த நோன்பு கயிறு, மணி வைத்த நோன்பு கயிறு என பல விதங்களில் விற்கப்படும். அதுபோல் எண்ணிக்கை அடிப்படையிலும் பூஜை பொருட்களை வாங்கி பூஜை செய்வார்கள். மேலும் காய்கறி வகைகளையும் எண்ணிக்கை அடிப்படையிலேயே வாங்கி சமையல் செய்வார்கள். அதிரசம் செய்ய முடியாதவர்கள் பூஜை பொருட்களுடன் வாழைப் பழங்களை வைத்து வழிபடுவார்கள்.
-
உலகின் மிகப்பெரிய ஆலயம் – 20
புனோம் பென் தேசிய அரும்பொருளகத்தில், உலோகத் திருமேனிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, கிடந்த கோல விஷ்ணுவைக் கடந்து கல் சிற்பப் பகுதிக்கு நகர்ந்தோம். விதவிதமான முகலிங்கங்கள் இருந்தன அங்கே. பேரழகுடைய புத்தர் சிலைகள் நின்ற கோலத்தில் இருந்தன இந்தப் பகுதியில். அப்படி ஒரு வழவழப்பை எப்படித்தான் உருவாக்கினார்களோ அந்தக் கல்லில். சோழர் காலச் சிற்பங்கள் அளவுக்கு வேலைப்பாடு மிக்க சிலைகள் இங்கே இல்லைதான். ஆனாலும் இங்குள்ள சிலைகள் மாறுபட்ட அழகோடு இருந்தன. இங்குள்ள கற்சிலைகளில் முக்கியமானது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டுக் கையுள்ள பெரிய நின்ற கோல விஷ்ணு சிலை. கெமர் சிற்பங்களில் இதுவரை கிடைத்துள்ள சிற்பங்களில் இதுவே ஆகப் பழமையானது என்கிறது குறிப்பு. அதன் பக்கத்திலுள்ள ராமர், பலராமர் சிலைகளும் அற்புதமானவை. அசப்பில், எகிப்திய வாயில் காவலர்கள் போல் தோற்றம் தரும் 2.70 மீட்டர் உயரமுள்ள ஆஜானுபாகுவான சிலை விஷ்ணுவுடையது.
இடுப்பிலிருந்து முழங்கால் வரை காட்டப்பட்டுள்ள ஆடைதான் இந்தச் சிலையின் உன்னதம். வரி வரியாக, மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு வலப்பக்கத்தில் வில்லுடன் இராமனின் திருவுரு. இடப்பக்கத்தில் ஏர்க் கலப்பையுடன் இருப்பதால் பலராமராக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். விஷ்ணுவின் எட்டுக் கைகளில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றில் வித்தியாசமான படைக்கலங்களை ஏந்தியிருக்கிறார். வலக் கைகளில் மேலிருந்து கீழாக, அனல், சிறுதடி, உரிக்கப்பட்ட மான்தோல், வளைந்த பெரியதடி ஆகியவை உள்ளன.
இடக் கைகளில், மேலே இரண்டில் இருப்பது தெரியவில்லை. உடைந்துவிட்டன. மற்ற இரண்டில் ஒன்றில் மின்னற்படையும் மூக்குள்ள தண்ணீர்க் குடுவையும் உள்ளன. அமுத கலசமோ ?
இடையின் நடுவே ஆடை முடிச்சிடப்பட்டு தார்பாய்ச்சிக் கட்டப்பட்டுள்ளது. வலப்புறமுள்ள இராமனின் இடக்கை மட்டும் வில்லேந்தியவாறு உள்ளது. இராமனுக்கு வலக்கை இல்லை. பின்னமாகிவிட்டது. இடப்புறமுள்ள பலராமருக்கு இடக்கையில் கலப்பை காணப்படுகிறது. வலக்கை உடைந்து விட்டது. விஷ்ணுவைக் காட்டிலும் இராமனும் பலராமனும் பேரழகோடு திகழ்கின்றனர். இருவருக்கும் ஒரே மாதிரியான அழகு கொஞ்சும் அரையாடை. வழவழப்பான திருமேனிகள் மூன்றும். இராமன், பலராமன் முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இந்தப் பகுதியிலுள்ள இன்னொரு வித்தியாசமான சிற்பம் அன்னத்தின் மேலமர்ந்த வருணனின் சிலை. நான்கு புறமும் தலையைத் தூக்கிய தனித் தனி அன்னங்களுக்கு மேல் ஒரு காலை மடித்து ஒரு காலை உயர்த்தி மரபார்ந்த ஜாவானிய பாணியில் உட்கார்ந்திருக்கிறார் வருணன். நான்கு அன்னங்களும் பத்மபீடத்தின் மேல் நிற்கின்றன. மெல்லிய புன்னகையோடு தென்படும் வருணனின் கைகள் உடைந்துள்ளன. இடக் கையைத் தொடைமேல் வைத்திருக்கிறார். வலக்கையில் ஏதோ வைத்திருக்கிறார். தலைப்பாகை போன்ற அலங்கார மகுடம். பூனைமீசை தெரிகிறது. வடிந்த காதுகள். திறந்த மார்பில் அணிகலன்கள் ஏதுமில்லை. இடையாடை விசிறி போல் மடிப்புகளோடு காட்டப்பட்டுள்ளது. அன்னங்கள் நான்கும் இந்தச் சிலையில் அபாரம். விரிந்த சிறகுகளின் வேலைப்பாடும் அவற்றுக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆரங்களும் சிற்பியின் மேதமைக்கு நல்ல சான்று.
ஏழாம் ஜெயவர்மனின் உருவம் எனக் கருதப்படும் சிலையொன்றும் இந்தப் பகுதியில் உள்ளது. ஆய்வாளர்களுக்கு இடையே அதுகுறித்துக் கருத்து வேறுபாடு நிலவினாலும் பல்வேறு ஆய்வுகள் தரும் குறிப்பின்படி பார்க்கும்போது இது ஜெயவர்மனின் உருவச் சிலையாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறது கையேடு. கைகள் இரண்டும் உடைந்துள்ளன. காலை மடித்து அமர்ந்தகோலம். அரைக் கண் மூடிய தியான நிலை. திறந்த மார்பு. அணிகலன் இல்லை. வடிந்த காதுகள். சாந்தமான முகம்.
காளை மேல் அமர்ந்த சிவனும் உமையும் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளனர். கெமர் எழுத்தில் எழுதப்பட்ட ஒரு பெரிய செப்பேடு போன்ற கல்வெட்டின் நடுவே ரிஷபத்தில் சிவன் மட்டும் அமர்ந்திருக்கிறார். அதன் இரண்டு பக்கங்களிலும் கருடன் மேல் அமர்ந்த விஷ்ணுவும் நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர்.
ஆலய நிலைவாசல்படி மேல் வரும் கிடைக்கல் (Lintel) அலங்கார முகப்புகள் பல இங்கே உள்ளன. எல்லாமே புடைப்புச் சிற்பங்கள். அவற்றுள் முக்கியமானது, பீமனும் துரியோதனனும் சண்டையிடும் காட்சி. பத்தாம் நூற்றாண்டுச் சிற்பமான இது முக்கோண வடிவமான மகர தோரணத்துக்குள் செதுக்கப்பட்டுள்ளது.
மகரங்கள் இரண்டும் ஐந்து தலை நாகங்களை விழுங்குவது போல் உள்ளன. இடப் பக்கத்திலுள்ள துரியோதனன் ஒரு தடியை வைத்திருக்கிறான். அவனுக்குப் பின்னே கிருஷ்ணனும் பலராமனும் ஏர்க் கலப்பையோடு காட்டப்பட்டுள்ளனர். எதிரே ஆகாயத்தில் பறந்தவாறு பீமன். பீமனுக்குக் கீழ் பாண்டவர்களில் நால்வர் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கிருஷ்ணனும் பலராமனும் ஏன் துரியோதனன் பக்கம் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. கம்போடிய மகாபாரதம் மாறுபட்டதோ? இந்தக் காட்சிக்கு மேலே இருவர் பறந்தவாறு சண்டையிடும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. நுணுக்கமான வேலைப்பாடுள்ள சிற்பம்.
இதேபோல், கிடைக்கல் அலங்கார வேலைப்பாடு கொண்ட மற்றொரு சிற்பம், மாரனின் தோல்வி. வழக்கமான மகர தோரண அலங்காரம், ஐந்து தலை நாகமுகப்போடு முடிகிறது. அதற்குள் மூன்று நிலைகளில் சிற்பங்கள். ஆக மேலே, அருளல் முத்திரையோடு புத்தர். வழக்கமான பூமி ஸ்பர்ச முத்திரை இங்கில்லை. நடுவில் உள்ள நிலையில், நான்கு பேர் மாரனை வெற்றிகொண்ட போதிசத்துவரை ஆசிர்வதிக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர். அதற்குக் கீழே மாரனின் படைகள். முக்கியத் தளபதிகள் இருபக்கத்திலும் யானைமேல் அம்பாரியிலிருந்து பத்துக் கைகளோடு போரிடுகின்றனர். குதிரை வீரர்களும் உள்ளனர். யானைகளுக்கு நடுவே, பூமித் தாய், இளம் ஆடவரின் வடிவில் தலை முடியைத் திருகிக் கொள்வது போல் காட்டப்பட்டுள்ளது. அதற்கும் கீழே செதுக்கி முடிக்கப்படாத பகுதியில், மாரனின் படைகள் சமுத்திரத்திற்குள் மூழ்குவதுபோல் உள்ளது.
இந்த வருணனை எல்லாம் அரும்பொருளகக் கையேட்டில் உள்ளது. பௌத்த மரபும் புராணமும் தெரிந்திருந்தால், கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம் சிற்பங்களை இன்னும் நன்கு ரசிக்கலாம். இந்தச் சிற்பத்தில் மாரனின் படைகள் அணிந்திருக்கும் நகைகள், யானையின் உணர்ச்சி, வீரர்களின் முகபாவம், ஆயுதங்கள் எல்லாமே சிறப்பாக உள்ளன. யானைகளின் சினம், விறைத்த வாலில் காட்டப்பட்டுள்ளது.
கல் சிற்பக் காட்சிக் கூடத்திலிருந்து அடுத்து வடபுறத்திலுள்ள காட்சிக்கூடத்துக்கு வந்தோம். இங்கே கெமர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் அன்றாட வாழ்வியல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எல்லாம் சுமார் 200 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்பட்ட பொருட்கள். வாள், முத்துப் பதித்த வெற்றிலைச் செல்லம், கின்னரி வடிவப் பெட்டி, கத்தி உறைகள், படையல் கிண்ணங்கள், மூடியுடன் கூடிய மாதுளைப் பெட்டி, அன்னத்தைப் போன்ற கிணற்றுச் சகடம், வேள்விக் கரண்டி போன்ற அன்னக் கரண்டி, நெசவுக் கருவிகள். யக்ஷர்கள், அனுமன் சிலைகள், ஈரத்தால் பாதிக்கப்படாத உறுதியான மரத்தால் செய்யப்பட்ட படகு வீடுகள், அரச குடும்பத்துக்கான பல்லக்குகள், புத்த பிக்குகள் அமரும் வேலைப்பாடு மிக்க சிறுபீடம், அந்தக் காலச் சமையல் பாத்திரங்கள் எல்லாம் இங்கே உள்ளன.
இந்தப் பகுதியில் உள்ள பொருட்களில் முக்கியமானது மறைந்த மன்னர் சிசோவத்தின் ஈமத் தாழி. செம்பால் செய்யப்பட்டு வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டது இது. சுமார் 3 மீட்டர் உயரமுள்ளது இந்தத் தாழி. நெடுக்குவாக்கில் நீட்டப்பட்ட குங்குமச் சிமிழ்போல் இருக்கிறது இது. ஊமத்தம் பூவுக்குக் குமிழ்மூடி போட்ட மாதிரியும் இருக்கிறது தாழி. இது எப்படிப் பயன்படும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், கம்போடிய, தாய்லந்து மன்னர்களின் ஈமச் சடங்கு நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்போடிய, தாய்லந்து மன்னர்கள் இறந்துபோனால், இந்தியப் பாரம்பரியத்தில் உள்ளதுபோல் ஒரு சில நாட்களில் உடனடியாகத் தகனம் செய்துவிட மாட்டார்கள்.
மன்னரின் இறுதிச் சடங்கு மாபெரும் விழாவைப் போல் நடத்தப்படும். அதற்குத் தயாராக ஓராண்டுவரை கூட பிடிக்கும். ஆகவே, பழங்காலத்தில் முதலில் மன்னரின் உடலைப் பதப்படுத்தி அதன் மேல் தங்க முகமூடியைப் பொருத்தி வைத்து விடுவார்கள். இப்போது தங்க முகமூடி பொருத்தும் வழக்கம் இல்லை. மன்னரின் உடலுக்கு மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருப்பார்கள்.
மன்னரின் உடலுக்கு அருகே எப்போதும் பிரார்த்தனை மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும். இது மூன்று மாதத்திலும் முடியலாம், 300 நாளிலும் முடியலாம். கம்போடியாவில் பொதுவாக 100 நாட்களில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
ஈமச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றதும், மன்னரின் உடலை உயரமான இந்தத் தாழிக்குள் கருவிலுள்ள சிசுவைப் போல் மடித்து வைப்பார்கள். மறுபிறவியைக் குறிக்கும் வகையில், தாயின் கர்ப்பத்தில் இருப்பதைப் போல் உடல் மடிக்கப்படுகிறது. உடல் நேரடியாகத் தாழிக்குள் வைக்கப்படாது. முதலில் அது ஒரு சிறிய தாழிக்குள் வைக்கப்பட்டுப் பின்னர் பெரிய தாழிக்குள் வைக்கப்படும். வேலைப்பாடு மிக்க தாழி உயரமான மூடியால் மூடப்பட்டு அலங்காரத் தேரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தகனத்துக்கு முந்திய நாள் அரண்மனை வளாகத்தில் வாண வேடிக்கை போடப்படும் என்று, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அதைப் பார்த்த பிரெஞ்சுக்காரர் ஹென்ரி மார்ஷல் எழுதுகிறார்.
அரச குடும்பத்தாருக்கான சுடலையில் மன்னரின் தகனத்துக்கென்றே அலங்காரக் கட்டடம் ஒன்று கட்டப்படும். அங்கு, மன்னரின் உடல் தாழியிலிருந்து எடுக்கப்பட்டுத் தகனம் செய்யப்படும். பிறகு மன்னரின் அஸ்தி சேகரிக்கப்பட்டு அது அரண்மனை வளாகத்திலுள்ள வெள்ளி மாடத்தில் நிரந்தர அஞ்சலிக்காக வைக்கப்படும். அஸ்தியில் ஒரு பகுதி, மன்னர்களின் விருப்பப்படி ஆற்றிலோ ஏரியிலோ கரைக்கப்படுவதும் உண்டு.
தாய்லந்தை சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னர் பூமிபோன் அதுல்யதே, சென்ற ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி காலமானார். அவருக்கான இறுதிச் சடங்கு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்காகப் பல மில்லியன் டாலர் செலவில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மன்னரின் ஈமத் தாழியை ஏந்தி ஊர்வலமாகச் செல்லவிருக்கும் “மாபெரும் வெற்றி அரச அலங்காரத் தேர்” மட்டுமே பல நூறு பேரின் உழைப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 1795-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேர் அது.
ஈமத் தாழி வைக்கப்படும் அலங்காரத் தேரை, தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் தகனச் சாலைக்கு இழுத்துச் செல்வார்கள். அப்படிப்பட்ட தாழிதான் புனோம்பென் அரும்பொருளகத்தில் உள்ளது. கம்போடிய மன்னர் நொரோடம் சுராம்ரிட் 1960இல் காலமானபோது அவரது நல்லுடலை இந்தத் தாழியில்தான் வைத்திருந்தார்களாம். அவரது தகனம் முடிந்தபிறகு அதே ஆண்டு தாழியை தேசிய அரும்பொருளகத்துக்கு எடுத்துவந்து காட்சிக்கு வைத்துவிட்டார்கள்.
இந்த வடபுறக் காட்சிக் கூடத்திற்கு அருகிலேயே வரலாற்றுக் காலத்துக்கு முந்திய அரும்பொருட்களின் காட்சிக் கூடமும் இருக்கிறது. இங்கே 2400 ஆண்டுப் பழமையான முரசுகள், மணி, அலங்காரத் தண்ணீர்க் குடுவை, வெண்கலக் கங்கணம் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து முடித்து அரும்பொருளகத்தை விட்டுப் புறப்படுமுன், அரும்பொருளகக் கையேடு ஒன்றை வாங்கிய ராஜூ அங்கேயே அதை எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார். அந்தக் கையேடு இல்லையேல் கடைசி சில அத்தியாயங்களை இவ்வளவு விரிவாக எழுதியிருக்க முடியாது. நன்றி ராஜூ !
அரும்பொருளகத்திலிருந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். வந்ததும் நினைவுப் பொருட்கள் வாங்க அருகிலுள்ள கடைத் தொகுதிக்குச் சென்றோம். பேங்காக் நகரின் சத்துசாக் போன்ற இடம் இது. எங்கு திரும்பினாலும் சுட்ட இறைச்சியின் கெடுமணம் வருகிறது இங்கேயும். அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான கடைகள் ஒன்று சேர இருக்கும். விதவிதமான நினைவுப் பொருட்கள், துணிமணிகள் வாங்கலாம். ஒவ்வொரு பொருளையும் இரண்டு மூன்று கடைகளில் விலை விசாரித்த பிறகே வாங்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியின்மேல் ஒட்டிக் கொள்வது போன்ற பாயோன் கல்முகங்கள், அங்கோர் வாட் ஆலயம் ஆகியவற்றை நான் வாங்கிக் கொண்டேன்.
இரண்டு ஆள் மட்டுமே நடந்து செல்லக்கூடிய குறுகலான பாதையின் வழியே செல்லும்போதெல்லாம் எனக்கு அச்சமாக இருக்கும். இங்கே ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் என்னாகும்? அதற்கான எல்லாச் சாத்தியங்களும் அங்கே இருந்தன. எப்படி இவ்வளவு நெரிசலாகக் கடைகளைப் போட அனுமதிக்கிறார்கள்? ஏதாவது ஒரு நெருக்கடி என்றால் தப்பிக்கும் வழி எது என்று கூடப் பயணிகளுக்குத் தெரியாது. கடைக்காரர்கள் அங்கேயே புழங்குபவர்கள் என்பதால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதிகாரிகள் கவனிக்க வேண்டிய அக்கறைக்குரிய அம்சம் இது. சிங்கப்பூரில் இதுபோன்ற நெரிசலான கடைகளைப் பார்க்கவே முடியாது. சாத்தியமான எல்லாவித நெருக்கடிகளும் பரிசீலிக்கப்பட்டு அவற்றுக்கு மாற்றுத் திட்டத்தை முன்வைத்தால்தான் அனுமதி கிடைக்கும். இதையெல்லாம் சொன்னால் பரணி என்னை முறைப்பார்.
அண்ணா அது சிங்கப்பூர். இது புனோம் பென் என்பார். சரிதான். நினைவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பி எல்லாவற்றையும் அள்ளிப் பெட்டியில் திணித்துக் கொண்டு விமான நிலையத்திற்குப் புறப்பட்டோம். சாப்பிட நேரமில்லை. நாலு மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும்.
குளித்தால் தேவலாம் போல இருந்தது அனைவருக்கும். அரண்மனை வளாகத்தில் அடித்த வெயில் எல்லாம் எங்கள் தலையில்தான் காய்ந்தது. கசகசவென்று இருந்தாலும் குளிக்க நேரமில்லை. முக்கால் மணி நேரத்திற்குள் விமான நிலையத்தைச் சென்றடைந்தோம். ஓட்டுநர் ராவுக்கு விடைகொடுத்து உள்ளே சென்று கிடைத்ததைச் சாப்பிட்டுக் குடிநுழைவுப் பகுதிக்குச் சென்று முறைமைகளை முடித்துப் பயணிகள் காத்திருப்பு அறைக்குச் சென்று அக்கடா என்று உட்கார்ந்தோம்.
உடலில் அலுப்பு இருந்தாலும் அது ஆனந்தமாக இருந்தது. நெடுநாட்களாக நினைத்த ஒன்றை நல்லபடியாக நிறைவேற்றி முடித்துவிட்டோம் என்ற நிறைவு. அடுத்தமுறை குடும்பத்தோடு வரவேண்டுமெனப் பேசிக் கொண்டோம். நல்ல நண்பர்கள் அமைந்ததால், எந்தச் சங்கடமும் இன்றி இன்பமாகக் கழிந்தது பயணம். விமானத்தில் ஏறிக் கண்ணை மூடி, மறுபடியும் மழைநீர் வாசனை மிகுந்த அங்கோர் வாட்டுக்குள் நுழைந்தேன்!
– பொன். மகாலிங்கம்
– தொடர் நிறைவுபெற்றது –
பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
-
தீபாவளியில் பட்டாசும்! பாதுகாப்பும்!
தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதன் அர்த்தம் பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ( மூட எண்ணம் ) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம். இந்த இனிய நாளில், நாமும், நம் உள்ளமென்னும் அகல் விளக்கில் அன்பென்னும் திரியேற்றி, கருணை என்னும் நெய் ஊற்றிப் பக்திச் சுடர் ஒளிக்கச் செய்து உலகை அமைதியே ஆட்சி செய்ய உறுதி கொள்ள வேண்டும். அப்போது, இந்தத் தீபாவளித் திருநாள் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நாளும் நமக்குத் தித்திக்கும் தீபாவளிதான்.
1.முதலில் அங்கீகரிக்கபட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கியபட்டாசுகள் நீங்கள் பற்றவைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்திற்க்கு வேட்டுவைக்ககூடிய வாய்ப்பு அதிகம். அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.
2.ஒருபட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்யவேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன் படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்தவேண்டும். ஏனெனில் , ஒவ்வொரு பட்டாசினையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனை தெரிந்துகொள்ளாமல் பயன் படுத்தினால் கண் உட்பட எந்த உடல்உறுப்பும் பாதிக்கப்படலாம்.
3.தொழிற்சாலைகள், பெட்ரோல்பங்க்குகள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் உள்ள அல்லது அவை தயாரிக்கப்படும் இடங்ளை தவிர்த்து குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், திறந்த வெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்புபகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளைநோக்கி செலுத்துவதையும் தவிர்க்கவேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.
4.தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்குமட்டுமல்ல ஒருவெளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒருபக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
5.ஒருநேரத்தில் ஒரே ஒருபட்டாசினை மட்டுமே கொளுத்தவேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்திற்க்கு காரணமாகலாம்.
6.நீங்கள் பற்றவைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒருபோதும் அத்னை கையில் எடுப்பதற்க்கோ அல்லது மீண்டும் உடனே பற்றவைப்பதற்க்கோ முயற்சி செய்யக்கூடாது.அந்தபட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.
7.குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசினையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.
8.நீங்கள் பற்றவைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்துநிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒருபக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசினை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்கவேண்டும். புஷ்வாணம் எரியவில்லை என்றால் கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ளது. திரி எரிந்தும் வெடிக்காதவெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.
9.பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக்பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்கமுடியாத பட்சத்தில் அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில் குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்திவைக்கலாம்.
10.நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒருபக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சிறிது நேரம்கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். மேற்சொன்னவாறு செய்யாமல் அப்படியே குப்பைத்தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
11.பட்டாசுகளை பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றிற்க்குறிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசினை மட்டுமே பற்றவைக்க் வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும்.
12.ஒரு பட்டாசினை பற்ற வைக்கும் போது கை மற்றும் உடம்பின் எந்தபாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.
13.ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக்கண்ணாடி (Plain Spectacle) அணிந்துகொள்வது நல்லது.
14.மிகஅதிகமான ஒளியையும், மிகஅதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால் அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம்.
15.செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள்வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடைசெய்யப்பட்டாதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
16.எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.
17.குழந்தைகளும் சிறுவர்களும் எந்தசிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சையாகக் கொளுத்துவதற்க்கு தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் மேற்ப்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதேசிறந்தது.
18.பட்டாசினை கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரேநேரத்தில் ஒரேஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.
19.ஒருபட்டாசு அல்லது மத்தாப்பினை கொளுத்துவதற்க்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்டகம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது.
20.மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசுகொளுத்தி விளையாட, அல்லது உதவிசெய்ய யாராவது வந்தால் அவர்க்ளை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.
21.வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும் போது வெடிகளை கொளுத்திப் போடுவதையும் தவிர்க்கவேண்டும். அதனால் பெரியவிபத்துகளை தவிர்க்கலாம்.
22.தரைச்சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்கவேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின்தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.
23.நீளமான மத்தாப்புக்களை வைத்துக்கொண்டே வெடிகளை வெடிக்கவேண்டும்.வெடிகளைப் பற்ற வைக்கும் போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில்கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.ஏனெனில் விபத்து ஏற்ப்பட்டால் விபத்துடன் வெடிப் பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளேசென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.
24.பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாக செல்படும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷுக்களோ அல்லது செருப்புகளோ அணிந்துகொண்டே பட்டாசுகளை கொளுத்தி விளையாட வேண்டும்.
25.வெடிக்காத வெடிகளைத்தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது..
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்படுவது உடல் நலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதித்து விடும்..
ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைவரும் விரும்புவது!
பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வோம்!
-
தீபாவளியின் போது தீப வழிபாடு ஏன்?
தீபாவளி பண்டிகையின் வயது ஒன்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. தமிழகத்தில் விஜயநகர பேரரசு வேரூன்றியதும் அவர்கள் பரவலாகப் பல ஊர்களில் குடியேறினார்கள். இவர்களுடைய முக்கியமான முதன்மையான பண்டிகைதான் தீபாவளி. தீப வழிபாடு இயற்கை வழிபாடாகும்.இது பண்டைய வழிபாடு முறையாகும். எனவே விஜய நகர பேரரசு மூலம் அறிமுகமான இந்த தீபாவளி பண்டிகை மெள்ள,மெள்ள தமிழக மக்களின் நாகரிகத்தில் இரண்டறக் கலந்துவிட்டது.
ஒளி மனித உயிருக்கு இன்றியமையாதது. ஆதிகாலப் பிரபஞ்சத் தோற்றாத்தில் அணுக் கூட்டங்கள் கூடி ஒரு குழப்பமாக கடலோரத்தில் மிதந்து கொண்டிருந்த போது,அதில் சூரிய ஒளி பட்டு முதல் உயிர் தோன்றியது.உண்மையில் நாமெல்லாம் ஒளியின் புத்திரர்கள் தான்.
சூரிய ஒளியின் கிரகணங்களை வாங்கி ,மரங்கள் இலைகளில் குளோரோபில்லைத் தோற்றுவித்து காய்,கனிகளை உண்ணத் தருகின்றன. சூரிய ஒளி இல்லையேல் கடல் நீர் ஆவியாகாது.மேகம் இல்லை, மழையில்லை.குடிக்க நீர்ல்லாமல் போகும். ஒளி வியாதி கிருமிகளை அழிக்கிறது. ஒளி மூலம் தோல் வைட்ட மின்-டி பொருளைச் சேகரித்து எலும்பை உறுதியாக்குகிறது.
ஒளியின்றி இருண்ட அறையில் ஒரு மனிதனைப் பலகாலம் அடைத்து வைத்தால்,அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.எனவே தான் இந்துக்கள் இவ்வொளி அருட்பெருஞ்சோதியாகவும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபமாகவும் வழிபடுகிறார்கள்.
தீபாவளி என்றால் தீபம்+ஆவளி அதாவது தீபங்களின் வரிசை என்று பொருள். இருளைக்கொண்டு ஒரு மலையை மறைக்கலாம்.ஆனால் மலையளவு இருளால் கூட சுடர் விட்டு எரியும்.ஒரு அகல் விளக்கை மறைக்க முடியாது. ஒவ்வொரு விளக்கையும் தனக்காக தன் குடும்பத்திற்காக,தன் உறவினர்களுக்காக,தன் ,தன் நண்பர்களுக்காக,தன் சமுகத்திற்காக வேண்டி வரிசை வரிசையாக ஏற்ற வேண்டும்.
அவ்விளக்கில் நல்லெண்ணைய்யை ஊற்றும் போது நமது நல்ல எண்ணங்களை அதில் பிரதிபலிக்க வேண்டும். எரியும் விளக்கை கவிழ்த்தாலும் தீபம் மேல் நோக்கியே இருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. மனிதனின் லட்சியம் ,மேலும் மேலும் உயர வேண்டும் என்பதை அது காட்டுகிறது. ஒரு தீபத்தை கொண்டு பல தீபங்களை ஏற்றுவது போல,நாமும் பல குடும்பங்களில் விளக்கேற்ற வேண்டும்.
உலகமெல்லாம் நிறைந்து விளங்கும் இறைவனை நாம் வழிபடும் இடத்தில் எழுந்தருளச் செய்ய தீபாவளி திருவிளக்கு வழிபாடு வழி செய்கிறது. விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அண்டத்தில் உள்ள ஐந்து பூதந்களையும்.உடலில் உள்ள ஐந்து பொறிகளையும் குறிப்பவை.விளக்கினை ஏற்றி அவ்வொளியால் கண்,காது,மூக்கு,வாய்,தோல் என்ற ஐம்பொறிகளையும் ஒளி பெற செய்ய வேண்டும் என்பதே அதன் நோக்கம் .சூரியன்,கணபதி,மகேஸ்வரர்,அம்பிகை விஷ்ணு என்ற ஐந்து தெய்வங்களை வணங்குவதாக இது பொருள் படும். விளக்கில் அடி பாகம் பிரம்ம சொரூபம் என்றும், அதன் தண்டு விஷ்ணு பாகம் என்றும்,அதன் ஐந்து முகங்கள் சிவ பாகம் என்றும் வர்ணிக்கப்படும்.
தெய்வ தரிசனத்தில் ஒளியின் பங்கு பெரியது.இறைவன் அண்டத்தில் உள்ளவன்.அண்டம் என்றால் கருப்பு.தெய்வம் கருப்பு நிறம்.கிருஷ்ணம் என்றால் கருப்பு என்று பொருள்.அது கர்ப்பக்கிரகம் என்ற இருளில் வாழ்கிறது. அதை தரிசிக்க கற்பூர ஒளியைக் காட்டுகிறோம். புருவ நடுவே விளங்குகிற விளக்கு,உடலின் நளாமில்லா சுரப்பியையும் அதன் நேர்க்கோட்டில் இருக்கிற இதயம்,நுரையீரலை இயக்குகிற முகுலத்தையும் குறிக்கும்.
இவற்றை எல்லாம் நினைவில் கொண்டு தீபாவளியில் ஒளி விளக்குகளையும்,நம்மோடு இணணந்த உயிர் விளக்குகளையும் வரிசை வரிசையாக ஏற்றுவோம்.நல்ல எண்ணெய் குளியலில் நல்ல எண்ணங்களில் திளைப்போம்.புத்தாடை உடுத்தி புதிய சிந்தனைகளை விதைத்து மகிழ்ச்சியோட கொண்டாடுவோம்.