Blog

  • சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு!

     

     

    சங்கடஹர சதுர்த்தி

    சங்கடங்கள் நீக்கிடும் மற்றும் துன்பங்கள் போகும் “சங்கடஹர சதுர்த்தி” விரதம்விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும்அதில் மிகச் சிறந்ததும்,பழமையானதும் துன்பங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த மகிழிச்சி அடையலாம். சகல நன்மைகள் அனைத்தையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் “சங்கடஹர சதுர்த்தி” நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தடைகள் இல்லாமல் எல்லா காரியங்களும் வெற்றியடையும். “ஹர” என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் ஆகும்.

    சங்கடஹர விரதம்

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை “மகா சங்கடஹர சதுர்த்தி” என்று கூறுகின்றனர். விரதத்தின் பலன்கள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும் என்பதே இந்த விரதத்தின்  மகிமை என்கிறார்கள்.

     

     

    இந்த விரதம் இருப்பது எப்படி?

    சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை குளித்து, பால் பழம் பருகி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை  கோவிலுக்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை சூற்றி வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளுதல் இந்த விரதத்தின் சிறப்பு ஆகும்.

     

    விரதத்தின் மேன்மைகள்! 

    ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும்.

    இந்த விரதம் எல்லா விரதங்களை விட சிறப்பு மிகுந்ததாக கூறப்படுகிறது. பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.

     நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது. ஆனை முகனின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.

  • ஓய்வெடுக்கும் குமரன்!  

     

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், இங்கு அன்னை பராசக்தியிடம் பல ஆயுதங்களைப் பெற்று அசுரனை வதம் செய்தார் குமார பெருமான்.  அசுரனை சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும்பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர்.

    அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அருளாசி வழங்கினார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் இந்த ஊருக்கு மேலக்கொடுமழூர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலக்கொடுமழூர் என்றால் ‘வலிமைமிக்க முழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர்’ என்று பொருள். மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டது எனக் கூறப்படுகிறது. இக்கோயிலை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கட்டினார்.  இக்கோயில் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது, கோயில் இறைவனான முருகனும் மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பு. இங்கு குமரக்கடவுள் சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.

    திருக்கோயில் சூரபத்மனை வதம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் முருகப்பெருமான் ஓய்வெடுப்பதற்காக தங்கிய வனப்பகுதி இது. இங்கே, கைக்குத்தல் அரிசியையும் பாசிப்பருப்பையும் ஊறவைத்து, அவற்றுடன் சர்க்கரையைக் கலந்து நைவேத்தியம் செய்கிறார்கள். இங்கு எதையும் வேகவைப்பது இல்லையாம். முருகப்பெருமான் ஓய்வெடுப்பதால் பகலில் பூஜைகள் நடைபெறாது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

     

     

    இக்கோவிலிலின் மற்றொரு சிறப்பு   முஸ்லிம் புலவருக்கு சிலை வைத்து சமய மத நல்லிணத்தை மக்கள் இன்றும் பேணிக்காத்து வருகின்றனர். இது இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது.

    முஹம்மது மீர் ஜவாது புலவர் அவர்கள் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர். இவர், முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதி கங்களைப் பாடியுள்ளார்.

    இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள குமரக்கடவுள் என்ற சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்காக புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோயிலின் விமானத்தில் அவரது சிலையை அமைத்துள்ளது சமய நல்லிணக்கத்துக்குச் சான்றாக விளங்குகிறது.

    முதன்முறையாக இக்கோயில் கும்பாபிஷேகம்1926-ம் ஆண்டில்  நடைபெற்றது. கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத் தின்போது, ஜவாது புலவரை கவுரவிக்கும்விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவாது புலவரின் உருவ சிலையை அமைத்துள்ளனர்.

    ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நேர்த்திக்கடன் செலுத்த முஸ்லிம் பக்தர்களும் இக்கோவியிலுக்கு வருவதுண்டு.

  • திருத்தணி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடக்காது ஏன் தெரியுமா?

    உலக நன்மைக்காக ஒரு சமயம் முனிவர்கள்  சிலர் ,ஒரு புத்திரன் வேண்டும் என்று யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில்  ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

    புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார்,தேவர்கள்,அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும் ,அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள  செய்து நோம்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதன் அடிப்படையில் ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.

    கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர்.

    திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.

    மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ… தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ… தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ… நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.

     

    தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

    திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. விழாவின் முதல் நாளன்று மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் சண்முகர் சன்னதியில் சாமிக்கு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சஷ்டி விரதம் தொடங்கினர்.

    கந்தசஷ்டியை முன்னிட்டு விழா நடைபெறும் 7 தினங்களும் சண்முக பெருமானுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் வில்வ  இலைகளால் லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெறுகிறார்கள்.

     சஷ்டியில் விரதமிருப்போம்!!!
     சகல சௌபாக்கியம் பெறுவோம்!!!

     

  • திருத்தணி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடக்காது ஏன் தெரியுமா?

     

    உலக நன்மைக்காக ஒரு சமயம் முனிவர்கள்  சிலர் ,ஒரு புத்திரன் வேண்டும் என்று யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில்  ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

    புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார்,தேவர்கள்,அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும் ,அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள  செய்து நோம்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதன் அடிப்படையில் ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.

    கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர்.

    திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.

    மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ… தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ… தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ… நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.

     

    தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

    திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. விழாவின் முதல் நாளன்று மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் சண்முகர் சன்னதியில் சாமிக்கு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சஷ்டி விரதம் தொடங்கினர்.

    கந்தசஷ்டியை முன்னிட்டு விழா நடைபெறும் 7 தினங்களும் சண்முக பெருமானுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் வில்வ  இலைகளால் லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெறுகிறார்கள்.

     சஷ்டியில் விரதமிருப்போம்!!!
     சகல சௌபாக்கியம் பெறுவோம்!!!

  • தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா!

     

     

    தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது.   ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்து இக்கோவில் உள்ளது. இங்கு ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும்  விநோத திருவிழா நடைப்பெற்றது. இத்திருவிழா  ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து  நான்காவது நாள்  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தீபாவளி முடிந்து நான்காவது நாள் சனிக்கிழமை  அன்று சாணியடிக்கும்  திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக ஊரில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்தனர். சனிக்கிழமை காலை 10 மணிக்கு பீரேஸ்வரருக்கு  சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது.  பின்னர் மதியம்  அருகே உள்ள குளத்திலிருந்து சுவாமி அழைப்பு நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் பீரேஸ்வரர்

    ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுவாமி அழைப்பு நிகழ்ச்சியில் தாரை தப்பட்டைகள் முழங்க கழுதை மேல் ஒருவரை அமரவைத்து புல்லினால் செய்த மீசையை வைத்து அலங்காரம் செய்து சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர்.  கோயில் கருவறையில் அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுவர் மற்றும் வாலிபர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அனைவரும் வெற்றுடம்புடன் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக செய்து ஒருவருக்கொருவர் அடித்து விளையாடி மகிழ்ந்தனர். சுமார் 2 மணி நேரம் சாணியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவரும்  அருகில் உள்ள குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர். இந்த பராம்பரிய நிகழ்ச்சியை பெண்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.

     

    புல்மீசை வைத்து அலங்காரம் செய்து அழைத்து வரப்படும் காட்சி

    இத்திருவிழாவை குறித்து கிராம பெரியவர்கள் கூறியது. சில  நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்து  வந்த பெரியவர் தானியங்களை கொட்டி வைத்துள்ளார்,  பின்னர் அந்த பெரியவர் இறந்த பிறகு ஊர்மக்கள் தானியம் கொட்டப்பட்டிருந்த இடத்தில் சாணத்தை கொட்டி குப்பை மேடாக்கி பயன்படுத்தி வந்தனர். ஒருநாள் குப்பையை விவசாயநிலத்திற்கு கொண்டு செல்வதற்காக மண்வெட்டியால் வெட்டி எடுத்தபோது குப்பைமேட்டிற்குள் சிவலிங்கம் இருந்தது.  இதைக்கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் அந்த சிவ லிங்கத்தை கிராம நடுவில் கோவில் அமைத்து  பூஜைகள் செய்து மக்கள் வழிபட்டு வந்தனர்.

     

                                                                                     சிறுவர்கள் சாணியடித்து விளையாடி  மகிழ்ந்தனர்

     

    சாணம் இருந்த குப்பை மேட்டிலிருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதால் தீபாவளி முடிந்து 4 வது நாள் சாணியடி திருவிழா நடத்தி வருவதாகவும்,  அதனடிப்படையில் ஆண்டு தோறும் இத்திருவிழா நடைபெறுவதாகவும், திருவிழா முடிந்தவுடன் இச்சாணத்தை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும் என ஐதீகம் என்று தெரிவித்தனர்.  இவ்விழாவில் தாளவாடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்து மகிழ்ந்தனர். அதுமட்டுமல்லாமல்  தமிழகம்,கர்நாடகத்தை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநோத விழாவில்  கலந்து கொண்டனர்.

     

  • ராசிபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா அக்டோபர் 24 துவக்கம்

    ராசிபுரம் மாரியம்மன் கோயிலி ஐப்பசி திருத்தேர் திருவிழா அக்டோபர் 24-இல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. ராசிபுரம் செல்லியாண்டியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர் கோயில்களின் ஆண்டு திருவிழா வழக்கமாக ஐப்பசி மாதம் துவங்கி 20 நாள்களுக்கு நடைபெறும். நிகழ் ஆண்டுக்கான விழா பூச்சாட்டுதலுடன் வரும் 24-இல் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சமூகத்தினரின் கட்டளையாக சுவாமி திருவீதி உலா அழைத்து வருதல், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக அக்.26-இல் கம்பம் நடுதல், நவம்பர் 6-இல் பூவோடு எடுத்தல், 7-ல் கொடியேற்று விழா, 8-ல் அம்மை அழைத்து பொங்கல் வைத்தல், 9-இல் தீக்குண்டம் இறங்குதல், மாலை திருத்தேரோட்டமும் நடைபெறும். 10-ஆம் தேதி உடற்கூறு வண்டி வேடிக்கை, 11-ஆம் தேதி சுவாமி பவனி அழைத்து வருதல், 11-ஆம் தேதி சப்தாவர்ணம் நடைபெறும்.

  • உங்கள் ராசியும் குணமும்

    நெருப்பு ராசிகள்

    ▪மேஷம்
    ▪சிம்மம்
    ▪தனுசு
    ஆகிய மூன்று ராசிகளையும் நெருப்பு ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள். நெருப்பு ராசியாக இருப்பவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.

    நில ராசிகள்

    ▪ரிஷபம்
    ▪கன்னி
    ▪மகரம்
    ஆகிய மூன்று ராசிகளையும் நில ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்து மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.

    காற்று ராசிகள்

    ▪மிதுனம்
    ▪துலாம்
    ▪கும்பம்
    ஆகிய மூன்று ராசிகளையும் காற்று ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. காற்று ராசியாக இருப்பவர்கள் தற்பெருமையுடன் உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.

    நீர் ராசிகள்

    ▪கடகம்
    ▪விருச்சிகம்
    ▪மீனம்
    ஆகிய மூன்று ராசிகளையும் நீர் ராசிகள் என்று ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர்.

  • பெண்களுக்கு அனுமதியில்லை கேரளா முருகன்  கோவிலில் ஏன்?

     

    கேரளா மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள கிடங்கூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி சுவாமி  கோயிலில் ,முருகன் பிரம்மச்சாரியாக அருள்புரிகிறார். இங்குள்ள சன்னதிக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை.சூரசம்ஹாரம், முருகன் பிரம்மச்சாரியாக இருந்த பொது தான் செய்தார். கந்த சஷ்டியை ஒட்டி இங்கு சென்று வரலாம்.

     

    பிரம்மச்சாரியான கவுன மகரிஷி,வனமாக இருந்த இப்பகுதியில்  தவம் செய்து வந்தார். ராவணவதத்ற்காக சென்ற ராமபிரான்,திரும்பி வரும்போது கவுன மகரிஷியை சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால் ,அவர் வரவில்லை.சீதையுடன்  ஊர் திரும்பும் மகிழிச்சியில் ,தன்னை ராமன் மறந்து விட்டதாக கருதிய அவர்,இல்லறத்தில் அவர் இருப்பதால் தான் இத்தகைய இக்கட்டான நிலைமை ஏற்ப்பட்டதாக கருதினார்.

     இந்த மகரிஷிக்கு முருகன் இஷ்ட தெய்வமாக இருந்தார். ராமனிடம் கோரிக்கை வைத்து நிறைவேறாததால், முருகபெருமானின் தரிசனம்  வேண்டி கோரிக்கை வைக்க நினைத்தார்.அவருக்கு இரண்டு மனைவிகள் என்பதால் தன் கோரிக்கைகள் கவனிப்பாரோ மாட்டாரோ எனக் சந்தேகப்பட்டார். அந்த சந்தேகத்துடனேயே முருகனுக்குஒரு சிலை வடித்தார். பிரம்மச்சாரி  முருகன் என  இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து விட்டார்.

     

     

    பரசுராமர் உருவாக்கிய ஊர்  கிடங்கூர். இக்கோவிலில் பெருமான் சன்னதி இருக்கிறது. முருகன் சன்னதிக்கு எதிரே கோடி மரம் ,பலி பீடம் உள்ளது. கேரளா கோயில்களிலேயே இது தான் மிக உயரமான கொடி மரம். கொடி மரத்தின் மேல் ஒரு மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     இங்குள்ள கூத்தம்பலம், மருத்துவ குணமாக கொண்ட குறுந்தோட்டி என்ற மரத்தினால்  உருவாக்கப்பட்டது.   கூத்தம் பலத்தின் உள்ளே புவேனேஸ்வரி அம்மன் அருள் செய்கிறாள். இவளுக்கு , செவ்வாய், வெள்ளியில் குருதி பூஜை நடக்கிறது. வழக்குகளில் ஜெயிக்கவும், தொழில் போட்டியை சமாளிக்கவும் ,எதிரிகளின் ஆதிக்கத்தை தடுக்கவும் இந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

     

    பெண்களுக்கு அனுமதில்லை இல்லறத்தில் இருப்பவர்களால் எதிலும் கவனம் செலுத்த இயலாது என்ற கருத்தின் அடிப்படையில் கவுன மகரிஷி பிரம்மச்சாரி முருகன் சிலையை பிரதிஷ்டை செய்ததால்  முருகன் சன்னதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொடி மரம் அருகே நின்று தரிசிக்கலாம். ஒரு சில தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.அவர்களும் தம்பதி சமேதராக முருகன் சன்னதிக்குள் செல்ல முடியாது.

    கணவன் மட்டுமே உள்ளே செல்ல, மனைவி கொடிமரம் அருகில் நின்று குழந்தை வரம் கேட்கலாம்.குழந்தை பிறந்த பிறகு இத்தலத்தின்  முக்கிய  பிரார்த்தனையான  ‘பிரம்மச்சாரி கூத்து’ நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது. உடல் நலம் வேண்டி  பஞ்சமிர்த அபிஷேகமும், திருமணத்தடை நீங்க சுயம்வர அர்ச்சனையும் செய்யப்படுகிறது.

    முருகனுக்கு துலாபாரம்,காவடி,சுட்டுவிலக்கு ஏற்றியும், பெருமாளுக்கு பால்பாயசம் அப்பம் படைத்தும் வணங்குகின்றனர். கந்த சஷ்டியை ஒட்டி  இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.

     

  • திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் யாரை வணங்க வேண்டும்?தெரிந்து கொள்ளுங்கள்

     

     

    திருப்பதி வெங்கடேசப்பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பாக, யாரை வணங்க வேண்டும் தெரியுமா? திருப்பதிக்குச் செல்பவர்கள் திருமலையில் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வழிபட்டு, தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். அதில் குறையொன்றுமில்லைதான். ஆனால், வேங்கடவனை நாம் தரிசித்து வழிபடுவதற்கு முன்பு மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபடவேண்டும்.

    அப்படி முதல் வணக்கத்துக்கு உரிய மூர்த்தி யார் தெரியுமா?

    அவர்தான் வராக மூர்த்தி!

    அவரை ஏன் நாம் முதலில் வழிபடவேண்டும்?

    அவர்தான், கலியின் துன்பங்களில் இருந்து பக்தர்களைக் காப்பதற்காக முதலில் திருமலையில் எழுந்தருளியவர்!
    அவருடைய இடத்தில்தான் இப்போது வேங்கடவன் எழுந்தருளி இருக்கிறார்.

    முதல் வணக்கத்துக்கு உரிய வராக மூர்த்தியின் திவ்விய வரலாறுதான் என்ன?

    ஒருமுறை வைகுண்டவாசனை தரிசிப்பதற்காக சனகாதி முனிவர்கள் வைகுண்டம் சென்றனர். அப்போது பகவான் நாராயணன், மகாலட்சுமி தேவியுடன் ஏகாந்தமாக இருந்த காரணத்தினால், துவாரபாலகர்கள் முனிவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
    சினம் கொண்ட முனிவர்கள், அவர்கள் இருவரையும் பூமியில் போய் பிறக்குமாறு சபித்துவிட்டனர்.

    முனிவர்களின் வரவை உணர்ந்த பகவான், அவர்களை வரவேற்பதற்காக வாயிலுக்கு வந்தார். துவாரபாலகர்கள் தாங்கள் பெற்ற சாபத்தை பகவானிடம் கூறி முறையிட்டனர்.

    பகவான், ”உங்களுக்கு முனிவர்கள் கொடுத்த சாபத்தை என்னால் மாற்ற முடியாது. நீங்கள் பல பிறவிகள் நல்லவர்களாகப் பிறந்து முடிவில் என்னை அடைகிறீர்களா அல்லது மூன்று பிறவிகள் கொடிய அரக்கர்களாகப் பிறந்து, என்னால் வதம் செய்யப்பட்டு என்னை அடைகிறீர்களா?” என்று கேட்டார்.

    துவாரபாலகர்கள், ”உங்களை விட்டு நீண்ட காலம் எங்களால் பிரிந்திருக்க முடியாது. நாங்கள் கொடிய அசுரர்களாகப் பிறந்து மூன்று பிறவிகள் முடிந்ததும் தங்களிடம் வரவே விரும்புகிறோம்” என்றனர்.
    பகவானும் அப்படியே வரம் கொடுத்தார்.

    அப்படி துவாரபாலகர்கள் எடுத்த முதல் பிறவிதான் இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு என்னும் இரண்டு அசுரர்கள். இவர்களில் இரண்யாட்சனுக்காகத் தோன்றிய அவதாரம்தான் வராக அவதாரம்.

    மிகவும் கொடியவனாக இருந்த இரண்யாட்சன் பூமியை ஒரு பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓர் இடத்தில் மறைத்துவிட்டான். அப்போது பூமிதேவியின் பிரார்த்தனைக்காக பகவான் வராக மூர்த்தியாக அவதரித்து, இரண்யாட்சனைக் கொன்று, பூமியை மீட்டார்.
    அப்போது, பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், வராக சுவாமியைப்பார்த்து, ”கலியுகத்தில் பக்தர்களை காப்பதற்காக, நீங்கள் எப்போதுமே வராகமூர்த்தியாக இருந்து அருள்பாலிக்க வேண்டும்” என்ற கோரிக்கையையும் கூடவே வைத்தனர்.அதற்கு இணங்கிய வராக மூர்த்தி சேஷாத்ரி மலையில் எழுந்தருளினார்.

    துவாபரயுகத்தில் கண்ணன் சொல்லியபடியே யசோதை தன் உடலை விட்டு கலியுகத்தில் வகுளாதேவியாக அவதாரம் எடுத்தாள். தன்னுடைய காலத்தை அவள் சேஷாத்திரியில் உள்ள வராக மூர்த்தியின் ஆசிரமத்தில் கழித்து வரலானாள். வராகமூர்த்தி வகுளாதேவிக்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் பற்றி எடுத்துரைத்தார். அவரது சிறந்த பக்தையாக வகுளாதேவி திகழ்ந்தார். அவர் மிகவும் கர்மசிரத்தையுடன் பகவானுக்கு சேவைகள் செய்து வந்தார்.

    மகாலட்சுமியைப் பிரிந்த நாராயணனும் அவரைப் பல இடங்களில் தேடி அலைந்து, சேஷாத்திரி மலைக்கு வந்து சேர்ந்தார். சிறிது தூரம் சென்றதும், வராக மூர்த்தியின் ஆசிரமம் அவருக்குத் தென்பட்டது. உடனே அங்கு சென்றார். வராகமூர்த்தி, நாராயணனைப் பார்த்தவுடன், அவர் யார் என்பதை அறிந்துகொண்டார். மிகவும் மரியாதை காட்டினார். அவரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு நாராயணன் அந்த ஆசிரமத்தில் நுழைந்தார். அவர் பூலோகத்துக்கு வந்த காரணம் பற்றி அறிந்துகொள்ள விரும்பி நாராயணனிடம் பூலோகம் வந்த காரணத்தைக் கூறும்படி வேண்டினார் வராகமூர்த்தி.

     

    அதற்கு நாராயணன் ”வராகக் கடவுளே! மும்மூர்த்திகளையும் சோதனை செய்யும் பொருட்டு வந்த பிருகுமாமுனி என் மார்பில் உதைத்தார். அதற்குத் திருமகள் என்பேரில் கோபம் அடைந்து என்னைவிட்டு கொல்லாபுரம் அடைந்தாள். அவளில்லாமல் வாழ என்னால் முடியவில்லை. அதனால்தான் வைகுண்டத்தைவிட்டு, சேஷாத்திரிக்கு வந்துவிட்டேன். ஆனால், தங்குவதற்கு இங்கு எனக்கு இடமில்லை. எனவே, ஒரு புற்றில் வாழத் தொடங்கினேன். அப்போது ஒரு இடையர் தலைவன் கோடாரியால் புற்றை அடிக்கவே, என் தலையில் ஒரு காயம் ஏற்பட்டது. அதைக் குணப்படுத்த மருந்தைத் தேடும் சமயத்தில் நான் உங்களைக் காணமுடிந்தது. இந்த மலை உங்களின் சொத்து. ஆதலின் எனக்கு இந்த மலையில் சில காலம் தங்க நீங்கள் இடமளிக்க வேண்டும்” என்று கூறினார்.

    இதைக்கேட்ட வராகமூர்த்தி ”நீங்கள் கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், உங்களுக்கு நான் இலவசமாக இடம் தர முடியாது. பணம் கொடுத்தால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்” என்றார்.

    அதற்கு நாராயணன் ”தாங்கள் பெரியவர்! எல்லாம் அறிந்தவர் தாங்கள்! லக்ஷ்மியைப் பிரிந்த நான் ஏழையாகிவிட்டேன். கையில் ஒரு காசும் இல்லை. இந்நிலையில், உங்களுக்கு எப்படி நான் பணம் கொடுக்க முடியும்? தயை கூர்ந்து நீங்கள் எனக்கு இடமளிக்க வேண்டும். இதற்குக் கைம்மாறாக, என் பக்தர்களை இந்த மலைக்கு வருமாறு செய்வேன். அவர்கள் முதலில் உங்களைத் தரிசித்து உங்களுக்கு நைவேத்யம், காணிக்கை செலுத்திவிட்டு, அதன் பிறகே என்னை தரிசிக்க வரட்டும். இந்நிலையில், நான் இதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்பதைத் தாழ்மையுடன் சொல்கின்றேன்” என்றார்.

    வராகமூர்த்தியும் அதற்கு சம்மதித்தார். நாராயணனுக்கு அந்த மலையில் நிலம் கொடுத்தார். பின்னர் நாராயணனை நோக்கி ”வகுளாதேவி என்னும் ஒரு சிறந்த பக்தை எனக்கு தொண்டு செய்து கொண்டிருக்கிறாள். உனக்கு அவளைக் காண்பிப்பேன். அவள் உன்னை கவனித்துக் கொள்ளட்டும்” எனக் கூறி வகுளாதேவியை நாராயணனுக்கு அறிமுகப்படுத்தினார். நாராயணனுக்கு வராகமூர்த்தி இலவசமாக அளித்த இடத்தில் ஓர் ஆசிரமம் நிர்மாணித்துக்கொண்டு அதில் நாராயணனும் வகுளாதேவியும் வாழ்ந்து வரலாயினர்.

    வராகமூர்த்திக்கு வேங்கடவன் கொடுத்த வாக்கினை நாம் காப்பாற்றவேண்டுமல்லவா? எனவே, நாம் திருமலைக்குச் சென்றால், வேங்கடவனை தரிசிப்பதற்கு முன்பு வராக மூர்த்தியை தரிசித்து வழிபடுவோம்.

  • ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசி திருவிழா

    திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா மற்றும் பங்குனி திருவிழா நடத்தப்படுகின்றன. நிகழாண்டு ஐப்பசி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 27ஆம் தேதி பள்ளி வேட்டை நடைபெறுகிறது. 28ஆம் தேதி சுவாமிக்கு ஆறாட்டு நடைபெறுகிறது. முன்னதாக 23ஆம் தேதி திரு அம்பாடியில் கிருஷ்ணன் கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.