Blog

  • ezhu-thalai-murai-pavangalai-pokkum-pacharuci

     

    ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு, சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

    அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.  இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது .

    (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷமும் இதில் அடங்கும்..)

  • ezharai-sani-astama-sani-kuzhanthaikalukku-enna-seyum

     

    சனி கொடுத்தால் எவர் தடுப்பார்..? சனி கொடுப்பாரா ..கெடுப்பாரா..?
    சனி பலமானால் கெடுதலா நல்லதா..?

    இவை எல்லாருக்கும் இருக்கும் சந்தேகங்கள்.சனி லக்னத்துக்கு யோகராக இருந்தால் மட்டுமே நல்லது செய்வார்.சனி,ராகு இருவருமே வறுமையை குறிப்பவர்கள்..அதனால்தான் இவர்கள் மறைந்தால்தான் யோகம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.சுக்கிரன் மட்டுமே ஆடம்பரமாக சுகமாக வாழ உதவுவார்.
    ஏழரை சனியின் போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார்..அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்றுக்கொடுத்து விடுகிறார்..சனி வறுமை தரும் கிரகம் என்பதாலும்,இருள் கிரகம் என்பதாலும் மனதில் மகிழ்ச்சி தராத நிலையை ஏழரை சனியில் உண்டாக்கி விடுகிறார்..சந்திரன் ஒளி கிரகம் .சந்திரனால் உண்டாவதுதான் மன தெளிவு எதை எப்போது,எப்படி செய்வது எனும் தெளிவை தருவதால்தான் நம் அன்றாட பணிகள் தினசரி நடைபெறுகிறது.சனி அவரை நெருங்கும்போது அன்றாடப்பணிகளில் மாற்றம் உண்டாகும்.சனி மந்தன் அல்லவா..அதனால் அக்காலத்தில் மந்தத்தை உண்டாக்கிவிடுகிறது…
    தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் மீது சலிப்பு உண்டாவதும்,நினைத்த காரியம் நடக்காமல் தடங்கல் உண்டாவதுமாக இருக்கும்.வாயுபகவான் சனி என்பதால் வாத நோய்களையும் சிலருக்கு உண்டாக்கிவிடுவார்..வாகனங்களில் செல்கையில் ஆபத்தும் உண்டாகும்.அதனால் பலருக்கு மருத்துவ செலவும் உண்டாகிவிடுகிறது.
    ஏழரை சனி ஒருவருக்கு நடக்காமல் அவருக்கு சனி திசை மட்டும் நடந்தாலும் சிக்கல் உண்டு.19 வருடம் சனி திசை .அவர் ரிசப ,மிதுன,துலாம்,கன்னி லக்னத்தாராக இருந்தால் ஓரளவு நற்பலன் உண்டு.6,8ல் சனி இருப்பின் சனி நீசம்,பகை பெற்று இருப்பின் வாத நோய்,பாரிசவாயு,எலும்பு வியாதிகள்,புற்று நோய்,ஆஸ்துமா,ஹிஸ்டீரியா போன்ற நோய்கள் தக்கக்கூடும்.8ல் சனி இருப்போருக்கு தீர்க்காயுள் உண்டு.
    ஜென்ம ராசிக்கு 12,1,2 ல் சனி சஞ்சாரம் செய்யும்போது எழரை சனி என்கிறோம் ..இப்போது துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு ஏழரை சனி நடக்கிறது. இந்த ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் அஷ்டம சனி நடக்கும் மேஷம் ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும்,குறிப்பாக விருச்சிகம் ராசிக்குழந்தைகளுக்கு கல்வி சற்று மந்தமாகவே இருக்கும்.கல்வி சிறப்பாக இருந்தால் உடல்நலன் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறது.
    குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலன் பாதிப்பு, குழந்தை படும் சிரமத்தால் மனக்கவலை,தந்தைக்கு அதிக செலவுகள், குழந்தையால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம்..வருமான குறைவு இருப்பதையும் காண்கிறோம்.இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல் நலக்குறைவு உண்டாவதும்,பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிகபிடிவாதம்,கல்வியில் கவனம் செலுத்தாமை,ஹோம் ஒர்க் செய்யாமல் அலட்சியம்,பள்ளியில் குறும்பு செய்து,புகார் வருதல் என ஏழரை சனி படுத்தும்.
    சனிக்கிழமை அக்குழந்தைகளை அழைத்து சென்று அருகில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்…சனிக்கிழமை காகத்து சதம் வைப்பது ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

  • 3-825

    கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், கட்டப்பட்டது. உலக புகழ்பெற்ற இக்கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, 75 கிலோ எடை உள்ள, 51 மூட்டை என, 3,825 கிலோ அரிசியால் சாதம் சமைத்து பரகதீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி காலை, 9 மணி முதல், கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை, 6:00 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட, ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது, இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த சாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம், ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.

  • 2017-11-03-14-34-43

    சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாணம், பூரச்சலங்கை விழா விழாக்கள் கொடியேற்றுடன் தொடங்கியது. சிதம்பரம் திருத்தலத்தில், ஸ்ரீசிவகாம சுந்தரி அன்னைக்கு, ஆண்டுதோறும் ஐப்பசி பூர உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். ஹேவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 17ம் வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளுக்கு கொடியேற்றத்துடன் உத்ஸவம் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறுகின்றன. நவம்பர் 11ம் தேதி சனிக்கிழமை திருத்தேர் உத்ஸவம் நடக்கிறது. 12ம் தேதி மாலையில் பட்டு வாங்கும் உத்ஸவமும், பூரசலங்கை உத்ஸவமும் மறுநாள் 13ம் தேதி காலையில் தபசு உத்ஸவக் கோலத்திலும் அம்பாள் வீதியுலா வரும் வைபவம் நடைபெறுகிறது. அன்றைய இரவு, ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீசோமாஸ்கந்தர் திருக்கல்யாண உத்ஸவ வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. ஐப்பசி திருக்கல்யாணம், பூரச்சலங்கை முதலான விழாக்களையொட்டி தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள். தினமும் பிரசாதம் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் ஆகியன நடைபெறும்.

  • aippasi-annabishegam

    ஐப்பசி அன்னாபிஷேகம் :

    சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம் தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள். அந்த இறைவனின் அருவுருவமான லிங்கமூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.

    அன்னாபிஷேக பொருள் விளக்கம் :

    அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

    பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

    சிவன் பிம்பரூபி. அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்னபூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

    தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவே தான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

    அன்னாபிஷேக தரிசன பலன்:

    அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 16 பொருள்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.

       

     

    ஆகமத்தில் அன்னாபிஷேகம்:

    ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்ச்சத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கை தானே.

    அன்னத்தின் சிறப்பு:

    ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்படுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

    அன்னாபிஷேக மஹத்வம் :

    இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன. அன்னாபிஷேக விழா. மகாலக்ஷ்மி குடிகொண்டிருக்கும் வெள்ளிக்கிழமை நாளில், சுக்கிர பலம் கூடியிருக்கும் அருமையான வேளையில், சந்திர பலம் பூரணமாக நிறைந்திருக்கும் முக்கியமான தருணத்தில், சிவனாருக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்துக்கு, நம்மால் முடிந்த அரிசியை வழங்குவோம். நாம் வழங்கும் அரிசியானது, சாதமாகி, சிவசொரூபனுக்கு உடையாகி, அலங்கரிக்கப்பட்டு, அந்த அன்னத்தைக் கொண்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக, உணவாக வழங்கப்படுவது நமக்கு மிகுந்த புண்ணியத்தைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! அன்னாபிஷேகத்துக்கு, இயன்றதை வழங்குங்கள். ஒருகைப்பிடி அரிசியேனும் வழங்குங்கள். அன்னாபிஷேக தரிசனத்தை கண்ணாலும் மனதாலும் கண்டு உணருங்கள். வாழ்வில் யோகமும் ஞானமும் பெறுவீர்கள். வீட்டில் தரித்திர நிலையே அண்டாது. எப்போதும் உணவுக்குப் பஞ்சமிருக்காது. உலகின் அனைத்து உயிர்களுக்கும் புசிக்கும் புசிப்பினை குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.

     

  • annabishegam-seyum-murai-athan-sirappu

     

    ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக, அன்னாபிஷேகத்தின்போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது. சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும். இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு.! நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர். அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது. நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம். பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

     

    அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்: 
    அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகம். அன்னம் பிராணன் என்றும், அஹ மன்னன் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத்தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களால் ஆனதுதான். இந்தப் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான். அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிக்கிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையில், நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர். அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது. நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத் தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியான பின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால் தான் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

     

  • aipasi-pavurnamiyil-santhiranin-sirappu

     

    ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், சுத்தமான அன்னத்தினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

     

    தட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திருமணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான். 

    இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும். சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

     ஈஸ்வரன் சூரிய வடிவம், அம்பாள் சந்திர வடிவம் என்கிறது வேதம். இதனால் சந்திரனின் தானியமான நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசி, அம்பாள் அம்சம் என்றாகிறது. நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவமாகத் திகழும் அம்பாள், ஈசனைகிறச் சேரும் நாள் ஐப்பசி அன்னாபிஷேக நாளாக அமைகிறது.

    அன்னம் ஈசனின் வடிவம். உற்றுப்பார்த்தால், ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கமாகவே காட்சி தரும். அன்னம் ஈஸ்வர ஸ்பரிசம், ஒவ்வொரு முறை அன்னத்தைத் தொடும்போதும் நீங்கள் அந்த இறைவனைத் தொடுகிறீர்கள் என்று உணருங்கள். சந்திரனை சூடிக்கொண்ட சிவபெருமான் பௌர்ணமி தினத்தில் அமிர்த கலை, அதாவது சந்திரனின் 16 கலைகளோடு கூடி பூரண மகிழ்ச்சியோடு இருப்பார். இதனாலேயே சிவபெருமானுக்கு உரிய தினமாக பௌர்ணமி உள்ளது. அதிலும் புண்ணியம் தரும் துலா மாதமான ஐப்பசியில் வரும் பௌர்ணமி தினத்தில் சிவபெருமான் ஆனந்த நிலையில் யோகத்தில் ஆழ்ந்திருப்பார். அந்த நாளில் அவருக்குச் செய்யப்படும் அன்னாபிஷேகம் அபிஷேகங்களில் எல்லாம் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.

     சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

  • annabishagathin-mukkiyathuvam

     

     

    ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், சுத்தமான அன்னத்தினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    ஈஸ்வரன் சூரிய வடிவம், அம்பாள் சந்திர வடிவம் என்கிறது வேதம். இதனால் சந்திரனின் தானியமான நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசி, அம்பாள் அம்சம் என்றாகிறது. நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவமாகத் திகழும் அம்பாள், ஈசனைச் சேரும் நாள் ஐப்பசி அன்னாபிஷேக நாளாக அமைகிறது. இந்தத் திருநாளில் ஈசனைத் தரிசிக்கும் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வார்கள். அன்னாபிஷேக வடிவில் சிவசக்தி வடிவமாக இருக்கும் இறைவனை இந்நாளில் வணங்கினால் குடும்ப ஒற்றுமை மேம்படும். அன்னாபிஷேக தினமான ஐப்பசி பௌர்ணமியில் சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். அதாவது ஐப்பசி மாதம் துலாம் ராசியில் இருக்கும் சூரியனுக்கு ஏழாம் இடத்தில் சந்திரனும், அதுபோலவே மேஷத்தில் இருக்கும் சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சூரியனும் சஞ்சரிப்பார்கள். இதனால் இந்த நாள் விசேஷமான சிவசக்தி தினமாக போற்றப்படுகிறது.

    அன்னம் ஈசனின் வடிவம். உற்றுப்பார்த்தால், ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கமாகவே காட்சி தரும். அன்னம் ஈஸ்வர ஸ்பரிசம், ஒவ்வொரு முறை அன்னத்தைத் தொடும்போதும் நீங்கள் அந்த இறைவனைத் தொடுகிறீர்கள் என்று உணருங்கள். சந்திரனை சூடிக்கொண்ட சிவபெருமான் பௌர்ணமி தினத்தில் அமிர்த கலை, அதாவது சந்திரனின் 16 கலைகளோடு கூடி பூரண மகிழ்ச்சியோடு இருப்பார். இதனாலேயே சிவபெருமானுக்கு உரிய தினமாக பௌர்ணமி உள்ளது. அதிலும் புண்ணியம் தரும் துலா மாதமான ஐப்பசியில் வரும் பௌர்ணமி தினத்தில் சிவபெருமான் ஆனந்த நிலையில் யோகத்தில் ஆழ்ந்திருப்பார். அந்த நாளில் அவருக்குச் செய்யப்படும் அன்னாபிஷேகம் அபிஷேகங்களில் எல்லாம் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.

    ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சகலவித திரவியங்களாலும் சிவனுக்கு அபிஷேகம் செய்த பின்னரே அன்னத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது வெற்றிலை, வேக வைத்த காய்கறிகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். வெற்றிலை கொண்டு அலங்கரிப்பதால் அதைக் காண்பவர்களின் வீட்டில் சகல மங்கல நிகழ்வுகளும் நல்லபடி நடைபெறும் என்பது ஐதீகம். அதுபோல வாழைக்காய் பித்ரு தோஷங்களைத் தீர்க்கும். புடலங்காய் சர்ப்பதோஷத்தை நீக்கும். இப்படி ஒவ்வொரு காய் கனியும் ஒவ்வொரு பலன்களைத் தரும். வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் அலங்காரத்தால் சந்தான பிராப்தி கிட்டும் என்பதும் நம்பிக்கை.

     

  • kodi-siva-tharisa-punniyam-annabishagam

     

     

    ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், சுத்தமான அன்னத்தினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன்.

    இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய உணவு வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன்.

    தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி.

    கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன். அந்த லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் உலகமெங்கும் நடைபெறும். கோவில்களிலும், இல்லங்களிலும் லிங்கத் திருமேனி மூழ்கும் வண்ணம் சூடாறிய வெள்ளை அன்னத்தைக் கொட்டி மூடி, வெந்த காய்கறிகள், பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றை அடுக்கி லிங்க முகத்தையும் அழகுபடுத்துவார்கள்.

    ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவரூபமாக இருப்பதாகப் பேரூர் புராணம் தெரிவிக்கிறது. எனவே இந்த அன்னாபிஷேக சிவனை ஒரு முறை தரிசித்தால் கோடி சிவ தரிசனம் செய்த பலன் ஏற்படும் என்பது ஐதீகம். இந்த அன்னச் சிவரூபத்திற்கு தீபாராதனை காண்பித்த பின்னர், சிவன் மேல் பூசிய அன்னம் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படும். வெள்ளை அன்னம் சாப்பிடக் கூடாது என்பதால், இந்த அன்னப் பிரசாதம், சாம்பார், தயிர், மோர் ஆகியவற்றுடன் தனித்தனியே கலக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

    திருக்கோயில்களில் நடத்தப்படும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, விசேஷ ஹோமங்கள், நித்ய ஹோமங்கள், வேத பாராயணம், தீபாராதனை என அனைத்தும் ஆகம வழிப்படிதான் நடத்தப்படுகின்றன. அபிஷேகப் பிரியனான சிவனுக்குப் பல வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி எழுபது வகையான அபிஷேகப் பொருட்களில் ஒன்று அன்னம். அன்னத்தால் அபிஷேகம் செய்தால் சாம்ராஜ்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் மூலவராகச் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை முழ்கடிக்கும் அளவிற்குச் சுமார் நூறு மூட்டை அரிசியில் அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம். இந்த அபிஷேக அன்னத்தில் பாதி பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். மீதி நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக்கப்படும்.

  • 2017-11-02-14-58-11

    திருநறையூர் நம்பி திருக்கோவில் உற்சவராக கருடன் பெருமாளைத் தாங்கி திருவீதி உலா வரும்பொழுது அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தக் கல் கருட உற்சவர் சந்நிதியில் இருந்து தூக்கும்பொழுது உள்ள கனமானது, கூடிக்கொண்டே போகிறது. தொடங்கும் போது 4 பேர் தூக்க எடை கூடிக்கொண்டே 128 பேர் தூக்கும் அளவுக்கு எடை கூடிக்கொண்டே போகிறது. கும்பகோணம் அருகே உள்ள நறையூர் என்ற நாச்சியார் கோவிலில் அமைந்துள்ள திருநறையூர் நம்பி திருக்கோவிலில் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது. மஹாவிஷ்ணு கோவில் கொண்டுள்ள இத்திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர். இந்த கோயிலை சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோயில் என்று திருமங்கையாழ்வார் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். மஹரிஷி மேதவிக்கு காட்சி அளித்த ஸ்ரீநிவாசபெருமாள் அவரது வளர்ப்பு மகளான தாயாரைத் தனக்கு மணம் முடித்து வைக்குமாறு கேட்கிறார். மஹாலஷ்மி தாயார் மேதாவி மகரிஷிக்கு மகளாக இங்கு வந்த புராணக்கதையும் சுவாரஸ்யமானது. மேதவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார். வழக்கம் போல் ஓர் நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது. அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார். இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி திருவுளம் கொண்டார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டிப் பேணிக் காப்பாற்றி வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார். அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் எனப் பெயர் பெற்றது. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். உற்சவராக கருடன் பெருமாளைத் தாங்கி திருவீதி உலா வரும்பொழுது அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தக் கல் கருட உற்சவர் சந்நிதியில் இருந்து தூக்கும்பொழுது உள்ள கனமானது, நான்கு நபர்களாலேயே தூக்கிவிட கூடிய அளவிலேயே இருக்கும். இம்மூர்த்தி பிரகார திருவீதிகளை ஒவ்வொன்றாகக் தாண்டும்பொழுது கல் கருடனின் கனம் அதிகரித்துக் கொண்டே வருவதால் நான்கு பேர் என்பது 8, 16, 32, 64, மற்றும் 128 என்பதாகப் தூக்குபவர்களின் எண்ணிக்கை உயரும். சந்நிதியை அடையத் திரும்பி வரும்பொழுது இதே கல் கருடனின் கனம் குறைந்துகொண்டே வருவதால் 128 பாதந்தாங்கிகள் என்பது 64,32,16,8. என்று குறைந்து வந்து சந்நிதியை அடையும்பொழுது 4 பாதந்தாங்கிகள் என்ற கணக்கில் முடிவுறும்.