குருவிற்கு சொந்த வீடாக அமைந்த மீனத்தில் சூரியன் பங்குனி மாதத்தில் சஞ்சரிப்பார். ‘உத்ரம்’ நட்சத்திரம் வரும்பொழுது பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு தங்கரதம் ஏறி வரும் முருகப்பெருமானை தரிசித்தால், மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். மன அமைதி கிடைக்கும்.
வருங்காலம் நலமடையவும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைப் பெறவும் திருமுருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான பங்குனிஉத்திரம் வருகிற 9-4-2017 வருகிறது. ஒரு வீட்டை நிலை நிறுத்துவது மரத்தாலான உத்திரம் தான்.
இரண்டு தூண்களுக்கு இடையே உத்திரம் அமைப்பர். அதுதான் வீட்டைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறது. அதே போல உத்திரத்தன்று முருகனை வழிபட்டால், தூண் போல நம்மை அவன் தாங்கிப் பிடித்துக் கொள்வான். துயரங்களை துரத்திவிட்டு துணையாக நம்முடன் அவன் இருப்பான்.
அன்றைய தினம் முருகப்பெருமானை, சர்க்கரையால் அபிஷேகம் செய்து சந்தோஷம் காணுங்கள். இளநீரால் அபிஷேகம் செய்து இனிய வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். காவடி சுமந்தால் கவலைகள் குறையும். பால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்க்கை அமையும்.
Category: old…
old…
-
மங்களம் தரும் பங்குனி உத்திர விரதம்
-
புதிர்களும் புனிதங்களும் நிறைந்த காசி….
காசிக்குப் போறேன் என்று நீங்கள் சொல்லியவுடன், ஏன் என்னாச்சி…. அதுக் கெல்லாம் இன்னும் வயசு இருக்கு, ஏன் சன்யாசி ஆயிடலாம்னு முடிவு பண்ணீட்டியா? என விமர்சனக் கேள்விகள் தான் காத்திருக்கும். உண்மையில் ‘காசி வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டதல்ல வாழ்வை ஆழமாக உணருவதற்காக எனும் உண்மை பலருக்கு தெரியாது.
இந்த பூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் மற்ற இடங்களைவிட சக்தி மிக்க அதிர்வுகளைக் கொண்டும் மனித விழிப்புணர்வை உயர்த்தும் வகையிலும் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு இடமாக காசி உள்ளது.
காசி நகரம் அமைந்துள்ள இடத்தின் சிறப்பு என்ன?
காசி இந்துக்களின் நகரமாக போற்றப்படுவது ஏன்?
காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.
சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.
நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்சபூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி
சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.
காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்? 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.
இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.
இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். -
எதிரிகளை வெல்லும் வரம் தரும் நரசிம்மர்
நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.
-
குலதெய்வங்கள் என்றால் என்ன…?
நமது குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிடமுடியாதது ..!
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் “குலதெய்வங்கள்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளையும் கூட நீக்க வல்லவை.இன்று நம் அவசர வாழ்க்கையில் , இரண்டு தலைமுறை பாட்டன், பாட்டியின் பெயர்களுக்கு மேல் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது .
நம் முன்னோர்கள்…
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை. இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்..! இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..! நாம் அங்கே போய் நின்று , அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம் தெரியுமா ..!
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ..! ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் நாம் அறிவோம்.இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தந்தையின் குரோமோசோம் தான் முடிவு செய்கிறது. பெண்ணுக்கு xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. ஆணுக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. பெண்ணின் x உடன் ஆணின் y சேர்ந்தால் ஆண் குழந்தையும் ; இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது…
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு, தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்..!
பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்..!பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை… ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஏற்கனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது…
பெண்களுக்கு, பிறந்த வீட்டில் ஒன்று ; புகுந்த வீட்டில் ஒன்று என இரண்டு தெய்வங்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது… அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் யாரேனும் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
எல்லாம் சரி , ஆனால் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் என்ன செய்வது ..?
குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பு. மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம் எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.
ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள் ..! (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள் ..! அக்கோவிலுக்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..!!!
-
சித்தர்களின் ஜீவ சமாதியின் சிறப்பு என்ன?
ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள். ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான அத்மாவாக தான் பிறக்கிறோம். ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம்.
ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஆத்மாவானது, ஒரு உடலை தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம் ஒருங்கிணைவது என்று அர்த்தம். இதை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தியானம், தவம், கடுமையான விரதங்கள், என கடுமையான மனநிலைகளை கடந்து தான் இந்த ஜீவ சமாதியை நம்மால் அடையமுடியும்.
ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது அவரின் உடல் அழுகுவது இல்லை. மாறாக ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி, வற்றி போகும். கெட்டு போகாது இது எப்படி என்ற கேள்வி வரலாம்…… விடை காயகல்ப்பம். காயகல்ப்பம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று நாம் உட்கொள்ளுவது அதாவது மூலிகை தயாரிப்பு. மற்றொன்று சுவாச பயிற்சி. இங்கே ஜீவசமாதி அடைபவர்கள் இரண்டாவது வகை காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த சுவாச பயிற்சியின் படி, ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள். உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு, இதயத்துடிப்பு இல்லாமல் போவதால், உயிரற்ற உடலை போல் தெரியும். இவ்வாறு ஜீவசமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார்.
பொதுவாக ஜீவசமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் (vibrations) அந்த ஜீவசமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம் அவற்றை வலம்வரும் போது, அந்த அதிர்வுகளானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்துவிடும் ……… பல மகான்கள் ஜீவசமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம்.
மறுபுறம் சாதாரண மனிதர்களின் சமாதி என்பது இப்படி இல்லை. அவர்களின் உடல் அழுகிவிடும். எந்த ஒரு அதிர்வுகளும் இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இந்த சூட்சமங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் மகான்கள் ஆகிறார்கள். சூட்சமத்தை பயன்படுத்தி ஜீவசமாதி அடைகிறார்கள்….
-
திருப்பதி கோயிலில் செல்லிடப்பேசி செயலிக்கு பெயர் சூட்ட அழைப்பு
திருமலை திருப்பதி தேவஸ்தான செல்லிடப்பேசி செயலிக்கு பெயர் சூட்ட திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கு புத்தாண்டான யுகாதி அன்று அதாவது வரும் மார்ச் 29 செல்லிடப்பேசி செயலியை தொடங்க முடிவு செய்தது. இதன் மூலம் பக்தர்கள் எளிதாக ஏழுமலையானின் ஆர்ஜித சேவா, விரைவு தரிசனம் உள்ளிட்ட தரிசன டிக்கெட்டுகள், வாடகை அறை முன்பதிவு, ஏழுமலையானுக்கு நன்கொடை வழங்குவது உள்ளிட்ட சேவைகளை செல்லிடப்பேசி வாயிலாகப் பெற முடியும். இந்த செயலிக்கு இன்னும் தேவஸ்தானம் பெயர் வைக்கவில்லை.
இந்த செயலிக்கு பெயர் வைக்கும் வாய்ப்பை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி உள்ளது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் பெயர்களை onlineservices@tirumala.org என்ற மின்னஞ்சல் மூலமோ அல்லது 9399399399 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கோ மார்ச் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேவஸ்தானத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதிலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுத்து இந்த செயலிக்கு சூட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. -
திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய வசதி
திருப்பதி திருமலையில் உள்ள காத்திருப்பு அறைகளில் 24 மணி நேரமும் மருத்துவச் சேவை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருக்கும் சமயங்களில் இருதய, நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.

அதனால் தேவஸ்தானம் வைகுண்டம் 2-இல் ஒரு மருத்துவர், இரு செவிலியர்கள் கொண்ட மருத்துவ நல மையத்தை தொடங்கியது. பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும் சமயத்தில், மருத்துவர்களின் உதவி கூடுதலாக தேவைப்படுவதால் வைகுண்டம் 1-லும் தேவஸ்தானம் மருத்துவ நல மையத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இருதய நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி உள்ளதால் தேவஸ்தானம் வைகுண்டம் 1-இல் கூடுதலாக ஒரு மருத்துவ நல மையத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவ மையங்கள் செயல்படவில்லை. தற்போது அனைத்து மருத்துவ மையங்களிலும் ஒரு மருத்துவர், இரு செவிலியர்கள், ஒரு பாராமெடிக்கல் ஊழியர், ஒரு எம்.என்.ஓ. அல்லது எப்.எம்.என்.ஓ 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அதனால் இனி 24 மணி நேரமும் காத்திருப்பு அறைகளில் உள்ள மருத்துவ மையங்கள் திறந்திருக்கும். மேலும் இங்கு விலையுயர்ந்த அனைத்து மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், காத்திருப்பு அறைகளில் நடமாடும் மருத்துவ மையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக மாறினால் அவர்கள் உடனடியாக திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்தது. -
பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா….
வருங்காலம் நலமடையவும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைப் பெறவும் திருமுருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான பங்குனிஉத்திரம் வருகிற 9-4-2017 (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. ஒரு வீட்டை நிலை நிறுத்துவது மரத்தாலான உத்திரம் தான். இரண்டு தூண்களுக்கு இடையே உத்திரம் அமைப்பர். அதுதான் வீட்டைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறது.
குருவிற்கு சொந்த வீடாக அமைந்த மீனத்தில் சூரியன் பங்குனி மாதத்தில் சஞ்சரிப்பார். ‘உத்ரம்’ நட்சத்திரம் வரும்பொழுது பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு தங்கரதம் ஏறி வரும் முருகப்பெருமானை தரிசித்தால், மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். மன அமைதி கிடைக்கும்.
அதே போல உத்திரத்தன்று முருகனை வழிபட்டால், தூண் போல நம்மை அவன் தாங்கிப் பிடித்துக் கொள்வான். துயரங்களை துரத்திவிட்டு துணையாக நம்முடன் அவன் இருப்பான். அன்றைய தினம் முருகப்பெருமானை, சர்க்கரையால் அபிஷேகம் செய்து சந்தோஷம் காணுங்கள். இளநீரால் அபிஷேகம் செய்து இனிய வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். காவடி சுமந்தால் கவலைகள் குறையும். பால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்க்கை அமையும். -
திருப்பதி கோயிலில் 7 டன் மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்பயாகம்
திருப்பதி கோயிலில் வருடாந்திர புஷ்பயாகம் நேற்று நடைபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 7வது நாள் புஷ்ப யாகம் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கைவிடப்பட்ட இந்த புஷ்ப யாகத்தை 1980ம் ஆண்டு முதல் மீணடும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதத்தில் ஸ்ராவனம் ( திருவேணம் ) நட்சத்திரத்தில் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று புஷ்பயாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி திருமலை பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து துளசி, சாமந்தி, மல்லிகை, முல்லை, தாழம்பூ, ரோஜா, தாமரை, உள்ளிட்ட 18 வகையான 7 டன் மலர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. புஷ்பயாகத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட சுகந்த திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு நட்சத்திர ஆரத்தி நடந்தது. தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 7 டன் மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு வேத மந்திரம் முழங்க புஷ்பயாகம் நடைபெற்றது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சகஸ்கர கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம் ஆகியவை நேற்று ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ், அறங்காவலர் குழுத்தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
எலுமிச்சையின் மகிமை
ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.