ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் 63-ஆவது திவ்யதேசமாக விளங்குகிறது. இங்குள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் வழிபடுவதன் மூலம்நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தலசயனப்பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருஅவதார உற்சவம் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
நவம்பர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் காலை மாலை ஆகிய இருவேளைகளும் உற்சவம், திருமஞ்சனம், திருவீதி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கியமாக நவம்பர் 8-ம் தேதி பூதத்தாழ்வார் திருமஞ்சனம், மங்களாசாசனம் திருக்கைத்தல சேவையும், மண்டப அலங்கார திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.
Category: old…
old…
-
தலசயனப்பெருமாள் உற்சவ விழா அக்.30-ம் தேதி தொடக்கம்!
-
தீபாவளி பலகாரங்கள்….
தீபாவளி என்றாலே பட்டாசும் பக்ஷணங்கள் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு வகை பலகாரங்களை பார்க்கலாம். தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான்.
அதிரசம்
தேவையான பொருட்கள்….
2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.செய்முறை ….
அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.
சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.
சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அதிரசம் ரெடி.மொறு மொறு கை முறுக்கு
முறுக்கு வகைகளில், கை முறுக்கின் சுவை அலாதியானது. கைமுறுக்கு செய்ய தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 3 கப், உளுத்தம் மாவு – கால் கப், டால்டா – ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சீரகம் – 100 கிராம், வெண்ணெய் – அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
முறுக்கு செய்முறை
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும். பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.
ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும்.
முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
சுவையான கை முறுக்கு ரெடி.பாசிப்பருப்பு நெய் உருண்டை….
தேவையான பொருட்கள்….
பாசிப் பருப்பு – 2 கப், சர்க்கரை – 2 கப், நெய் 200 கிராம், ஏலக்காய் – 6, முந்திரி உடைத்தது 50 கிராம்
நெய் உருண்டை செய்முறை
பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.
வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான சத்தான இனிப்பு இது. -
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை!
முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவாப தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.
இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.
இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.
கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.
கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் வாழ்க்கையில் அனைத்து வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி. -
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கான போற்றிகள்…..
கந்தசஷ்டியை ஓட்டி விரதம் இருக்கும் அன்பர்கள் முருகப் பெருமானையும், அவரது வேலையும் வணங்குவது பெரும் பலனைத்தரும். குறிப்பாக, கந்தசஷ்டி விரத நாட்களில் வேல் அஷ்டோத்திர சத நாமாவாளி எனப்படும் 108 போற்றியைப் படித்தால் பயம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்.
ஓம் அருள்வேல் போற்றி
ஓம் அபயவேல் போற்றி
ஓம் அழகுவேல் போற்றி
ஓம் அரியவேல் போற்றி
ஓம் அணைக்கும் வேல் போற்றி
ஓம் அன்புவேல் போற்றி
ஓம் அற்புதவேல் போற்றி
ஓம் அடக்கும்வேல் போற்றி
ஓம் அந்தக எதிர்வேல் போற்றி
ஓம் ஆளும்வேல் போற்றி
ஓம் ஆட்கொள் வேல் போற்றி
ஓம் இனிய வேல் போற்றி
ஓம் இரங்கு வேல் போற்றி
ஓம் இலை வேல் போற்றி
ஓம் இறை வேல் போற்றி
ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
ஓம் ஈடிலா வேல் போற்றி
ஓம் உக்கிரவேல் போற்றி
ஓம் உய்க்கும் வேல் போற்றி
ஓம் எழில்வேல் போற்றி
ஓம் எளியவேல் போற்றி
ஓம் எரிவேல் போற்றி
ஓம் எதிர்வேல் போற்றி
ஓம் ஒளிர்வேல் போற்றி
ஓம் ஒப்பில் வேல் போற்றி
ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
ஓம் ஓங்கார வேல் போற்றி
ஓம் கதிர்வேல் போற்றி
ஓம் கனகவேல் போற்றி
ஓம் கருணைவேல் போற்றி
ஓம் கந்தவேல் போற்றி
ஓம் கற்பக வேல் போற்றி
ஓம் கம்பீர வேல் போற்றி
ஓம் கூர்வேல் போற்றி
ஓம் கூத்தன் வேல் போற்றி
ஓம் கொடுவேல் போற்றி
ஓம் கொற்ற வேல் போற்றி
ஓம் சமர்வேல் போற்றி
ஓம் சம்கார வேல் போற்றி
ஓம் சக்திவேல் போற்றி
ஓம் சதுர்வேல் போற்றி
ஓம் சங்கரன் வேல் போற்றி
ஓம் சண்முக வேல் போற்றி
ஓம் சமரில் வேல் போற்றி
ஓம் சர்வசக்திவேல் போற்றி
ஓம் சினவேல் போற்றி
ஓம் சீறும்வேல் போற்றி
ஓம் சிவவேல் போற்றி
ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி
ஓம் சித்ரவேல் போற்றி
ஓம் சிங்கார வேல் போற்றி
ஓம் சுரர்வேல் போற்றி
ஓம் சுடர்வேல் போற்றி
ஓம் சுழல்வேல் போற்றி
ஓம் சூரவேல்போற்றி
ஓம் ஞானவேல் போற்றி
ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
ஓம் தனிவேல் போற்றி
ஓம் தாரைவேல் போற்றி
ஓம் திருவேல் போற்றி
ஓம் திகழ்வேல் போற்றி
ஓம் தீரவேல் போற்றி
ஓம் தீதழிவேல் போற்றி
ஓம் துணைவேல் போற்றி
ஓம் துளைக்கும்வேல் போற்றி
ஓம் நல்வேல் போற்றி
ஓம் நீள்வேல் போற்றி
ஓம் நுண்வேல் போற்றி
ஓம் நெடுவேல் போற்றி
ஓம் பருவேல் போற்றி
ஓம் பரன்வேல் போற்றி
ஓம் படைவேல் போற்றி
ஓம் பக்தர்வேல் போற்றி
ஓம் புகழ்வேல் போற்றி
ஓம் புகல்வேல் போற்றி
ஓம் புஷ்பவேல் போற்றி
ஓம் புனிதவேல் போற்றி
ஓம் புண்யவேல் போற்றி
ஓம் பூஜ்யவேல் போற்றி
ஓம் பெருவேல் போற்றி
ஓம் பிரம்மவேல் போற்றி
ஓம் பொருவேல் போற்றி
ஓம் பொறுக்கும் வேல் போற்றி
ஓம் மந்திரவேல் போற்றி
ஓம் மலநாசகவேல் போற்றி
ஓம் முனைவேல் போற்றி
ஓம் முரண்வேல் போற்றி
ஓம் முருகன்வேல் போற்றி
ஓம் முக்தி தருவேல் போற்றி
ஓம் ரத்தின வேல் போற்றி
ஓம் ராஜவேல் போற்றி
ஓம் ருத்திரவேல் போற்றி
ஓம் ருணவிமோசன வேல் போற்றி
ஓம் வடிவேல் போற்றி
ஓம் வஜ்ரவேல் போற்றி
ஓம் வல்வேல் போற்றி
ஓம் வளர்வேல் போற்றி
ஓம் வழிவிடுவேல் போற்றி
ஓம் வரமருள்வேல் போற்றி
ஓம் விளையாடும் வேல் போற்றி
ஓம் வினைபொடி வேல் போற்றி
ஓம் வீரவேல்போற்றி
ஓம் விசித்திர வேல் போற்றி
ஓம் வெல்வேல் போற்றி
ஓம் வெற்றிவேல் போற்றி
ஓம் ஜயவேல்போற்றி
ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி!!! -
இது டிரம்ப் மகளின் தீபாவளி திட்டம்….
ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இப்பண்டிகையில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
அந்தவகையில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், விர்ஜினியா மாநிலத்தில் உள்ள இந்துக் கோயிலில் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளார். அக்டோபர் 26 ஆம்தேதி சான்டில்லியில் உள்ள ராஜ்தானி கோயிலுக்கு செல்லும் அவர், அங்குள்ள இந்திய-அமெரிக்க சமூக உறுப்பினர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட உள்ளதாக அவரது பிரச்சாரக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ள வேட்பாளரின் குடும்பத்தினர் இந்து கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். -
பழமுதிர்ச்சோலையில் நவம்பர் 5-ம் தேதி சூரசம்ஹாரம்….
பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31-ல் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா நவம்பர் 5 ஆம் தே நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் அழகர் மலையில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திங்கள்கிழமையன்று காலையில் 9.15 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது.
நவம்பர் 1 ஆம் தேதியன்று, மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் காட்சி தருவதும், தங்க ரத உலாவும் நடைபெறும். தொடர்ந்து நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நவம்பர் 5-ம் தேதி சனிக்கிழமையன்று சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது.
-
தீபாவளிக்கு மட்டும் திறக்கப்படும் அதிய கோயில்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோயில் ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்….
ஹாசனாம்பா கோயிலில் பல வீநோத நம்பிக்கைகள் உள்ளது….
மாமியார்-மருமகள் கல்….
ஒரு குட்டி கதை…. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ”வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
திருடர்கள் கோயில்…
ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக ‘திருடர்கள் கோயில்’ என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.
அணையா தீபம் …
ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.
கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…
கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.வாடா மலர்கள்….
ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை அக்டோபர் 20 ஆம் தேதி காலை திறக்கப்பட்டது.
அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை 13 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என்று மாவட்ட கலெக்டர் சைத்ரா அறிவித்து இருந்தார். -
சபரி மலை தரிசனத்திற்கு இலவச முன்பதிவு செய்ய….
மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன்களில் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். சில சமயங்களில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். அப்போது பக்தர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் நெரிசல் மூலம் விபத்துகளும் ஏற்படுவது உண்டு. இந்த சமயங்களில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் வெகு தொலைவிலிருந்து சபரிமலை வரும் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். இதை தவிர்ப்பதற்காக கேரள காவல் துறையின் சார்பில் கடந்த 2011ம் ஆண்டு முதல் தரிசனத்திற்கு இலவசமாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் மட்டும் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி 16 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த வருடமும் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் பின்னர் கூப்பனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். தரிசனத்திற்கு செல்லும்போது அந்த கூப்பனை பம்பையிலுள்ள போலீஸ் தகவல் மையத்தில் காண்பித்து டோக்கன் பெறவேண்டும். இந்த டோக்கனை காண்பித்து சன்னிதானத்தில் தனி வரிசையில் நின்று எளிதில் தரிசனம் செய்யலாம்.
-
திருமலையில் வாடகை அறை பெற முன்பணம் வசூலிப்பது ரத்து….
திருப்பதி ஏழுமலையான கோயிலில் தேவஸ்தான அறைகளில் தங்கும் பக்தர்கள் இனி முன்பணம் செலுத்த தேவையில்லை.
திருப்பதி செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான 6,500 அறைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ரூ.50-ல் இருந்து ரூ.6,000 வரை வாடகைக்கு அறைகள் உள்ளன.
அதில் குறைந்த வாடகையில் உள்ள அறைகளுக்கு ரூ.500-ம், மற்ற அறைகளுக்கு வாடகை தொகைக்கு ஏற்றார் போலவும் முன்பணம் பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேரம் விரயம் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இனிமேல் வாடகை அறைகளுக்கு முன்பணம் செலுத்த தேவையில்லை என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் திருமலையில் அறைகள் பெரும் பக்தர்கள் 24 மணி நேரம் மட்டுமே தங்க முடியும். தரிசனம் கிடைக்காமலோ அல்லது பேருந்து மற்றும் ரயில் கிடைக்காமல் போனாலோ தகுந்த ஆதாரங்களை காட்டி அறையில் கூடுதலாக ஒரு நாள் தங்கலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். -
மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஐப்பசி பூரம் விழா
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 26 ஆம் தேதி ஐப்பசி பூரம் விழா நடைபெறுகிறது. தீபாவளி தினத்தன்று அம்மனுக்கு தங்கக்கவசம், வைரக்கிரீடம் சாத்தப்படுகிறது.
அக்டோபர் 26 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு மூலஸ்தான அம்மன் மற்றும் உற்சவர் அம்மனுக்கு ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடைபெறுகிறது. உச்சிக்காலத்தில் ஆலவட்ட உற்சவர் அம்மன் சேத்தி வந்து சேரும்.
அக்டோபர் 29 ஆம் தேதி தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு தங்கக் கவசமும், வைரக்கிரீடமும் சாத்தப்படும். சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துபடியாகிறது.
அதேபோல அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை திருக்கோயிலில் கோலாட்ட உற்சவம் நடைபெறும். விழா தொடக்க நாள் முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளி, ஸ்ரீமீனாட்சிநாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்துவார்.நவம்பர் 4 ஆம் தேதி அருள்மிகு மீனாட்சியம்மன் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பார். நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் அருள்பாலிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.