Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • thiruppavai-padal-9

    தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
    தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
    மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
    ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
    ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
    மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

     

    பொருள்:

    பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

    விளக்கம்:

    உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

  • thiruppavai-padal-8

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
    கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
    ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

     

    பொருள்:

    மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் “ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.

    விளக்கம்:

    திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.

  • december-24-rasi-palan

    டிசம்பர் 24
    விளம்பி வருடம் – மார்கழி 9
    24-டிச-2018 திங்கள்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை இ 8.18
    நட்சத்திரம் : புனர்பூசம் இ 9.50
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – பாசம்
    மிதுனம் – நட்பு
    கடனம் – வெற்றி
    சிம்மம் – அன்பு
    கன்னி – சுகம்
    துலாம் – பொறுமை
    விருச்சிகம் – ஆதரவு
    தனுசு – லாபம்
    மகரம் – உயர்வு
    கும்பம் – அமைதி
    மீனம் – புகழ்

  • december-23-rasi-palan

    டிசம்பர் 23
    விளம்பி வருடம் – மார்கழி 8
    23-டிச-2018 ஞாயிறு
    நல்ல நேரம் : 6.00 – 7.00
    ராகு : 4.30- 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    மார்கழி 8,ஞாயிறு .
    திதி பிரதமை (தேய்பிறை)
    நட்சத்திரம்
    திருவாதிரை 42.15 (A.M 11.19)
    சந்திராஷ்டமம் கேட்டை, மூலம்
    இசுலாமிய‌ நாள் ரப்யூஸானி 15
    விரத‌, விசேஷங்கள்
    ஆருத்திரா தரிசனம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – தனம்
    மிதுனம் – மேன்மை
    கடனம் – நலம்
    சிம்மம் – ஓய்வு
    கன்னி – நன்மை
    துலாம் – சலனம்
    விருச்சிகம் – இன்பம்
    தனுசு – மறதி
    மகரம் – போட்டி
    கும்பம் – நிறைவு
    மீனம் – அமைதி

  • thiruppavai-padal-7

    திருப்பாவை பாடல் 7

    கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
    சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
    காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
    வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
    ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
    நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
    கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
    தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

     

    பொருள்:

    அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

    விளக்கம்:

    பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் “கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. “கேசவன் என்ற சொல்லுக்கே “தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.

  • paurnami-rasi-palan

    டிசம்பர் 22
    விளம்பி வருடம் – மார்கழி 7
    பவுர்ணமி
    சிதம்பரம் நடராஜர், சங்கரன்கோவில் சிவன் தேர்
    22-டிச-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி இ 12.25
    நட்சத்திரம் : மிருகசீரிடம் இ 12.38
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வரவு
    ரிஷபம் – பயம்
    மிதுனம் – நன்மை
    கடனம் – செலவு
    சிம்மம் – ஆதாயம்
    கன்னி – சுகம்
    துலாம் – நேர்மை
    விருச்சிகம் – கவலை
    தனுசு – தாமதம்
    மகரம் – லாபம்
    கும்பம் – அச்சம்
    மீனம் – பகை

  • thirumalayil-pournami-garuda-sevai-ratthu

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவத்தையொட்டி நாளை நடைபெற இருந்த பவுணர்மி கருட சேவை உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிக்கு 6வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது.

    கோபத்தில் வரும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்துவதுதான் இந்த பிரணய கலக உற்சவம்.அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபத்தை தணிக்கும் வகையில் மலையப்ப சுவாமி மீது பூப்பந்து வீசும் பிரணய கலக உற்சவம் நாளை மறுதினம் மாலை 4 மணி முதல் 6 மணிக்கு இடையே நடைபெற உள்ளது.

    அதனால் பௌர்ணமி தினமான சனிக்கிழமை (டிச. 22) இரவு நடைபெறவிருந்த கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (டிச. 23) பத்மாவதி ப்ரணயகலகோற்சவம் நடைபெற உள்ளது.

  • thiruvaiyaril-thyagaraja-aradhanai

    திருவையாறில் 172 ஆம் ஆண்டு தியாகராஜ ஆராதனை விழா ஜனவரி 21-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 21-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவுக்குச் சபையின் தலைவர் ஜி.ஆர். மூப்பனார் தலைமை வகிப்பார். இந்த விழாவை கர்நாடக, இந்துஸ்தானி இசை கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் சபையின் அறங்காவலர் குழுத் தலைவர் ஜி.கே. வாசன், தஞ்சாவூர் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    விழாக்காலமான 5 நாள்களிலும் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்கள் திருவையாறில் நடைபெறும் ஆராதனை விழாவில் பங்கேற்று, அவருடைய கீர்த்தனைகளை பாடி, அஞ்சலி செலுத்துவர்.

    ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளான ஜன. 25-ம் தேதி தியாகராஜ ஆராதனை நடைபெறவுள்ளது. இதில், இசைக் கலைஞர்கள் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி மகா அபிஷேகத்தில் பங்கேற்பர். இதனிடையே, தேசிய நிகழ்ச்சிகள் ஜன. 23-ம் தேதி இரவு நடைபெறும் என்றனர்.

  • thiruppavai-padal-6

    புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
    பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
    வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
    மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

     

    பொருள்:

    அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் “ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

    விளக்கம்:

    பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.

  • indraya-rasi-palan

    டிசம்பர் 21
    விளம்பி வருடம் – மார்கழி 6
    21-டிச-2018 வெள்ளி
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி இ 2.07
    நட்சத்திரம் : ரோகிணி இ 1.38
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – சுகம்
    மிதுனம் – கவலை
    கடனம் – வெற்றி
    சிம்மம் – நன்மை
    கன்னி – பயம்
    துலாம் – பாசம்
    விருச்சிகம் – சிக்கல்
    தனுசு – ஆதாயம்
    மகரம் – தோல்வி
    கும்பம் – இன்பம்
    மீனம் – லாபம்