Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • 2019 New Year predictions

    நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு மார்கழி மாதம்  17ம் தேதி முன்னிரவு – (1.1.2019) கிருஷ்ணபக்ஷ தசமியும் ஸ்வாதி நக்ஷத்ரமும் சுக நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 மணிக்கு கன்னியா லக்னத்தில் 2019 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

    ஸ்வாதி நக்ஷத்ரம் துலா ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் – ஆயுசுடனும் – ஆரோக்கியத்துடனும் – அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் – திருமணம் கைகூடி வரவும் – சந்தாண பாக்கியம் கிட்டவும் – நல்ல வேலை கிடைக்கவும் – வெளிநாடு பயணம் இனிதே பெறவும் – வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.

    இந்த ஆண்டு சிவனுக்கும் நரசிம்மருக்கும் உகந்த நக்ஷத்ரமான ஸ்வாதி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் – காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் – எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் சுகஸ்தானத்தில் இருக்கும் லக்னாதிபதி புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமன் நாராயணனையும் – ஸ்வாதி நக்ஷத்ரத்திற்கு உகந்த தேவதையான நரசிம்மரையும் வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். விளம்பி வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி நிகழும் புத்தாண்டை முதல்நாளே கொண்டாடுவது சிறப்பானதாகும். புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே. 

    கிரகநிலை:
    லக்னம் கன்னி – துலா ராசியில் சந்திரன், சுக்கிரன் – விருச்சிக ராசியில் குரு – தனுசு ராசியில் சூரியன், புதன், சனி – மகர ராசியில் கேது – மீன ராசியில் செவ்வாய் – கடக ராசியில் ராகு என கிரகங்களுடைய உலா இருக்கிறது. 

    ஆண்டின் தொடக்கத்தில் லக்ன தொழில் அதிபதி புதன் சுகஸ்தானத்தில் விரையாதிபதி சூரியன் – பஞ்சம ரண ருண அதிபதி சனியுடனும் இணைந்து இருக்கிறார். தனவாக்கு பாக்கியாதிபதி சுக்கிரன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சியாக அமர்ந்திருக்கிறார். தைரிய அஷ்டம ஸ்தானாதிபதி செவ்வாய் குரு வீடான மீன ராசியிலும் சுக களத்திராதிபதி குரு செவ்வாய் வீடான விருச்சிக ராசியிலும் பரிவர்த்தனை பெற்று அருளாசி வழங்குகிறார்கள். எனவே இவ்வாண்டு சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடப்பதைக் காட்டுகிறது. மேலும் லாபாதிபதி சந்திரன் லக்னத்திற்கு நட்பு கிரகமாவார். அவர் தனவாக்கு ஸ்தானத்தில் சுக்கிரனுடன் அமர்ந்திருப்பது யோகமாகும். அல்லல்கள் அனைத்தும் தீரப் போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மங்கள காரியங்கள் அனைத்தும் எந்த விதமான தங்கு தடையின்றி நடைபெறும். பூமியிலுள்ள மக்களுக்கெல்லாம் தைரியமும் – இறைவனின் பரம சைதன்யமும் நிறையப் போகிறது. கவலைகள் மறைந்து கை நிறைய தனலாபம் அமையப் போகிறது. 

    உயர்வான வாழ்க்கைக்கு எண் 5:
    1 + 1 + 2 + 0 + 1 + 9 = 14 = 1 + 4 = 5;

    இது புதனுடைய எண்ணாகும். புதன் நட்பு வீடான தனுசு ராசியில் சஞ்சாரம் பெறுகிறார். மேலும் சூரியன் சனியுடன் இணைந்திருக்கிறார். கல்வியையும் சாமர்த்தியத்தையும் குறிக்கும் எண் ஐந்தாகும். ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு அனைத்து விதமான நற்பலன்களையும் அளிக்கும் என நம்பலாம். மேலும் ஆண்டின் கூட்டுத் தொகையானது 3. இந்த எண் சுபகாரகன் குருவைக் குறிப்பதாகும். இவ்வருடம் எந்த ஒரு செயலையும் தொடங்க விரும்புபவர்கள் பெருமாளையும் – சிவனையும் வழிபட்டு வந்தால் அனைத்து காரியங்களும் கைகூடும். 

    வளமாக இருக்க போகும் ராசிகள்: 
    ரிஷபம் – கடகம் – விருச்சிகம் – மீனம்

    முயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்:
    மேஷம் – சிம்மம் – துலாம் – கும்பம்

    இறைவனை சரணடைவதன் மூலம் உபாயம் பெறப் போகும் ராசிகள்:
    மிதுனம் – தனுசு – கன்னி – மகரம்

    பொதுப் பலன்கள்:
    கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் – மழலை பாக்யமும் – வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை – எழுத்துதுறை – ஆசிரியர் துறை – கணிதம் – ரசாயணம் – ஆண்மீகம் – சோதிடம் – வழக்கறிஞர் துறை – புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் ஆட்சியாக இருப்பதால் கலைத்துறை செழிக்கும். கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் – டீசல் – கச்சா எண்ணை – சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் – வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். காட்டில் நெருப்பால் அழிவு ஏற்படலாம். அண்டார்டிகா – அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் – சுமத்ரா தீவு – ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள். 

    இவ்வாண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்: வாக்கிய பஞ்சாங்கப்படி:
    குருபகவான்:
    2019 – நவம்பர் மாதம் 23ம் தேதி (விகாரி வருஷம் – கார்த்திகை மாதம் 7ம் தேதி) தனுசு ராசிக்கு மாறுகிறார். தனுசுக்கு மாறும் குரு பகவான் தனது பஞ்சம பார்வையாக மேஷ ராசியையும் – சப்தம பார்வையாக மிதுன ராசியையும் – நவம பார்வையாக சிம்ம ராசியையும் பார்க்கிறார்.

    ராகு நிலை:
    2019 – பிப்ரவரி மாதம் 13ம் தேதி (விளம்பி வருஷம் – மாசி மாதம் – 01ம் தேதி) – புதன்கிழமை:
    கடக ராசியிலிருக்கும் ராகு பகவான் மிதுன ராசிக்கு மாறுகிறார். மாறும் ராகு பகவான் மேஷம் – சிம்மம் – தனுசு ராசிகளைப் பார்க்கிறார். (சிலர் ராகுவிற்கு பார்வையில்லை என்பர்)

    கேது நிலை:
    2019 – பிப்ரவரி மாதம் 13ம் தேதி (விளம்பி வருஷம் – மாசி மாதம் – 01ம் தேதி) – புதன்கிழமை:
    மகர ராசியிலிருக்கும் கேது பகவான் தனுசு ராசிக்கு மாறுகிறார். மிதுனம் – துலாம் – கும்பம் ஆகிய ராசிகளை பார்க்கிறார் கேது பகவான். (சிலர் கேதுவிற்கு பார்வையில்லை என்பர்) 

    – ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

    போன் – 7845119542

  • Thiruppavai – 17

    அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
    எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
    அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
    உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
    செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

    பொருள்:

    ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

    விளக்கம்:

    திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் “தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
     

  • January 1 Rasi Palan

    ஜனவரி 1
    விளம்பி வருடம் – மார்கழி 17
    ஆங்கில புத்தாண்டு
    01-ஜன-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    அ.கா    4.30
    நட்சத்திரம்    :    சுவாதி    ம    12.24
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பக்தி 
    ரிஷபம் – ஆக்கம் 
    மிதுனம் – சுகம்
    கடனம் –  இன்பம் 
    சிம்மம் – உற்சாகம் 
    கன்னி – சாந்தம் 
    துலாம் –  பெருமை     
    விருச்சிகம் – நிம்மதி
    தனுசு – பிரயாணம் 
    மகரம் – பொருமை 
    கும்பம் – முயற்சி
    மீனம் – நன்மை

  • Veetil Vaithu Vanangum Deivangal

    வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்.
    பொதுவாக வீட்டில் அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.
    அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும்.
    எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.
    குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும்.
    ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
    மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.
    அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
    சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.
    ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.
    குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.
    தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.
    ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
    லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.
    சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும்.
    ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.
    கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.
    அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.
    துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.
    சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும்.

  • Thirupathi Arjidha Sevai Divya Dharisanam Cancel

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    2019 ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் சாதாரண பக்தர்களை கோவிலில் சாமி தரிசனத்துக்கு எப்படி அனுமதித்தோமோ அதேபோல், 2019 ஆங்கில புத்தாண்டு தினத்திலும் பக்தர்களை கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உள்ளோம், எனத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     
    டிசம்பர் – 31, ஜனவரி – 1 இரு நாட்கள் ஏழுமலையான் கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் கார்டு வழங்குவது, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கான அனுமதி சீட்டு வழங்குவது, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் 7 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நாளை, நாளை மறுநாள் சாதாரண பக்தர்கள் இலவச தரிசனத்தில் எப்போதும் போலவே ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி தரிசன நடைமுறைகள் எப்படி பின்பற்றப்பட்டதோ, அதேபோல் 2019 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கான தரிசன நடைமுறை பின்பற்றப்படுகிறது. நாளை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் 500 பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 1 மணியளவில் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணியளவில் மார்கழி மாத பூஜைகள் நடக்கின்றன. 1.30 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இருந்து மறுநாள் நள்ளிரவு 1 மணிவரை இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

  • Thiruppavai – 16

    நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
    கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
    வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
    ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
    நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

    பொருள்:

    எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். “அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

    விளக்கம்:

    ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, “”இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. “அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், “இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.
     

  • December 31 Rasi Palan

    டிசம்பர் 31
    விளம்பி வருடம் – மார்கழி 16
    31-டிச-2018 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    அ.கா    5.02
    நட்சத்திரம்    :    சித்திரை    ம    12.38
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   அனுகூலம் 
    ரிஷபம் – நிம்மதி
    மிதுனம் – வெற்றி
    கடனம் –  அமைதி  
    சிம்மம் – சுகம் 
    கன்னி – நலம்  
    துலாம் –  முயற்சி    
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு – பெருமை 
    மகரம் – மேன்மை 
    கும்பம் – பக்தி 
    மீனம் – உயர்வு

  • Sabari Malai Nadai Thirappu

    மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 16-ந்தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.  மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்துவைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

    31-ந்தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும். பிரசித்திப்பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறும்.

    16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

  • Sangin Magimaigal

    சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். 

    அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 

    சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது. 

    இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர். 
    வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். 

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. 

    வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. 

    ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. 

    இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும். 

    ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். 
    கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம்
     

  • Indraya Naal Eppadi

    டிசம்பர் 30
    விளம்பி வருடம் – மார்கழி 15
    30-டிச-2018 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    கா    7.36
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ம    1.18
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : பூரட்டாதி, உத்திரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பக்தி  
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – பயம் 
    கடனம் –  நன்மை  
    சிம்மம் – ஆதரவு
    கன்னி – செலவு 
    துலாம் –  கோபம்    
    விருச்சிகம் – பெருமை   
    தனுசு – வெற்றி
    மகரம் – சாந்தம்  
    கும்பம் – நிம்மதி 
    மீனம் – நற்சொல்