Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கல்வியும், விவேகமும் பெருக….சகல செல்வங்களையும் அடைய….

    சரஸ்வதி
    (கல்வியும், விவேகமும் பெருக)
     
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    ஸர்வ ஸித்தீச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
     
     ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
    ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
    காமராஜாய தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீ ப்ரசோதயாத்
     
    லட்சுமி
    (சகல செல்வங்களையும் அடைய)
     
    ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
    ஸ்வஹ் காலகம் தீமஹி
    தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    விஷ்ணுபந்தாய ச தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் பூ ஸக்யைச வித்மஹே
    விஷ்ணுபத்னீ ச தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் அமிர்தவாசினி வித்மஹே
    பத்மலோசனீ தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

     

  • மார்ச் 20 – ஏகாதசி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஆர்வம்
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     – வெற்றி   
    கடகம்         –  கவனம்  
    சிம்மம்         –   நலம்  
    கன்னி         –    ஜெயம்
    துலாம்         –     பரிவு
    விருச்சிகம்     –  தோல்வி
    தனுசு         –     உதவி  
    மகரம்         –    சுகம்
    கும்பம்         –      சிக்கல்
    மீனம்         –      மறதி  
    சந்திராஷ்டமம்    –       அனுஷம், கேட்டை

  • மார்ச் 20 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்

    மார்ச் 20 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – பங்குனி 7
    சுபமுகூர்த்த நாள்
    20-மார்-2024 புதன்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி அ.கா 4.20
    நட்சத்திரம் : புனர்பூசம் முழுவதும்0.00
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • மார்ச் 19 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – பெருமை
    ரிஷபம்         – ஆக்கம்
    மிதுனம்     – நட்பு   
    கடகம்         –  நிறைவு
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    லாபம்
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     விருத்தி
    மகரம்         –    சுகம்
    கும்பம்         –      உதவி
    மீனம்         –      நன்மை
    சந்திராஷ்டமம்    –       விசாகம், அனுஷம்

  • மார்ச் 19 – பங்குனி 6

    மார்ச் 19 – பங்குனி 6
    சோபகிருது வருடம் – பங்குனி 6
    19-மார்-2024 செவ்வாய்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : தசமி
    திதி நேரம் : நவமி அ.கா 3.33
    நட்சத்திரம் : புனர்பூசம் இ 11.55
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்…

    பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை மற்றும் காவிரியில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து மூலவருக்கு  அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி -வள்ளி,தெய்வானை சமேதர் மற்றும் கொடிமரத்திற்கு  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பத்துநாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம் நாள் திருவிழாவான வருகிற மார்ச்  23ம்தேதியும், பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏழாம் நாள் திருவிழாவான வருகிற மார்ச் 24ம்தேதி ஞாயிற்றுகிழமை அன்றும் நடைபெறுகிறது. 27ம் தேதியன்று  கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வந்து பழனிஆண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

    முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம், கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும்‌ மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து,மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • மார்ச் 18 – இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – கவனம்
    ரிஷபம்         – ஆர்வம்  
    மிதுனம்     – மேன்மை  
    கடகம்         –  நன்மை
    சிம்மம்         –   பரிசு     
    கன்னி         –    லாபம்  
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  வரவு
    தனுசு         –     புகழ்
    மகரம்         –    களிப்பு
    கும்பம்         –      அமைதி
    மீனம்         –      ஜெயம்
    சந்திராஷ்டமம்    –       சுவாதி, விசாகம்

  • மார்ச் 18 – இன்றைய நல்லநேரம்

    மார்ச் 18 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – பங்குனி 5
    18-மார்-2024 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : நவமி
    திதி நேரம் : அஷ்டமி அ.கா 3.17
    நட்சத்திரம் : திருவாதிரை இ 10.38
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • மாரியம்மன் கோவில் பூச்சொரிதலை ஒட்டி மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை சுமந்து ஊர்வலம்….

    பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வீரசிங்கம்பேட்டை அருள்மிகு. மாரியம்மன் கோவில் பூச்சொரிதலை ஒட்டி தப்பாட்ட இசையுடன். கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் ஏராளமான பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    தஞ்சை அடுத்த வீரசிங்கம் பேட்டையில் அருள்மிகு.மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது. திருச்சேற்றுத் துறையில், இருந்து யானை மீது முளைப்பாரி வைக்கப்பட்டு, தப்பாட்ட இசையுடன், கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை எடுத்து ஊர்வலமாக  வந்தனர்.

    வழிநெடுக ஒவ்வொரு வீட்டிலும் முளைப்பாரி கலசம் எடுத்து வந்தவர்களுக்கு பாதபூஜை செய்து. தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து பூக்கூடை ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பூக்களை கொண்டு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டன.

  • யானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் அசைந்தாடி வந்த முருகன்… கண்கொள்ளா காட்சி…

    புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது  ஸ்ரீ முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி திருக்கோவில் . இந்த திருக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவு பல்வேறு வாகன சேவை நடைபெற்று வருகின்றது.

    இதனையொட்டி முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில்  யானை வாகனத்தில்  எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டு சென்றனர்.