Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • நவம்பர் 06 – சிக்கல் சிங்காரவேலன் தேர்…

    நவம்பர் 06 – சிக்கல் சிங்காரவேலன் தேர்…
    குரோதி வருடம் – ஐப்பசி 20
    நவம்பர் 06 – 2024
    புதன்
    சிக்கல் சிங்காரவேலன் தேர்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  பஞ்சமி இ 10.15
    நட்சத்திரம் :  மூலம் கா 9.46
    யோகம் : மரண-அமிர்த
    சந்திராஷ்டமம் :   ரோகிணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • நவம்பர் 06 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சுகம்
    ரிஷபம்         – பக்தி
    மிதுனம்     –  ஓய்வு
    கடகம்         –   பரிவு
    சிம்மம்         –   பாசம்
    கன்னி         –     நட்பு
    துலாம்         –  நன்மை
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –   ஆதரவு
    மகரம்         –   வெற்றி
    கும்பம்         –      போட்டி
    மீனம்         –    பொறாமை
    சந்திராஷ்டமம்    –        ரோகிணி

  • சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்…

    பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். 7ஆம் தேதி சூரசம்ஹாரம், 8ஆம் தேதி முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் இந்தக் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து கொடிப்பட்டதை சிவாச்சாரியார்கள் கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர்.

    தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தீப தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆறுநாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. விழாவின் உச்சகட்டமாக வரும் 7ஆம் தேதி சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.

  • திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்….

    திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி நிகழ்ச்சி சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. நவம்பர் 8-ஆம் தேதி உற்சவர் முருகப் பெருமானுக்கு பக்தர்களுக்கு முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல் கந்த சஷ்டி விழா, 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில், இந்த ஆண்டு இன்று 02-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.

     தினமும் அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும்,  காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவா் சண்முகருக்கு மலைக்கோயில் காவடி மண்டபத்தில் லட்சாா்ச்சனையும் நடைபெற்று. வெள்ளி கவச அலங்காரத்தில் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு மலைப்பகுதியில் உற்சவர் முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும்  நவம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு மலைக் கோவிலின் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது  இந்நிகழ்ச்சியில் கந்த சஷ்டி விரதம் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  • இலஞ்சி குமாரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்…

    தென்காசி மாவட்டம் இலஞ்சி குமாரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

    தென்காசி மாவட்டம் இலஞ்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இலஞ்சி குமாரர் கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்ச்சை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழாவானது இன்று அதிகாலை காலை 5 மணி கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து சுவாமிக்கு பலவேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து சிவாச்சாரியர்களின் முன்னிலையில் வேதமந்திரங்கள் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து மகா தீப ஆராதனையும் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. நவம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி அளவில் சூரசம்கார விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 9-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் பத்தாம் தேதி தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • நவம்பர் 03 – இன்றைய ராசிபலன்

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  கவனம்
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     –  நற்செயல்
    கடகம்         –   போட்டி
    சிம்மம்         –   பக்தி  
    கன்னி         –     இரக்கம்
    துலாம்         –  வரவு
    விருச்சிகம்     –  சுபம்  
    தனுசு         –   உற்சாகம்   
    மகரம்         –   உழைப்பு
    கும்பம்         –      மறதி
    மீனம்         –    சினம்  
    சந்திராஷ்டமம்    –        அசுபதி

     

  • நவம்பர் 03 – சந்திர தரிசன நாள்…

    நவம்பர் 03 – சந்திர தரிசன நாள்…
    குரோதி வருடம் – ஐப்பசி 17
    நவம்பர் 03 – 2024
    ஞாயிறு
    சந்திர தரிசன நாள்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : துவிதியை
    திதி நேரம் :  துவிதியை இ 9.30
    நட்சத்திரம் :  விசாகம் கா 6.14
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் :   அசுவினி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • நவம்பர் 02 – இன்று எந்த ராசிக்கு வரவு எந்த ராசிக்கு செலவு…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வரவு
    ரிஷபம்         – முயற்சி
    மிதுனம்     –  நன்மை
    கடகம்         –   பக்தி
    சிம்மம்         –   மேன்மை
    கன்னி         –     பாராட்டு
    துலாம்         –  நலம்    
    விருச்சிகம்     –  சிக்கல்
    தனுசு         –   சினம்  
    மகரம்         –   செலவு
    கும்பம்         –      பாசம்
    மீனம்         –    பணிவு
    சந்திராஷ்டமம்    –        ரேவதி

  • நவம்பர் 02 – கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

    நவம்பர் 02 – கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
    குரோதி வருடம் – ஐப்பசி 16
    நவம்பர் 02 – 2024
    சனி
    கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்,
    கல்லறை திருநாள்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பிரதமை இ 8.06
    நட்சத்திரம் :  சுவாதி அ.கா 4.18
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   ரேவதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு மஹா அபிஷேகம்…

    புதுச்சேரி ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை,ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு ஒன்பது வகையான வாசனை திரவியங்களால்  மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை.

    புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்று, ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு பால், தயிர், சந்தனம்,திருநீர், திருமஞ்சனம், குங்குமம், கலச நீர் என பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சோடச  தீபாராதனைகள் காட்டப்பட்டது.

    தொடர்ந்து ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா  லலிதாம்பிகைக்கு சகஸ்ரநாமம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மஹேஸ்வர சாஸ்திரி மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.