Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • துலாம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்தைரிய வீரிய  ஸ்தானத்தில் சுக்கிரன்பஞசம  ஸ்தானத்தில் சனிரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு அஷ்டம  ஸ்தானத்தில் குரு()  – தொழில்  ஸ்தானத்தில் செவ்வாய்அயன சயன போக  ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  தைரிய வீரிய  ஸ்தானத்தில் இருந்து சுக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் சுகஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    துலா ராசியினரே, இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் உண் டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும்தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக் கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக் கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதன் சஞ்சாரத்தால் புதிய பதவிகள் கிடைக்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக் கிடையில் இருந்த  பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்   மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    பெண்களுக்கு முயற்சிகளில் சாதக மான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப் படும் பணவரத்து கூடும்.

    மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

    சித்திரை:

    இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

    ஸ்வாதி:

    இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

    விசாகம்:

    இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

     

    பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

  • கடகம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

    கிரகநிலை:

    ராசியில் செவ்வாய்தைரிய வீரிய  ஸ்தானத்தில் கேதுபஞசம  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன்அஷ்டம  ஸ்தானத்தில் சனிபாக்கிய ஸ்தானத்தில் ராகு லாப  ஸ்தானத்தில் குரு() என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  ரண ருண ரோக  ஸ்தானத்தில் இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் பஞ்சம  ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கடக ராசியினரே, இந்த மாதம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.

    குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாக லாம். கணவன், மனைவி ஒருவருக்கொரு வர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள் வது நன்மை தரும்.

    பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை.

    மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

    புனர்பூசம்:

    இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

    பூசம்:

    இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

    ஆயில்யம்:

    இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

     

    பரிகாரம்: பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

    சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

  • சிம்மம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் கேதுசுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்பஞசம  ஸ்தானத்தில் சுக்கிரன்களத்திர  ஸ்தானத்தில் சனிஅஷ்டம  ஸ்தானத்தில் ராகு தொழில்  ஸ்தானத்தில் குரு()  – அயன சயன போக  ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  பஞசம  ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் சுக  ஸ்தானத்தில் இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    சிம்ம ராசியினரே இந்த மாதம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

    தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக் கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் செய் கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

    மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

    மகம்:

    இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

    பூரம்:

    இந்த மாதம் சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

    உத்திரம்:

    இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

     

    பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31

    சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

  • மிதுனம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் செவ்வாய்சுக ஸ்தானத்தில் கேதுரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்களத்திர  ஸ்தானத்தில் சுக்கிரன்பாக்கிய ஸ்தானத்தில் சனிதொழில்  ஸ்தானத்தில் ராகு அயன சயன போக  ஸ்தானத்தில் குரு() என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் ரண ருண ரோக  ஸ்தானத்தில் இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    மிதுன ராசியினரே நீங்கள் விடா முயற்சியுடைவர். இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. சந்திரன் சஞ்சாரம் பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    தொழில் வியாபாரம் மந்தமான நிலை யில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையி லும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.

    பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.

    மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.

    மிருகசீரிஷம்:

    இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

    திருவாதிரை:

    இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். ராகு சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், ராசிநாதன் பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.

    புனர்பூசம்:

    இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

    பரிகாரம்புதன் கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27

    சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

  • ரிஷபம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் குரு()  – தைரிய வீரிய  ஸ்தானத்தில் செவ்வாய்பஞசம  ஸ்தானத்தில் கேதுகளத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்அஷ்டம  ஸ்தானத்தில் சுக்கிரன்தொழில்  ஸ்தானத்தில் சனிலாப  ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024  அன்று சூர்யன் களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    ரிஷப ராசியினரேஇந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். சந்திரன் சஞ்சாரத் தால் பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

    தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக  அலைய வேண்டி இருக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

    கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.    

    பெண்களுக்கு: மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும்.

    மாணவர்களுக்குகல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

    கார்த்திகை:

    இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    ரோகினி:

    இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

    மிருகசீரிஷம்:

    இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

    பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31

  • மேஷ ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    மேஷம் (அஸ்வினி, பரணிகார்த்திகை 1ம் பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு()  – சுக ஸ்தானத்தில் செவ்வாய்ரண ருண ரோக ஸ்தானத்தில் கேதுஅஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன்லாப  ஸ்தானத்தில் சனிஅயன சயன போக  ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    மேஷராசியினரே, இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்உடல் ஆரோக்கியம் பெறும்மனதில் தைரியம் கூடும்சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக் கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

    குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங் கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

    பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.

    மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    பரிகாரம்: சுவாமிமலை முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

    அசுபதி:

    இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

    பரணி:

    இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

    கார்த்திகை:

    இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

     

    பரிகாரம்: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

  • நவம்பர் 08 – இன்றைய ராசிபலன்

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  செலவு
    ரிஷபம்         – துணிவு
    மிதுனம்     –  முயற்சி  
    கடகம்         –   பயணம்
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –     லாபம்  
    துலாம்         –  கவனம்  
    விருச்சிகம்     –  கீர்த்தி
    தனுசு         –   பயம்
    மகரம்         –   பொறுமை
    கும்பம்         –      ஆக்கம்
    மீனம்         –    நிம்மதி
    சந்திராஷ்டமம்    –        திருவாதிரை

  • நவம்பர் 08 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…

    நவம்பர் 08 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – ஐப்பசி 22
    நவம்பர் 08 – 2024
    வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி இ 8.22
    நட்சத்திரம் :  உத்திராடம் கா 9.37
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி…

    பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

     அறுபடைவீடுகளில் மூன்றும் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கந்தசஷ்டி  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. பிற்பகல் நேரத்தில் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக்குமாரசாமி,  மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார்.

    தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்சசியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.  

    300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சூரர்களை சம்ஹாரம் செய்த நிலையில் நாளை சண்முகர் -வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது.இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி , பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி செந்தில்குமார் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

  • பழமுதிர் சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்…

    முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற சூரசம்ஹாரம்: கொட்டும் மழையில் வெள்ளி வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வை திரளான பக்தர்கள் "அரோகரா, வெற்றிவேல் வீரவேல்" என்ற கோஷத்துடன் கண்டும்  சுவாமியை மலர்தூவி வரவேற்று தரிசனம் செய்து திரளான பக்தர்கள் வழிபாடு..:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் மலைமேல் ஆறாவது படை வீடாக போற்றப்படக் கூடிய பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் ஐப்பசி மாதம் 7 நாட்கள் கொண்டாக்கூடிய கந்தசஷ்டி விழா கடந்த 02ஆம் தேதி காலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் சமேதராக வீற்றிருக்கும் சோலைமலை உற்சவ மூர்த்திக்கு பால், பன்னீர், திரவியம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் தொடர்ந்து அலங்கார மகா தீபாரதனையும் நடைபெற்று வருகின்றது.

    தொடர்ந்து, சஷ்டி விழாவின் முதல் நாளில் முருக பெருமான் அன்னவாகனத்திலும், இரண்டாவது நாள் விழாவில், காமதேனு வாகனத்திலும், மூன்றாவது நாளில் யானை வாகனத்திலும், நான்காம் நாள் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், ஜந்தாவது நாளான நேற்று முருகபெருமான் சமேதராக
    சப்பர வாகனத்தில் புறப்பாடு திருக்கோவிலில் உள்ள மண்டபத்தை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து சஷ்டி விழாவின் முக்கிய நாளான இன்று, ஆறாவது நாள் விழாவாக காலை யாகசாலை பூஜையும், தொடர்ந்து சுவாமிக்கு  பால், பன்னீர். இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் முருகன் பெருமான் புறப்பாடு நடைபெற்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து, மாலை வெள்ளி மயில் வானத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோயிலின் அருகேயுள்ள நாவல் மரத்தடி ஈசான திக்கில் "வெள்ளி வேல் கொண்டு"  கஜமுகாசூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசூரனையும், சம்ஹாரம் செய்து, தொடர்ந்து பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது பரவலாக மழை பெய்த நிலையிலும், கூடியிருந்த திரளான பக்தர்களின் "அரோகரா கோஷமும், வெற்றிவேல் வீரவேல் கோஷமும்" விண்னை பிளந்தது. மேலும் இந்த சூரசம்ஹாரம் முடிந்து திருக்கோயிலுக்கு திரும்பிய சுவாமியை கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து, நாளை ஏழாவது நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணமும் அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் சஷ்டி விழா நிறைவடைய உள்ளது. நடைபெறுகிறது.