Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • அரங்கனின் திருவடிகளை சிறப்பிக்கும் பாதுகையின் மகிமை!

    ஸ்வாமி நிகமாந்த மகாதேசிகனின் கிரந்தங்கள் பல உண்டு. அவற்றில் தலைசிறந்தது பாதுகா ஸகஸ்ரம். 32 பத்ததிகளையும் 1008 ஸ்லோகங்களையும் கொண்ட இந்த பொக்கிஷம், ஒரே இரவில், ஒரு ஜாமத்தில் அருளப்பட்டதாம்.

    வைணவ சமயத்துக்கு ஓர் அரிய பொக்கிஷம் ஸ்வாமி வேதாந்த தேசிகர். இவர், காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள தூப்புல் எனும் சிறிய கிராமத்தில் புரட்டாசியில், திருவோண நட்சத்திரத்தில், திருவேங்கடவனின் திருமணியின் அம்சமாக திருஅவதாரம் செய்தார்.

    திருக்கோயிலின் மணி எங்கெங்கும் சங்கநாதம் ஒலிப்பது போல், ஸ்வாமி தேசிகரின் படைப்புகள் பாரெங்கும் அறம் பரப்பி ஒளிவீசித் திகழ்வதாகும். இவரின் 750-வது திருநட்சத்திர வைபவம் நம் தேசத்தில் மட்டுமின்றில் லண்டனிலுள்ள House of common சபையிலும் கொண்டாடப்படுகிறது.  

    ஸ்வாமி நிகமாந்த மகாதேசிகனின் கிரந்தங்கள் பல உண்டு. அவற்றில் தலைசிறந்தது பாதுகா ஸகஸ்ரம். 32 பத்ததிகளையும் 1008 ஸ்லோகங்களையும் கொண்ட இந்த பொக்கிஷம், ஒரே இரவில், ஒரு ஜாமத்தில் அருளப்பட்டதாம். அரங்கனின் திருவடிகளைப் (பாதுகை) பற்றி சிறப்பிப்பதாகத் திகழும் இந்த நூல், ஸ்வாமி நம்மாழ்வாரைப் பற்றிய ஸ்தோத்திர ரூபமான நூலாகவும் திகழ்கிறது. சம்ஸ்கிருதத்தில் அருளப்பட்ட இந்நூலை தமிழில் உரைநடைப்படுத்தி, அதன் மேன்மையை விளக்கியுள்ளனர், வைணவ மத பூர்வாச்சார்யார்கள்.

    இதில் 30-வதாகத் திகழும் ‘சித்ரப்பத்ததி’ என்பது, கணித மேதைகளும் வியக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. இதன் நடை ஆஸுகவி, விஸ்தாரக்கவி, விகடகவி, சித்திரக்கவி  என நான்கு வகையாகப் பிரித்தருளப் பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரை 'நாலுகவி பெருமாள்’ என்று சிறப்பிப்பார்கள். அதுபோன்று, ஸ்வாமி தேசிகனும் இந்த நான்கு நடையினையும் தமது கவிதைத் தொகுப்பில் பிரயோகித்துள்ளார்.

    ஆஸுகவி என்பது, மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் பாட்டைப் படிக்கையில் வேறு அர்த்தங்களைப் புகட்டும்.

    உதாரணமாக சொல்வதானால் லக்ஷ்மி சகஸ்ரம் எழுதிய அரசாணிப்பாளை வேங்கடாத்ரி என்ற கவி,  தமது நூல் ஒன்றை மேலிருந்து கீழாகப் படித்தால் ராமாயணத்தையும், கீழிருந்து மேலாகப் படித்தால் மகாபாரதம் படிப்பது போன்றும் அருளியிருப்பார்.

    இதைப் போலவே ஸ்வாமி தேசிகன் ஒரு செய்யுளின் இடையில்,  'காது பாஸ்ய ஸதாலோக’ என்ற வரியை அமைத்திருப்பார். இதைத் திருப்பிப் படித்தால்… அதாவது ‘காலோ தாஸஸ்ய பாதுகா’ என்று வரும்.இதைப்போன்றே இப்பாதுகா ஸஹஸ்ரத்தில், சம்ஸ்கிருதத்தில் வரையறுக்கப்பட்ட பல நடையுக்திகளைப் பயன்படுத்தி, அதை விஸ்தார கவியாக அழகுபடுத்தியுள்ளார்.

    மேலும், நகைச்சுவை, சிலேடை, ஹாஸ்யம் ஆகியவற்றையும் தமது பல நூல்களில் கையாண் டுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவ்வகையில் இந்த நூலில், ஸ்வாமி நம்மாழ்வாரின் சிறப்பினைச் சிலேடையாக எல்லா ஸ்லோகத்திலும் படைத்துள்ளார்.

    சித்திர வடிவில் வடிக்கப்படுவது சித்ரகவியாகும். திருமங்கை ஆழ்வார் குடந்தை சார்ங்கபாணியைக் குறித்து இப்படியான கவியை அருளியுள்ளார். இதனைச் சார்ங்கனின் திருச்சந்நிதி சுவரில் காணலாம். ஸ்வாமி தேசிகனும், தனது பாதுகா ஸஹஸ்ரத்தில் 30 ஆவது பத்தியான ‘சித்திரப் பத்ததியில்’ யந்திர வடிவில் சதுர தளமாகவும், அஷ்ட தளமாகவும், ஷோடஸ தள வடிவமாகவும், சக்ரபந்தமாகவும் பல வடிவங்களில் ஸ்லோகங்களை அமைத்துள்ளார்.

    தெய்வாம்சம் பொருந்திய இந்த ஸ்லோகங்களை உள்ளச் சுத்தியுடன் பாராயணம் செய்துவந்தால், வேண்டிய பலன்கள் வேண்டியபடி கிடைப்பது நிச்சயம்.
     

  • வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்!

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற ஜனவரி 10  ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

    இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 25 நிமிடத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர். ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த 10 நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுண்டர்கள் ஏற்பாடு செய்வதை செயல் அதிகாரி ஷியாமளா ராவ் மேற்கொண்டார். 

    திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு உண்டான 1.20 லட்சம் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் ஜனவரி 9 ஆம் தேதி காலை 5 மணிமுதல் தொடர்ந்து வழங்கப்படும். 3 நாட்களுக்கான டோக்கன்கள் முடிந்த பின்னர், அந்தந்த நாட்களுக்கு டோக்கன்கள் முந்தைய நாள் வழங்கப்படும்.

    இதற்காக திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுண்டர்களும், திருமலையில் 4 கவுன்டர்களும் என மொத்தம் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண் பித்து டோக்கன் பெற வேண்டும். இந்தமுறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அவர்களின் புகைப்பட அடையாளத்துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • சொந்த வீடு அமைய முருகனுக்கு வெற்றிலை தீப வழிபாடு!

    சொந்த வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்கு தான் இல்லை. அதற்கான வைராக்கியத்துடன் இருந்தால் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு இப்படி வெற்றிலையில் தீபம் ஏற்றி வாருங்கள்! நிச்சயம் அதற்குரிய பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். வீடு கட்ட நினைத்தால் மட்டும் போதாது, அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டே வர வேண்டும்.

    அப்படி செய்து வருபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பூஜை அறையில் முருகப் பெருமானுக்கு ஒரு மனையை அமைத்து அதில் மஞ்சள் தெளித்து, கோலமிட்டு கொள்ளுங்கள். அதில் முருகப் பெருமான் அல்லது சிலை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

    சஷ்டி திதியில் முதன் முதலாக உங்கள் செலவில் ஒரு செங்கல்லை மட்டும் வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். இந்த பூஜையின் பொழுது மஞ்சள், குங்குமம் இட்டு முருகனுக்கு அருகில் அந்த செங்கல்லை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஆறு விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி புது திரி போட்டு கொள்ளுங்கள். ஒவ்வொரு விளக்கையும் ஒவ்வொரு வெற்றிலையில் வைக்க வேண்டும். பரிகாரத்திற்கு பயன்படுத்தும் வெற்றிலை நுனி மற்றும் காம்பு உடைந்து இருக்கக் கூடாது.

    கந்த சஷ்டி கவசம், முருகன் ஸ்தோத்திரங்கள், சண்முக கவசம் போன்ற முருகனுடைய அருளைப் பெறுவதற்கு உரிய ஸ்லோகங்களை வாசிக்க வேண்டும். பின்னர் தீபத்தை ஏற்றி, தூப, தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும். நிவேதனத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பாயாசம், வடை, சுண்டல் அல்லது தனக்கு விருப்பமுள்ள எந்த பிரசாதத்தையும் செய்து வைக்கலாம்.

    உங்கள் வேண்டுதல் நிறைவேறும் பொழுது நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் இந்த செங்கல்லை கொண்டு முதன் முதலில் அஸ்திவாரம் அமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முருகனை நினைத்து ஒவ்வொரு செவ்வாய் தோறும் இப்படி முருக வழிபாடு செய்து வர நிச்சயம் உங்களுக்கும் சொந்த வீடு அமையும்.
     

  • நெற்றியால் கிடைக்கும் வெற்றி… ஜோதிடம் சொல்வது என்ன?

    னித வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை ஒருவரது நெற்றியின் அமைப்பே சொல்லி விடும் என்கிறது ஜோதிடம். நெற்றி சற்று மேடாக இருந்தால், லட்சுமியின் அருள் கிட்டும். இவர்கள் பிறந்த குடும்பமே வளம் கொழிப்பதாக இருக்கும். செல்வமும் செல்வாக்கும் நிறைந்த சூழலில் கவலையற்று வளருவார்கள். விசாலமான நெற்றி இருப்பது ஞானத்தின் சின்னமாகும். இப்படியான நெற்றி கொண்டவர்கள், கல்வி, கலைகளில் சிறந்தவர்கள். சிக்கன மனப்பான்மை அளவுக்கு மீறி இருக்கும். முப்பது வயது வரை போராட்டமான வாழ்க்கை அமையும். பிறகு திருப்பம் ஏற்படும்.

    சுருக்கம் நிறைந்த நெற்றியைக் கொண்டவர்கள், சஞ்சல சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். சந்தேகம் இவர்களுடைய இயல்பாக இருக்கும். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். சொந்தக் காலில் நிற்பார்கள். இவர்களுக்கு அமையும் மனைவி நேர் எதிரான குணமுடையவராக இருப்பார். குடும்ப வாழ்வில் நிம்மதியும், குழந்தைகள் மூலம் வாழ்வில் உயர்வும் உண்டு.

    அடிக்கடி வியர்வை வழியும் நெற்றியை உடையவர்கள் நாவன்மை மிகுந்தவராக இருப்பர். வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற கலைகளில் ஒன்றை வாழ்க்கை ஆதாரமாகக் கொண்டிருப்பார்கள்.

    வாழ்க்கைத் துணை

    ஜாதகத்தில்  7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அழகிய வாழ்க்கைத் துணை அமைவர் என்கின்றன ஜோதிட நூல்கள். 7-ம் இடத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷமான அமைப்பாகும். அந்த ஜாதகரின் வாழ்க்கை யோகமானதாக அமையும். செல்வம், செல்வாக்கு, புகழ், உயர்ந்த உத்தியோகம், உயர்ந்த பதவி போன்றவை ஏற்படும். அழகும், பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். அதேநேரம் திருமணம் சற்று தாமதமாகவே நடைபெறும்.

    காகம் பூக்கள் போட்டால்…

    பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் போட்டால் அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண்மகவு பிறக்கும். மணல், நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும். வீட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்துப் போவது நன்மையன்று.

    சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும். காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.

  • மீனம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    கிரகநிலை:

    ராசியில் ராகு  தைரிய வீரிய  ஸ்தானத்தில் குரு()  – பஞசம  ஸ்தானத்தில் செவ்வாய்களத்திர  ஸ்தானத்தில் கேதுபாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்தொழில்  ஸ்தானத்தில் சுக்கிரன்அயன சயன போக  ஸ்தானத்தில் சனி என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    மீனராசியினரே நீங்கள் கற்பனை வளமும் கலையார்வ மும் மிக்கவர்கள். இந்த மாதம் விருப்பங்கள் கைகூடும். சந்திரன் சஞ்சாரத்தால் பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர் கள்காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல்  வியாபாரம் இருந் தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.

    குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

    பெண்களுக்கு காரிய அனுகூலம் உண் டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.

    மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்திறமையுடன்  காரியங்களை செய்வீர்கள்.

    பூரட்டாதி:

    இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

    ரேவதி:

    இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

     

    பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

    சந்திராஷ்டம தினங்கள்: 25, 26, 27

  • கும்பம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    கும்பம் அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சனிதன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் ராகு சுக ஸ்தானத்தில் குரு()  – ரண ருண ரோக  ஸ்தானத்தில் செவ்வாய்அஷ்டம  ஸ்தானத்தில் கேதுதொழில்  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்லாப  ஸ்தானத்தில் சுக்கிரன் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    கும்பராசியினரே இந்த மாதம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம்  ஏற்படும். எதிர் பாலினத்தாரால்  லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம்காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்ப வர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள்  குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு  சங்கடப்பட வேண்டி இருக் கும்வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.

    குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள்  நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.

    பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாக லாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும்.

    மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்.

    அவிட்டம்:

    இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.

    சதயம்:

    இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

    பூரட்டாதி:

    இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

     

    பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24

  • விருச்சிகம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

    கிரகநிலை:

    ராசியில் சூர்யன், புதன் (), சந்திரன்தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சுக்கிரன்சுக ஸ்தானத்தில் சனிபஞசம  ஸ்தானத்தில் ராகு களத்திர  ஸ்தானத்தில் குரு()  – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்லாப  ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    விருச்சிக ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவன மாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்ச லும், பண விரயமும் இருக்கும்புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர் கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.

    குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளை கள் நலனில்  அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாக லாம். கவனமாக இருப்பது நல்லது

    பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடு படும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும்.

    மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

    விசாகம்:

    இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

    அனுஷம்:

    இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

    கேட்டை:

    இந்த மாதம் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

     

    பரிகாரம்: செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

    சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

  • தனுசு ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சுக்கிரன்தைரிய வீரிய  ஸ்தானத்தில் சனிசுக ஸ்தானத்தில் ராகு ரண ருண ரோக  ஸ்தானத்தில் குரு()  – அஷ்டம  ஸ்தானத்தில் செவ்வாய்தொழில்  ஸ்தானத்தில் கேதுஅயன சயன போக  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    தனுசு ராசியினரே இந்த மாதம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும்விருந்து கேளிக்கை  நிகழ்ச்சி யில்  கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர் களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.

    தொழில் வியாபாரம் நன்றாக  நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள்  வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும்.

    குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

    பெண்களுக்கு விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.

    மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு  மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

    பரிகாரம்: குரு பகவானை முல்லை மலரால் அர்ச்சனை செய்து வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு  உயரும்மன மகிழ்ச்சி உண்டாகும்.

    மூலம்:

    இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

    பூராடம்:

    இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதம். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

    உத்திராடம்:

    இந்த மாதம் பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

     

    பரிகாரம்: சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

    சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

  • மகரம் ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சனிதைரிய வீரிய  ஸ்தானத்தில் ராகு பஞசம  ஸ்தானத்தில் குரு()  – களத்திர  ஸ்தானத்தில் செவ்வாய்பாக்கிய ஸ்தானத்தில் கேதுலாப  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்அயன சயன போக  ஸ்தானத்தில் சுக்கிரன் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    மகர ராசியினரே  இந்த மாதம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம்ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது.

    கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்ப வர்கள்  பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லதுவீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கை யாக இருப்பது நல்லதுபயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவன மாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைக ளின் கல்வி தொடர்பான  விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லதுவாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  

    பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன்  சுமுகமாக பேசி பழகுவது நல்லது.

    மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது.

    உத்திராடம்:

    இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

    திருவோணம்:

    இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும்.

    அவிட்டம்:

    இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

     

    பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

    சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22

  • கன்னி ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் கேதுதைரிய வீரிய  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்சுக ஸ்தானத்தில் சுக்கிரன்ரண ருண ரோக ஸ்தானத்தில் சனிகளத்திர  ஸ்தானத்தில் ராகு பாக்கிய ஸ்தானத்தில் குரு()  – லாப  ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  சுக  ஸ்தானத்தில் இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024  அன்று சூர்யன் தைரிய வீரிய  ஸ்தானத்தில் இருந்து சுக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் பஞசம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கன்னி ராசியினரே நீங்கள் ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமுடையவர். இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மன குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரிய தடைகள் விலகும். புதன் சஞ்சாரம் பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார் கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு  சாதகமான பலன் காண்பார்கள்.

    குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல் பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

    பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

    உத்திரம்:

    இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகாமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவலகள் வந்து சேரும்.

    ஹஸ்தம்:

    இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

    சித்திரை:

    இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.   

     

    பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம் அன்னதானம் வழங்க மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

    சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13