Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • பிரித்தியங்கரா தேவிக்கு ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம்…

    அரியலூர்- பிரித்தியங்கரா தேவிக்கு ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தீபாவளிக்கு மறுநாள் என்பதால் இனிப்பு வகைகள் கார வகைகள் யாகத்தில் இடப்பட்டன.

    அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம்.இந்த ஆலயத்தில் அம்மாவாசை அன்று சண்டியாகம் நடைபெறுவது வழக்கம்.ஐப்பசி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சன்டி யாகம் நடைபெற்றது.

    யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டன. பின்னர் மா பலா வாழை மாதுளை திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பல்வேறு 108 வகையிலான மூலிகைகள் சேலைகள் யாகத்தில் இடப்பட்டன.

    பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரானது பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. யாகத்தில்  மதுரை, சேலம், கன்னியாகுமரி, கடலூர், சென்னை, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோயம்புத்தூர்   உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தீபாராதனைக்கு பின்பு  அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • தீபாவளி பண்டிகையை ஒட்டி கௌரி அம்மன் ஊர்வலம்….

    ஆம்பூர் அடுத்த  மின்னூர் பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கௌரி அம்மன் ஊர்வலமாக சென்று நீரோடையில் கரைத்த கிராம மக்கள் தாரை தப்பட்டை மானாட்டம் மயிலாட்டம் முழங்க பட்டாசு வெடித்து இளைஞர்கள் மகிழ்ந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுமின்னூர் பகுதியில் தீபாவளி பண்டிகை நாளில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள கௌரி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு நோன்பு படைத்தல் நிகழ்ச்சி வருடா வருடம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு பெண்கள் அதிரசம் பழங்கள் பூஜை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவைகளை சீர்வரிசையாக கொண்டு சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர் பின்னர் ஆலயத்தின் முன்பு ஒன்றாக இணைந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளி கலசத்தில் கௌரி அம்மன் முகம் பொருத்தி புத்தாடை மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வழிபட்டனர் பின்னர் தாரை தப்பட்டை , மானாட்டம்  மயிலாட்டம் கோலாட்டத்துடன் இளைஞர்கள் பட்டாசு வெடித்து அம்மனை  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நீரோடையில் கரைத்து வழிபட்டனர்.

  • அக்டோபர் 31 – தீபாவளி திருநாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பாராட்டு    
    ரிஷபம்         – பெருமை
    மிதுனம்     – போட்டி
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   நற்செயல்  
    கன்னி         –    சுகம்  
    துலாம்         –     நலம்
    விருச்சிகம்     –  முயற்சி
    தனுசு         –    பேராசை
    மகரம்         –   புகழ்
    கும்பம்         –     உயர்வு
    மீனம்         –    ஆதரவு
    சந்திராஷ்டமம்    –        சதயம், பூரட்டாதி

  • அக்டோபர் 31 – தீபாவளி

    அக்டோபர் 31 – தீபாவளி
    குரோதி வருடம் – ஐப்பசி 14
    அக்டோபர் 31 – 2024
    வியாழன்
    சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  சதுர்த்தசி மா 4.28
    நட்சத்திரம் :  சித்திரை முழுவதும் 0.00
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் :   பூரட்டாதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • அக்டோபர் 30 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  லாபம்   
    ரிஷபம்         – பிரீதி
    மிதுனம்     – நலம்
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   உயர்வு  
    கன்னி         –    ஆர்வம்
    துலாம்         –     களிப்பு  
    விருச்சிகம்     –  சிக்கல்
    தனுசு         –    பகை
    மகரம்         –   சிந்தனை
    கும்பம்         –     மேன்மை
    மீனம்         –    ஓய்வு
    சந்திராஷ்டமம்    –        அவிட்டம், சதயம்

  • அக்டோபர் 30 – மாத சிவராத்திரி

    அக்டோபர் 30 – மாத சிவராத்திரி
    குரோதி வருடம் – ஐப்பசி 13
    அக்டோபர் 30 – 2024
    புதன்
    மாத சிவராத்திரி
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : அதிதி
    திதி நேரம் :  திரையோதசி ம 2.21
    நட்சத்திரம் :  அஸ்தம் இ 11.22
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் :   சதயம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாணம்

    நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் கோலகலமாக நடைபெற்றது.ஆயிரகணக்காண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வைபவம் இன்று அதிகாலை கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்தது.

    இந்த விழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் மனக்கோலத்தில் எழுந்தருளினார். அதன்பின்னர் நெல்லை கோவிந்தர் மாப்பிள்ளை அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பரை சுவாமி சன்னதியில் இருந்து மேள தாளம் முழங்க தங்க பல்லக்கில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வந்தார்.

    அதனை தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாண சடங்குகள் செய்யபட்டு மாலை மாற்று வைபவம் நடைபெற்றது.பின்னர் சுவாமி நெல்லையப்பரிடம் வைத்து பூஜை செய்யப்பட்ட திருமாங்கல்யம் காந்திமதி அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாடச உபச்சார மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் ஆறுமுக நயினார் சன்னதியில் திருக்கல்யாண விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது இந்த விழாவின் தொடர்ச்சியாக சுவாமி அம்பாள் பூம் பல்லாக்கில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  • அக்டோபர் 29 – ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  மறதி  
    ரிஷபம்         – ஓய்வு
    மிதுனம்     – பாராட்டு
    கடகம்         –  சோதனை
    சிம்மம்         –   சாந்தம்  
    கன்னி         –    குழப்பம்   
    துலாம்         –     ஊக்கம்
    விருச்சிகம்     –  ஜெயம்
    தனுசு         –    நலம்
    மகரம்         –   பொறுமை
    கும்பம்         –     பயணம்
    மீனம்         –    நன்மை
    சந்திராஷ்டமம்    –        திருவோணம், அவிட்டம்

  • அக்டோபர் 29 – பிரதோஷம்

    அக்டோபர் 29 – பிரதோஷம்
    குரோதி வருடம் – ஐப்பசி 12
    அக்டோபர் 29 – 2024
    செவ்வாய்
    பிரதோஷம்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  துவாதசி ம 12.20
    நட்சத்திரம் :  உத்திரம் இ 8.48
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் :   அவிட்டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு….

    ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் இக்கோயிலில் மிளகாய் அரைத்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். இந்நிலையில் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில்  14 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக கடந்த சில மாதங்களாக கோயில் வளாகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் 9 45 மணிக்குள்  நடைபெறும் என அறங்காவலர் நிர்வாகிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்காக கூடுதல் வேலைபாடுகள் நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகத்தினர் 5.30 மணி அளவில் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக இன்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் உறுப்பினர்கள் மஞ்சுளாதேவி,மருதமுத்து, திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.