Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • பிரித்திங்கரா தேவிக்கு ஆவணி அமாவாசை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம்.

    அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இது ஆலயத்தில் அம்மாவாசை அன்று சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சன்டி யாகம் நடைபெற்றது.

    யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டன. பின்னர் மா பலா வாழை மாதுளை திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பல்வேறு 108 வகையிலான மூலிகைகள் சேலைகள் யாகத்தில் இடப்பட்டன.

    பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரானது பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. யாகத்தில்   கன்னியாகுமரி, சென்னை, பெரம்பலூர், மதுரை, கடலூர், தஞ்சாவூர், சேலம், திருச்சிராப்பள்ளி,     கோயம்புத்தூர்,   உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின்பு  அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்…

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு  நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாக்களில் ஆவணி மாதம் நடைபெறக்கூடிய மூலத் திருவிழா விமர்சியான திருவிழாவாகும். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்றைய தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடி பட்டம் பல்லக்கில் திருவீதி உலா எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்திருக்கும் சின்ன தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்ட கலசம் கொண்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருவூர் சித்தர் மானூர் அம்பலம் நோக்கி புறப்படும் நிகழ்ச்சி வரும் 10ம் தேதியும் கரூர் சித்தருக்கு சுவாமி, அம்பாள் காட்சி கொடுத்து சாப நிவர்த்தி பெரும் நிகழ்ச்சி வரும் 12ம் தேதியும் நடைபெறுகிறது.

  • அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு…. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…

    திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தலா ஐம்பது ரூபாய் கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கை லட்டு பிரசாத விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையானை  கும்பிட்ட பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்பதே தேவஸ்தானத்தில் பாலிசி என்று கூறிய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் சாமி கும்பிட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவையான எண்ணிக்கையில் தலா ஐம்பது ரூபாய் விலையில் லட்டுக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

     ஆனால் சாமி கும்பிடாமல் லட்டு மட்டுமே கேட்கும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் இரண்டு லட்டு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ்  திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    ஆனால் இதுவரை தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்ற பாலிசியை கவனிக்காமல் இருந்து விட்டதாகவும்,  கடந்த இரண்டரை மாதங்களாக தேவஸ்தான நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து நாளை முதல் ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றுடன் லட்டு கவுண்டர்களுக்கு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் டிக்கெட்டுக்கு ஒரு லட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    அதனுடன் கூடுதலாக  தேவஸ்தானத்தின் பாலிசியை அடிப்படையாகக் கொண்டு பக்தர்கள் தலா 50 ரூபாய் விலையில் தங்களுக்கு எத்தனை லட்டுக்கள் தேவையோ அத்தனை லட்டுக்களை  அன்லிமிடெட் ஆக வாங்கி கொள்ளலாம் என்று கூறினார்.

    மேலும் திருப்பதி மலையில் உள்ள இடைத்தரகர்களை ஒழித்து கட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பான பலனை கொடுப்பதாக கூறிய அவர், சாமி கும்பிடாமல் திருப்பதி மலையில் இருந்து ஒரு சிலர் ஏராளமான லட்டுக்களை வாங்கி சென்று அவற்றை தங்கள் வீட்டு திருமணங்களில் உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்ததை காண முடிந்தது.

    திருப்பதி தேவஸ்தான லட்டுக்களை வீட்டு விசேஷங்களில் உறவினர்களுக்கு வழங்குவதை அவர்கள் ஒரு கௌரவமாக கருதுகின்றனர். ஆனால் திருப்பதி லட்டு என்பது பிரசாதம். அதை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று அப்போது தெரிவித்தார்.

  • செப்டம்பர் 02 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  மகிழ்ச்சி
    ரிஷபம்         – நிறைவு
    மிதுனம்     – பகை
    கடகம்         –  மறதி  
    சிம்மம்         –   அச்சம்
    கன்னி         –    நலம்
    துலாம்         –     முயற்சி
    விருச்சிகம்     –  நன்மை
    தனுசு         –    அனுகூலம்  
    மகரம்         –   நட்பு
    கும்பம்         –     போட்டி
    மீனம்         –    பக்தி
    சந்திராஷ்டமம்    –         மூலம், பூராடம்

     

  • செப்டம்பர் 02 – அமாவாசை

    செப்டம்பர் 02 – அமாவாசை
    குரோதி வருடம் – ஆவணி 17
    செப்டம்பர் 02 – 2024
    திங்கள்
    அமாவாசை
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : அமாவாசை
    திதி நேரம் :  சதுர்த்தசி கா 6.32
    நட்சத்திரம் :  மகம் முழுவதும் 0.00
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • சனிபிரதோஷம்… நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை….

    ஆவணி மாதத்தில் வரும் இரண்டாவது சனிபிரதோஷத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள இரண்டாவது குருஸ்தலமான நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகள் வெகு விமரிணையாக நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடக்கும் நேரத்தில் மழை பெய்ததால் பக்தர்கள் மழையும் பொருட்படுத்தாமல் நாமபுரீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    இன்று ஆவணி மாதத்தில் வரும் இரண்டாவது சனிபிரதோஷ விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக் கூடிய ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

    இதில் சிவன் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதோடு எதிரே உள்ள நந்தி பெருமானுக்கு திரவியங்கள், மஞ்சள் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேன் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.

    மேலும் உற்சவ பிரதோஷ மூரத்தி கோவில் உள்பிரகாத ஆலயத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் நந்தி பெருமான் மற்றும் சிவபெருமானுக்கு தீபாதாரணை காட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    இதில் சூறை காற்றுடன் பெய்த கனமழையும் பொருட்படுத்தாமல்  பக்தர்கள்  கலந்து கொண்டு சிவபுராணம் பாடல்கள் பாடியும் நந்தி பெருமானையும் சிவனையும் வழிபட்டு சென்றனர்.

  • செப்டம்பர் 01 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வெற்றி
    ரிஷபம்         – போட்டி
    மிதுனம்     – அலைச்சல்
    கடகம்         –  ஓய்வு
    சிம்மம்         –   லாபம்  
    கன்னி         –    பக்தி
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     –  ஆர்வம்
    தனுசு         –    ஆதரவு
    மகரம்         –   பெருமை  
    கும்பம்         –     சிந்தனை
    மீனம்         –    நன்மை
    சந்திராஷ்டமம்    –         கேட்டை, மூலம்

     

  • செப்டம்பர் 01 – மாத சிவராத்திரி

    செப்டம்பர் 01 – மாத சிவராத்திரி
    குரோதி வருடம் – ஆவணி 16
    செப்டம்பர் 01 – 2024
    ஞாயிறு
    மாத சிவராத்திரி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  திரையோதசி அ.கா 5.17
    நட்சத்திரம் :  ஆயில்யம் இ 11.49
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • ஆகஸ்ட் 31 – பிரதோஷ நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  அனுகூலம்
    ரிஷபம்         – மகிழ்ச்சி
    மிதுனம்     – பெருமை
    கடகம்         –  சாதனை
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    வரவு
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  முயற்சி
    தனுசு         –    ஓய்வு
    மகரம்         –   சிந்தனை
    கும்பம்         –     சாந்தம்
    மீனம்         –    வளர்ச்சி
    சந்திராஷ்டமம்    –         அனுஷம், கேட்டை

  • ஆகஸ்ட் 31 – மகா பிரதோஷம்

    ஆகஸ்ட் 31 – மகா பிரதோஷம்
    குரோதி வருடம் – ஆவணி 15
    ஆகஸ்ட் 31 – 2024
    சனி
    மகா பிரதோஷம்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  துவாதசி அ.கா 4.42
    நட்சத்திரம் :  பூசம் இ 10.14
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : மூலம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்