செப்டம்பர் 09 – சஷ்டி விரதம்…
குரோதி வருடம் – ஆவணி 24
செப்டம்பர் 09 – 2024
திங்கள்
சஷ்டி விரதம்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி மா 6.26
நட்சத்திரம் : விசாகம் ம 3.49
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
செப்டம்பர் 09 – சஷ்டி விரதம்…
-
2000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்…
திருவண்ணாமலையில் 2000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலை வடக்குவீதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன்,பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேகமும், தீபாரதனையும் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைத்து நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு முலீகை பொருட்களை கொண்டு யாகம் நடத்தி பின்னர் மஹா பூர்ணாஹிதி நடைபெற்றது.
பின்னர் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர உச்சியில் அமைந்துள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம், தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தோன்ற மூல காரணமான ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
-
செப்டம்பர் 08 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
செப்டம்பர் 08 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
குரோதி வருடம் – ஆவணி 23
செப்டம்பர் 08 – 2024
ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி மா 5.15
நட்சத்திரம் : சுவாதி ம 1.58
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
செப்டம்பர் 08 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஜெயம்
ரிஷபம் – அலைச்சல்
மிதுனம் – அசதி
கடகம் – நன்மை
சிம்மம் – விவேகம்
கன்னி – அமைதி
துலாம் – செலவு
விருச்சிகம் – பயம்
தனுசு – கவலை
மகரம் – வரவு
கும்பம் – தாமதம்
மீனம் – தெளிவு
சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி -
ஸ்ரீ விஸ்வநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் மாயூரநாதர் யானைக்கு சிறப்பு பூஜை…
மயிலாடுதுறை ஸ்ரீ விஸ்வநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாயூரநாதர் யானை அவயாம்பிகைக்கு சிறப்பு பூஜை செய்து யானை காலில் வெள்ளி கொலுசு அணிவித்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காமராஜர் சாலை அருகே உள்ள ஸ்ரீ விஸ்வநாதபுரத்தில் ஸ்ரீ செல்வ கணபதி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாயூரநாதர் திருக்கோயில் அபயாம்பிகை யானைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலுக்கு வந்த யானையை கைலாய வாத்திய மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் பூத்தூவி வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து ஸ்ரீ செல்வகணபதி ஆலயம் முன்பு யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து யானைக்கு இரண்டு முன்னங்கால்களில் பக்தர்களால் வெள்ளி கொலுசு அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் யானை அபயாம்பிகையிடம் ஆசிர்வாதம் பெற்றனர். முன்னதாக ஸ்ரீ செல்வகணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
-
ஸ்ரீமஹா கணபதி ஆலய விநாயக சதுர்த்தி ப்ரமோத்ஸவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி…
தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீமஹா கணபதி ஆலய விநாயக சதுர்த்தி ப்ரமோத்ஸவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது,ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீமஹாகணபதி ஆலயம் உள்ளது,அகஸ்திய முனிவரால் பிரதிஸ்டை செய்யப்பட்டதும் கௌதம முனிவரால் பூஜிக்கப்பட்டு வேண்டிய வரம் தரும் ஸ்ரீமஹாகணபதி ஆலயத்தில் விநாயக சதுர்த்தி ப்ரமோத்ஸவம் கடந்த 29ம்தேதி விக்னேஸ்வர பூஜை கொடியேற்றத்துடன் தொடங்கியது,17 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் வேதபாராயணம், திருமுறைபாராயணம்; நடைபெற்று யானை வாகனம்,சிம்ம வாகனம், பூத வாகனம்,காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் சுவாமி புறப்பாடு மற்றும் தேர்திருவிழா ஆகியவை நடைபெற்றது,
மேலும் அதனைத்தொடர்ந்து இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது,முன்னதாக மஹாகணபதி மலர்களால்; அலங்கரிக்கப்பட்டு சிவகணங்கள் இசைக்க வீதிஉலா புறப்பாடு நடைபெற்று காவிரி ஆற்றில் அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிசேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது,
பின்னர் காவிரி ஆற்றில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது,இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தும் தீர்த்தவாரியில் பங்கேற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.
-
செப்டம்பர் 07 – சதுர்த்தி நாள் ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – கீர்த்தி
ரிஷபம் – திறமை
மிதுனம் – சிரமம்
கடகம் – நஷ்டம்
சிம்மம் – கவலை
கன்னி – பக்தி
துலாம் – நட்பு
விருச்சிகம் – பாசம்
தனுசு – வெற்றி
மகரம் – ஓய்வு
கும்பம் – அமைதி
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி -
செப்டம்பர் 07 – விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 07 – விநாயகர் சதுர்த்தி
குரோதி வருடம் – ஆவணி 22
செப்டம்பர் 07 – 2024
சனி
விநாயகர் சதுர்த்தி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி ம 3.38
நட்சத்திரம் : சித்திரை கா 11.44
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்3 -
விநாயகர் சதுர்த்திக்கு சிலை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை…
விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும். அதேபோல புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.
பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார். ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது. தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவை.
திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
-
விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள்…
அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.
உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.
வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.
இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.