சிவகங்கை மாவட்டம் தஞ்சாகூர் ஸ்ரீ அரூபசக்தி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் ஆலய – அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தஞ்சாகூர் கிராமத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவகுமார மௌனகுரு சுவாமிகள் நல்லாசியுடன் ஆதி வில்வ வன ஷேத்திரம் என்னும் ஸ்ரீ அரூபசக்தி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் ஆலய – அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா காலை மங்கள இசை பாராயணம் வேத பாராயணம் நான் மறை போற்றும் நாயகன் பரஞ்ஜோதிஸ்வரருக்கு நான்காம் கால வேள்விகள் தீபாராதனையுடன்.தொடங்கி பரிவார கலசங்கள் அனைத்து மூல மூர்த்திகளின் விமானங்கள் புறப்பாடாகி அருள்மிகு பரஞ்ஜோதிஸ்வரர். ஞானாம்பிகை ராஜகோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை பரஞ்ஜோதிஸ்வரர் மூலஸ்தான கும்பாபிஷேகம் மஹா அபிஷேகம் கோ பூஜை மஹா தீபாராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றது.
இக்கும்பாபிஷகம் விழாவை காண சிவகங்கை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகள் விமானகோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாரதனையுடன் மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இக்கோவில் மஹாகும்பாபிஷேக திருவிழா கடந்த 20ந்தேதி கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 4 கால யாகசாலை பூஜைகள் முடிவடிந்த நிலையில் இன்று மஹாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த புனித நீர் திருக்குடங்கள் மேள தளம், வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் வளாகத்தினை சுற்றி எடுத்து வரப்பட்டது.
இதையெடுத்து அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பாரிவார மூர்த்திகள் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மஹாகும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது
ஆலங்குடி அருகே உள்ள நம்பம்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா இன்று விமரிசியாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்தது.திருப்பணி வேலைகள் முடிந்து அதன் தொடர்ச்சியாக இன்று அக்கோயில்களின் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊரார்கள் ஏற்பாட்டில் கடந்த மூன்று தினங்களாக கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் சிவாச்சாரியர்களால் செய்யப்பட்டு இன்று காலை யாகசாலையில் இருந்து புனித நீரானது முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு கருட வாகனத்தில் வட்டமிட கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது .அதன் முத்துமாரி அம்மனுக்கு தீப ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு முத்துமாரியம்மன் அருள்பெற்று சென்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நம்பன் பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துறையினர் செய்தனர்.
இன்றைய ராசிபலன்
மேஷம் – குழப்பம்
ரிஷபம் – அமைதி
மிதுனம் – இரக்கம்
கடகம் – உழைப்பு
சிம்மம் – கோபம்
கன்னி – பயம்
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம் – வெற்றி
தனுசு – லாபம்
மகரம் – நன்மை
கும்பம் – மகிழ்ச்சி
மீனம் – பொறுமை
சந்திராஷ்டமம் – சித்திரை
திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்த நெல் வேலி திருவிளையாடல் திருவிழா நெல்லை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலின் தைப்பூச திருவிழாவில் நான்காம் திருநாளில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருநெல்வேலி என பெயர் காரணம் வர நடைபெற்ற சுவாமி நெல்லையப்பர் நெல்லுக்கு வெளியிட்ட திருவிளையாடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மகா மண்டபத்தில் எழுந்தருளினர் அதனை தொடர்ந்து வேத பட்டர் சுவாமிக்கு அமுது படைக்க நெல்லை நகர் வீதிகளில் நெல்மணிகள் யாசகம் பெற்று கோவில் பிரகாரத்தில் காய வைக்கும் நிகழ்வு நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வேதப்பட்டர் குளிக்க சென்ற போது மழை பெய்யும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் அருளால் வேதபட்ட காய வைத்த நெல் இருந்த இடத்தில் மட்டும் மழை பெய்யாமல் இருந்தது போன்ற திருவிளையாடல் நிகழ்வும் தத்ரூபமாக கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மூலம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குளிக்கச் சென்ற வேதபட்டார் மழை பெய்து நெல் நனையாமல் இருந்ததை கண்டு இன்புற்று பாண்டிய மன்னரிடம் தகவலை தெரிவித்து பாண்டிய மன்னருடன் சேர்ந்து வந்து பார்த்தபோது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் காட்சி கொடுக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த திருவிளையாடல் நிகழ்ச்சிகளை கோவில் ஓதுவார் பாடலாக பாடி தத்ரூபமாக விளக்கினார்.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று மாலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் விநாயகர் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் பஞ்சவர்ண வாகனத்திலும் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.