Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மீன ராசிக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும்…?

    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    கிரகநிலை:

    ராசியில் ராஹூ – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு  – களத்திர ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்,  புதன் – தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    08-01-2024 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    15-01-2024 அன்று சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-01-2024 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    27-01-2024 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    பிறரையும் தன்னைப் போல் நேசிக்கும் மீன ராசியினரே இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். பூமி – வீடு – வாகனம் சம்பந்தமான இனங்களில் அதிக லாபம் பெறுவீர்கள்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

    குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

    கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

    அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

    பூரட்டாதி:

    இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

    ரேவதி:

    இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

    பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7
    அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • கும்ப ராசிக்கு ஜனவரி மாத ராசிபலன்…

    கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

    கிரகநிலை:

    ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு  – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்,  புதன் – லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    08-01-2024 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    15-01-2024 அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-01-2024 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    27-01-2024 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    வாழ்க்கையில் மனிதர்களுக்கு முக்கியவத்துவம் அளிக்கும் கும்ப ராசியினரே நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். சனியின் பார்வை ராசியின் மீது பதிவதால் பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எதிர்காலத்திற்கு தேவையான பணிகளை திட்டமிடுவீர்கள்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

    பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

    அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

    அவிட்டம்:

    இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.

    சதயம்:

    இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

    பூரட்டாதி:

    இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

    பரிகாரம்:  சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;
    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாத ராசிபலன்…

    விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

    கிரகநிலை:

    ராசியில் சுக்ரன்,  புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு  – லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    08-01-2024 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    15-01-2024 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-01-2024 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    27-01-2024 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    திறமையுடன் செயலாற்றி வெற்றி பெறும் விருச்சிக ராசியினரே நீங்கள் எடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்வதில் கெட்டிக்காரர், இந்த மாதம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.  அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.

    தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம்.

    குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.

    பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம்.  

    மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

    கலைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்து வந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

    அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

    விசாகம்:

    இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

    அனுஷம்:

    இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

    கேட்டை:

    இந்த மாதம் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

    பரிகாரம்:  முருகனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்;
    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • ஜனவரி 2 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         –  அமைதி
    மிதுனம்     –   களிப்பு  
    கடகம்         –  சிக்கல்
    சிம்மம்         –   பயம்
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     ஜெயம்
    விருச்சிகம்     –  பரிசு
    தனுசு         –     பிரீதி
    மகரம்         –    நலம்
    கும்பம்         –      வெற்றி  
    மீனம்         –      ஆக்கம்  
    சந்திராஷ்டமம்    –      அவிட்டம்

  • ஜனவரி 2 – இன்றைய நல்லநேரம்

    ஜனவரி 2 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 17
    02-ஜன-2024 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி மா 4.06
    நட்சத்திரம் : பூரம் கா 11.12
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • ஸ்ரீ வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் ரூ.5 லட்சம் கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

    ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீ வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் புத்தாண்டு  முன்னிட்டு ரூபாய் 5 லட்சம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.

    ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள வி.எம்.வட்டத்தில்  அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் ஆலயத்தில் 2024 ம் ஆண்டு புதிய ஆண்டு முன்னிட்டு புத்தாண்டு விழா சிறப்பு அலங்காரம் நடைபெற்றது  கோவில் ஆலயத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ளான புதிய கரன்சி 500, 200, 100,  50, 20, புதிய நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

    மேலும் புத்தாண்டு முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு  சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது மேலும் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரத்தை காண ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், நாட்டறம்பள்ளி, பெங்களூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எக்ஸெல் ஜி. குமரேசன் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

  • திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை…

    திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இரவு 12 மணிக்கு அம்மனுக்குசிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    2024 ஆம் ஆண்டு பிறந்த ஆங்கில புத்தாண்டு தினத்தை உலக நாடுகள் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில்  சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் இரவு 12 மணிக்கு அம்மன் கருவறையில் இரண்டு பசுகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பட்டு ஆடை  அணிவித்துகோமாதா பூஜை நடைபெற்றது.

    பின்பு கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் பால் அபிஷேகம் தேன் சந்தன அபிஷேகம்அபிஷேகம் இளநீர் அபிஷேகம் போன்றபல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன பின்பு பல்வேறு மலர்களால்அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு  பல்வேறு வகையான பழங்கள் படையல் இட்டு நெய்வேத்தியம் காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனை நடைபெற்றது.

    இந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில் முன்னாள் அதிமுக நகர மன்ற தலைவர் மகேந்திரன் கலந்து கொண்டார் இந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில்ஆயிரக்கணக்கான பக்தர்களும்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு தரிசனம் செய்து முடித்த வந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கினார்.   

  • திருத்தணி முருகன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு…

    திருத்தணி முருகன் கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும் இந்த திருக்கோயிலில் 2024 ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நள்ளிரவு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது

    இந்நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் அறங்காவலர்கள்- சுரேஷ் பாபு, நாகன், ஆகியோர்கள் மலர்மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவம் செய்தனர்

    இதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகர் யோகி பாபு உடன் முருக பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கோரி மகிழ்ந்தனர். இந்த சிறப்பு நள்ளிரவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய மலைக்கோவிலில் குவிந்தனர் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்..

  • ஐனவரி 1 – புத்தாண்டு நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஆர்வம்
    ரிஷபம்         –  நன்மை
    மிதுனம்     –   பெருமை
    கடகம்         –  பக்தி
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    முயற்சி
    துலாம்         –     தனம்
    விருச்சிகம்     –  அசதி
    தனுசு         –     பாசம்
    மகரம்         –    பொறுமை
    கும்பம்         –      வரவு
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –      திருவோணம்

  • ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு

    ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு
    சோபகிருது வருடம் – மார்கழி 16
    01-ஜன-2024 திங்கள்
    ஆங்கில புத்தாண்டு
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : அதிதி
    திதி நேரம் : பஞ்சமி ம 2.08
    நட்சத்திரம் : மகம் கா 8.36
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்