Author: சக்தி ஆன்லைன் டீம்

  • thiruthani-kandha-sasti-pushpanja-vizha

    திருத்தணி, முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவில் புஷ்பாஞ்ச- நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆறுமுக சுவாமியை வழிபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் 5ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 08ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணிக்கு மலைக்கோயில் உள்ள மூலவ முருகப்பெருமானுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 5மணிக்கு முருகன் கோயிலின் உபக்கோயிலான ஆருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கோயில் ஊழியர்கள் மற்றும் முருக பக்தர்கள் ஊர்வலமாக சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு கொண்டுவந்தனர்.

    பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்ச- மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

  • thirupathy-mobile-app-stoped

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யக்கூடிய மொபைல் ஆப் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் எந்த இடத்தில் இருந்தும் தங்களது மொபைல் போன் மூலமாக அறைகள், தரிசன டிக்கெட் உள்ளிட்ட தேவஸ்தானத்தின் அனைத்து வசதிகளையும் முன்பதிவு செய்து கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தா திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்ற மொபைல் ஆப்பை பயனபாட்டிற்கு கொண்டு வந்தது.

    இந்த மொபைல் ஆஃப் சேவையில் பக்தர்கள் அறைகள் மற்றும் தரிசன டிக்கெட்டை பெற்ற பிறகு பணம் செலுத்தக்கூடிய கேட்வே பண பரிமாற்றத்தில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சனையின் காரணமாக தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பிறகு மொபைல் ஆஃப் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தேவஸ்தான தகவல் தொழில்நுட்ப துறை மேலாளர் சேஷாரெட்டி தெரிவித்துள்ளார்.

    எனவே பக்தர்கள் தேவஸ்தான மொபைல் ஆஃப் க்கு பதிலாக www.ttdsevaonline.com என்ற இணைய தளத்தில் தேவஸ்தானத்தின் சேவைகளை பயன்படுத்தி பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • indru-soora-samharam

    நவம்பர் 13
    விளம்பி வருடம் – ஐப்பசி 27
    கந்தசஷ்டி
    13-நவ-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி அ.கா 4.30
    நட்சத்திரம் : உத்திராடம் முழுவதும் 0.00
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – பாசம்
    மிதுனம் – தாமதம்
    கடனம் – நட்பு
    சிம்மம் – சாதனை
    கன்னி – உயர்வு
    துலாம் – நஷ்டம்
    விருச்சிகம் – அமைதி
    தனுசு – நலம்
    மகரம் – வெற்றி
    கும்பம் – கோபம்
    மீனம் – ஆர்வம்

  • malaikottai-maha-deepam

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலை உச்சியில் வருகிற 23-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    மலையின் உச்சியில் உச்சி பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி முன்னதாக செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை கொண்டு செய்த திரி வைக்கப்படும். அதில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவையும் ஊற்றப்படும். செப்புக்கொப்பரையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும்.

  • thiruchenduril-soorasamharam

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது. மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாய அபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

  • indraya-rasi-palangal

    நவம்பர் 12
    விளம்பி வருடம் – ஐப்பசி 26
    12-நவ-2018 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி இ 2.30
    நட்சத்திரம் : பூராடம் இ 3.39
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – முயற்சி
    ரிஷபம் – தொல்லை
    மிதுனம் – சிக்கல்
    கடனம் – பக்தி
    சிம்மம் – லாபம்
    கன்னி – நிம்மதி
    துலாம் – பிரிவு
    விருச்சிகம் – ஆக்கம்
    தனுசு – இன்பம்
    மகரம் – நற்செயல்
    கும்பம் – நஷ்டம்
    மீனம் – உற்சாகம்

  • naga-chadurthi-vinayagarai-vazhipadungal

    நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உகந்த விஷயமாக சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் இது. என்றாலும் இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள்!

    ஆடி மாதத்தில் வருகிற நாக பஞ்சமியும் நாக சதுர்த்தியும் விசேஷமானவை. ஆனாலும் ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுவது இன்னும் இன்னுமான பலன்களைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இன்றைய தினம்… நாக சதுர்த்தசி. இந்த நாளில் அருகம்புல் சார்த்தி, கொழுக்கட்டை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வணங்கினால், ராகு கேது முதலான தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும். சங்கடங்கள் அனைத்தும் விலகும்! சந்தோஷங்கள் பெருகும்.

    இந்த நாளில், லட்சுமி குபேர பூஜை செய்வதும் விசேஷம். அல்லது அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை வணங்கிப் பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

    சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபடுவதுடன், அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று, நாகராஜரை முட்டை, பால் வைத்து வழிபட்டால், சர்ப்ப தோஷ நிவர்த்தி நிச்சயம்!

  • suba-muhurtha-naal-indru

    நவம்பர் 11
    விளம்பி வருடம் – ஐப்பசி 25
    நாக சதுர்த்தி
    11-நவ-2018 ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி இ 12.44
    நட்சத்திரம் : மூலம் இ 1.28
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆர்வம்
    ரிஷபம் – உதவி
    மிதுனம் – அலைச்சல்
    கடனம் – குழப்பம்
    சிம்மம் – ஜெயம்
    கன்னி – பரிசு
    துலாம் – புகழ்
    விருச்சிகம் – நன்மை
    தனுசு – பரிவு
    மகரம் – வெற்றி
    கும்பம் – சினம்
    மீனம் – உயர்வு

  • santhosathai-nilaika-seiyum-kandha-sasti

    முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுஷ்டிக்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

    கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் விடியற்காலை துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்தபடி முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதைத் தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும். கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால், பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

    ஆறாம் நாள் சஷ்டித்திதியில், சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்குமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிரானுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிக விசேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விழித்திருத்தல்) பொருத்தமானதே.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

  • thiruchanoor-bramorchava-vizha

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் டிசம்பர் மாதம் 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 8-ந்தேதி கஜவாகனம், 9-ந் தேதி தங்கதேரோட்டம், கருடவாகனம், 11- ரதஉற்சவம், 12-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    பிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்களை கவரும் விதமாக திருப்பதியில் கண்காட்சி விளம்பரங்களும் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்புக்கு 300 ஸ்ரீவாரி சேவகர்களும் விஜிலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து சேவைபுரிய உள்ளனர்.