Author: சக்தி ஆன்லைன் டீம்

  • rameswaram-koilil-naalai-arudhra-thiruvizha

    ராமேசுவரம் கோவிலில் ஆருத்ரா திருவிழா வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

    காலை கோவிலின் 3-ம் பிரகாரத்தில் 1 லட்சம் ருத்ராட்சைகளால் ஆன மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜருக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.

    தொடர்ந்து 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாணிக்கவாசகர் தங்ககேடயத்தில் நடராஜர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி அன்று ஆருத்ராதரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்று அதிகாலை 3 மணியில் இருந்து 4.30 மணி வரை நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு பால்,பன்னீர்,திரவியம்,மாபொடி,மஞ்சள் பொடி உள்ளிட்ட பல பொருட்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடை பெறுகிறது.தொடர்ந்து நடராஜர்-சிவகாமிஅம்பாளுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி தலைமையில் உதவிகோட்டபொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் காரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கண்ணன், அண்ணாதுரை, கலைச்செல்வன், செல்லம், கமலநாத உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ஆருத்ரா திருவிழாவையொட்டி வருகிற 23-ந் தேதி அன்று கோவில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனமும் நடைபெற்று அதிகாலை 5.15 மணிக்கு நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனம் நடை பெறும் எனவும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • thirupathyku-inayana-thirunarayur

    ஆழ்வார்கள் க்ஷேத்திரங்கள் தோறும் சென்று பக்தியில் ஆழ்ந்து பெருமாளைப் பாடி பரவசம் கொண்டனர். திருமங்கையாழ்வார் திருநாறையூர் ஸ்ரீ நிவாசப்பெருமாளைப் பாடப் பெற்ற சிறப்பு மிக்க திவ்ய தேசஸ்தலம். இது பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 20வது திவ்ய தேசமாகும்.

    ” செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்” என்று திருமங்கையாழ்வார் பாசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 70 சிவாலயங்களைக் கட்டிய அரசன் கோச்செங்கட்சோழன், ஸ்ரீ நிவாசப்பெருமாளின் ஆணைப்படி 71வது கோயிலாகக் கட்டினான் என்பதை உறுதி கூறும்.

    பல தீங்குகள் செய்து வந்த சண்டன்,ஹேமனை அழிக்க பெரிய திருவடியாகிய கருடன், இந்திரனின் ஆசி பெற்று மேருமலையின் சிகரத்தில் ஒன்றைப் பிடுங்கி எறிந்து அவர்களை அழித்தார். இத்தலத்தில் விழுந்த சிகரமே”சுகந்த கிரி” எனப்பட்டது.

    திருப்பதி பெருமாளைத் தரிசித்த இணையான பலன் இத்தலப் பெருமாளுக்கு உண்டு.மூலவருடன் தாயார் வஞ்சுளவல்லியும் உடனமர்ந்து அருள் பாலிக்கிறார். திரு என்பது இலக்குமி மையும்,பறை என்பது தேனையும் குறிக்கும்.சோலைகளின் வளத்தினால் தேன் பெருக்கெடுத்து ஓடியதால் நறையூர் என்றும் திருவாகிய தேவிக்கு தேனின் இனியதாக இருப்பதின் காரணமாக “திருநறையூர் எனப் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

    மணிமுக்தா நதி தீரத்தில் தவம் புரிந்த மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை அவருக்கு மகளாய் பிறந்த வஞ்சுள வல்லியை மானிட உருவில் வந்து திருமணம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.

    திருப்பதிக்கு இணையான திருத்தலமானதில் திருமங்கையாழ்வாருக்கு ஆசாரியனாகவும், முத்திரை தானம் செய்தவரும் ஆனால் இவரை”பனையூர் நம்பி” எனப் போற்றுகின்றார்.

    நறையூர் தம்பிக்கு பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன ஆயினும் மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வரும் முக்கோடித் தெப்பத்திருவிழா பெரும் சிறப்புடையதாகும். இதன் ஒர் அங்கமாக”கல் கருட சேவை”புறப்பாடு மிகச் சிறப்பாக நடைபெறும்.

    திருநாறையூர் கும்பகோணத்தில் இருந்து 10கி‌மீ தொலைவில் அமைந்துள்ளது ‌ சாளக்கிராமத் திருமேனியராய் மூலஸ்தானத்திற்க்கு கீழே தெற்கு நோக்கி அருளும் கல் கருடன் வேறெங்கும் இல்லாத சிறப்பையும் ,”கல் கருடன் புறப்பாடும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு இருமுறை இக் கல் கருட சேவை நடைபெறும். முதலில் 4 பேர் சுமந்து வரபின்8 பேர் எனப் படிப்படியாக 16பேர், 32பேர், 64பேர், 128 பேர் என சுமப்பவர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.

    இறுதியில் வீதியுலா சப்பாத்தின் மூலம் நடக்கும். முதலில் நால்வராகவும் பின்னர் நூற்றுக்கணக்கானவர் சேர்ந்து சுமக்கும் வலிமையான வராகிறார் கருட பகவான்.மாலை 6மணியளவில் கிளம்பும் கருட பகவான் திருக்கோயிலை அடைய விடியற்காலை ஆகி விடும்.பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் பக்தி பரவசமாக இக்காட்சியை காண கூடுகின்றனர்.

  • parthasarathy-koilil-sorgavasal-thirappu

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் டிசம்பர் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவில் களில் உள்ள பெருமாளை வழிப்பட்டு உள்ளனர்.

    இந்தகோவிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக அருள்பாலிக்கிறார்.

    இந்தக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந்தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வேணுகோபாலன், காளிங்கர்நர்த்தன, சக்கரவர்த்தித்திருமகன் திருக்கோலங்களில் விழா நடந்து வருகிறது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) ஏணிக்கண்ணன் திருக் கோலம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து ராப்பத்து திருவிழாவின் முதல் நாள் திருவிழா வரும் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு சாமி உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தொடர்ந்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. தொடர்ந்து அன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை மூலவர் தரிசனம் நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 12 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 19-ந்தேதி ராப்பத்து 2-ம் நாள் திருவிழா தொடங்கி வரும் 28-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

    குறிப்பாக 24-ந்தேதி முத்தங்கி சேவை நடக்கிறது. ராப்பத்து திருவிழா நாட்களில் தினசரி மாலை 5.30 மணிக்கும், 27-ந்தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. அன்று ‘ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உற்சவம்’ நிகழ்ச்சியும் நடக்கிறது.

  • indraya-rasi-palan

    டிசம்பர் 13
    விளம்பி வருடம் – கார்த்திகை 27
    13-டிச-2018 வியாழன்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி இ 11.50
    நட்சத்திரம் : அவிட்டம் மா 6.27
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – பயம்
    மிதுனம் – பாசம்
    கடனம் – சிக்கல்
    சிம்மம் – ஆதரவு
    கன்னி – தோல்வி
    துலாம் – நோய்
    விருச்சிகம் – லாபம்
    தனுசு – செலவு
    மகரம் – சுனம்
    கும்பம் – கவலை
    மீனம் – வெற்றி

  • indru-naal-eppadi

    டிசம்பர் 10
    விளம்பி வருடம் – கார்த்திகை 24
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : திரிதியை
    திதி நேரம் : திரிதியை மா 5.35
    நட்சத்திரம் : பூராடம் கா 10.54
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – ஆதாயம்
    மிதுனம் – வரவு
    கடனம் – தடங்கல்
    சிம்மம் – நன்மை
    கன்னி – சுகம்
    துலாம் – பெருமை
    விருச்சிகம் – நலம்
    தனுசு – நற்செயல்
    மகரம் – உழைப்பு
    கும்பம் – உதவி
    மீனம் – அலைச்சல்

  • thiruchedur-koil-nadai-thirappu-neram-matram

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்….

    மார்கழி மாத பிறப்பையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் டிச. 16 முதல் ஜன. 14வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். தொடர்ந்து, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 – 7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், மாலை 6.45 முதல் இரவு 7 மணிக்குள் ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.

    இதேபோல முக்கிய விழா நாள்களான டிசம்பர் 23ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 1ஆம் தேதிஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

  • pavangalai-pookum-narashimar

    பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு விரதம் மேற்கொண்டால் பாவம் ஒழிந்து புண்ணியம் கிடைக்கும்.

    விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் ஊரில் உள்ள கோவில் தான் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இந்த கோவிலில் மூலவராக லட்சுமி நரசிம்மரும், அம்மனாக கனகவல்லியும் உள்ளனர். இந்தியாவிலேயே இந்த கோவிலில் தான் நரசிம்மர் சுவாமியை லட்சுமியும், லட்சுமியை நரசிம்மரும் ஆலிங்கனமும் செய்தபடி காட்சியளிக்கின்றனர்.

    திருமணத்தடை காரியத்தடை உள்ளவர்கள் இங்கு பரிக்கல் கோவிலுக்கு வந்து தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதே போல், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், வேலை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டால் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும்.

    விரதம் இருந்து பரிக்கல் கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வைத்தும், பக்த ஆஞ்சநேயருக்கு முன்பு நெல் கொட்டி அதில் எழுதி வைத்து வழிபட்டால், பக்தர்களின் நியாயமான குறைகள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பக்தர்கள் தங்கள் வாழ்வில், பிறவியில் வந்த பாவங்கள் அழிந்து புண்ணியம் கிடைக்க வழிவகுக்கும்.

  • srirangam-koil-pagal-patthu-sirappugal

    வைகுண்டத்தை திருநாடு என்று போற்றுவார்கள். அந்தத் திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் எனும் எந்த உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர்.
    பரசவநிலையில் பெருமாளைப் புகழ்ந்து ஆடிப்பாடுவர். இந்தக் காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அரையர் எனும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

    இதோ… வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் பகல்பத்து ராப்பத்து உத்ஸவங்களும் விழாக்களும் விமரிசையாக துவங்கிவிட்டன. இந்த வேளையில், அரையர் சேவையில் பெருமாளை சேவிக்க காணக் கண் கோடி வேண்டும்.
    அரையர் சேவைக்கென்று தனி உடை, பிற அலங்காரம் எதுவும் செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ தொப்பி ஒன்றை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் ஆகியவற்றை மட்டும் அணிந்து கொண்டு அபிநயம் செய்வர். நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இந்தச் சேவையை தொடங்கிவைத்தார். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவங்களைக் காட்டி அரையர் காட்டி நடிப்பார்கள்.
    அரையர் சேவையில் முத்துக்குறி எனும் பகுதி உண்டு. குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. இதைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவதைப் பார்த்து சிலிர்த்துப் போவார்கள் பக்தர்கள்!

    பகல் பத்து ராப்பத்து!
    தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது.
    வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி, தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.
    கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும் அரையர் சேவை இன்றைக்கும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது!

    உதவிய பாசுரம்!
    ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதான ஆராவமுதே என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு மெய்ம்மறந்து போனார்.
    அதில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்னும் அடி வந்தது. அவர்களிடம், ‘நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?’ என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி சென்று இந்த கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டார்.

    அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், என்றனர். நாதமுனிகளும் 12ஆயிரம் முறை மதுரகவி யாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார்.
    அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடச் செய்தார்.

  • indraya-rasi-palangal

    டிசம்பர் 9
    விளம்பி வருடம் – கார்த்திகை 23
    09-டிச-2018 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை ம 3.48
    நட்சத்திரம் : மூலம் கா 8.46
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பெருமை
    ரிஷபம் – மேன்மை
    மிதுனம் – சோதனை
    கடனம் – சிரமம்
    சிம்மம் – நிம்மதி
    கன்னி – அமைதி
    துலாம் – கவனம்
    விருச்சிகம் – சாந்தம்
    தனுசு – பக்தி
    மகரம் – வெற்றி
    கும்பம் – நன்மை
    மீனம் – பிரயாணம்

  • navathirupathy-koilgalil-sorga-vasal

    திருநெல்வேலியில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து, இராப்பத்து திருவிழா தொடங்கியது. வரும் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    நவதிருப்பதி கோவில்களில் முதலாவது தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், 7வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், 9வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் திரு அத்யயன உற்சவம் (பகல்பத்து, இராப்பத்து திருவிழா) நேற்று தொடங்கியது.

    காலையில் சுவாமி உடையவர் சன்னதியில் இருந்து ஆச்சாரியார்களுடன் புறப்பட்டு, சுவாமி நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி அருளிப் பாடு பெற்று, பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாள் நாச்சியார், சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினர். பின்னர் திருப்பல்லாண்டு அரையர்சேவை நடந்தது.

    பகல்பத்து திருவிழா திருமொழி திருநாளாகவும், இராப்பத்து திருவிழா திருவாய்மொழி திருநாளாகவும் கொண் டாடப்படுகிறது. பகல்பத்து திருவிழா நாட்களில் தினமும் காலையில் பெருமாள் நாச்சியார் ஆஸ்தானத்தில் இருந்து அலங்கார வாத்தியங்களுடனும், சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தான த்தில் இருந்து தாலாட்டு வாத்தியங் களுடனும் எழுந்தருளுகின்றனர். தினமும் அரையர் சேவையாக சென்னி யோங்கு, திருப்பாவை, ஊனேறு செல்வம் போன்றவை நடைபெறும்.

    இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இரவில் சொர்க் கவாசல் திறக்கப்படுகிறது. விழாவின் நிறைவு நாளான வருகிற 29-ந்தேதி சுவாமி நம்மாழ்வார் வீடு விடை திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், தக்கார் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.