Author: சக்தி ஆன்லைன் டீம்

  • மேஷ ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    மேஷம் (அஸ்வினி, பரணிகார்த்திகை 1ம் பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு()  – சுக ஸ்தானத்தில் செவ்வாய்ரண ருண ரோக ஸ்தானத்தில் கேதுஅஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன்லாப  ஸ்தானத்தில் சனிஅயன சயன போக  ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    மேஷராசியினரே, இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்உடல் ஆரோக்கியம் பெறும்மனதில் தைரியம் கூடும்சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக் கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

    குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங் கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

    பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.

    மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    பரிகாரம்: சுவாமிமலை முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

    அசுபதி:

    இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

    பரணி:

    இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

    கார்த்திகை:

    இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

     

    பரிகாரம்: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

  • thirupathy azwar thirumanjanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுவது வழக்கம். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம் (கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி) நடத்தப்படுகிறது.

    யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள்.

    இந்த நிகழ்ச்சியின் போது ஏழுமலையான் கோவிலை ஒரு ஆழ்வாராக கருதி அதனை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இம்மாதம் 4 ம் தேதி திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் துவங்கி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார்  திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

     அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து பல்வேறு வகையான சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமண கலவையை கோவில் சுவர்களுக்கு  தெளித்தனர்.

  • Melmalayanur |Sri Angalamman appeared in Ezhilarasi decoration | Vaikasi Amavasi Swing Festival

    மேல்மலையனூர் |எழிலரசி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ அங்காளம்மன் | வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

  • There are so many benefits of worshiping Brahma Mukurtha! | Palaru Swami

    பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வதால் இத்தனை நன்மைகளா ! | பாலாறு சுவாமிகள்

    பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வதால் இத்தனை நன்மைகளா ! | எளிய முறையில் வீட்டில் இஷ்ட தெய்வ வழிபாடு | பாலாறு சுவாமிகள்

     

  • Mannargudi Rajagopalaswamy, Gopinatha Perumal Temple Two Garuda Vehicle Service

    மன்னார்குடி ராஜகோபாலசாமி , கோபிநாத பெருமாள் கோவில் இரண்டு கருட வாகன சேவை 

  • Tirupati Vaikasi Poornami got up in Garuda Vahanam Malayappa Sami

    திருப்பதி வைகாசி பௌர்ணமி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி 

  • Thumbavanathamman appeared in the incarnation of Mahalakshmi

    மகாலட்சுமி அவதாரத்தில் காட்சியளித்த தும்பவனத்தம்மன்

  • Aruppukkottai Sri Venugopala Swami Temple Vaikasi Spring Festival

    அருப்புக்கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா

  • Ulundurpet 2000 years old Mashapureeswarar Temple Chariot

    உளுந்தூர்பேட்டை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

  • Tirunallaru Sridharparanyeswarar Temple Brahmotsavam Festival Theppotsavam

    திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் ஆலய பிரம்மோற்சவ விழா தெப்போற்சவம்