Author: சக்தி ஆன்லைன் டீம்

  • 2016-12-01-15-09-02

    கார்த்திகை பிரமோற்சவத்தை அடுத்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தங்கத்தேரோட்டமும், தயார் கருட வாகன வீதிஉலாவும் நடைபெற்றது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
    விழாவின் 5-வது நாளான நேற்று இரவு 8 மணியில் இருந்து 11 மணிவரை யானை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    தொடர்ந்து 6வது நாளில், காலை சர்வபூபால வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் மாட வீதிகளில் பவனி வந்தார்.
    மாலை 4 மணி அளவில் தங்கத்தேரோட்டம் நடைபெற்றது, இதனையடுத்து இரவு 8 மணியளவில் கருட வாகனத்தில் தாயார் வீதிஉலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • 2016-12-01-14-59-00

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் தங்கத்தேர் செய்யப்பட்டதன் எட்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிறப்பு தேரோட்டம் நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோயிலில் உபயதாரர்கள் மூலமாக 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமார் 6 அடி உயரத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அம்பாளுக்கு தங்கத்தேர் செய்யப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தேர் வெள்ளோட்டம் விடப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்டது.

    திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய நாள்களில் தங்கத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வழிபட்டு வருகின்றனர்.
    தங்கத்தேர் செய்யப்பட்டதன் 8ஆவது ஆண்டு தொடக்க விழாவை அடுத்து, மாநகர காவல் ஆணையர் இரா.திருஞானம் தலைமையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • 2016-12-01-14-49-55

    ரெமோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் திருமலை சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
    நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட திங்கள்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கினர். கோயிலை விட்டு வெளியே வந்த அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பக்தர்கள் போட்டிபோட்டனர்.

  • 2016-11-30-14-23-49

    “திருஅண்ணாமலையை நினைக்க முக்தி” அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக அறியப்படும் தலம் இது. இப்படி சிறப்புகள் அதிகம் வாய்ந்த திருவண்ணாமலையில், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய கார்த்திகை தீபம். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம். திருவண்ணாமலையை சுற்றினாலேயே அத்தனை இன்பம்… இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. டிசம்பர் 12 ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

  • karthigai-deepathin-sriappugal

    “திருஅண்ணாமலையை நினைக்க முக்தி” அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக அறியப்படும் தலம் இது.

    இப்படி சிறப்புகள் அதிகம் வாய்ந்த திருவண்ணாமலையில், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய கார்த்திகை தீபம். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம். திருவண்ணாமலையை சுற்றினாலேயே அத்தனை இன்பம்… இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார்.

    உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது.

    கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நவம்பர் 23 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

  • 2016-11-30-13-39-39

    கார்த்திகை பிரமோற்சவத்தின் முக்கியமான விழாவான கஜவாகன சேவைக்கு இந்து தர்மார்த்த சமிதி சார்பில் வெண்பட்டு குடைகள் பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
    இந்த ஆண்டு கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன் னிட்டு சென்னையில் இருந்து திருச்சானூருக்கு திருக்குடைகள் கொண்டு செல்லப்பட்டன. பத்மாவதி தாயார் கோயில் எதிரில் உள்ள வாகன மண்டபத்தில், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியிடம் இருந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு துணை செயல் அதிகாரி முனிரத்தினம் ரெட்டி வெண்பட்டு குடைகளை பெற்றுக்கொண்டார்.
    திருமலை பிரமோற்சவத்துக்கும், தாயார் பிரமோற்சவத்துக்கும் தமிழக மக்கள் சார்பாக திருக்குடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    இந்த குடைகள் சுவாமி ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின்போது இந்து தர்மார்த்த சமிதி வெண்பட்டு குடைகளை சமர்ப் பணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • 2016-11-29-14-59-05

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அம்மன் உற்சவம் நடத்தப்பட உள்ளது
    நவம்பர் 12 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா அம்மன் உற்சவம் தொடங்குகிறது. முதல்நாளில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதிஉலா நடக்கிறது.
    தொடர்ந்து டிசம்பர் 1-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், 2-ந் தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. 3-ந் தேதி காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றபடுகிறது.
    இதனையடுத்து தினமும் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 9-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை பரணி தீபம், மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் மின் அங்காரத்தில் ஜொலிக்கிறது.

  • 2016-11-29-14-29-00

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமான சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.
    சபரிமலையில் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் 18 படியேறி ஐயப்பனை தரிசிப்பர். இந்த 18 படிக்கும் மகத்துவம் உண்டு. 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.
    சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
    இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.

  • iswaryam-vazhangum-sabari-malai-padi-poojai

  • ishvaryam-vazhangum-sabarimalai