Author: லிங்கேஷ்

  • Yugadhi pacchadi

    யுகாதி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஆறு வகை சுவை அடங்கியிருக்கும் பச்சடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    பொடியாக நறுக்கிய மாங்காய் – 1 கப்  
    வேப்பம்பூ – 1 டேபிள் ஸ்பூன் 
    வெல்லம் – 1 கப் 
    தேங்காய் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன் 
    புளி சாறு – 4 டேபிள் ஸ்பூன் 
    மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு 
    தண்ணீர் – 3 கப் 

    செய்முறை : 
     முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.  மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். யுகாதி ஸ்பெஷல் பச்சடி ரெடி

  • Sabari malai nadai thirappu

    சித்திரை விஷூ பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஏபரல்  10 ஆம் தேதி திறக்கப்படுகிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    கடந்த மார்ச் மாதம் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவையொட்டி 11-ம் தேதி நடை திறக்கப்பட்டது. ஆராட்டுக்கு பின் 21-ம் தேதி விழா நிறைவு பெற்று மீண்டும் கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். 

    11-ம் தேதி முதல் அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

    15-ம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொ டர்ந்து பக்தர்களுக்கு விஷூ கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 
     

  • Thirupathy Hundiyal Kanikkai

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நாள் தோறும் பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் செலுத்தும் காணிக்கை பல கோடி ரூபாய் ஏழுமலையான் உண்டியலில் நிறம்பி வழிகிறது. இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில் இதுதான். திருப்பதியில், ஶ்ரீவாரி உண்டியலும், லட்டு பிரசாதமும் பக்தர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியைத் தரும் உன்னதங்கள்.

    திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக, அசையா சொத்துக்கள், பொன்னாபரணங்கள், வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணம், தினம்தோறும் நடைபெறும் திருமலை சேவா மூலம் கிடைக்கும் பணம், நேர்த்திக்கடனாக, காணிக்கையாகவென உண்டியலில் செலுத்தப்படும் பணம், லட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் என பலவகைகளிலும் வருமானம் வருகிறது. இந்த பணமெல்லாம் ஆண்டுதோறும் பட்ஜெட் போடப்பட்டு அதற்கேற்ப பல்வேறு நல்ல காரியங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது. 

    இவையாவும் திருமலை-திருப்பதி தேவஸ்தான கமிட்டி மற்றும் அறங்காவலர் குழுவினரின் மேற்பார்வையில் சிறப்பாக செய்யப்படுகின்றது. பிரதானக் கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு இருக்கும் வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில்,  கோவிந்தராஜ ஸ்வாமி கோயில், சீனிவாசமங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும்  இந்த வருமானத்திலிருந்தே பராமரிக்கப்படுகின்றன.

    இவை தவிர திருமலையைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் வேறு பல கோயில்களுக்கும் இந்த நிதி வழங்கப்படுகிறது. திருமலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள்,  இலவச லாக்கர்கள், இலவச குளியலறைகள், இலவச கழிப்பறைகள் என பல்வேறு வசதிகள் தரமான முறையில் வழங்கப்படுகின்றது.

    பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானம் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையைப் பெற்றதாகும். 

    கடலைப்பருப்பு, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற விலை உயர்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இவை தவிர இலவச பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. ஸ்ரீவெங்கடேசுவரா உயிரியல் பூங்கா ஆந்திர பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள், மலர்கள், செடிகொடிகள் மற்றும் பசுமை மிக்க மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

    கடவுளின் கடைக்கண் பார்வை படுவதற்கு ஒரு பக்தர் செய்யக்கூடிய பல காரியங்களில், அன்னதானம் வழங்குவது மிக உயர்ந்த காரியமாகக் கருதப்படுகிறது. அன்னச் சத்திரங்கள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே நன்கொடைகள் மூலம் நடத்தப்பட்டு வந்ததாக, கோயில் வளாகத்துக்கு உள்ளேயும் வளாகத்தைச் சுற்றியும் இருக்கின்ற கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இன்றளவும், அன்னதானத் திட்டத்தின் வாயிலாக, மேல்திருப்பதியில் தினமும் 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. எல்லா நாட்களிலும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகின்ற இத்திட்டம், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகளால்தான் நடத்தப்படுகின்றது.

    அன்னதானத் திட்டத்தை என்றென்றைக்கும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நன்கொடையாகக் கிடைக்கும் பணம் முழுவதையும் தேவஸ்தானம் தேசிய வங்கிகளில் முதலீடு செய்கிறது. அதிலிருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகின்றது. 

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  கவனம் 
    ரிஷபம் – ஆர்வம் 
    மிதுனம் – நன்மை 
    கடனம் – வெற்றி
    சிம்மம் – பக்தி  
    கன்னி – முயற்சி
    துலாம் –   ஜெயம்  
    விருச்சிகம் – பிரிவு
    தனுசு – நிறைவு
    மகரம் –   ஆக்கம்
    கும்பம் – யோகம் 
    மீனம் – மகிழ்ச்சி
    சந்திராஷ்டமம்    – உத்திரம்

  • April 4 Amavasai

    ஏப்ரல் 4 – அமாவாசை
    விளம்பி வருடம் – பங்குனி 21
    அமாவாசை 
    04-ஏப்-2019 வியாழன்  ரஜப்27
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ம    1.39
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Yugadhi Viradham iruppadhu eppadi

    பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும். மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

    காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் – ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

    விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.

    யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.
     

  • Koovagam chithirai Festival

    கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலகபுகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருநங்கைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரகணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் நேற்று வெகுவிமர்சையாக தொடங்கியது. 

    இதில் கூவாகம், நத்தம், தொட்டி, குப்பம், வேலூர் உட்பட ஏழு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து படையல் செய்தனர். பின்னர் படையில் இடப்பட்ட கூழ் அங்குள்ள பெரிய கொப்பரையில் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

    மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வருகின்ற 16-ம் தேதி நடைபெற உள்ளது. மறுநாள் தேரோட்டம் நடைபெற்று, பின்னர் பந்தலடியில் திருநங்கைகளுக்கான தாலி அகற்றும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  யோகம் 
    ரிஷபம் – சாந்தம் 
    மிதுனம் – உயர்வு
    கடனம் – நற்சொல்
    சிம்மம் – இன்பம்  
    கன்னி – உழைப்பு
    துலாம் –   சாதனை 
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு – சுகம் 
    மகரம் –   சுபம்
    கும்பம் – விருத்தி
    மீனம் – உற்சாகம் 
    சந்திராஷ்டமம்    – பூரம்

  • April 3 Siva rathiri

    ஏப்ரல் 3 – மாத சிவராத்திரி
    விளம்பி வருடம் – பங்குனி 20
    03-ஏப்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    திரையோதசி    கா    11.58
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    அ.கா    4.10
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thirupathy Azhvar thirumanjanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் ஆறாம் தேதி யுகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவையுடன் தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி  விஸ்வ சேனாதிபதியுடன்  இணைந்து ஆனந்த நிலையத்தை கொடி மரத்தை சுற்றி ஊர்வலமாக வந்து தங்க கதவு அருகே கொலு வைக்கப்பட உள்ளது.

    பின்னர்  மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் புதிய வருட  பஞ்சாங்கத்தை கோவிலின் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்ஷித்தலு படித்து காண்பிக்க உள்ளார். யுகாதி ஆஸ்தானத்தை ஒட்டி ஏப்ரல் ஆறாம் தேதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

    மேலும் யுகாதியை ஒட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று  நடைபெற்றது. ஏழுமலையான் கோவிலில் யுகாதி , ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரக் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

    அவ்வாறு ஏப்ரல் ஆறாம் தேதி யுகாதி தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி இன்று  கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11மணி வரை பக்தர்கள்  அனுமதிக்கப்படுவது  நிறுத்தப்பட்டு கோவில் முழுவதும் மூலவர் சன்னதி முதல் கொடிமரம், ரங்கநாதர் மண்டபம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. 

    இதை அடுத்து பச்சைக்கற்பூரம், குங்குமம், சந்தனம், மஞ்சள், உள்ளிட்ட மூலிகை பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்ட கலவையை கோவில் சுவற்றில் தெளிக்கப்பட்டது. இதனை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுவது வழக்கம். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி இன்று சுத்தம் செய்யப்பட்டு மூலவருக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர்  மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு அலுவலர் கோபிநாத் மற்றும் ஜீயர்கள் பங்கேற்றனர். கோயில் ஆழ்வார் திருமஞ்னத்தை ஒட்டி அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வி.ஐ.பி. தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது.