Author: லிங்கேஷ்

  • Simmam Shakthi Online – November Monthly Prediction – 2024

    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன்  – சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – களத்திர ஸ்தானத்தில் சனி (வ) – அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் குரு(வ) – விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  சுக ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    எதைக்கண்டும் அஞ்சாமல் தைரியமாக நிமிர்ந்து நிற்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம்  முயற்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

    குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும்.  வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.

    பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.  எந்தஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும்.

    கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.

    அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப் படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.

    மகம்:

    இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

    பூரம்:

    இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

    உத்திரம்:

    இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும்.

    பரிகாரம்: சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;

    சந்திராஷ்டம தினங்கள் : 12, 13

    அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Kadagam Shakthi Online – November Monthly Prediction – 2024

    கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

    கிரகநிலை:

    ராசியில் செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சூரியன்  – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இனிமையான பேச்சின் மூலமாக காரியங்களை சாதிக்கும் கடக ராசி அன்பர்களே இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

    தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள்.  நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும்.  எந்திரங்கள் மற்றும்  தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள்.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.  அக்கம்பக்கத்தினரிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

    பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும்  அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

    கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

    அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

    மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

    புனர்பூசம்:

    இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.

    பூசம்:

    இந்த மாதம் வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.  எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.

    ஆயில்யம்:

    இந்த மாதம் மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.  வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

    பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா  பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 10, 11

    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Midhunam Shakthi Online – November Monthly Prediction – 2024

    மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் – சுக ஸ்தானத்தில் கேது – பஞசம ஸ்தானத்தில் சூரியன்  – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) – தொழில் ஸ்தானத்தில் ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    தனது புத்திசாதுர்யம் மூலமாக காரியங்களை சாதித்துக் கொள்ளும் திறமை உடைய மிதுன ராசியினரே இந்த மாதம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  எதிர்ப்புகள்  விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும்.

    பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.

    கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

    அரசியல் துறையினருக்கு ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.

    மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள்.  எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

    மிருகசீரிஷம்:

    இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை  செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

    திருவாதிரை:

    இந்த மாதம் ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.

    புனர்பூசம்:

    இந்த மாதம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

    பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 8, 9

    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Rishabam Shakthi Online – November Monthly Prediction – 2024

    ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

    கிரகநிலை:

    ராசியில் குரு(வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் – பஞசம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன்  – சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    குணத்தில் சாந்தமாக இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள்  அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே  இருக்கும் அன்பு நீடிக்கும்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

    பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.  

    கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பனி புரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.

    அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.  

    கார்த்திகை:
    இந்த மாதம் தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

    ரோகினி:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

    மிருகசீரிஷம்:

    இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.

    பரிகாரம்:  மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 5, 6, 7

    அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Mesham Shakthi Onine – November Monthly Prediction – 2024

    மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சூரியன்  – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், புதன், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சனி (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  லாப  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  களத்திர ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தும் மேஷ ராசியினரே நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர் இந்த மாதம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் நீங்கும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும்.
    தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.
    குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

    பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
    அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11ல் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
    மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

    அஸ்வினி:

    இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

    பரணி:

    இந்த மாதம் சுகம் உண்டாகும். பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும்.

    கார்த்திகை:

    இந்த மாதம் வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சூரியன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 3, 4, 30

    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • October 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஆர்வம்  
    ரிஷபம்         – அசதி
    மிதுனம்     – பாராட்டு
    கடகம்         –  நட்பு   
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –    நிம்மதி
    துலாம்         –     சோதனை  
    விருச்சிகம்     –  ஆக்கம்
    தனுசு         –    நலம்  
    மகரம்         –   சிந்தனை
    கும்பம்         –     பரிசு
    மீனம்         –    அச்சம்
    சந்திராஷ்டமம்    –        அனுஷம், கேட்டை

  • October 24 2024 Indrayanaal

    அக்டோபர் 24 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – ஐப்பசி 07
    அக்டோபர் 24 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00    
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  சப்தமி கா 6.59
    நட்சத்திரம் :  புனர்பூசம் ம 12.10
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் :   கேட்டை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • October 23 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஓய்வு
    ரிஷபம்         – சாந்தம்
    மிதுனம்     – உழைப்பு   
    கடகம்         –  உற்சாகம்  
    சிம்மம்         –   எதிர்ப்பு
    கன்னி         –    லாபம்
    துலாம்         –     ஜெயம்
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –    தனம்   
    மகரம்         –   பரிவு
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    அனுகூலம்
    சந்திராஷ்டமம்    –        விசாகம், அனுஷம்

  • October 23 2024 Indrayanaal

    அக்டோபர் 23 – இன்றைய நாள் எப்படி…?
    குரோதி வருடம் – ஐப்பசி 06
    அக்டோபர் 23 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சஷ்டி கா 7.21
    நட்சத்திரம் :  திருவாதிரை கா 11.48
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • October 22 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நேர்மை  
    ரிஷபம்         – வெற்றி
    மிதுனம்     – ஆதரவு  
    கடகம்         –  ஆதாயம்  
    சிம்மம்         –   தேர்ச்சி
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     பொறுமை
    விருச்சிகம்     –  சிந்தனை
    தனுசு         –    நன்மை  
    மகரம்         –   விருத்தி  
    கும்பம்         –     களிப்பு
    மீனம்         –    மேன்மை  
    சந்திராஷ்டமம்    –        சுவாதி, விசாகம்