Author: லிங்கேஷ்

  • October 22 2024 Indrayanaal

    அக்டோபர் 22 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – ஐப்பசி 05
    அக்டோபர் 22 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  பஞ்சமி கா 8.12
    நட்சத்திரம் :  மிருகசீரிடம் கா 11.55
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   விசாகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • nagareeswarar koil kumbabishegam

    காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை நேரத்திலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது  அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோவில். பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள், பங்களிப்புடன்பல லட்சம் ரூபாய் செலவில்  பழமை மாறாமல் நகரீஸ்வரர் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை  பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒலிக்க, அதிர்வெட்டுக்கள் முழங்க, கலசத்திலிருந்து  புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.

    பின்னர் கோவில் கருவறையில் உள்ள நகரீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்க வைத்தனர். அதிகாலை நேரத்திலேயே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

  • mutharamman koil kumbabishegam

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினிமகாளி அம்மன், சக்தி விநாயகர், பெருமாள் சுவாமி, ஸ்ரீ சுடலை மாட சுவாமி சகிதாய பரிவார மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாவித்து வருகின்றனர். இக்கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டது.  

    இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை  விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மற்றும் மூன்றாவது யாகசாலை பூஜைகள், வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இன்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை கோபுர கும்பாபிஷேகம், ஸ்ரீ முத்தாரம்மன் மற்றும் பரிவாரம்பிகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாதீபாராதனை மகேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • October 21 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பணிவு
    ரிஷபம்         – போட்டி
    மிதுனம்     – மேன்மை
    கடகம்         –  முயற்சி
    சிம்மம்         –   பரிசு
    கன்னி         –    பக்தி
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  நட்பு
    தனுசு         –    பாராட்டு
    மகரம்         –   குழப்பம்
    கும்பம்         –     அனுகூலம்
    மீனம்         –    பேராசை
    சந்திராஷ்டமம்    –        சித்திரை, சுவாதி

  • October 21 2024 Subamuhurthanaal

    அக்டோபர் 21 – சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)…
    குரோதி வருடம் – ஐப்பசி 04
    அக்டோபர் 21 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  சதுர்த்தி கா 9.31
    நட்சத்திரம் :  ரோகிணி ம 1.16
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் :   சுவாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • October 20 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஜெயம்
    ரிஷபம்         – வரவு
    மிதுனம்     – சோர்வு
    கடகம்         –  பயம்  
    சிம்மம்         –   உழைப்பு
    கன்னி         –    களிப்பு
    துலாம்         –     நன்மை
    விருச்சிகம்     –  சாதனை
    தனுசு         –    லாபம்   
    மகரம்         –   அச்சம்   
    கும்பம்         –     ஆர்வம்
    மீனம்         –    யோகம்
    சந்திராஷ்டமம்    –        ஹஸ்தம், சித்திரை

  • October 20 2024 Sangadhara chadurthi

    அக்டோபர் 20 – சங்கடஹர சதுர்த்தி…
    குரோதி வருடம் – ஐப்பசி 03
    அக்டோபர் 20 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை கா 11.09
    நட்சத்திரம் :  கார்த்திகை ம 1.23
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் :   சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • Ratnagiri murugan temple sirappu vazhipadu

    ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷத்துடன் அறுகோண தெப்பக்குளத்தில் பக்தர்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் உச்சி கணபதி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம்,திருமஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது..

    அதனைத்தொடர்ந்து மாலை கோவில் அடிவாரத்தின் கீழே மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ஆறுகோண தெப்பக்குளத்தில் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலையிலிருந்து மங்கள மேளதாளம் முழங்க பக்தர்கள் சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்து தெப்பக்குளத்தில் வைத்து ஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு நாதஸ்வர வாத்தியங்கள் கூடிய மங்கல தீபாரதனையை அறுகோண தெப்பக்குளத்திற்கு காட்டினார்கள் பின்னர் கூடியிருந்த அனைத்து பக்தர்களும் முருகனை மனதில் நினைத்தில் அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தி தங்கள் கைகளில் இருந்த அகல் விளக்குகளை தெப்பக்குளத்திற்கு காட்டி முருகனை வழிபட்டு சென்றனர்..

     

  • Madurai meenatchi amman temple palalayam

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21-ஆம் தேதி பாலாலயம் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளான நிலையில் கோவில் வளாகத்தில்  தீ விபத்து  ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடத்தபடவில்லை.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி  விமான பாலாலயம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கோவிலின் தங்க விமானங்கள், விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி  பாலாலயம் நடைபெறவுள்ளது.

    21ஆம் தேதி  காலை 09.30 மணி முதல் விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாக பூஜை, த்ரவ்யாஹீதி, மஹாபூர்ணாஹீதி, தொடர்ந்து உபசாரங்கள் நடைபெறும், 12.00 மணிக்கு மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடாகும்.

    12:15 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கோயில் தங்கவிமானம் மற்றும் கோபுர பாலஸ்தாபன மஹாகும்பாபிஷேகம், மஹாதீபாராதனை நடைபெறும் என்றும். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

  • October 19 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  இன்சொல்
    ரிஷபம்         – பரிவு  
    மிதுனம்     – முயற்சி
    கடகம்         –  தெளிவு
    சிம்மம்         –   அனுகூலம்
    கன்னி         –    புகழ்
    துலாம்         –     உதவி  
    விருச்சிகம்     –  மகிழ்ச்சி  
    தனுசு         –    கோபம்  
    மகரம்         –   பெருமை  
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    வெற்றி  
    சந்திராஷ்டமம்    –        உத்திரம், ஹஸ்தம்