Author: லிங்கேஷ்

  • July 29 2024 aadi kiruthigai

    ஜூலை 29 – ஆடி கார்த்திகை…
    குரோதி வருடம் – ஆடி 13
    ஜூலை 29 – 2024
    திங்கள்
    ஆடி கார்த்திகை
    திருத்தணி முருகன் தெப்பம்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : நவமி
    திதி நேரம் :  நவமி இ 9.11
    நட்சத்திரம் :  பரணி ம 2.40
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • murugan mandiram

    ஓம் முருகா, குரு முருகா,

    அருள் முருகா, ஆனந்த முருகா

    சிவசக்தி பாலகனே

    ஷண்முகனே சடாக்ஷ்ரனே

    என் வாக்கிலும் நினைவிலும்

    நின்று காக்க

    ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

    முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்….

    சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே

    தன முதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே

    பகை பிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே

    பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே

    சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே

    சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே

    அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

    ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.

     

    மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்  அருளியது  

    எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து

    திருநீறு  அணிந்து செல்ல கரிய வெற்றி உண்டாகும்.

  • Sevvai Dhosham Neekum Aadi Kiruthigai Viradham

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

    தேவர்களை சிறைப்பிடித்து,மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை  பாலூட்டி போற்றி வளர்த்தார்கள்.

    அவனை சேர்த்து ஒன்றாக்கிய  உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று கூறி அருளினார்.  மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் முருகனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு,அவனருளால்  குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார்.

    இது தான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. ‘ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே’ என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது

     கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.

  • Muruga perumanukku ugandha Aadi Kiruthigai

    முருகப் பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதில் தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை போன்றவை மிகவும் முக்கியம் வாய்ந்த விழாக்களாக கருதப்படுகிறது.

    எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.  அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றில் ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வீதிஉலா என விமரிசையாக நடைபெறும்.

    இது தேவர்களின் மாலை காலம். எனவே, இக்காலத்தில் உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதம் இருந்தால் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

    நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

     

  • July 28 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஜெயம்
    ரிஷபம்         – மறதி
    மிதுனம்     – சுகம்
    கடகம்         –  உயர்வு
    சிம்மம்         –   நட்பு
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     –  ஆதரவு
    தனுசு         –     பெருமை
    மகரம்         –    சுபம்
    கும்பம்         –      செலவு
    மீனம்         –      போட்டி    
    சந்திராஷ்டமம்    –         மகம், பூரம்

  • July 28 2024 Sunday

    ஜூலை 28 – சூரிய வழிபாடு நன்று…
    குரோதி வருடம் – ஆடி 12
    ஜூலை 28 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  சப்தமி அ.கா 1.25
    நட்சத்திரம் :  அசுவினி ம 3.58
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • July 27 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஆதாயம்
    ரிஷபம்         – ஆதரவு
    மிதுனம்     – தோல்வி
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   லாபம்
    கன்னி         –    பெருமை
    துலாம்         –     பயம்
    விருச்சிகம்     –  நற்சொல்
    தனுசு         –     மகிழ்ச்சி
    மகரம்         –    கீர்த்தி
    கும்பம்         –      சோதனை
    மீனம்         –      வாழ்வு    
    சந்திராஷ்டமம்    –         ஆயில்யம், மகம்

  • July 27 2024 Vasthu Naal

    ஜூலை 27 – வாஸ்து நாள்…
    குரோதி வருடம் – ஆடி 11
    ஜூலை 27 – 2024
    சனி
    வாஸ்து நாள் (காலை 7.44 – 8.20)
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சஷ்டி அ.கா 3.28
    நட்சத்திரம் :  ரேவதி மா 5.27
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : பூரம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • Sree Devi Chelli Amman Koil Aaadi Thiruvizha

    சென்னை அயப்பாக்கத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ தேவி செல்லியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சென்னை அயப்பாக்கத்தில் அப்பகுதி மக்களின்  கிராம தேவதையாக விளங்கும் ஸ்ரீ தேவி செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்திருவிழா வெகு விமரிசையாக துவங்கியது.

    5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில்  முதல் நாளான இன்று அம்மனக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து மஞ்சல் நிறச் சேலை அணிந்து வந்த 1000 த்திற்கும் மேற்பட்ட பெண்கள் முத்துமாரியம்மன் ஆலயத்தலிருந்து மயிலாட்டம்,ஒயிலாட்டம்,கரக்காட்டத்துடன் பால் குட ஊர்வலம் நடைபெற்றது. தலையில் பால் குடம் ஏந்தி  ஊர்வலமாக செல்லியம்மன் கோவில் வந்த பெண்கள்  அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேருக்கு அறுஞ்சுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

    5 நாட்கள் நடைபெறும் இந்த ஆடித்திருவிழாவில் பால் குடம்,அம்மனை வர்ணித்தல்,சிற்ப்பு மகா அபிஷேக அலங்காரம்,கூழ்வார்த்தல்,கும்பம்,திருவீதி உலா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

  • July 25 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  களிப்பு
    ரிஷபம்         – ஆக்கம்
    மிதுனம்     – கீர்த்தி
    கடகம்         –  சிரமம்
    சிம்மம்         –   அசதி  
    கன்னி         –    பிரீதி
    துலாம்         –     முயற்சி  
    விருச்சிகம்     –  ஓய்வு
    தனுசு         –     பிரயாணம்
    மகரம்         –    திறமை
    கும்பம்         –      நன்மை  
    மீனம்         –      அனுகூலம்   
    சந்திராஷ்டமம்    –         புனர்பூசம், பூசம்