ஆகஸ்ட் 03 – ஆடிப்பெருக்கு…
குரோதி வருடம் – ஆடி 18
ஆகஸ்ட் 03 – 2024
சனி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி மா 4.55
நட்சத்திரம் : புனர்பூசம் ம 1.42
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : கேட்டை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Author: லிங்கேஷ்
-
August 03 2024 Aadi perukku
-
Sagala iswaryam tharum aadiperukku
ஆடிப்பெருக்கன்று திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர். ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தலைமையில் இவை அனைத்தும் காவிரிக் கரையில் நடைபெறும். சிறுவர்கள் ‘சப்பரத் தட்டி’ எனப்படும் சிறு மரத் தேர்களை உருட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் விளையாடுவர்.
விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற காவிரிக்கு மங்களப் பொருட்களை அர்ப்பணித்து, பெண்கள் தங்கள் கழுத்திலும், உடன் வந்திருக்கிற ஆண்கள் தங்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வார்கள்.அன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு.
சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள். அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர்.காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
-
Aadi perukku mukkiyathuvam
திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலிபூஜை நடத்துவர்.
தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சிறப்பித்து கூறுவர். ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’ என்பது பழமொழி. பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் திருமண யோகம் கூடிவரும்.
இவை தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்ற பல முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது.
“ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி
வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக”என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.
ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி, காவிரிப்பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலகரமான விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் அன்று அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரைக்கு வந்து, நீராடி காவிரியை வணங்கி சுமங்கலி பூஜையும் நடத்துகின்றனர்.
பெண்கள் குளித்து முடித்துவிட்டு ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்கின்றனர். ஒரு இடத்தில் வாழை இலையை போட்டு அதில் பிள்ளையார்சிலை வைத்து அதன்முன் அகல் விளக்கு ஏற்றுகின்றனர். மங்கல பொருட்களான புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனைஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிபட்டு பூஜைசெய்வர். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்கள். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கருகமணி, காப்பரிசி வைத்து வணங்கி சிறப்பு பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.
ஈரோடு பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி விரதம்:வரலட்சுமி விரதம் ஆடிமாதம் சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமையில் வரும். இந்த ஆண்டு வருகிற (வெள்ளிக்கிழமை) வருகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என பெயர் பெற்றது.
திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவன் அமைவர். பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்யவேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்ம நோய்கள் நீங்கும், திருமணத்தடை அகலும்.
-
July 31 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பொறுமை
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – ஆதாயம்
கடகம் – நலம்
சிம்மம் – பக்தி
கன்னி – தாமதம்
துலாம் – போட்டி
விருச்சிகம் – வாழ்வு
தனுசு – மகிழ்ச்சி
மகரம் – வெற்றி
கும்பம் – பயம்
மீனம் – ஏமாற்றம்
சந்திராஷ்டமம் – ஹஸ்தம், சித்திரை -
July 31 2024 Sarva egadasi
ஜூலை 31 – சர்வ ஏகாதசி…
குரோதி வருடம் – ஆடி 15
ஜூலை 31 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி மா 6.10
நட்சத்திரம் : ரோகிணி ம 1.01
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
July 30 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – போட்டி
கடகம் – புகழ்
சிம்மம் – லாபம்
கன்னி – தாமதம்
துலாம் – முயற்சி
விருச்சிகம் – வெற்றி
தனுசு – ஆதரவு
மகரம் – பரிசு
கும்பம் – நிம்மதி
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் – உத்திரம், ஹஸ்தம் -
Suyambu Subramaniya Swamy Temple Aadi Kuruthigai
திருவண்ணாமலை அடுத்த வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு சிவப்பு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தமிழகம் முழுக்க ஆடி கிருத்திகை தினமான இன்று அனைத்து முருகன் திருக்கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் அடுத்த மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை தினமான இன்று வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசிவசுப்பிரமணிய சாமிக்கு பால், தயிர் தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதிகாலை முதல் சுயம்பு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஏராளமான முருக பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரத்தில் மேலாக காத்திருந்து காத்திருந்து பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி பால்குடம் உள்ள தேவைகளை கையில் ஏந்தி முருகப்பெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
-
Siruvapuri murugan temple aadi kiruthigai
சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமைகளில் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் என்பது அலை மோதும்.
ஆடி கிருத்திகை தினமான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து வழிபட்டனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பால் குடங்களை சுமந்தபடி பெண்கள் பாதயாத்திரையாக சிறுவாபுரி முருகன் கோவிலை வந்தடைந்தனர். காவடிகளை சுமந்த படியும் பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பால் அங்குள்ள முருகனுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
July 30 2024 Indrayanaal
ஜூலை 30 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – ஆடி 14
ஜூலை 30 – 2024
செவ்வாய்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : தசமி
திதி நேரம் : தசமி இ 7.30
நட்சத்திரம் : கார்த்திகை ம 1.40
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
July 29 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பாராட்டு
ரிஷபம் – நன்மை
மிதுனம் – அமைதி
கடகம் – செலவு
சிம்மம் – பயம்
கன்னி – கவலை
துலாம் – வரவு
விருச்சிகம் – தாமதம்
தனுசு – ஜெயம்
மகரம் – ஆதரவு
கும்பம் – வெற்றி
மீனம் – ஆக்கம்
சந்திராஷ்டமம் – பூரம், உத்திரம்