இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆர்வம்
ரிஷபம் – உதவி
மிதுனம் – அலைச்சல்
கடகம் – ஆக்கம்
சிம்மம் – குழப்பம்
கன்னி – ஜெயம்
துலாம் – பாசம்
விருச்சிகம் – புகழ்
தனுசு – நம்பிக்கை
மகரம் – பரிவு
கும்பம் – வெற்றி
மீனம் – சினம்
சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம்
Author: cmsadmin
-
அக்டோபர் 14 – இன்றைய ராசிபலன்…
-
அக்டோபர் 14 – இன்றைய நல்லநேரம்…
அக்டோபர் 14 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – புரட்டாசி 28
அக்டோபர் 14 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி அ.கா 2.44
நட்சத்திரம் : சதயம் இ 10.26
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
மகிஷாசுரனை வதம் செய்த தாய் படவேட்டம்மன்…
ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் மகாவிஸ்வரூப தரிசனம் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் புரட்டாசி மாகாளிய அமாவாசை மறுதினத்தில் இருந்து நவராத்திரி கொலு ஒன்பது நாள் வழிபடுவர். அந்த வகையில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் 46 ஆம் ஆண்டு கோவிலின் தர்மகத்தா வடிவேலு தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி ஒன்பது நாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவற்றை காண ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனை தரிசித்து வந்தனர்.
அந்த வகையில் ஒன்பதாம் நாள் அரக்கன் மகிஷாசுரன் வதம் செய்யும் நாளாகவும் பராசக்தி வெற்றி அடைந்த நாளாகவும் கொண்டாடும் வகையில் மகிஷாசூரன் மரமாக உறுமாரியதை கோவிலின் முன்பு வாழைமரத்தை வாழைதாருடன் கூடிய வாழைப்பூ மரத்தை நடப்பட்டு ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவில் வாசலில் 20 அடிக்கும் மேலாக காணப்பட்ட வாழைமரத்திற்க்கு பூஜைகளும் தீபாரதனைகளும் செய்யப்பட்டு மரமாக காட்சியளிக்கும் மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சியை ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரண்டு இருந்து கண்டுகளித்தனர்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனின் மகா விஸ்வரூப தரிசனம் மேற்கொண்டு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பித்து வழிபட்டனர் இதில் பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
-
அக்டோபர் 13 – சர்வ ஏகாதசி
அக்டோபர் 13 – சர்வ ஏகாதசி
குரோதி வருடம் – புரட்டாசி 27
அக்டோபர் 13 – 2024
ஞாயிறு
சர்வ ஏகாதசி
கொலு எடுக்க காலை 10.00 – 10.30 மணி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி அ.கா 4.36
நட்சத்திரம் : திருவோணம் அ.கா 12.54
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
அக்டோபர் 13 – ஏகாதசி நாள் ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – காரியசித்தி
ரிஷபம் – நற்சொல்
மிதுனம் – சினம்
கடகம் – கவனம்
சிம்மம் – பாசம்
கன்னி – நம்பிக்கை
துலாம் – நலம்
விருச்சிகம் – நிம்மதி
தனுசு – வரவு
மகரம் – லாபம்
கும்பம் – பக்தி
மீனம் – மறதி
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம் -
தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை…
நவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி முன்னிட்டு இன்று ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது, தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
பெருவுடையாருக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மழை காரணமாக நந்தி மண்டபத்தில் நடக்கவிருந்த நாட்டிய நிகழ்ச்சி நடராஜர் மண்டபத்தில் மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் குச்சிப்புடி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
-
பழனி முருகன் கோயிலில் வன்னிகாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி…
பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வன்னிகாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கானக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழனி முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரிவிழா கடந்த 3 ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி பத்து நாட்களாக விமர்சையாக கொண்டாடப்பட்டுவந்தது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோதைஈஸ்வரர் கோயில் முன்பு நடைபெற்றது.
முன்னதாக மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. பழநி ஆதினம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் கோயில் நிர்வாகம் தேவதா மரியாதையுடன் பல்லக்கில் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் துர்க்கையாக ஆவாஹனமாகி வாழைமரம் மற்றும் வன்னி மரத்தில் அம்பெய்து வன்னிகாசூர வதம் செய்யும் நிகழ்வு நடந்தது.
நவராத்திரி விழா நிகழ்ச்சியில் அயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழனி முருகன் கோயிலில் 13 ம் நூற்றாண்டில் இருந்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தீய குணம் கொண்ட வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள் தங்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களும் அழிந்து போவதாக நம்புவதால் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம்…
சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 39வது தேசமாக விளங்குகிறது , குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இங்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். அண்ணன் பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு திருப்பதி பெருமாளை சேவித்த பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பெருக்கில் கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இதனை அடுத்து வருகின்ற 14ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
-
தென்திருப்பதி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்…..
கரூர் தென்திருப்பதி என அழைக்கப்படும் தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான கல்யாண வெங்கடமண சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை ஒட்டி புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் பலர் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு செல்வது வழக்கம்
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி கடந்த நான்காம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது இதனை அடுத்து திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை அடுத்து தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை அடுத்து அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்பட்டு பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து நீண்ட வரிசையில் பக்தர்கள் பெருமாளை கண்டு களித்து வழிபட்டு சென்றனர் மேலும் கோவில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை ஒட்டி கோவில்களில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது மேலும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அன்னதானத் துவங்கி வைத்தார்.
-
அக்டோபர் 11 – இன்றைய ராசிபலன்…
4இன்றைய ராசிபலன்
மேஷம் – பெருமை
ரிஷபம் – அமைதி
மிதுனம் – ஜெயம்
கடகம் – சினம்
சிம்மம் – போட்டி
கன்னி – தெளிவு
துலாம் – இன்பம்
விருச்சிகம் – சாதனை
தனுசு – விவேகம்
மகரம் – மேன்மை
கும்பம் – மகிழ்ச்சி
மீனம் – சாந்தம்
சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீருஷம்