திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூ.500, ரூ.1000 பெறப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து டிக்கெட் மற்றும் பிரசாத கட்டணமாக ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் பெறப்படும். மேலும், ஆந்திர அரசு பஸ்களில் வந்து செல்லும் பக்தர்களிடம் இருந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடு முடியும் வரையில் இவ்வாறு பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.
திருமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் ஓட்டல்கள், கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மறுப்பதால், பக்தர்கள் பாதிக்காத வகையில், அவர்களுக்கு தேவையான பால், டீ, மோர், அன்னப்பிரசாதம் போன்றவை தரிகொண்டா வெங்கமாம்பாவில் மட்டுமல்லாமல் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவஸ்தானம் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: cmsadmin
-
திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக….
-
திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக….
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூ.500, ரூ.1000 பெறப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து டிக்கெட் மற்றும் பிரசாத கட்டணமாக ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் பெறப்படும். மேலும், ஆந்திர அரசு பஸ்களில் வந்து செல்லும் பக்தர்களிடம் இருந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடு முடியும் வரையில் இவ்வாறு பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.
திருமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் ஓட்டல்கள், கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மறுப்பதால், பக்தர்கள் பாதிக்காத வகையில், அவர்களுக்கு தேவையான பால், டீ, மோர், அன்னப்பிரசாதம் போன்றவை தரிகொண்டா வெங்கமாம்பாவில் மட்டுமல்லாமல் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவஸ்தானம் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தினசரி அபிஷேக முன்பதிவு….
நாமக்கலில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் 2017-ஆம் ஆண்டு தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தொடங்குகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு 1,008 வடைமாலை சாத்தப்படும்.அதன் பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருள்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.அபிஷேகத்திற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர். இதுவரை அபிஷேக செலவை 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது தினசரி அபிஷேகத்துக்கு ஒரு நபருக்கு தேவஸ்தான கட்டணமாக தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பூஜை பொருள்கள் வாங்குவதற்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் வசூல் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் முந்தைய ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் முன்பதிவு தொடங்கும். அதன்படி 2017ஆம் ஆண்டுக்கான முன்பதிவு வருகிற டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒருநாள் அபிஷேகத்தில் 5 நபர்கள் பங்கேற்கலாம் எனவும், தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருத்தணி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு
திருத்தணி முருகனை தரிசிக்க இனி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக திகழ்கிறது திருத்தணி முருகன் கோயில்.
கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இவர்கள் கட்டணம் தரிசனம், இலவச தரிசன வழியாக சென்று முருகனை தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி பஞ்சாமிர்தம் அபிகேஷகத்துக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பால் அபிஷேகம் 100, சந்தன காப்பு 4 ஆயிரம், கல்யாண உற்சவம் 2 ஆயிரம், தங்கத்தேர் இழுக்க 2 ஆயிரம், வெள்ளித் தேர், வெள்ளி மயில்வாகனம் 3,500, கேடய உற்சவம் 1000, மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்க 500, சிறப்பு தரிசன டிக்கெட 100, குளிர்சாதன அறை வாடகை ஒரு நாளைக்கு 1500, சாதாரண அறை 450, சாதாரண குடில் 900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்ய www.tirutanigaimurugan.tnhrce.in என்ற முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்…
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நவம்பர் 13ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10.29 மணிக்கு தொடங்கி, 14ம்தேதி இரவு 8.09 மணிக்கு நிறைவடைகிறது. -
அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்…
திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு வரும் 13 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடைபெறும். அதன்படி வரும் நவம்பர் 13ம்தேதி அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.
அன்னாபிகேஷம் நடைபெறுவதையொட்டி வரும் 13ம்தேதி மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, மாலை 6.01 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமியை முன்னிட்டு வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.50 கட்டண தரிசனம், பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும். 3ம் பிரகாரத்தில் தரிசன வரிசையை அனுமதிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
எனவே தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும் வாய்ப்புள்ளது. -
ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்
திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் நிறுத்தப்பட்ட புஷ்பயாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1980ம் ஆண்டு முதல் மீண்டும் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதத்தில் ஸ்ராவண நட்சத்திரத்தில் நடத்தி வருகிறது.
அதன்படி வருடாந்திர புஷ்ப யாகத்தையொட்டி பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர் தலைமையில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
இதில் ரோஜா, மல்லி, முல்லை, மருதம், சாமந்தி உள்ளிட்ட 18 ரகமான சம்பிரதாய மலர்களை கொண்டு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடத்தினர்.
புஷ்ப யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். -
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா….
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
51 சக்தி பீடங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோயில் 1841 ஆம் ஆண்டும், 1941-ஆம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து 1976, 1995ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் புனரமைப்புப் பணிக்காக ரூ.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கருவறையின் மேல் உள்ள தங்க விமானத்திற்கு ரூ.20 கோடி செலவில் 60 கிலோ தங்கத்திலான 5 அடுக்கு தங்கம் ஒட்டப்பட்டு மிளிரும் வகையில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார். -
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் : கேரள அரசு
சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என கேரள அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2007-ஆம் ஆண்டு, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, முந்தைய அரசு சபரிமலை கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு தாங்கள் உடன்படுவதாக தெரிவித்தது. அதாவது, 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிப்பதில்லை என்ற முந்தைய முடிவை பின்பற்றப் போவதாக தெரிவித்தது.
இந்த நிலையில் நவம்பர் 7 (திங்கள்கிழமை) ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேரளாவின் தற்போதைய ஆளும் அரசு, சபரிமலை ஐயப்பன் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. -
முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்
கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்வசம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோயில் சஷ்டி விழா கடந்த 31-ம் தேதி தொடங்கிது.
கந்த சஷ்டி நிறைவு நாளில், காலை 10.30-மணிக்கு மலைக்கோயில் அலுவலகத்தில் இருந்து முருகன் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்ததாரர் என்.ஹரிஹரமுத்து அவர்களின் உபயத்தில் முருகன் சுவாமிக்கு சீர்வரிசை எடுத்து செல்லப்பட்டது.
உற்சவ முருகன் சுவாமி காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து முருப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் நடைபெற்று வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பிற்பகல் 12.30-மணிக்கு மூலவ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவ நிறைவு விழாவில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.